கேள்விகள்

பகலில் பல் மருத்துவராகவும், இரவில் வலைத்தள சித்திரத்தொடரை உருவாக்கும் ஓவியராகவும், தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கிக்கொண்டவர் கிராண்ட் ஸ்னிடர். போராட்டம் மற்றும் கனவுகளும், ஓவியமும் கற்பனையும், கவிதைகள், அப்பாவித்தன்மை ...போன்ற  எல்லாவற்றையும் தனது தூரிகையால் தீட்டியுள்ளார். கேள்விகள் கேட்டல் பற்றிய மாதிரி சித்திரத்தொடர் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

வகுப்பறையில் உரையாடல்கள் நடக்காத வரையிலும், அது சலிப்பையும் ஏற்படுத்தும், உயிரற்றதாகவும் இருக்கும்.

ஆக்கம்: திரு. கு.சீனுவாசன், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சாலை அகரம், கோலியனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்.

 

நம்திறமை நாமறிந்தால்

நினைத்தவாறு வெற்றி கிட்டும்!

திறமையை வெளிப்படுத்த

குறிக்கோள் வேண்டுமன்றோ?

நாம் குறிக்கோளை அடைவதற்கு

சரியான அணுகு முறையை

தேர்ந்து எடுக்க வேண்டும்!

 

அண்டப்புளுகு புளுகுவோரை

அப்படியே நம்பலாமா?

ஏன்? எப்படி?எதற்கு?என்று

கேள்விகள் கேட்டிட வேண்டாமா?

தென்னையிலே தேள்கொட்ட

பனையிலா நெறி கட்டும்?

18474 registered users
7227 resources