சமூகப் பாடங்கள்

ஆசிரியர் - சீதா நடராஜன்

சமூகப் பாடங்கள் என்றால் என்ன ?  பரிசோதனைப் படிப்பு, திறனை மேம்படுத்துதல், வாழ்வின் பல அம்சங்களில் அவர்களின் பார்வைகளை விரிவாக்குதல் ஆகியவைகள் மூலமாக ஒருவர் இந்தப் பாடத்தை எப்படி குழந்தைகளின் தனிப்பட்ட வளர்ச்சிக்குப் பயன்படும்படிச் செய்ய முடியும் ?   இறுதியாக, ஒரு சமூகப் பாடத்தின் ஆசிரியராக எப்படி இந்தப் பாடத்தின் உயிரோட்டம், வேகம் ஆகியவைகளை வகுப்பில் பாடம் சொல்லிக்கொடுக்கும் பொழுது ஒரு கற்பிக்கும் கலையாகப் பலப்படுத்தி, அதை வகுப்பறையின் நான்கு சுவர்களுக்கும் அப்பால் எடுத்துச் சென்று செயல்படுத்த முடியும் ?

 

 புத்தரின் பிறப்பிலிருந்து அவர் ஞானம் பெற்று, புத்தமதத்தைப் பரப்பியது வரை அஜந்தா ஓவியங்களைப் போல் படமாக வரையப்பட்டு விளக்க உரையுடன் இங்கு வெளியிடப்படுகிறது. 

 

 

பழைய நாணயங்கள் குழந்தைகளிடம் ஒரு வித ஆர்வத்தைத் தூண்டும் தன்மை கொண்டவைகள். ஒரு நாணயத்தை உற்று நோக்கும் பொழுது, அதன் பின்னணி வரலாற்றினை நமக்கு அது தெரிவிக்கும். வரலாற்றின் இத்தகைய ஆதாரங்களை தீவிரமாக ஆராயும் போது, குழந்தைகளுக்கு அதில் ஆர்வம் பெருகி, அந்த நாணயம் தெரிவிக்கும் வரலாற்றினை அறிய குழந்தைகள் முயலுவார்கள். 

நாணயத்தின் வரலாறு என்ற விளக்கப்படம் நாணயத்தின் பல காலங்களிலிருந்து அதற்கு ஏற்பட்ட மாற்றங்கள், அவைகளின் உலோகங்கள்,  அதன் மூலம் சரித்திர வரலாறுகள் ஆகியவைகள் விளக்கப்பட்டுள்ளன. 

பக்கங்கள்

18487 registered users
7228 resources