சமூகப் பாடங்கள்

பொருளடக்கம்:

மகாராஷ்டிரா மாநிலத்தின் மிகவும் பிற்படுத்தப் பட்ட ஆதீவாசிகளின் இருப்பிடமான கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள ஷோத்கிரராமில் கடந்த 20 ஆண்டுகளாக ஆதிவாசிகளின் உடல் நலம், பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியம், மக்களின் விழிப்புணர்வு ஆகிய பணிகளை திரு. அபய் பங் மற்றும் அவரது துணைவியார் திருமதி. ராணி பங் தம்பதிகள் ஆற்றி வருகிறார்கள்.

 

சரியான கேள்விகள் கேட்பது மாணவர்களுக்குப் பல நிலைகளில் உதவக்கூடும். அவர்களுடைய சிந்தனை மற்றும் புரிதலை உயரிய இடத்திற்கு எடுத்துச் செல்ல இதனால் முடியும். ஆசிரியர்கள் கலந்துரையாடலுக்கு வழி வகுக்கும் வகையில் கேள்விகளைக் கேட்க வேண்டும். மிகவும் எளிமையாக உண்மையைப் புரிந்து கொள்வதிலிருந்து  அனுமானித்தல், புதிய சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு தகவல்களைப் பயன்படுத்துவது மற்றும் தகவலை அலசுவது போன்றவற்றிற்கு செல்ல வேண்டும். கதையின் வழியே கேட்கப்பட்ட பலதரப்பட்ட வகை கேள்விகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவைகள் பல நிலைகளில் சிந்திப்பதையும், புரிதலையும் வளர்க்கவும், மதிப்பீடு செய்யவும் உதவும். 

இயற்கைச் சூழ்நிலையில் நடந்து செல்வது மற்றும் முகாம் அமைத்துத் தங்குதல் ஆகியவைகள் இயற்கையை அறிவதற்கான மாணவர்களுக்குக் கிடைக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த மாதிரியான சுற்றுப்பயணங்களுக்கு அதிக நேரமும், பணமும் தேவைப்படுவதால் இவைகள் அரிய சந்தர்ப்பங்களாக இருக்கின்றன. எனவே தொலைதூர இடத்திற்குச் செல்லாமல் இங்கே நம் அருகிலேயே அமைந்திருக்கும் இயற்கையை கவனித்து கற்றுக் கொள்ள நாம் முயற்சிப்போம்.  

 

முகவுரை:

புவியியல் சம்பந்தப்பட்ட பலவிதமான பயிற்சித்தாள்கள் இங்கே இருக்கின்றன. இந்தப் பயிற்சித்தாள்களில் உள்ள பயிற்சிகள் குழந்தைகளின் ஆராய்ச்சி, கவனிப்பு மற்றும் சிந்திக்கும் திறமையை வளர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாதிரியான தலைப்புகள் பற்றிச் சிந்திக்க குழந்தைகளைத் தூண்டும்.

புவியியல் பாடப்பயிற்சித்தாள்கள்                                 சூரிய மண்டலம்

I. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வட்டமிடவும்.

தொன்றுதொட்டே நதிகளும், அவைகளின் கரைப் பகுதிகளும் மனித இனத்தின் குடியிருப்புகளாக  இருந்து வருகிறது. இதற்கு மிகவும் பலரும் அறிந்த உதாரணங்களில் மொஹன்ஜோதாரோ ஹாரப்பா  நாகரீகம் அடங்கும். இன்றும் கூட, உலகின் பல முக்கிய நகரங்கள் நதிகரையோரமே  அமைந்துள்ளன. டெல்லி, கொல்கத்தா  போன்ற நகரங்களை உதாரணங்களாகக் கூறலாம் . உலகின் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் நதிகளையே சார்ந்துள்ளது . பல தொழிற்சாலைகளும், வளர்ச்சித்திட்டங்களும் நதிகளை ஒட்டியே  அமைந்துள்ளன. மனிதனின்  இந்தச் செயலால் இன்று பல நதிகள்  பாதிப்பு அடைந்துள்ளது.

 

அறிமுகம்:

இங்கு பூகோளத்தின் பல்வேறு தலைப்புகள் பற்றி சில செயல்பாட்டுத் தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த செயல்பாட்டுத் தாள்களில் உள்ள பயிற்சிகள் குழந்தைகள் ஆராய்ச்சி, கவனித்தல் மற்றும் யோசிக்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை குழந்தைகளை இது சம்பந்தப்பட்ட தலைப்புகளை ஆய்வு செய்யவும் வைக்கிறது.

பூகோள செயல்பாட்டுத் தாள்கள்   -   ஆறுகள்

 

வளம் என்பது தீர்ந்து போகக் கூடிய ஒன்றாகும். பிற இயற்கை வளங்களைப் போல் அதிகபடியான நீர் சில இடங்களில் இருப்பினும், வேறு சில இடங்களில் நீர் முற்றுலும் இல்லாமலும் இருக்கின்றது. இது குறித்து ஒருவர் சிந்திக்கையில், சிறப்பான விஷயமாக இருப்பது என்னவெனில் நாம் நீரின் வரத்து எங்கு அதிக அளவில் இருக்கிறதோ அங்கிருந்து அவற்றை நம் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொண்டு, பிறகு   நீரற்ற பகுதி மக்களுக்கு நீரை வழங்குகிறோம். இந்த சிந்தனையின் அடிப்படையில், இந்திய அரசாங்கம் இந்தியாவின் முக்கிய நதிகளை இணைக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 

 

முன்னுரை

பக்கங்கள்

19504 registered users
7754 resources