உலக மக்கள் தொகை வளர்ச்சி பற்றி ஹான்ஸ் ரோஸ்லிங்

உலக மக்கள் தொகை வளர்ச்சி பற்றி ஹான்ஸ் ரோஸ்லிங்
Duration: 
00 hours 10 mins

 

பள்ளியில் இருந்த நாள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது அப்பொழுது எங்கள் ஆசிரியர் கூறினார் உலக மக்கள் தொகை மூன்று பில்லியனைத் தொடும என்று அவ்ர் குறிப்பிட்டது1960ம் வருடத்தில் நான் இப்பொழுது பேசப்போவது எது பற்றியென்றால் எப்படி அந்த வருடத்திலிருந்து எதிர் காலம் வரை உலக மக்கள் தொகையில் மாற்றம் ஏற்பட்டது என்று ஆனால் நான் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப் போவதில்லை இதை நான் இதற்கு முன்பு ஐந்து TED பேச்சுகளில் பயன்படுத்திவிட்டேன் அதற்குப் பதிலாக நான் முன்னேறியிருக்கிறேன் இன்றைக்கு நான் புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தவிருக்கிறேன் அதாவது புத்தம் புதிய அனலாக் தொழில்நுட்பம் இதை நான் IKEA யிலிருந்து எடுத்தேன் இந்தப் பெட்டி

இந்தப் பெட்டியில் ஒரு பில்லியன் மக்கள் இருக்கிறார்கள் எங்களுடைய ஆசிரியர் கூறினார் 1960ல் தொழில்மயமாக்கப்பட்ட உலகில் ஒரு பில்லியன் மக்கள் இருந்தார்கள் அவர்கள் மேலும் கூறுகையில், வளர்ந்துவரும் நாடுகளில் இரண்டு பில்லியன் மக்கள் இருந்தார்கள் அதற்குப்பிறகு அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் மிகப் பெரிய இடைவெளி இருந்தது தொழில் மயமாக்கப்பட்ட உலகில் ஒரு பில்லியன் மக்களுக்கும் வளர்ந்து வரும் நாடுகளில் இரண்டு பில்லியன் மக்களும் தொழில் மயமாக்கப்பட்ட உலகில்மக்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தார்கள் படித்திருந்தார்கள், பணக்காரர்களாக இருந்தார்கள் அவரகளுக்கு சிறிய குடும்பம் இருந்தது்அவர்களுடைய விருப்பம் கார் வாங்குவதில் இருந்தது. 1960ல் சுவீடிஷ் அனைவரும் சேமித்துக் கொண்டிருந்தார்கள் வால்வோ கார் வாங்குவதற்காகஇதுதான் அன்றைய ஸ்வீடனின் பொருளாதார நிலைமை ஆனால் அதற்கு மாறாக தொலைதூரத்திலிருக்கும் வளர்ந்துவரும் நாடுகளில் வசித்துவந்த சராசரியான குடும்பத்தின் இச்சையெல்லாம் அன்றைய தினத்திற்கான சாப்பட்டுதான் அவர்களும் சேமித்துக் கொண்டுதான் இருந்தார்கள் ஒரு ஜோடி ஷு வாங்குவதற்காக உலகத்திற்குள் மிகப் பெரிய இடைவெளி இருந்ததுநான் வளர்ந்து வரும் சமயத்தில். இது மேற்கத்திய நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்குமான இடைவெளி இது உலகத்தில் ஒரு மாதிரியான மன உறுதிப்பாட்டை ஏற்படுத்தி விட்டது இதை இன்றும் நாம் மொழியியல் ரீதியில் உபயோகப்படுத்துகிறோம் ”மேலை நாடுகள” பற்றி பேசும் போதும்”வளரும் நாடுகள்” பற்றி பேசும்போதும் ஆனால் உலகம் மாறிவிட்டதுஎனவே நமது மன உறுதிப்பாட்டை மாற்றிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது.உலகின் பகுப்பியல் முறையை புரிந்து கொள்ளும் நேரம் தற்சமயம் வந்துவிட்டது

அதைத்தான் நான் உங்களுக்குக் காண்பிக்கப் போகிறேன். ஏனென்றால் 1960லிருந்து 2010 வரை உலகத்தில் என்ன நடந்ததுவென்றால் கொஞ்சம் கொஞ்சமாக நான்கு பில்லியன் மக்கள் உலக மக்கள் தொகையுடன் சேர்ந்து விட்டது எவ்வளவு பேர் பாருங்கள்! உலக மக்கள் தொகை இரட்டிப்பாகிவிட்டது நான் பள்ளிக்குச் சென்ற நாளிலிருந்து மேலை நாடுகளில் கண்டிப்பாக பொருளாதர வளர்ச்சியும் இருந்தது அதிகமான நிறுவனங்கள் இருந்த காரணத்தால் பொருளாதாரம் வளர்ந்தது ஆகவே மேற்கத்திய மக்கள் இங்கு செல்லத் தொடங்கினார்கள் என்வே அவர்களது இப்போதைய இச்சையெல்லாம் கார் வைத்துக் கொள்வது மட்டுமல்லமிகவும் தூரமான இடங்களுக்குச் சென்று விடுமுறையைக் கழிக்க வேண்டும் என்பதும்தான் அவர்கள் பறந்து செல்ல விரும்புகிறார்கள். ஆக அவர்கள் இந்த நிலையில் இன்றைக்கு இருக்கிறார்கள் வளர்ந்துவரும் நாடுகளின் வெற்றி என்னவெனறால் அவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் பொருளாதாராத்தை நாம் வளர்ந்து வரும் பொருளாதாரம் என்று அழைக்கிறோம் அவர்கள் இப்பொழுது கார் வாங்குகிறார்கள் ஒரு மாதத்திற்கு முன்பு என்ன நடந்தது என்றால் கீலி என்கிற சைனீஸ் நிறுவனம் வோல்வோ நிறுவனத்தை வாங்கியது இறுதியில் சுவீடன் புரிந்து கொண்டது என்னவென்றால் உலகில் ஏதோ ஒரு பெரிய விஷயம் நடந்துவிடடெதென்று.(சிரிப்பு)

ஆக அவர்கள் அங்கே இருக்கிறார்கள். ஆனால் இதில் சோகம் என்னவெனில் இங்குள்ள இரண்டு பில்லியன் மக்கள் இன்னும் சாப்பாட்டுக்கும், ஷூக்களுக்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் இன்னும் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள் ஐம்பது வருடங்களுக்கு முன்பு இருந்ததுபோல இதில் புதிய விஷயம் என்னவென்றால் மிகப்பெரிய மலை போல் பில்லியன்கள் அதாவது மூன்று பில்லியன் இங்கிருக்கிறது. அதுவும் கூட வளர்ந்துவரும் பொருளாதாராம்தான் ஏனென்றால் அவர்கள் மிகவும் நல்ல ஆரோக்கியத்துடனும், கல்வியறிவுடனும் இருக்கிறார்கள் தவிர ஏற்கனவே ஒவ்வொருக்கும் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் உள்ளனர்பணக்காரர்களைப் போல இப்பொழுது அவர்களுடைய விருப்பமான முனைப்பு எல்லாம் ஒரு சைக்கிள் வாங்குவதுதான். அதற்குப்பிறகு அவர்கள் மோட்டார் சைக்கிள் வாங்கக்கூட ஆசைப்படுவார்கள் ஆனால் இந்த உலகம்இன்றைக்கு நாம் இருப்பது எந்தவித இடைவெளியும் இல்லை ஆனால் வறுமையில் இருப்பவர்களுக்கும், மிகவும் வறுமையில் இருப்பவர்களுக்கும்பணக்காரர்களுக்கும் உள்ள இடைவெளி முன் எப்பொழுதையும் விட அதிகம்.ஆனால் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது நடப்பதிலிருந்து, மோட்டார் சவாரியிலிருந்து பறப்பது வரை மக்கள் எல்லா மட்டத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள் மிகவும் அதிகமான மக்கள் இதற்கிடையில் எங்கோ மத்தியில் இருக்கிறார்கள் இந்தப் புதிய உலகம் தான் நம்மிடம் உள்ளது 2010ம் ஆண்டில்

எதிர் காலத்தில் என்ன நடக்க்கும்? நல்லது, நான் அதை மதிப்பிடவிருக்கிறேன் 2050க்கு நான் சமீபத்தில் `ஷாங்காய்’யில் இருந்தேன்அப்பொழுது சீனாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கவனிக்க முடிந்தது அவர்கள் மிக வேகமாக முன்னேறி முன்பு ஜப்பான் சாதித்ததைப் போல இவர்களுக்கு சாதிப்பார்கள் என்பது உறுதி எல்லாவிதமான எதிர்கால கணக்கீடுகளின்படி இந்த ஒரு பில்லியன் இன்னும் அதிகரிக்கும் அது ஒன்றிலிருந்து இரண்டு அல்லது மூன்று சதவிகிதமாக இருக்கும் (ஆனால் இந்த நொடியில்), அது ஏழு அல்லது எட்டு சதவிகிதமாக இருக்கும். அதற்குப்பிறகு அவர்கள் அந்த இடத்தை அடைந்திருப்பார்கள் அவர்கள் பறக்க ஆரம்பிப்பார்கள் இவர்கள் குறைந்த அல்லது மத்தியதர வருமானமுள்ள நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் போன்றவைகள் கூட பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் ஒருவேளைஆனால் ஒரு வேளை நாம் சரியான `க்ரீன்’ தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவேண்டும் அப்படியென்றால் தான் நாம் மிகவும் கடுமையான `தட்பவெட்பநிலை மாற்றத்தை’ புறகணிக்கமுடியும் மின்சக்தியும் ஓரளவிற்கு மலிவாக இருக்கும் - அதற்குப் பிறகு அவர்கள் எல்லோரும் மேலே இருப்பார்கள் அவர்கள் வாங்க ஆரம்பிப்பார்கள் மின்சார கார்கள்இதைத்தான் அங்கு காண முடியும்

அப்படியென்றால் இந்த ஏழ்மையில் உள்ள இரண்டு பில்லியன் என்ன ஆவார்கள்? இந்த ஏழ்மையில் உள்ள இரண்டு பில்லியன் என்ன ஆவார்கள்?அவர்களும் முன்னேறிச் செல்வார்களா? நல்லது, இங்கே மக்கள் தொகை பெருக்கம் வருகிறது ஏனென்றால் அங்கே (வளர்ந்து வரும் பொருளாதாரத்தில்), நாம் ஏற்கனவே ஒரு பெண்மணிக்கு இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் என வைத்திருக்கிறோம் குடும்பக்கட்டுப்பாடு என்பது பரவலாக புழக்கத்தில் உள்ளது அதனால் மக்கள் தொகை பெருக்கம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் (ஆனால் இங்கு மிகவும் ஏழ்மையில் உள்ளவர்கள்), மக்கள் தொகை அதிகமாகிக்கொண்டே போகிறது எனவே ஏழ்மையில் இருக்கும் இந்த இரண்டு பில்லியன் மக்களும் அடுத்த பத்தாண்டுகளில் மூன்று பில்லியனாக உயரக்கூடும் அதற்குப்பிறகு அவர்கள் 4 பில்லியனாக அதிகரிக்கக்கூடும் இதெல்லாம் - ஆனால் நியூக்ளியர் போர் போன்ற வேறு எதையும் நாம் பார்த்ததில்லை- இந்த மாதிரியான வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது ஏனென்றால் நான் இந்த வளர்ச்சி முறையை ஏற்கனவே கொண்டிருக்கிறோம் ஆனால், இப்படி ஆனால் மட்டுமே, ஏழ்மையிலிருப்பவர்கள் வறுமையை விட்டு வெளியே வரவேண்டும் அவர்கள் கல்வியறிவு பெறவேண்டும், அவர்களுடைய குழந்தைகளின் வாழ்வு நீடிக்க வேண்டும் அவர்களால் சைக்கிள், செல்போன் வாங்க முடிய வேண்டும் அதற்குப்பிறகு இங்கு வந்து வசிக்கவேண்டும்அதற்குப் பிறகு மக்கள் தொகை வளர்ச்சி 2050ல் நின்று விடும் இந்த நிலைமையை மக்கள் அடைந்த பின் அவர்கள் மீண்டும் உணவிற்காகவும், ஷூவிற்காகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்அப்படியிருந்தார்கள் என்றால் நாம் இப்பொழுது இருப்பது போன்ற மக்கள் தொகை வளர்ச்சிதான் அப்பொழுதும் இருக்கும்

அது ஏன் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன். முன்னாள் காலகட்டத்தை கொஞ்சம் பின்னால் மாற்றி டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் இங்கு இந்தத் திரையில் எனது நாட்டின் குமிழ்கள் உள்ளன ஒவ்வொரு குமிழும் ஒரு நாடு. அந்த குமிழின் அளவு அந்த நாட்டின் ஜனத்தொகை அதில் இருக்கும் நிறங்கள் கண்டங்கள். மஞ்சள் அமெரிக்கா அடர்த்தியான நீலம் ஆப்ரிக்கா, பிரெளன் ஐரோப்பா பச்சை மத்திய கிழக்கத்திய நாடுகள் லேசான நீலக் கலர் தெற்கு ஆசியா அதாவது இந்தியாவும், சீனாவும்.இந்த அளவு ஜனத்தொகைஇங்கு ஒவ்வொரு பெண்மணிக்கும் எத்தனை குழந்தைகள் என்றிருக்கிறதுஇரண்டு குழந்தைகள், நான்கு குழந்தைகள், ஆறு குழந்தைகள், எட்டு குழந்தைகள் பெரிய குடும்பம vs சிறிய குடும்பம் 1960ஆம் ஆண்டு கீழே இங்கிருப்பது குழந்தைகளின் வாழ்வுநிலை அதாவது எத்தனை குழந்தைகள் குழந்தைப்பருவத்தைத் தாக்குப் பிடிக்கின்றன பள்ளிக்கூடத்தில் சேருவதற்கு முன்பு வரை 60 சதவிகிதம், 70 சதவிகிதம், 80 சதவிகிதம், 90 ஏறக்குறைய 100 சதவிகிதம். நாம் ஏற்கனவே பணக்கார நாடுகள் மற்றும் ஆரோக்கியமான நாடுகளில் இந்த அளவில் இருக்கிறோம் இந்த உலகம் பற்றிதான் எனது ஆசிரியர் 1960ல் பேசினார் ஒரு பில்லியன் மேற்கத்திய உலகம் இங்கிருக்கிறதுபிறந்த குழந்தைகளில் அதிகமான குழந்தைகள் ஆயுளுடன் உள்ளனர், சிறிய குடும்பங்கள் மற்றவைகள் எல்லாம் முன்னேறி வரும் நாடுகளின் வானவில்மிகப்பெரிய குடும்பங்களுடன் கூடியது மேலும் பிறக்கும் குழந்தைகளில் மிகவும் குறைவான குழந்தைகளே அதிக நாட்கள் வாழ்கின்றன

என்ன ஆயிற்று? நான் உலகம் பற்றி ஆரம்பித்தேன். இதோ அதைத் தொடருவோம். ஆண்டுகள் ஆக ஆக குழந்தைகளின் வாழ்வு நிலை அதிகரிப்பதைப் பார்க்கமுடிகிறதா உங்களால்? அவர்களுக்கு சோப், சுகாதாரம், கல்வி தடுப்பூசி மற்றும் பெனிசிலின் ஆகிய அனைத்தும் கிடைக்கிறது குடும்பக்கட்டுப்பாடு. குடும்பத்தின் அளவு குறைந்து கொண்டு வருகிறது. குழந்தைகளின் வாழ்வுநிலை 90 சதவிகிதமாக ஆகும் போது குடும்பத்தின் எண்ணிக்கைக் குறைகிறது மத்திய கிழக்குப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான அரேபிய நாடுகளும் இந்த நிலைக்குத்தான் வரவருக்கிறது (சிறிய குடும்பங்கள்) இதில் பங்காளதேஷ் இந்தியாவை தொட ஆரம்பித்திருப்பதைப் பாருங்கள் உலகில் உள்ள எல்லா வளர்ந்துவரும் நாடுகளும் மேற்கத்திய உலகத்துடன் சேர்கின்றன மிகவும் நல்ல குழந்தைகளின் வாழ்நிலையுடன் மிகவும் சிறய அளவிலான குடும்பம்ஆனால் இன்னும் இங்கு வறுமையில் வாடும் பில்லியன் மக்கள் இருக்கிறார்கள் உங்களால் அவர்களை இங்கு பார்க்க முடிகிறதா இங்கு நான் வைத்திருக்கும் இரண்ட பெட்டிகளில்? அவைகள் இன்னும் மேலேயேதான் உள்ளது இன்னும் அவர்களுடைய குழந்தைகளின் வாழ்வுநிலை 70லிருந்து 80 சதவிகிதம்தான், இதற்கு அர்த்தம் என்னவென்றால் உங்களுக்கு 6 குழந்தைகள் பிறந்தால் அதில் 4 மட்டும் தான் உயிருடன் இருக்கும் அடுத்த தலைமுறையைப் பார்க்க. ஒரு தலைமுறையில் மக்கள் தொகை இரட்டிப்பாக ஆகிவிடும்

ஆக இதற்கு ஒரே வழி அதிகமாகிக் கொண்டிருக்கும் உலக மக்கள் தொகையை தடுக்க குழந்தைகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்கச் செய்வததுதான் அதாவது 90 சதவிகிதத்திற்கு இதனால் தான் கேட்ஸ் ஃபவுண்டேஷன் யுனிசெப் மற்றும் பல உதவி அமைப்புகள் எல்லாமாக ஏழ்மையான நாடுகளின் அரசாங்கங்களுடன் சேர்ந்து உடல்நிலை சம்பந்தமான விஷயங்களில் அதிகமாக முதலீடு செய்கின்றன ஏனென்றால் அவர்கள் உண்மையிலேயே அவர்களைச் சென்றடைய உதவுகிறார்கள்உலகம் தாங்கக்கூடிய மக்கள் தொகைக்காக நாம் இது மாதிரியான முயற்சிகள் செய்தால் ஜனத்தொகையை 9 பில்லியனுடன் நிறுத்தலாம்குழந்தைகளின் ஆயுள் நீட்டிப்பு ஒரு புதிய நல்வாழ்விற்கான` பச்சை’குழந்தைகள் அதிக ஆண்டுகள் வாழ்வதின் மூலம் மட்டும் தான் நாம் ஜனத்தொகை பெருக்கத்தை நிறுத்த முடியும் இது நடக்குமா? நல்லது, நான் நல்லதை நினைப்பவனோ அல்லது கெட்டதை நினைப்பவனோ அல்லஆனால் முடியும் என்பதில் நம்பிக்கைக் கொண்டவன் இது ஒரு புதிய விஷயம் இங்கு நமது உணர்வுகளைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு நாம் கொஞ்சம் ஆய்வுநிலையில் உலகத்துடன் சேர்ந்து வேலை செய்யவேண்டும்இதை செய்ய முடியும் உலகத்தைத் தவிர இன்னும் அதிகமாக நம்மிடம் பல உள்ளன க்ரீன் தொழில்நுட்பத்துடன் முதலீடும் சேரும்பட்சத்தில் வறுமையை ஒழிக்கமுடியும் நல்ல உலகந்தளுவிய மேலாண்மையால்உலகம் இந்த மாதிரி ஆகக்கூடும்

முன்பு மேற்கத்திய நாடுகள் இருந்த நிலையைப் பாருங்கள் இந்த நீலக் கலர் பெட்டி மட்டும் தனியாக இருந்ததை நினைத்துப் பாருங்கள் உலகத்தை அவைகள் முன்நடத்திச் சென்றன.. அவர்களுக்கென்று அமைத்துக் கொண்ட வாழ்க்கையை வாழ்ந்தார்கள் ஆனால் இது மறுபடியும் நடக்காது புதிய உலகத்தில் பழைய மேற்கத்திய நாடுகளின் பங்கு அடித்தளத்தின் ஒரு பாகமாக மாறும் நவீன உலகத்தில் - அதிகமும் கிடையாது, குறைவும் கிடையாது ஆனால் இது ஒரு முக்கியமான பங்களிப்பாகும் நன்றாக செய்தால் அதுவே பழக்கமாகிவிடும்

மிகவும் நன்றி!

கைதட்டல்

நன்றி: 

 

 

19214 registered users
7452 resources