சமூகப் பாடங்கள்

தற்போது புதுவையிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் சுற்றுச்சூழல் கல்விப்பிரிவு மற்றும் சி.பி.ஆர் சுற்றுச் சூழல் கல்வி மையம் இணைந்து பல்லுயிர் பெருக்கம்  பற்றிய நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இதில் பல்லுயிர் பெருக்க விழிப்புணர்வு பேரணி, மாணவர்களுக்கு பல்லுயிர் பெருக்கம் தொடர்பான ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி முதலிய போட்டிகளையும் நடத்திக்கொண்டு வருகின்றது. அதில் பங்குபெற்ற திருமதி. இரத்தினாம்பாள் கி.வெ. அவர்கள்  தாம் அங்கு பகிர்ந்து கொண்ட கருத்துக்களை இக் கட்டுரை மூலம் வெளிபடுத்தி உள்ளார்.

இந்த மின் நூல் பலரது கருத்துகள், பலரது உழைப்பின் பலனாக உருவாக்கப் பட்டது. இந்நூல் மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும். இதில் பல அறிவியல் விவரங்களுடன் பயிற்சிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருளடக்கத் தலைப்புகளைப் பார்த்தாலே இது புரியும்.ஆசிரியருக்கான இப்புத்தகத்தை எப்படி பயன்படுத்துவது? என்ற குறிப்புகள் இந்நூலிலேயே கொடுக்கப்பட்டதை முதலில் படிக்கவும். ஆசிரியர்களும் மாணவர்களும் இதைப் பயன்படுத்திப் பயனடைய வேண்டுகிறோம். 

தண்ணீர் .. தண்ணீர் என்ற மின் நூலின் கருத்தாக்கம் மற்றும் வடிவமைத்தவர்கள்: B.ஷாஷ்வதி,   .பியுஷ் செக்காரியா; பொருளடக்கம்: ஷாஷ்வதி, பியுஷ் செக்காரியா, மீனா தீர்த்தகிரி, வெங்கடெசன், தியாகு.

இந்த மின் நூலின் பொருளடக்கம்:

உலகம் உருண்டை என்று எப்படி கண்டு பிடித்தோம்? - என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியவர் ஐசக் அசிமோவ்.

அதனை தமிழக்கம் செய்தவர்: அரங்கராஜன்.

இது அர்விந் குப்தா அவர்களின் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.

உலகம் - அதாவது பூமி உருண்டயானதை அறிந்த விதம் குறித்து சுவைபட ஒரு கதை போல் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது.

இந்த நூலின் பாடப்பிரிவுகள்:

இந்த மின் வலைப் புத்தகம் ஆங்கில மூலத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்.

மூல ஆசிரியர்: ஐசக் அஸிமோவ்

தமிழாக்கம்: அரங்கசாமி.

இந்தப் புத்தகத்தின் பாடப் பிரிவுகள்:

  1. பரிணாம வளர்ச்சி
  2. உயிரின் முதல் தோற்றம்
  3. புரோட்டீங்களும், நியூக்ளிக் அமிலங்களும்.
  4. ஆதிகால வாயுமண்டலம்.
  5. பரிசோதனை

டார்வின் கொள்கைக்கு முன்பிருந்து, டார்வின் கொள்கை வரையும் அத்துடன் தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியினை பலவாறாகக் கோடிட்டுக் காட்டி, இன்னும் பல சுவையான தகவல்களையும் இறுதியில் பலவிதமான பரிசோத்னைகளின் முடிவுகளையும் விளக்கும் ஒரு சிறந்த கருவூலப்படைப்பாகும்.

கடந்த கால நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டுவதற்குத் தகுந்த ஜன்னலாக உதவும் சக்திவாய்ந்த கற்பிக்கும்-கற்கும் கருவிகளாகப் பயன்படுபவைகள் தான் கண்ணால் பார்க்கப்படும் உருவப் படங்களாகும். அத்தகைய படங்களும்  மற்றும் அது போன்ற இதரவகையான ஆதாரங்களும் கடந்த காலத்தை இணைக்கும் சாதனங்களாகி ஒரு நேரடியான அனுபவங்களை அளிக்க வல்லவைகளாகத் திகழ்கின்றன. ஆகையால், படங்களைச் சரித்திரக் கருவூலங்களாகக் கருதி,  குழந்தைகள் அந்தப்  படங்களைப் பார்த்து அறியும் திறமைகளை ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பது அவசியமாகிறது.

பலவகையான மரங்கள் - அவைகள் நகரங்களில் இருப்பினும் - அவைகளைக் காண்பித்து இயற்கையைப் பற்றிய அறிவை மாணவர்கள் பெற ஆசிரியர் உதவி புரியலாம். மரங்கள் மற்றும் செடிகளைப் பற்றி அறிதலிருந்து, பறவைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வது அதன் முயற்சியாக அதை நோக்கி ஒரு படி எடுத்து வைப்பதற்குச் சமமாகும். குழந்தைகள் வகுப்பறையை விட்டு வெளியே செல்வதை மிகவும் விரும்புவார்கள். இந்தச் செயல் தினசரி நடவடிக்கையிலிருந்து மாறுபட்டு இருப்பதால், அது அவர்களை உற்சாகமடையச் செய்யும்.  

 

மழைமானி என்பது வானியல் மற்றும் நீரியல்  ஆய்வாளர்கள் பயன்படுத்தும் ஒரு வகைக் கருவி. அந்தக் கருவி மூலம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்  சேகரிக்கப்பட்ட நீரை அளந்து, பெய்த மழையை அவர்கள் கணிப்பார்கள். இது பனிப் பொழிவை அளந்து  கணிப்பதிலிருந்து மாறுபட்டது. பனிப் பொழிவின் அளவைக் கணிக்க பனிமானியைப் பயன்படுத்துவார்கள். மழை அல்லது பனி நீரை வைத்து பருவ நிலையை அளக்க முடியும் என்பதை மாணவர்களுக்குக் கற்பிப்பது இந்தப் பயிற்சியின் நோக்கம்.

உலகம் பூராவும் உள்ள பள்ளிகளில் சமூக அறிவியல் என்ற ஒரு பாடம் ஏதோ ஒரு வகையில் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. சில சமயங்களில், அந்தப் பாடம் இந்தியாவில் உள்ள இன்றைய ஆரம்ப்பப் பளிகளில் சுற்றுச் சூழல் என்ற பெயரைப் பெற்றுள்ளது. சில சமயங்களில் அந்தப் பாடம் தனியான பாடங்களாக – அதாவது வரலாறு, புவியியல், குடிமையியல் என்பனவாகவோ அல்லது பல நாடுகளில் தற்கால குடியுரிமை கல்வி என்ற பாடமாகவோ அல்லது இந்தியாவில் செயல்படும் சமூக மற்றும் அரசியல் வாழ்வு என்ற பாடமாகவோ நடுத்தரப்பள்ளி வரை இடம் பெற்றுள்ளது.

பள்ளியில் சமூக அறிவியலைக் கற்பிப்பதில் உள்ள குறைபாடுகள் அதன் மதிப்பிடும் முறையில் காணப்படுகிறது. பெயர்கள்-தேதிகள், ஒரு வரலாற்றுக்  காலத்தில் வாழ்ந்த பிரபலமானவர்கள், ஒரு சம்பவம் நடந்ததற்கான காரணங்கள், நடந்த சம்பவத்தில் உள்ள நிகழ்வுகள், நிகழ்வுகளின் முடிவுகள் ஆகிய அனைத்தும் பாடப் புத்தகத்தில் பட்டியலிடப்பட்டு அவைகளை நினைவு படுத்திச் சொல்லும் மாணவர்களின் திறமைகளைச் சோதிக்கும் ஒரு மதிப்பீடாகவே தற்போதைய மதிப்பிடும் முறைகள் அமைகின்றன.

பக்கங்கள்

19504 registered users
7754 resources