தொடக்க நிலை மாணவர்கள் அடைய வேண்டிய மொழித்திறன்களான கேட்டல், பேசுதல், வாசித்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்கில் எழுத்தப்பட்ட கட்டுரைகளைத் தமிழ் பகுதியில் காணலாம். வேறுபட்ட கற்றல் நிலைகளில் உள்ள மாணவர் அனைவரும் ‘வருணனைச் சொற்களைப்’ புரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியை சாந்தகுமாரி பலவகையான கற்பித்தல் உக்திகளைப் பயன்படுத்தியுள்ளார். மாணவர்களிடையே வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதற்கு, நான்கு ஆசிரியர்கள் சேர்ந்து கதை அட்டைகளை உருவாக்கியுள்ளனர். சூழ்நிலையியல் பகுதியில் பரனீஷ்வரி என்னும் ஆசிரியரின் வகுப்பில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் செய்த பாம்பு பற்றிய ஒரு செயல்திட்டமும், ’வகைப்படுத்துதல’ என்ற பாடப்பொருளை எவ்வாறு ஆர்வமூட்டும் வகையில் கற்பிக்கலாம் என்று ஆசிரியர் ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரையும் உள்ளன. பொருட்களின் வாயிலாக கூட்டலைக் கற்பிக்கும் முறையினை ஆசிரியர் கோமதியும், பத்திலிருந்து இருபதுவரை எண்களைக் கற்பிக்கப் பயன்படுத்திய விளையாட்டுகளை ஆசிரியர் சண்முகப்பிரியாவும் கணிதப் பகுதியில் எழுதியுள்ளனர். நமது வரலாற்று ஆசிரியர்கள் கீழ்வாழை, பனமலை, சிங்கவரம், மண்டகப்பட்டு, தளவனூர், பிரம்மதேசம் போன்ற இடங்களுக்குச் சென்று, வரலாற்றுச் செய்திகளை ஆராய்ந்து தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களையும் இவ்விதழ் வழி நம்முடன் பகிர்ந்துள்ளனர். அனைத்து பாடங்களுக்கும் தேவையான பல்வேறு வளங்களை வகுப்பறை வளப்பையில் காணலாம். தமிழில் வாசித்தல் திறனை மேம்படுத்தக் கதை அட்டைகளும் கணிதத்தில் தொடக்கநிலை குழந்தைகளுக்கு எண்களையும் கூட்டலையும் அறிமுகப்படுத்த கணிதப் பொருட்களும் இதில் அடக்கம். அறிவியலில் விலங்குகளின் வகைப்பாடு மற்றும் தனிம அட்டவணையை மாணவர்கள் மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் கற்க உதவும் வளங்களும் இதில் உள்ளன.
சசிகுமார் என்ற ஆசிரியர், ‘மூன்று சிறிய பன்றிகள்’ என்ற பாடலைக் கற்பிக்கக் கதைகூறல், அசையும் படங்கள், நடித்தல் போன்ற உக்திகளைப் பயன்படுத்தி வகுப்பறையை உயிரோட்டமுள்ள ஒரு கற்றல் களமாக மாற்றிய அனுபவத்தை இங்கே பகிர்ந்துள்ளார். பெருமாள் மற்றும் மார்ஷியல் ஆன்ட்ரே ஆகிய இரு ஆசிரியர்களும், மாணவர்கள் தங்கள் எண்ணங்களை ஆங்கிலத்தில் வெளிப்படுத்த, சக மாணவர் உரையாடல் மற்றும் கற்பனை கடிதம் எழுதுதல் போன்ற முறைகளைப் பயன்படுத்திய விதத்தையும் எழுதியுள்ளனர். ஆசிரியர்கள் ஜேம்ஸ் மற்றும் பிருந்தா, மாணவர்கள் எவ்வாறு 3D பொருட்களைக் காட்சிப்படுத்திப் பார்க்கின்றனர், அவற்றைக் காகிதத்தில் வரைவதற்கு என்னென்ன சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதில் தங்களின் வகுப்பறை அனுபவங்களை இங்கே விளக்கியுள்ளனர். அளவீடு மற்றும் கோணங்களைக் கற்பிக்க, மாணவர்களைச் சுற்றியுள்ள பொருட்களைக் கொண்டு கற்பிக்கும் விதத்தை ஆசிரியர்கள் சண்முகப்பிரியா, சுபாஷினி, குமரேசன் ஆகியோர் கூறியுள்ளனர். நேர்மையின் மதிப்பை மாணவர்களுக்கு உணர்த்த, ஆசிரியர்கள் சாந்தகுமாரி, வீரப்பன், மாலதி ஆகியோர் ஹரிச்சந்திரனின் கதையைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும் அவர்கள் ‘மெய் சொல்லல் நல்லது’ என்ற பாடலைக் கற்பிக்க ஏதுவாகச் சில வகுப்பறை வளங்களையும் நம்மிடம் பகிர்ந்துள்ளனர். அறிவியல் ஆசிரியர்கள் வட்டம், காந்தவியல் மற்றும் தாவர உலகம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கச் சில ஆர்வமூட்டும் செயல்பாடுகளை வடிவமைத்துள்ளனர். உணவு மண்டலத்தை மாணவர்கள் ஆழ்ந்து அறிய ஆசிரியை மகேஷ்வரி மேற்கொண்ட முயற்சிகள் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. மாணவர்கள் தாங்களாகவே வரைந்த உணவுமண்டலத்தின் படங்களில் ஒரு சில இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. நீங்களும் இச்செயல்பாட்டை உங்கள் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் செய்து பார்க்கலாம். உணவுச்செரிமானம் எவ்வாறு நிகழ்கிறது என்ற உரையாடல் மூலம் பாடத்தைத் தொடங்குவது சிறப்பாக அமைந்துள்ளது. கோடைவிடுமுறையில் சென்னையில் உள்ள ‘தக்ஷ்ன் சித்ரா’ என்ற பாரம்பரிய அருங்காட்சியகத்திற்கு ஆசிரியர்கள் சென்று வந்தனர். அவர்கள் அங்கு பெற்ற அனுபவங்களை ஒரு கட்டுரையாக ‘கற்கும் ஆசிரியர்’ என்ற பகுதியில் எழுதியுள்ளனர். இவ்விதழில் ‘வளப் பட்டியல்’ என்ற ஒரு பகுதி புதியதாக இணைக்கப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் நடத்தவிருக்கும் பாடங்களுக்கேற்ற குறும்படங்கள், நகல் எடுக்கத்தக்க வகுப்பறை வளங்கள், சுவரொட்டிகள், புத்தகங்கள் போன்றவை இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. இந்த வளங்களை நீங்கள் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
தங்கள் பள்ளியில் பெண்கள் தினத்தைக் கொண்டாட ஏதுவாக, இவ்விதழ் சில வகுப்பறை வளங்களை தாங்கியுள்ளது. மாணவர்கள் மகிழும் வகையில், வகுப்பறையிலோ அல்லது காலை வழிபாட்டுக் கூட்டத்திலோ வாசிப்பு முகாம், படங்களைத் திறையிட்டுக் காட்டுதல் போன்ற இன்னும் சில செயல்பாடுகளைச் செய்யலாம். மேலும், பாடத்திட்டங்கள், வாசிப்புப் பொருட்கள், வகுப்பறை வளங்கள் போன்ற மற்ற பகுதிகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. வகுப்பில் ’கதை வரைபடம்’ என்ற நுட்பத்தைப் பயன்படுத்தி, அதன் அனுபவத்தை ஒரு ஆசிரியர் இங்கே எழுதியுள்ளார். ’ஓர் ஆசிரியரின் நாட்குறிப்பு’ என்ற புத்தகத்தை வாசித்து, இரு ஆசிரியர்கள் தங்களின் கருத்தை இங்கு பதிவு செய்துள்ளனர். தொடக்கப்பள்ளி குழந்தைகளிடம் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்த, ஆசிரியை வாக்களித்தல் என்ற புதுமையான முறையை ஒரு ஆசிரியர் கையாண்ட விதத்தை கட்டுரையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஆசிரியர், மாணவர்கள் செய்து-கற்றல் முறையைப் பயன்படுத்தி அறிவியல் பாடத்தைக் கற்ற விதத்தை எழுதியுள்ளார்.
இவ்விதழில், கடிதம் எழுதும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் உருவாக்க, ’உன் அஞ்சல் பெட்டியில் என்ன’ என்ற பாடத்திட்டத்தின் மூலம் பல புதுமையான முயற்சிகளை உருவாக்கியுள்ளார், ஒரு ஆசிரியர்; இந்தியாவில் பண் கல்விக்கு வித்திட்ட முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் ஃபூலே அவர்களின் புத்தகத்தைப் படித்து அதிலிருந்து கற்றதை ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார் மற்றொரு ஆசிரியர்; ’பண விளையாட்டு’ என்ற செயல்பாட்டின் மூலம் இடமதிப்பை மாணவர்களிடையே எவ்வாறு எளிமையாக எடுத்துச் செல்லலாம் என்று ஒரு பாடத்திட்டம் கூறுகிறது; மேலும், மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும் மகிழ்ச்சியான வாசித்தல் நிகழவும் வகுப்பறையில் ’வாசகர் அரங்கத்தை’ எவ்வாறு செயல்படுத்தலாம் என்ற கற்பித்தல் நுணுக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
இதழில் சிறுபடத்தில்(thumbnail) உள்ள விளக்கப்படமானது அறிவியல் கற்றலில் உயர்நிலைச்சிந்தனையைத் தூண்டுவதற்கான ஒரு உதாரணமாகும். மேலும் ஒரு உதாரணம் KWL வரைபடம்(சார்ட்) ஆகும். அதில் மாணவர்களை, மின்சாரம் என்ற தலைப்பில் மாணவர்கள் எவற்றைக் கற்க வேண்டும் என்று தாங்களே முடிவு செய்யும் செயலில் ஈடுபடுத்தியுள்ளனர். எவ்வாறு மின்சாரம் வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்ள மாணவர்கள் எளிய மின்சுற்றைப் பழுது பார்த்தனர். இவை போன்ற தங்களின் வகுப்பறை பிரதிபலிப்புகளை இரு ஆசிரியர்கள் இவ்விதழில் பகிர்ந்துள்ளனர். மாணவர்கள் மொழியைக் கற்க ஏதுவாய் கற்றல் கருவிகள் குறித்த கட்டுரையும் இதிலுள்ளது.
கணிதத்தைச் செயல்வழிக்கற்பித்தல், தன் சிந்தனைகளைச் சரியாக வெளிப்படுத்தும் திறனை வளர்க்கும் மொழிவகுப்பு, தினசரி வாழ்வின் மூலம் அறிவியல் சிந்தனையை வளர்த்தல் போன்ற வகுப்பறை அனுபவங்களையும் இதில் காணலாம். வரலாற்று ஆசிரியர்கள் குழு சோழர்கள் கால மக்களின் நிலையை ஆழ்ந்து புரிந்து கொள்ள தாராசுரம் கோவிலுக்குச் சென்று, ஆதாரங்களைக் கொண்டு வரலாற்று அறிவை வளர்த்துக்கொண்ட ஓர் இனிமையான அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொண்டுள்ளனர். இவைமட்டுமின்றி, புத்தகத்தைக் கடந்து, இயற்கையோடு இணைந்து, தாவரங்களை வகைப்படுத்தும் ஒரு கலந்துரையாடலும் இதில் இடம் பெற்றுள்ளது.
இவ்விதழில் ஆசிரியர்கள் வடிவமைத்த கற்றல்-கற்பித்தல் வளங்களை தாங்கியுள்ளது. உங்கள் வகுப்பறையை மேலும் உயிரோட்டமானதாக மாற்றத்தக்க பாடத்திட்டங்கள், பயிற்சித்தாள்கள், சுவரொட்டிகள், கற்றல்-கற்பித்தல் கருவிகள் என பலவகையான வளங்களை இவ்விதழில் பார்ப்பீர்கள்.
இவ்விதழில், ’பூலோக சொர்க்கம்’ என்ற கட்டுரை, மாணவ மாணவியருக்குப் பிடித்த நாடகத்தின் வழி அறிவியலை கற்பித்த அனுபவத்தைப் பேசுகிறது; மகிழ்ச்சியோடு மட்டும் தொடர்புடையதாய் இல்லாமல், நம் வாழ்க்கைச் சூழலில் ’அறிவியல்’ எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் முன் வைக்கிறது; மேலும் இரண்டு கட்டுரைகள் ஆங்கிலப் பாட வகுப்பறை அனுபவத்தைப் பேசுகிறது; ’நானே செய்வேன்! நானே கற்பேன்!’ எனும் கட்டுரையின் துணையாகக் கொடுக்கப்பட்டுள்ள ’யானை எங்கே?’ எனும் சுவரொட்டி மாணவர்களின் கற்பனையைத் தூண்டுவதாக இருக்கும்; ஆகியவை உள்ளடங்கியுள்ளது.
இவ்விதழில் பள்ளியில் கணித ஆய்வகம் அமைத்தலும் அதன் விளைவுகளும், தாய் மொழிக்கல்வியைகிழ்ச்சியாகவும், மனதோடு ஒன்றும் விதம் கற்பித்தலும், களப்பயணத்தை மையமிட்ட உயிர் பண்மம் பாடத்திட்டமும், கணித விளையாட்டுகளும், கவிதைகள் மூலம் மொழி கற்பித்தலும், பள்ளி நூலகர் மற்றும் ஆசிரியராக இருப்பதில் பெருமிதம் கொள்ளும் தருணங்களை நினைவு கொள்ளும் கட்டுரையும் உள்ளடங்கும்.

பக்கங்கள்

19861 registered users
7801 resources