மழலைக் குழந்தைகளுக்கான சொல்வளம்

புதிதாக பள்ளியில் சேரும் மழலையரை முதல் மூன்று மாதங்கள் எப்படி பார்ப்பது, அவர்களை எவ்வாறு கையாள்வது, என்பது பற்றிய தனது அனுபவங்களை நம்மிடம் பகிரிந்துகொள்கிறார் ஆசிரியர் தனமேரி, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி.

இக்கட்டுரை "திசைமானி"(பாதை-3, பயணம்-1) என்ற ஆசிரியர்களுக்காக, ஆசிரியர்களால் எழுதப்பட்டு, அஸிம்பிரேம்ஜி நிறுவனத்தால், இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும் இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

"குழந்தைகளின் தேடல்கள், தேவைகள். அனுபவங்களிலிருந்து குழந்தைகளுக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம், பாடநூல் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் வாழ்க்கைத்திறன்பெற்ற ஆளுமைகளாய் குழந்தைகளை உருவாக்க முடியும். குழந்தைகளுக்கு கற்பிக்கும் கல்விமுறையைவிட கற்க உதவும் கல்விமுறையே இன்றையத் தேவை." என்று அத்தேவையை பூர்த்தி செய்யும் முயற்சியில் தனது வகுப்பறை அனுபவங்களை நம்மிடம் ஆசிரியர் சுடரொளி அவர்கள் இக்கட்டுரை மூலம் பகிர்ந்துள்ளார்.

 

அறிமுக உரை:

சின்னஞ்சிறு குழந்தைகள் தங்கள் தாய் மொழியினைக் கற்றுக் கொள்வதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். பெரியவர்களும், பெரிய குழந்தைகளும் பலவிதமான சூழ்நிலைகளில் முழுமையான வாக்கியங்களைப் பேசுவதை அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அந்தச் சின்னஞ்சிறு குழந்தைகள் வார்த்தைகளைப் பேச முனையும் போது, முழு வாக்கியங்களையும், அவர்களுக்கு பிறர் இடும் கட்டளைச் சொற்களையும், அவர்களைப் புகழ்ந்து சொல்லும் வார்த்தைகளையும், அவர்கள் நன்கு புரிந்து கொள்கிறார்கள்.

18610 registered users
7272 resources