ஒரு ஸ்பாட்லைட் சமர்ப்பி ஆசிரியர்களின் உழைப்பு, ஊராரின் ஒத்துழைப்பு, பள்ளியின் செழிப்பு

       ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், சில வருடங்களுக்கு முன்னர் புதர்களாக, ஆடு மாடுகள் மேய்க்கப்படும் இடமாக, காலைக்கடன்களை முடிக்கும் இடமாக இருந்தது. மாணவ மணிகளின் வருகையோ மிக குறைவாக(20-30) இருந்தது. கிரமாத்தில் அடிக்கடி எதேனும் ஒரு திருவிழா/கிடா வெட்டு இருந்துகொண்டே இருப்பதால் குழந்தைகளும் மதிய உணவை அங்கேயே உட்கொண்டு மாலை வேளைகளில் வெளியூருக்கு சென்று வேலை செய்யும் வீடு திரும்பும் நேரத்தில் இக்குழந்தைகளும் வீட்டிற்கு சென்று விடுவர். அன்றாடம் வாழக்கையை ஓட்ட பாடுபடும் பெற்றோர்களுக்கோ குழந்தைகளின் கல்வி குறித்து சிந்திக்கவும் நேரமில்லாமல், அறியாமையில் குழந்தைகளின் கல்வியில் ஆர்வம் காட்டமலும் இருந்தனர். அப்பொழுது அப்பள்ளிக்கு வந்த ஆசிரியர் அந்தோனி சாமி அவர்களும், ஆசிரியர் காசி அவர்களும் தினமும் பள்ளி முடிந்த பின் வளாகத்தை இருவருமே (இரவு 8 மணி வரை ) புதர்களை  வெட்டி தொடர்ந்து சுத்தப்படுத்திக்கொண்டே இருந்தனர். திருவிழா காலங்களில் ஒலி உள்வாங்கி(mike-மைக்) யை கையில் எடுத்து கிராம மக்களுக்கு கல்வியின் பெருமைய எடுத்துரைத்தும் துண்டு பிரசுரங்களை அச்சிட்டு மக்களுக்கு அளித்தும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டனர். இவ்வாறாக...இவ்விரு ஆசிரியர்களுக்கு பின் வந்த தலைமை ஆசிரியரும் தனது ஒத்துழைப்பை அளித்ததும், பள்ளிக்கு புதிதாய் வந்த மற்ற ஆசிரியர்களும், ஊர் மக்களும் ஒன்று கூடி இப்பள்ளியை சுற்றுப்புற தூய்மையில் மட்டுமின்றி விளையாட்டு, மொழி, அறிவியல், சமுதாய மாற்றம் முதலியவற்றில் சிறப்பாக விளங்குகிறது. இப்பொழுது உள்ளூர் குழந்தைகள் மட்டுமல்லாது சுற்று வட்டாரத்திலுள்ள குழந்தைகளும் இப்பள்ளியில் விரும்பி சேர்ந்து கற்கின்றனர். உடல் உழைப்பாலும், மன உழைப்பாலும், மன உறுதியுடனும், ஊராரின் ஒத்துழைப்புடன், இதர ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் 360 பாகையில் இந்த அரசு பள்ளியை முன்னேற்றியுள்ளனர்.

கருத்துகள்

ஜேம்ஸ்'s படம்

hats off to the teachers,students and the community

sugandhi's படம்

These teachers are Real torch bearers. Teachers have now taken up the role of canvassing too for enrolling children into schools. A welcome effort.

DOONSA's படம்

well unity

18304 registered users
7138 resources