ரகசியம் காக்கும் கொள்கை

இந்த இணைய தளத்தில் - www.teachersofindia.org - நீங்கள் பகிர்ந்து கொண்ட உங்களது தனிப்பட்ட சொந்த தகவல்களைப் பற்றிய எங்களது கொள்கை பற்றித் தெளிவான விளக்கம்  இந்த ஆவணத்தில் உள்ளது.

பதிவு செய்தலும், உங்களது சிறு வாழ்க்கைக் குறிப்பும்:

 

இந்த இணைய தளத்தின் சில சிறப்பு அம்சங்களைப் பயன்படுத்துவதற்கு, நீங்கள் உங்களது பெயரை இந்த தளத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். பதிவு செய்யும் போது, உங்களது மின் அஞ்சல் முகவரியை உங்களுடன் தொடர்பு கொள்ளுவதற்காகக் கொடுக்க வேண்டும். அத்துடன் இந்த இணைய தளத்தைத் தொடர்பு கொள்ள ஒரு கடவுச் சொல்லை நீங்கள் உருவாக்க வேண்டும். இந்தக் கடவுச் சொல், மின் அஞ்சல் கடவுச் சொல்லாக இல்லாமல் புதிதாக  இருப்பது உங்களது பாதுகாப்பிற்காக என்பதை உணரவும்.

இந்த இணைய தளத்தில் உங்களது சுய வாழ்க்கைக் குறிப்பை உருவாக்க முடியும். அதில், உங்களது பின்னணி, உங்களுக்கு விருப்பமானவைகள், உங்களது வேலைகள் ஆகிய விவரங்களை பதிவு செய்யலாம். உங்களைப் போன்ற மனப்பான்மை உடைய இந்த இணைய தளத்தின் பிற ஆசிரிய சமூக அங்கத்தினர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு உங்களது இந்த விபரங்கள் பயன்படும். உங்களது இந்த சொந்த விவரங்களை - தனிப்பட்டதாகவோ அல்லது பொதுவானதாகவோ குறிப்பிடலாம். உங்களது தகவல்கள் தனிப்பட்டவையானதாக குறிப்பிட்டிருப்பின், உங்களுடன் தொடர்பு கொண்டு, பகிர விரும்பம் தெரிவித்த நபர்களால் மட்டும் தான் அவைகளைப் பார்க்க முடியும். பொதுவானதாக குறிப்பிட்டிருந்தால் உங்கள் சொந்த தகவல்களை அனைவரும் பார்க்க முடியும்.

நாங்கள் உங்களது இந்த தனிப்பட்ட சொந்த தகவல்களை எந்த ஒரு மூன்றாம் நபர்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம். இருப்பினும், சட்டம் கோறும் போது, இந்தத் தகவல்களை வெளியிடும் உரிமையை நாங்கள் பெற்றுள்ளோம். மேலும், எங்களது உரிமைகளை நிலை நாட்டிக் காக்கும் அவசியம் ஏற்படும் போதும் அல்லது நீதி மன்றம்/சட்ட விதிகளின் அடிப்படையிலும் இந்த தகவல்களை வெளியிட வேண்டியது அவசியம் என்று நாங்கள் நம்பினாலும், அந்த உரிமையை உபயோகிப்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம்.

இணைய தள படைப்புகளிலும், பொது மேடைகளிலும் பிரசுரமான தகவல்கள்:

 

உங்களது சுய வாழ்க்கைக் குறிப்பை தனிப்பட்டதாக தேர்வு செய்து பதிவு செய்திருப்பினும், இந்த போர்டலில் பிரசுரமான உங்களது அனைத்துப் படைப்புகளிலும் உங்களது பெயர் இடம் பெறும். 

பொது என்று தேர்வு செய்து நீங்கள் பதிவு செய்த உங்களது எந்தத் தகவல்களையும் - விமரிசனங்கள், உரையாடல்கள், போட்டோக்கள், வீடியோக்கள் - அனைத்தையும் போர்டலைப் பயன்படுத்தும் எல்லா பயனாளர்களும் காணமுடியும். 

வெளியாளர்களின் மின் வலைகள்:

 

இந்த மின் வலை இணைய தளத்தில் எங்களுக்குச் சொந்தமில்லாத அல்லது எங்களால் நிர்வகிக்காத வெளியாளர்களின் மின் தள வலைகளின் தொடர்புகள் கொடுக்கப் பட்டிருக்கும். அந்த இணைய தளம் உங்களது சுய தகவல்களைக் கேட்டால், அந்த இணைய தளங்களின் ரகசிய அறிக்கைகளைப் படிக்கவும். அப்படிப்பட்ட மற்ற மின் தளங்களின் ரகசிய அணுகுமுறைகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என்பதை நீங்கள் தயவு செய்து அறியவும்.  

டீச்சர் போர்டலிருந்து வெளிவரும் மின் அஞ்சல்கள்:

 

www.teachersofindia.org என்ற இணைய தளத்திலிருந்து மின் அஞ்சல்கள், செய்திக் கடிதங்கள் மற்றும் மற்ற அவ்வப்போது வெளியிடப்படும் அறிக்கைகள் ஆகியவைகள் உங்களுக்கு அனுப்பப்படும். இவைகளை நீங்கள் பெற விரும்ப வில்லை என்றால், ‘unsubscribe’ என்ற அந்தத் தகவல் அறிக்கையில் இருக்கும் மின் தொடர்பை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். இதே ‘unsubscribe’ என்ற மின் இணைப்பு உங்களது சுய வாழ்க்கைக் குறிப்புப் பகுதியில் போர்டலிலும் அமைந்துள்ளது.

தேவை ஏற்படும் போது, எங்களது ரகசிய கொள்கையைத் திருத்தவோ அல்லது மாற்றவோ நாங்கள் உரிமை பெற்றுள்ளோம். இந்த கொள்கை அறிக்கையிலும், வேறு பிற இடங்களிலும் அந்த மாற்றங்களை நாங்கள் சேர்ப்போம்.

பதிவுக் கணக்கின் உங்களது சுய வரலாற்றுப் பக்கத்தைச் சரி செய்யவோ, புதுப்பிக்கவோ, செயலிழக்கச் செய்யவோ அல்லது அழிக்கவோ உங்களால் முடியும். teachers@azimpremjifoundation.org என்ற விலாசத்திற்கு ஒரு மின் அஞ்சலை அனுப்பியும், நீங்கள் இதைச் செய்யலாம்.

19861 registered users
7801 resources