அரசு பள்ளி

'பள்ளி ஆசிரியரின் நாட்குறிப்பு' என்ற புத்தகத்தில் ஹேமராஜ் பட் என்ற அரசுப்பள்ளி
ஆசிரியருடைய நாட்குறிப்பு. ஹிந்தியில் எழுதிய இந்நாட்குறிப்பு ஆங்கிலத்தில் மொழிபெளிணிர்க்கப் பட்டு புத்தகமாக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி  புதுவை ஆசிரியர்கள் கார்த்திகேயன் மற்றும் சுபாஷினி அவர்கள் கட்டுரையாக எழுதியுள்ளனர்.
 
இக்கட்டுரை "திசைமானி"(பாதை-3, பயணம்-5) என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.
 

       ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், சில வருடங்களுக்கு முன்னர் புதர்களாக, ஆடு மாடுகள் மேய்க்கப்படும் இடமாக, காலைக்கடன்களை முடிக்கும் இடமாக இருந்தது. மாணவ மணிகளின் வருகையோ மிக குறைவாக(20-30) இருந்தது. கிரமாத்தில் அடிக்கடி எதேனும் ஒரு திருவிழா/கிடா வெட்டு இருந்துகொண்டே இருப்பதால் குழந்தைகளும் மதிய உணவை அங்கேயே உட்கொண்டு மாலை வேளைகளில் வெளியூருக்கு சென்று வேலை செய்யும் வீடு திரும்பும் நேரத்தில் இக்குழந்தைகளும் வீட்டிற்கு சென்று விடுவர்.

தமிழ்

கைத்தொழில் கல்வி, படைப்புத்திறனை போதிப்பதாக இருப்பதுடன்,முழுமையானதாகவும் அதே நேரத்தில் ஒரு வேலைத் திறனாகவும் போதிக்கப்பட வேண்டும். மேலும் மற்ற பாடங்களைப் போதிப்பதிலும் இந்த கைத்தொழில் பற்றி சேர்த்து போதிக்கலாம். அதேபோல் கைத்தொழில் பாடம் படிக்கும்போது சுற்றுச்சூழல், சமூகம், பாலியல், சமத்துவம் பற்றியும் சேர்த்துப் படிக்க வேண்டும்”. (பக். 55, NCF 2005à NCF-தேசிய கலைத்திட்ட வடிவைப்பு-தமிழாக்கத்தில் பக்கம் எண் மாறுபடலாம்)

பள்ளியின் அடிப்படை தேவைகள் குறித்து ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார்.

இது அஸிம் பிரேம்ஜி ஃபௌண்டேஷன், புதுச்சேரி மாவட்ட நிறுவனம் நடத்திய "ஆசிரியருடன் சந்திப்பு" நிகழ்ச்சியில் பதிவு செய்யப்பட்டது.

"ஆசிரியர் என்பவர் ஆசானாக மட்டும் இருந்தால் போதாது. ஒரு தாயாகவும் தந்தையாகவும் இருந்து மாணவனைப் பேணிக் காப்பதும் ஆசிரியரின் கடமையாகும். ஒரு குழந்தை பள்ளியில் அடியயடுத்து வைப்பது அவனது அறிவை வளர்த்துக் கொள்வதற்காக மட்டுமன்று. நல்லொழுக்கம், நற்பண்பு, நற்பழக்கவழக்கங்கள், சுத்தம், சுகாதாரம் இவையாவும் கல்வியின் அங்கமே!" என்று எண்ணும் தலைமையாசிரியர் கல்விக்கரசி அவர்கள் "மாணவர்களின் உடல் ஆரோக்கியம், மனநலம், தன்னம்பிக்கை, செயல்பாடுகள் ஆகியன நிச்சயமாக மேம்பட்டிருப்பதை என்னால் அறுதியிட்டுக் கூற முடியும்" என்று தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

தமிழ்
18474 registered users
7227 resources