சமூகப் பாடங்கள்

இந்த பவர் பாயிண்ட் காட்சிகள் உள்ள படைப்பினை மாணவர்கள் மனதில் மரங்களிடம் அன்பு பாராட்டும் நற்பண்பை வளர்க்கப் பயன்படுத்தலாம். அத்துடன், மரங்களை வெட்டுவதைத் தடுக்கும் இயக்கத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களின் கருணைப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கவும் இந்த படைப்பு பயன்ப்டும்.

வறுமை என்பது ஏழ்மையைக் குறிக்கும். வறுமையை ஒழிக்க மத்திய அரசாங்கத்திற்கு கொள்கையை வகுத்து வழிகாட்டும் பொறுப்பு இந்திய திட்டக் கமிஷனுக்கு உண்டு. பல ஏழைகளுக்கு உதவும் திட்டங்களை அரசு செயல்படுத்த ஏழ்மை நிலை தெரிய வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு இலவசமாகவும் அல்லது மான்யத்தின் அடிப்படையில் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை வினியோகத்தும் ஏழை-எளிய மக்களுக்கு உதவுவது அரசாங்கத்தின் கடமையாகிறது.  கட்டாயக் கல்வி, உணவு உத்திரவாதம், இலவச மருத்துவ வசதி, கிராமப்புற கட்டாய வேலை வாய்ப்புத் திட்டம் ஆகியவைகளின் பயனாளிகளைக் கண்டறிய இந்த வறுமைக் கோடு பயன்படும்.

ஒருவரை நன்கு வேலை செய்யச் செய்வதற்கு - சன்மானம் கொடுத்து ஊக்குவிப்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதான். ஆனால் சமீபத்திய ஆய்வு - நார்டிங்க்காம் சர்வகலாசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு - “தவறான செய்கைக்குக் கொடுக்கும் தண்டனை சரியாகச் செய்யும் செய்கைக்கு பணமாகக் கொடுக்கும்  சன்மானம் போல் செயல்படுகிறது” என்ற முடிவுக்கு வந்துள்ளது.

புவியியல் என்பது பூமியின் இயல்பான அம்சங்களை அல்லது உலகில் உள்ள நாடுகளைக் குறித்து படிப்பதாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆகையால் நம் அருகில் உள்ள சுற்றுப்புறங்கள் கூட எவ்வாறு சமுதாய புவியியல் பாடங்களைப் போதிப்பதில் பெரிதும் சக்திவாய்ந்ததாக அமைகிறது என்பதை இந்தப் பயிற்சியில் காணலாம்.

கழிவுப் பொருட்களைக் கையாளுதல் என்பது எங்கும் பரவியுள்ள ஒரு பிரச்சினையாகக் காணப்படுகின்றது. கழிவுப் பொருட்களை நிர்வகிப்பதில் ஒரு ஒட்டு மொத்த வழிகளைக் கடைப்பிடிக்காததும், இதன் காரணமாகத் தோன்றும் பாதிப்புகளின் பிரச்சினைகள் குறித்து போதுமான அறிவைப் பெற்றிராமல் இருப்பதும் சுற்றுச்சூழலுக்குச் சீர்படுத்த இயலாத பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. நாளைய குடிமக்களான குழந்தைகளுக்கு இந்த மாபெரும் பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், அவர்களை பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்க முடியும்.

பட்ஜெட்டில் அடங்கிய உள்ள முக்கிய அம்சங்கள் பற்றி மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

பட்ஜெட்டில் வருவாய் மற்றும் செலவினம் ஆகிய இரண்டும் முக்கிய அம்சங்களாகும்.

இந்த வரவு-செலவு கணக்குகள், வருவாய் கணக்கு (ரெவின்யூ அக்கவுண்ட்) மற்றும் மூலதன கணக்கு (கேப்பிடல் அக்கவுண்ட்) ஆகிய இரண்டு பகுதிகளாகப் பிரிக்ககப்படுகின்றன.

கீழ்க் கண்ட பட்ஜெட்டின் முக்கிய தலைப்புகளுக்கான விளக்கங்கள் 'வருவாய்' & 'செலவினம்' என்ற தலைப்பின் கீழ் மிகச் சுருக்கமாக மனதில் பதியும் படி கொடுக்கப்பட்டுள்ளன.

வருவாய்

இந்தப் பயிற்சித் தாள் மண்ணின் தன்மைகளை ஒரு புதுமையான முறையில் மாணவர்கள் கற்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மண், மண்ணின் பல வகைகள், மற்றும் மண்ணின் பிற தன்மைகளான மண் அரிப்பு போன்றவைகளைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பயிற்சித் தாளைப் பயன்படுத்தலாம்.

இந்த பாடத்திட்டத்தின் மூலம், ஆசிரியரால் இயற்கைப் பிரதேசங்கள் உருவாவதற்கு காரணமான காரணிகளை மாணவர்களுக்குப் புரிய வைக்க முடியும்.

இந்தியா முதல் முதலாக சுதந்திரம் அடைந்தவுடன் டெல்லியில் நடைபெற்ற சுதந்திர விழாக் கொண்டாட்டப் படங்களின் தொகுப்பு தான் இந்த பவர் பாயிண்ட் படங்களாகும். இந்தப் படங்கள் அனைத்தும் சரித்திரப் புகழ் பெற்றவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படங்களை பத்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது எடுத்த படங்கள் என காட்டலாம். 

 

 

புதுயுக இந்தியாவின் மிகப்பெரிய உந்து சக்தியாகத் திகழ்பவர் யார் என்ற கேள்வி எழுமானால், அதற்கு இரண்டு பதில்கள் இருக்கும் என்று நான் ஒருபோதும் சந்தேகப்படமாட்டேன். சுவாமி விவேகான்ந்தர் என்பது தான் அதற்கான ஒரே பதில். அவர் இடி முழக்கம் போல், இந்தியாவின் பெரிய மாஹான்களிடையே ஆகில உலகத்திற்கும் ஒளி காட்டும் விளக்காக சுடர்விட்டுப் பிரகாசிக்கிறார்.

பக்கங்கள்

19504 registered users
7754 resources