இக்காணொலிகாட்சி புதுவை அறிவியல் இயக்கத்தின் "துளிர் இல்ல"த்தின் செயல்பாடுகளில் ஒன்றான விளையாட்டு மூலம் அறிவியலைக் கற்றலின் ஒரு வகை விளையாட்டான, ஒலி அதிர்வுகளை பற்றி தெரிந்துகொள்ள நூலை வைத்து ஒலி விளையாட்டை குழந்தைகள் கற்ற போது காட்சியாக்கப்பட்டது.
தபால்தலைகள் மூலமாக என்னவெல்லாம் கற்கலாம், எவ்வாறெல்லாம் கற்கலாம் என்பதை நபநீதா தேஷ்முக் இக்கட்டுரையில் குறிபிட்டுள்ளார். இதில் எழுத்தாளர், தனது பள்ளி அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.
குப்பி வாங்கி வந்த பெரிய சாறு நிரம்பிய கொய்யாப்பழமும் முட்புதரினுள் விழுந்தபோது, எல்லா தந்திரங்களையும் உபயோகித்து, பழத்தைத் திரும்பப்பெற முயலுகிறாள். தேவையானதைப் பெற தந்திரங்கள் செய்வது சரியா? இந்தக் கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
நாம் எல்லோரும் நம் வீட்டில் உள்ள மீன் தொட்டியில் அழகான பளிச்சென்ற, வண்ண மீன்கள் நீந்துவதைப் பார்த்து, சந்தோஷப் படுபவர்கள். ஆனால், அதில் அந்த மீன்களுக்கும் மகிழ்ச்சியா? ராஜூவுக்கும், வானவில் மீனுக்கும் நடக்கும் உரையாடலை, இந்த புத்தகத்தில் படித்து விட்டு நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.
நாம் ஏன் குயிலின் இனிய இசையை நகரங்களில் கேட்கவே முடிவதில்லை? நகரத்தைச் சேர்ந்த ராஜூ, இந்த கேல்விக்கும், இன்னும் பல கேள்விகளுக்கும், பதில்களை, தாத்தாவின் பண்ணையில் பார்த்த குயிலிடம் பேசும் போது தெரிந்து கொள்கிறான்.
நிதானமான அதேசமயம் தளராத முயற்சியுடைய ஆமை, கர்வம் பிடித்த முயலை வென்ற பந்தயம் பற்றி நினைவிருக்கிறதா? இப்பொழுது மீண்டும் அதே இருவர் இணைந்து, ஒரு செயலை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது. ஒருவரின் உதவியின்றி மற்றொருவர் செயல்பட முடியாதென்பது இருவருக்கும் தெரியும். ஆனால், இந்த பழைய எதிரிகள் இணைந்து செயல்படுவது சாத்தியமா?
தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?