குழு

அஸிம்பிரேம்ஜி பவுண்டேஷனில் இருக்கும் சிலர், எங்களுடன் ஒருங்கிணைந்த பல நிறுவனங்களின் கூட்டாளிகள் மற்றும் ஆர்வம் கொண்ட தனி நபர்கள் ஆகிவர்களைக் கொண்டது எங்களது குழுவாகும். இதில் உங்களது பங்களிப்பும் வேண்டும் !

 

14325 registered users
6005 resources
அருண்

 

அருண் அமைதியானவர், நேர்மறைச் சிந்தனையாளர், எளிதில் அனுகுவதற்கு அனுபதிப்பவர். தற்போது அகாடமிக்ஸ் அண்டு பெடகோஜி குழுவின் தலைவர். இணைய தளத்திற்கு இக்குழு கன்னடப் பதிப்பின் ஆசிரியர் குழுவிற்கு கல்வி சம்பந்தமான வழிகாட்டுதலை வழங்குகிறது. இதற்கு முன் அருண் ஓராண்டுக்கு மேல் இந்த இணைய தளத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். அருண் கலை இசை மற்றும் ஓவியங்களில் ஈடுபாடு கொண்டவர். ஒவ்வொருவரும் சுய முயற்சியை மேம்படுத்த வேண்டும் என்பது இவர் கொள்கை. 

உஷா

 

ஆர்வம், முடிக்கும் திறன் மற்றும் திறந்த மனம் ஆகிய பண்புகள் கொண்டவர் உஷா. அவர் டீச்சர் பிளஸின் ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராவார். டீச்சர்ஸ் ஆப் இந்தியா என்ற மின் தளத்தின் ஆங்கிலப் பகுதியை நிர்வகிக்கிறார். ஒரு அன்னையாக, வழிகாட்டியாக, நிர்வாகியாக, இல்லத்தரசியாக பல துறைகளில் சிறப்பாகத் திகழும் உஷாவுக்குப் பிடித்தவை எழுதுதல், படித்தல், திரைப் படம் பார்த்தல், சொல் விளையாட்டு மற்றும் சுற்றுலாப் பிரயாணம் ஆகியவையாகும். தவறுகளை மறந்து விடுவதும் தவறே செய்யக்கூடாது என்பதும் அவரது குணத்தில் ஒன்றாகும்.  'வாழ்வில் உங்களது சொந்த கருத்துக்களை செயல்படுத்தும் சக்தி உங்களுக்கு இல்லாவிடில், பின் வாழ்கை வழங்கும் வழிகளையே ஏற்றுக் கொள்ள வேண்டும்' . என்பது அவரது நம்பிக்கையாகும்.

சங்கரன்

 

தமிழ்ப் பகுதியின் ஆசிரியரான சங்கரன் புதுமை விரும்பி மட்டுமல்ல ஆக்கபூர்வமான சிந்தனையாளரும் கூட . வெளியுலகம் தரும் பல வளமான படைப்புகளை மொழி பெயர்த்தும் தரம் பார்த்தும் உறுதி செய்து வெளியிட விரும்புபவர். மொழி, விஞ்ஞானம், பொறியியல் இத்துறைகளில் மிகச் சமீப கால வரவுகளைத் தர முனைபவர் இவர். கவிதை, சிறுகதை, உருவகக் கதை ஆகிய தமிழ்ப் படைப்புகள் கலைமகள், தினமணி கதிர், புதுமை, சிறுகதை போன்ற பத்திரிகைகளிலும், சிஃபி, &  மின் அம்பலம் என்ற மின் இணைய தளங்களிலும் பிரசுரமாகி உள்ளன. பல ஆங்கிலக் கட்டுரைகள் ஆபீசர்ஸ் ஃபோரம் என்ற ஸ்டேட் பாங்க் ஆபீசர்ஸ் அசோசியேஷன் வெளியீட்டுச் சஞ்சிகையிலும் வெளி வந்துள்ளன. மேலும், இவர்    “ETouch” இ- டைச் (ஆங்கிலம்), வாய்மை (தமிழ்) ஆகிய இரண்டு சஞ்சிகைகளின் நண்பர்களைக் கொண்ட குறுகிய வாசகர் வட்டத்தின் ஆசிரியரும் ஆவார். "வான வீதியில் சிறகடித்துப் பறக்கும் பறவைகளைக் கூண்டில் அடைக்காதீர்கள்" என்பது சிறந்த புதுமைப் படைப்புகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்கு வெளிப்படுத்தும் இவரது தாரக மந்திரமாகும்.   

ஜுனி கே வில்ஃரெட்

வெளிப்படையானவர், கபடு சூது தெரியாதவர், கற்பனைவளம் மிக்கவர் – இது தான் ஜுனியின் அடையாளங்கள். விஷுவல் & இன்டெர் ஆக்டிவ் டிசைனர் குழுவில் பணியாற்றுபவர். ஏராளமாகப் புத்தகங்கள் படிக்கும் பழக்கமுடையவர். ஓவியம், திரைப்படம் பார்த்தல், இசை கேட்டு மகிழ்தல்  ஆகியவைகளில் விருப்பம் உள்ளவர். சைக்கிளில் நகர்வலம் வருவது இவருக்குப் பிடிக்கும். மதியம் தூங்குவது இவருக்குப் பிரியமான ஒன்று. அதை இவர் தவறவிடுவதில்லை. 

ஜெய்குமார் மாரியப்பா

 

நேர்மையான நட்புடன் மனம் திறந்து பேசும் பண்பும் கொண்டவர் ஜெய்குமார் மாரியப்பா. இவர் ஆசிரியர் இணைய தளத்தின் கன்னட மொழிப் பிரிவுக்கு ஆசிரியர். இணைய தளத்துக்கு வரும் படைப்புகளைத் தேர்வு செய்து தரம் பிரித்துப் பதிப்பது இவரது பணியாகும். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல, சிறுகதை ஆசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் ஏராளமான எழுத்தோவியங்களைப் பரிசீலிப்பதுடன் திறனாய்வாளராகவும் விளங்குபவர். சமையற்கலை, புகைப்படக்கலை, கற்பித்தல் மற்றும் உலக மகாகாவியங்களைப் படித்து மகிழ்தல் இவருக்கு விருப்பமானவைகள் ஆகும். மொழிகள் மக்களை இணைக்க வேண்டுமே அல்லாது பிரிக்க்க் கூடாது என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டவர். இவரது "விஸ்வமானவா" – உலக மனிதம் - என்ற ஒரு உலகலாவிய குடிமகன் கொள்கைக் கலாச்சாரத்தை மனதார நேசிப்பவர். இதன் மூலம் மக்களைப் பிளவு படுத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிரிவினைச் சுவர்களுக்குள் கட்டுண்டு ஒரு மனிதன் இருக்க்க் கூடாது என்பதில் திடமான நம்பிக்கை கொண்டவர்.

திவ்யா சவுத்ரி

 

எதையும் பகுத்தறிவோடு காரண காரியங்களைக் கொண்டு சிந்தித்து இதயம் சரி என்று சொல்வதை ஏற்றுச் செயல்படுபவர் திவ்யா. பூகோளம், பயணம் மற்றும் புத்தகங்களாலான உலகம் இவருக்கு விருப்பமானவை. டீச்சர் பிளஸ் என்ற இணைய தள ஆசிரியர்களின் குழுவில் அங்கம் வகிப்பவர். அந்த இணய தள ஆங்கிலப் பகுதியின் ஆசிரியராக இருந்து, வளமான பாடங்களைத் தேர்வு, சரிபார்த்து, பிற சகாகளுடன் இணைந்து செயல்படுவது இவரது பணியாகும். " மிகமிக உயர்ந்ததைத் தவிர வேறு எதையும் பெற நீங்கள் நிராகரித்தால், அதையே நீங்கள் அடைவீர்கள்" என்ற சோமர்செட் மாகம் வார்த்தைகள் உண்மையானவை என்பது திவ்யாவின் நம்பிக்கை. 

நாகராஜு

 கடமை உணர்ச்சி, கடின உழைப்பு, புதியவைகளை கற்கும் திறந்த உள்ளம் ஆகிய குணங்களைக் கொண்ட நாகராஜு போர்டலின் தெலுங்குப் பகுதியின் ஆசிரியராகப் பணிபுரிகிறார். அவர் ஆங்கில மொழியில் வெளியிடப்படும் தரமான படைப்புகளை தெலுங்கில் மொழிபெயர்ப்பு செய்கிறார். இளம் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மதிப்பீடு ஆகியவைகளில் நாகராஜு மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சங்கீதம் மற்றும் தபால் தலைகளைச் சேகரித்தலில் விருப்பம் கொண்டவர். ஆசிரியர் இணைய தளத்தை இந்தியாவின் கல்விக்கான “கூகிள் இணையதளம்” தரத்திற்கு உயர்த்த விரும்புகிறார். அவரது எளிமையான வாழ்க்கைத் தத்துவம் என்ன தெரியுமா? "நீ மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே உள்ளாய்" என்பதுதான்.

நிதின்

 

மலர்ந்த முகம் தீர்மானமான செயல் ஆர்வம் அன்பான நெஞ்சம் - இவை நிதினின் பண்பாடுகள். இவர் கற்றலுக்கான உபகரணங்கள்,  திறந்தவெளிக் கல்விக்கான பொருள்கள், ஆசிரியர் முன்னேற்றத்திற்கான பாடங்கள், பள்ளிகளில் ஆய்வுகள், ஆசிரியர் மேம்பட்டுப் பயிற்சிகள் ஆகியவைகளில் தம்மை ஈடுபடுத்தி உள்ளார். பிரயாணம் செய்வதும் சைக்கிளிலேயே உலகைச் சுற்றி வலம் வரவேண்டும் என்பதும் இவரது நீண்ட நாள் கனவாகும். “ஒரு மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு பொருட்களைத் தனக்குத் தேவையில்லை என ஒதுக்குகிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவன் பணக்கார ன் “ என்ற ஹென்றி டேவிட் தோரேவின் பொன்மொழி நிதினுக்கு மிகவும் பிடித்ததாகும்.

நிராக்தேவ்

 

நேர்மறைச் சிந்தனையுடன் சுறுசுறுப்பாகவும் மலர்ந்த முகத்துடனும் காட்சியளிக்கும் நிராக்கின் வெடிச்சிரிப்பு அலுவலக நடைபாதை வரை ஒலித்துக்கொண்டிருக்கும். அது எல்லா மக்களையும் இழுத்துக் கட்டிப்போடும் சக்தி வாய்ந்தது.  நிராக் தேவ் ஒரு யோகா நிபுணர். யோகாவை மற்றவர்களுக்கு கற்பிப்பதில் விருப்பம் கொண்டவர். ‘உன்னையே நீ நம்பு’ என்ற கருத்தின் படி வாழ நினப்பவர். இணைய தளத்தை நிர்வகிக்கும் திட்ட இணைப்பாளர். மேலும், இணைய தளம் சம்பந்தமான 'டெக்னிக்கல்' மற்றும் 'பைனான்ஸ்'  ஆகியவைகளையும் இவர் கவனிக்கிறார்.

பூஜா

 

எளிதில் உணர்ச்சிவசப்படும் மெலிந்த விசித்திரமான பெண்மணி பூஜா ஹிரா நந்தனி. கவிதைகள் எழுதுவதும் கண்ணியில் சங்கேதக் குறியீடுகள் அமைப்பதும் இவரது விருப்பமான செயல்கள். பிரபலமில்லாத ஹாலிவுட் படங்களைச் சேகரிப்பது, அழகாக வடிவமைத்த கலைப் பொருள்கள் மற்றும் பீங்கான் கோப்பைகள் சேகரிப்பது இவரது பொழுதுபோக்கு. சமூகசீர்திருத்தப் பள்ளி, குழந்தைத் தொழிலாளர் நலன், கல்வி, நகரவாசிகளின் வறுமை ஒழிப்பு ஆகிய பிரச்சனைகளில் தீவிரமாக ஈடுபடுவதும், அவைகளைப் பற்றி விமரிசிப்பதும் இவருக்குப் பிடித்தவைகள். ஆசிரியர் இணையதளத்தில் நுகர்வோர் பற்றிய ஆய்வுகள் மற்றும் தொழில் நுட்பங்களை நடைமுறைப் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். "அவசரமும் கூச்சலும் நிறைந்த இடத்துக்கு மகிழ்ச்சியுடன் சென்று பார். அப்போது தான் நிசப்தமான இடத்தில் கிடைக்கும் அமைதியின் அருமை தெரியும்" என்ற பழமொழி பூஜாவுக்கு மிகவும் பிடிக்கும்.

முஜாஹித்

 

சக்தியும் ஆக்கபூர்வமான ஆற்றலும் கொண்ட முஜாஹித் பொறியியல் கல்வி வல்லுனர். இவர் கல்வித் துறையில் கைவரப் பெற்ற உத்திகள் மூலம் புதிய கண்டு பிடிப்புகளுக்கு வளர்ச்சி காண்பவர். ஆசிரியர்களின் இனையதளம் மூலம் பயனீட்டாளர்களுக்கு உதவும் வகையில் வலிமையான பயன்படும் உபகரணங்களைத் தொடர்ந்து வழங்கி மேலும் மேலும் அவை தொடர்ந்து பயன் தருமாறு தந்து கொண்டிருப்பவர். கொள்கை வழிகளைக் கடைப்பிடித்து, சமூக அறிவியலில் ஒரு முற்போக்கான பழைமை மாறாத நிலையைக் கடைபிடிக்கும் அவரது பொழுது போக்கு- படிப்பது – பாட நூல்கள் மட்டும் அல்ல - இஷ்டப்பட்டவாறு சமையல் செய்வது, புதுப்புது இடங்கள் புதுப்புதுக் கலாச்சாரங்களைக் கண்டு மகிழ்தல் ஆகியவைகளாகும்.இவரது கொள்கை ' நீ நீயாக இரு! அவரவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்!' என்பதாகும்.

ரவி பாபு

 

ரவி பாபு வெற்றி பெருவதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுபவர்.  குழுவினரின் தொழில் நுட்பட் பிரச்னைகளை தீர்த்து வைப்பவர். மின்னஞ்சல் தளங்களை அமைப்பதிலும் அனிமேட்டட் கிரபிக்ஸ்களை நிறுவுவதிலும் பணிபுரிபவர். இசை ஞானி இளைய ராஜாவின் இசை, 80, 90 களில் வெளி வந்த பழய திரைப் படங்கள், புத்தகங்கள் படிப்பது, செஸ் விளையாடுவது ஆகியவைகள் அவரது பொழுதுபோக்காகும். தன்னம்பிக்கையினால் துண்டப்படும் அவர், கடுமையான உழைப்பாளியான இவருக்கு வாரக் கடைசி நாளன்று எந்த வேலையும் செய்யாமல் அயர்ந்து , தூங்கி ஓய்வெடுப்பது மிகவும் பிடிக்கும். "தவறு செய்வது மனித இயல்பு! தொடர்ந்து ஏதாவது குழப்பம் ஏற்பட, உங்களுக்குத் தேவை ஒரு கணிப்பொறி!" என்பது தொழில் நுட்பம் பற்றிய இவரது வேடிக்கையான கணிப்பாகும்..

ராஜேஷ் உட்ஷாகி

 

ராஜேஷ் இணைய தளக் குழுவினரின் இந்திப் பகுதிக்கு ஆசிரியர். சிறந்த கட்டுரைகளை உருவாக்குவதுடன், மற்ற கட்டுரைகளைத் தேர்வு செய்தும், மதிப்பிடல் செய்வதிலும் செயல்படுகிறார். இந்தப் பணி செய்யும் மற்ற தமது  சகாக்களோடு கலந்துரையாடி இறுதியாக வளமான படைப்புகளைத் தேர்வு செய்து, முடிவெடுப்பவர். இவர் விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன், தீர்க்கமாகச் சிந்திப்பவர்.

ஏகலைவா என்ற மிகப் பிரபலமான கல்வித் துறையில் ஈடுபட்டுள்ள அரசு சாரா நிறுவனத்தில் சுமார் 27 வருடங்கள் பணியாற்றி உள்ளார். அப்பொழுது, ஏகலைவாவின் பிரசுரமான சக்மக் மற்றும் மத்திய பிரதேச, கல்வித் துறையின் இரண்டு இதழ்களான குல்லக், பலாஷ் ஆகியவைகளை சரிபார்த்து வெளியிடும் ஆசிரியர் குழுவில் பணியாற்றி உள்ளார். இவர் நளந்தா, ரூம் டு ரீட் என்ற இரு அரசு சாரா நிறுவனங்களிலும் மற்றும் மத்திய பிரதேச கல்வித் துறையிலும் இவர் தமது மேலான அறிவுரைகளை அளித்து பெரும் பங்காற்றி உள்ளார்.

இவர் இரண்டு பிளாக்குகளைத் தொடர்ந்து பல விவரங்களை அளித்து அவைகளை உயிர்ப்புடன் வைத்துள்ளார். பிறந்த நான், எனது வாழ்வின் லட்சியத்தை அறிய என் தேடுதல் பயணம் இன்னும் தொடர்கிறது என்ற லட்சியத்தைக் கொண்டு, ராஜேஸ் வாழ்ந்து வருகிறார். 

ராஜ்கிஷோர்

 

எல்லோருடனும் ஒத்துப் போகக் கூடிய ஒளிவு மறைவற்ற ராஜ்கிஷோர்  தம்மை ஒரு சுதந்திரமான சிந்தனையாளன் எனக் கூறிக் கொள்பவர். கல்வி பாடத்தின் நிபுணர் என்ற நிலையில் செயல்படும் அவர், இணைய தளத்திற்கு படைப்புகளை உருவாக்கி வடிவமைத்திலும், மற்றவர்களின் படைப்புகளை சரிபார்ப்பதிலும் ஈடுபடுபவர். இந்தியா முழுவதையும் சுற்றி வந்த அறிவியல் கண்காட்சிப் புகை வண்டியில் இவர் விஞ்ஞான விளக்க விரிவுரையாளராகப் பயணம் மேற்கொண்டு செயல் விளக்கம் மற்றும் உரைகள் மூலம் விஞ்ஞானம்  பற்றிய விளக்கம் அளித்துள்ளார். இவருக்கு மலைப் பாதைகளில் கால்நடையாகவே நடப்பது மிகவும் பிடிக்கும். இவரது பொழுது போக்குகளில் நடைப் பயணம் தவிர சொல் விளையாட்டு,  நூல்கள் படித்தல், 'காமெடி' யான திரைப் படங்களைப் பல தடவை பார்த்து ரசிப்பது - இவைகள் முக்கியமானவை. “செய்வது தான் கற்றலாகும்” என்பது தான் இவரது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

ராதா

 

சிரித்த முகத்துடன் சந்தோஷமாக இருக்கும் ராதா எவரும் எளிதில் அணுகும் முறையில் செயல்படுபவர். ராதா பிறர் சொல்வதை நன்கு கூர்ந்து கேட்பார். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனம்  கொண்டவர். அவர்  எதைச் செய்தாலும் - வேலையோ அல்லது விளையாட்டோ - எதுவாக இருப்பினும்,  முழுத்திறமையையும் வெளிக்கொண்டு செயல்பட வேண்டும் என்று நினைப்பவர்.

தமது ஓய்வு நேரத்தில் போட்டோ, சங்கீதம், சினிமா, ஓர்லி-பழங்குடியினரின் கலை, நகைச்சுவை நாடங்கங்கள் ஆகியவைகளில் பொழுது போக்குவார். கல்வி சார் பொறியியல்  வடிவமைப்பு துறையின் தலைமைப் பொறுப்பாளாராகப் பதவி வகிப்பவர் ராதா. அவரது இந்தப் தலைமைப் பொறுப்பில் தான், பல்கலைக் கழகத்தின் கருவூல மையத்தின் முக்கிய அங்கமாகத் திகழும் டீச்சர்ஸ் ஆப் இந்தியா என்ற வலைத்தளம் வெளிக்கொணரப்பட்டது. 

ராம்ஜீ வல்லாத் என்று

 

ராம்ஜீ வல்லாத் என்று அழைக்கப்படும் இவர் வாழ்க்கையை நேசிப்பவர். கூட்டு நிறுவனத்தில் பல வருடங்கள் பணி ஆற்றிய அனுபவங்களுடன், நடைமுறை உலகத்தின் அனுபவங்களையும் தம்முடன் கொண்டுள்ளவர். கல்வியைப் பற்றி மிகுந்த தீராத காதல் கொண்டுள்ளவர். கணிதம் அல்லது பெளதிகவியல் ஆகிய பாடங்களின் கேள்விகளுக்கு விடைகளைக் கண்டுபிடிப்பது அவரது விருப்பம். அவைகளை விடுத்து, ஓய்வு நேரத்தில் சரித்திரம் அல்லது பழங்கால கற்பனைக் கதைகளைப் படிப்பதில் ஆர்வம் கொண்டவர். நம்பமுடியாத அபத்தமானதும், பைத்தியக்காரமுமான கட்டுக் கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்வதில் ஆர்வம் கொண்டவர். அந்த வகையில், ஒரு புத்தகம் வெளியிட்டு ஒரு ஆசிரியராகவும் ஆகிவிட்டவர். புத்தகங்கள் வெளியீட்டுக் குழுவின் தலைவராக இவர் பணியாற்றுகிறார். 

ராம்னிக் மோகன்

 

ராம்னிக் ஆசிரியர்களுக்கான இணைய தளத்தின் இந்திப் பகுதியின் குழுவில் அங்கம் வகிப்பவர். இணைய தள வலைகளுக்கான விஷயங்களை ஆர்வமுடன் சேகரித்து, சில சமயங்களில் உருவாக்கியும், சரிபார்த்தும், மொழிபெயர்த்தும் செயல்படுகிறார். இணைய தளத்தின் தரத்திற்கேற்ப இப்பணியினைச் செய்கிறார். ஆங்கில இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ராம்னிக் 25 ஆண்டு காலம் ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தவர். தாமாகவே தமது பதவிவிலகலுக்குப் பிறகு, புதிய துறைகளில் தம்மை ஈடு படித்தி உள்ளார். சமூக முன்னேற்றமான பிர்ச்சனைகள், இந்திய-பாகிஸ்தான் நாட்டின் மக்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் மும்முறமாக செயல்படுத்துதல் ஆகிய சமூகச் செயல்களில் சில வருடங்களாகவே தம்மை ஈடுபடித்தி உள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் முழுமையாக எழுத்தறிவின்மையை ஒழிக்க அரியானா மாநிலத்தில் ஸ்டேட் ரிசோர்ஸ் சென்டர் வெளியிட்டு வந்த காலாண்டு இதழை சரிபாத்து வெளியிட்டுள்ளார். கல்வித்துறையில் ' திகந்தர் - Digantor ' போன்ற அமைப்புகளோடு இணைந்து பணீயாற்றியவர். "வேலையில் உன்னுடைய முழுத் திறமையையும் காட்டி, முன்னேறிச் செல் - என்பது இவரது தாரக மந்திரம்.

ஸ்ரீ பர்னா

 

ஸ்ரீ பர்னா சற்று வித்தியாசமானவர். கற்பனை வளம் மற்றும் தீவிரமான செயல் திறனும் கொண்டவர். இவர் இக்குழுவில் கல்விப் பாட நிபுணர். வள நூல்கள் உருவாக்குதல், அதில் ஈடுபட்டுள்ள சகாக்களுடன் சேர்ந்து, சரிபார்ப்பதில் உதவுதல் ஆகியவைகள் அவரது பணியாகும். படிப்பது, கவிதை புனைவது, பயணங்கள் மேற்கொள்வது, சினிமா பார்ப்பது இசையை விரும்பிக் கேட்பது ஆகிய உடலுக்கும் ஆத்மாவுக்கும் உரமூட்டுவது இவைகளெல்லாம் இவருக்கு விருப்பமானவை. நம்பிக்கை என்பது வைகறை இருளில் இருக்கும் பொழுதே, வெளிச்சத்தை உணரும் பறவையாகும் என்ற பொன் மொழி இவரைக் கவர்ந்த ஒன்றாகும்.