பூகோள செயல்பாட்டுத் தாள்கள்

 

அறிமுகம்:

இங்கு பூகோளத்தின் பல்வேறு தலைப்புகள் பற்றி சில செயல்பாட்டுத் தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த செயல்பாட்டுத் தாள்களில் உள்ள பயிற்சிகள் குழந்தைகள் ஆராய்ச்சி, கவனித்தல் மற்றும் யோசிக்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை குழந்தைகளை இது சம்பந்தப்பட்ட தலைப்புகளை ஆய்வு செய்யவும் வைக்கிறது.

பூகோள செயல்பாட்டுத் தாள்கள்   -   ஆறுகள்

கீழே ஒரு ஆறு பாயும் (மலையிலிருந்து கடலுக்கு) படம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தை ஆய்வு செய்து, பின்வருபவற்றிற்கு பதிலளியுங்கள்:

 

 

1. ஆறு மிக வேகமாக எங்கு பாயும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அ] நடுப்பகுதி

ஆ] மேல்பகுதி

இ] கீழ்ப்பகுதி

2. பொதுவாக, ஆறுகள் மலையில் துவங்கி கடலில் முடிவடைவதற்கு காரணம்

அ] தண்ணீர் உயர்மட்டத்திலிருந்து கீழ்மட்டத்திற்கு பாய்கிறது.

ஆ] அனைத்து தண்ணீருக்கும் கடலில் போதுமான இடம் உள்ளது.

இ] மலைகளில் மழை பொழிகிறது.

ஈ] மலைகளில் பல ஏரிகள் உள்ளன.

3. முகத்துவாரம் எங்குள்ளது

அ] மேல் பகுதி நடுப்பகுதியை சந்திக்கும் இடத்தில்.

ஆ] நடுப்பகுதி கீழ்ப்பகுதியை சந்திக்கும் இடத்தில்.

இ] கீழ்ப்பகுதி கடலை சந்திக்கும் இடத்தில்.

4. ஆறு மாசடைவதற்கு காரணம்

அ] தொழிற்சாலை புகை போக்கிகளிலிருந்து வரும் புகை

ஆ] கழிவுகளைக் கொட்டுவதால்  

இ] அதிகமாக மீன்பிடித்தல்

ஈ]  குழந்தைகள் நீச்சலடித்தல்

5. மக்கள் பல்வேறு காரணங்களுக்காக ஆற்று நீரைப் பயன்படுத்துகின்றனர். இரண்டு காரணங்களைக் குறிப்பிடுங்கள்.

 

………………………………………………………………………………………………………………

 

………………………………………………………………………………………………………………

 

இதனை உருவாக்கியவர் மற்றும் இதன் ஆசிரியரின் விவரம்: மஹுயா சென் குப்தா என்பவர் பெங்களூருவில் உள்ள அஸிம் ப்ரேம்ஜி ஃபவுண்டேஷனில் உள்ள பல்கலைக்கழக வள மையத்தின் உறுப்பினர்.

மஹுயா கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார். இவர் பூகோளம் மற்றும் ஆங்கிலத்தில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் B.Ed முடித்துள்ளார். இந்த ஃபவுண்டேஷனில் சேர்வதற்கு முன், அவர் கொல்கத்தா மற்றும் பெங்களூருவில் உள்ள பல்வேறு பள்ளிகளில் 12 ஆண்டுகளுக்கு உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் மாநில கல்வி, ICSE மற்றும் IGCSE மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.

 

19212 registered users
7451 resources