கூட்டாளிகள்

19861 registered users
7801 resources

ஆசிரியர் கூட்டாளி

1989ல் நிறுவப்பட்ட டீச்சர் ப்ளஸ் என்ற சஞ்சிகை முதன் முறையாகப் பள்ளி  ஆசிரியர்க்கெனவே துவங்கப்பட்டதாகும். இது ஆசிரியர்கள் தங்கள் பிரச்னைகளை எடுத்துக் கூறவும், கலந்துரையாடவும் புத்தம் புதுக் கருத்துக்களால் தங்கள் அறிவை வளப்படுத்திக் கொள்ளவும் ஏற்பட்ட ஒரு மன்றம் ஆகும். ஆசிரியர் பிளஸ் இந்தியப் பள்ளிகளின் வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்கு ஏற்படும் சங்கடங்களை உணர்ந்து அவற்றைப்  போக்குவதற்கான மாற்று வழிகளைக் கண்டு அவற்றின் எண்ணங்களைச் செயல் படுத்துவது இதன் பணியாகும்.மேலும் சமூக மாறுதலைக்கொண்டு வரும் தூதர்களான ஆசிரியப் பெருமக்களை அவர்கள் எல்லோரும் ஓரினம் என்ற அடிப்படையில் ஒற்றுமைப்படுத்துவதும் இதன் லட்சியமாகும்.

டீச்சர் ப்ளஸ் என்ற பத்திரைகை ஐதராபத்திலிருந்து மாத இதழாக வெளியிடப்படுகிறது. இதற்குக் கட்டுரை வழங்குபவர்கள் இந்தியாவிலுள்ள அனைத்துப் பகுதியிலிருக்கும் ஏராளமான எழுத்தாளர்கள் ஆவார்கள்.  அவர்கள் கல்வித்துறையில் பல்வேறு அம்சங்களிலும் கரைகண்டவர்கள். ஆரம்பக்கல்வி முதல் போர்டு தேர்வு வரை, கலை - கைவினைப் பயிற்சி முதல் குழந்தை வளர்ப்பு - வகுப்பறை நிர்வாகம் வரை  அனுபவம் மிக்கவர்கள். ஒவ்வொரு மாதமும் வாசகர்களுக்கு அறிவூட்டும் பல செய்திகளும் நடைமுறைச் செயல்திட்டங்களும் இவ்விதழில் வெளியாகி வருகின்றன. இவை பெரும்பாலான வகுப்பறைகளில் கற்பிப்பதற்கு ஏற்றவையாகவும் உள்ளன.

டீச்சர் ப்ளஸ் அறிவாளிகளுக்கான பத்திரிகை அல்ல. இது கல்வியின் போக்குக்கள் எவ்வாறென உணர்ந்து புதுப்புதுக் கருத்துக்களையும் அவற்றைச் செயல்படுத்துவதற்கான அணுகு முறைகளையும் கண்டுகொள்ளத் தன்னை ஊக்கப்படுத்திக் கொள்ள விரும்பும் ஒரு ஆசிரிய – ஆசிரியை ஆகியவர்களுக்குப் பயன்படும் பத்திரிகை ஆகும்.

http://www.teacherplus.org/

படைப்புக் கூட்டாளிகள்

 எய்டு இந்தியா:  எய்டு இந்தியா 1996ல் துவங்கப்பட்டது. இதன் நோக்கம் தமிழ் நாட்டில், கல்வி,சுகாதாரம்,வாழ்க்கை முறை ஆகிய துறைகளில் முன்னேற்றம் கொண்டு வருவதாகும். தமிழ்நாடு முழுவதும் 1000த்திற்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வரும் இதன் இன்றைய முக்கிய லட்சியம் கல்வியைப் பரப்புவதே. ஒவ்வொரு கிராமத்திலுள்ள ஒவ்வொரு குழந்தையும் மிகவும் தரமான கல்வி பெற வேன்டும் என்பது இதன் தீவிர இலக்காகும். பெருமளவில் நேரடியாக இம்முயற்சியில் பணியாற்றினாலும், அரசு சாரா அமைப்புகள்,அரசாஙம் மற்றும் சமூக முன்னேற்றச் சங்கங்களுடனும் இணைந்து தனது இலக்கை அடைய எய்டு இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது. படிக்கும் திறன், விஞானக் கல்வி, கிராம நூல் நிலையங்கள் போன்றவற்றைப் பாராட்டும் விதமாக  பல பரிசுகள் எய்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் இவர்கள் நோக்கம் பற்றியும் திட்டங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள இணைய தளத்தைப் பார்க்கவும்.

http://www.eurekachild.org

ஏகலைவ்யா: ஏகலைவ்யா என்பது லாபநோக்கமின்றிச் செயல்படும் ஒரு அரசு சாரா அமைப்பாகும்.  இது கல்வி சார்ந்த பல நவீன பயிற்சித் திட்டங்களை உருவாக்கி, அவைகளைப் பயிலரங்கம் மூலம் பரிட்சித்துப் பிறகு அவைகளை செயல்படுத்துவதற்கான களப்பணியானர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனமாகும். இது மத்தியப்பிரதேசத்தில் பல கிளைகளைக் கொண்ட  கல்வி மையங்கள் மூலம் செயல்பட்டு வருகின்றது.  

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, கல்விக் கருவூலங்களிலும், கற்பிப்பதிலும் - பாடத்திட்ட்த்தை ஒட்டியும், அதைச் சாராமலும் - கற்றுக் கொள்பவரின் முழுமையான முன்னேற்றம் மற்றும் அவர்களது சமூக மாற்றம் ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு ஏகலைவ்யா செயல்படுகிறது.

கற்பவர்களை மையப்படுத்திக் கற்பிக்கும் முறைகளை முன்னிலைப் படுத்தியே ஏகலைவ்யா செயல்படுகிறது. இது குழந்தைகளிடையே பிரச்சினைகளுக்கு விடைகாணும் திறனை வளர்ப்பதுடன், அவர்களது இயற்கையான சமூகச் சூழல் பற்றிய வினாக்களை அஞ்சாமல் கேட்கும்படி அவர்களுக்கு தைரியம் அளிக்கிறது. இந்த அணுகுமுறை குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் சுயமாகத் தங்களுக்குத் தாங்களே கற்றுக்கொள்ள உதவுகிறது. 

ஏகலைவ்யா நவீன கற்பிக்கும் முறைகளை முழுமையான ஒன்றாக்க் காண்கிறது. அதாவது வகுப்பறைப் பயிற்சிகளில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு ஒப்பாகும். இதனால், தேர்வு முறையிலும், ஆசிரியர் பயிற்சி முறையிலும், பள்ளிகளின் நிர்வாக முறைகளிலும் இந்தச் சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. இதனால் கற்கும் அளவு பள்ளிக்கூடங்களைத் தாண்டி சமுதாயதாய எல்லையைத் தாண்டிச் செல்லுவதாகப் பொருள்படுகிறது.

ஏகலைவ்யா கல்வி சார்ந்த பாட வள நூல்கள் பலவற்றை உருவாக்கி ஒரு பரந்த அடித்தளத்தை உருவாக்கி உள்ளனர். அதில், கல்வி இலக்கியங்கள், குழந்தைகளுக்கான இலக்கியங்கள்,  சஞ்சிகைகள், பாட நூல்கள் மற்றும் தேவையான கற்பிக்க உதவும் உபகரணங்கள் ஆகியவைகள் அடங்கும்.

http://www.eklavya.in

2008-ம் ஆண்டு நிறுவப்ட்ட கான் அகாடமி ஒரு லாப நோக்கின்றி செயல்படும் ஒரு அமைப்பாகும்.  உலகத்தில் எந்த மூலையில் இருக்கும் எவர்க்கும் உலகத்தரமான கல்வியை அளித்து, கல்வியின் போக்கை மாற்றுவது தான் அதன் நோக்கமாகும். சுமார் 3300-க்கும் அதிகமான வீடியோக்கள் முற்றிலும் இலவசமாக கான் வீடியோ மின் வலை, யு டூப் வலைகள் மற்றும் வேறு பல மின் வலைகள் மூலமாக கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோக்கள் சரித்தித்திலிருந்து கணிதம் வரை, நிதியியல் மற்றும் வானயியல் ஆகிய பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. உலகத்தில் உள்ள அனைவரின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான கல்வி சார்ந்த வளமான படைப்புகளை அளிக்க கான் அகாடமி விரும்புகிறது.  சில ஆரம்ப நிலை  ஆங்கில கணித வீடியோக்களை கீழ்க்கண்ட பிராந்திய மொழிகளில் மொழிபெயர்த்து, பேச்சுக்களை அந்த வீடியோக்களில் பதிவு செய்து வெளியிட அஸிம் பிரேம்ஜி யுனிவர்சிடி முன் வந்துள்ளது: ஹிந்தி, தமிழ் மற்றும் கன்னடம். 

கிருஷ்ணமூர்த்தி ஸ்கூல்ஸ் வெளியீடு: கிருஷ்ணமூர்த்தி ஸ்கூல்ஸ் வெளியீடான இந்தப் பத்திரிகை 1995லிருந்து வெளியிடப்படுகிறது. இது உலகெங்குமுள்ள கிருஷ்ணமூர்த்தி ஸ்கூல்களின் ஆசிரியர்கள் தங்கள் கல்வி அனுபவங்களையும் அனுபவ ஞானத்தையும் பகிர்ந்து கொள்ள ஒரு பொதுமன்றமாக,பொதுமேடையாகப் பயன்படவேண்டும் என்ற நோக்கத்துடன் துவங்கப்பட்டதாகும். இத்தனை காலமாக அந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் எழுத்தாளர்களையும் வாசகர்களையும் கொண்டு விரிவடைந்துள்ளது. இந்த ஜெர்னல் பள்ளிக்கல்வி பற்றி எழுதும் ஆசிரியர்களின் தேவைக்கு ஈடிணையற்ற வாய்ப்பைக் கொடுத்துள்ளது.

இந்த சஞ்சிகையில் இடம் பெறும் கட்டுரைகள் தத்துவம் மற்றும் நடைமுறைக் கல்வி பற்றிய பகுதிகளை விரிவாகக் கூறுகின்றன. இதில் எழுதும் பெருவாரியான கட்டுரையாளர்கள் - வாழ்க்கை - கல்வி பற்றி ஜெ கிருஷ்ணமூர்த்தி எழுப்பிய வினாக்களைக் கண்டு உள்ளம் உருகிப் போகிறார்கள். அந்தக் கேள்விகளைக் குறித்த தொடரும் தேடல்கள் அவர்களது பாடம் கற்பிப்பதிலும், அவர்கள் எழுத்திலும் பிரதிபலிக்கின்றன.  சஞ்சிகையின் இந்த அம்சத்தால் உண்டான அதன் வாய்ப்பும், பொருத்தமும் வகுப்பறையின் எல்லைகளைத் தாண்டிச் சென்று, கற்றல் - வாழ்வு ஆகியவற்றின் மூலத்தையே சென்றடையும் வல்லமை பெற்றதாகிறது.

மின் வலையில் அந்த சஞ்சிகை - இந்த மின் வலையில் 1 முதல் 14 வரையிலான சஞ்சிகைகளில் வெளியான அனைத்துக் கட்டுரைகளும் படிக்க்க் கிடைக்கும்.

http://www.journal.kfionline.org

சந்தான்: சந்தான் 1983ல் நிறுவப்பட்ட லாப நோக்கமற்ற அரசு சாராத மதச்சார்பற்ற ஒரு நிறுவனம். இந்த நிறுவனம் பொதுமக்கள் தங்களைத் தாங்களே உணர்ந்து கொள்ள அனுமதித்து அவர்களின் தனித் திறமையை வெளிக் கொணர்தல் வேண்டும் என்ற கோட்பாட்டைத் தன்னுள் கொண்டு இயங்கி வருகிறது. பலதரப்பட்ட மாற்றுக் கருத்துகளை   மதித்தல், மக்களின் அறிவை கவுரவித்தல், அவர்கள் கற்றலில் காட்டும் திறமையில் நம்பிக்கை வைத்தல் ஆகியவைளை அடிப்படைக் கொள்கைகளாக அதன் செயல்பாடுகளில்  வேரூன்றி உள்ளன.

சமூகப் பொருளாதார சக்திகள், ஜாதி,  இன  வகுப்பு, ஆண் பெண் பாகுபாடு ஆகியவைகள் நிறைய மக்களைக் கீழ் மட்டத்துக்கு தள்ளி விட்டன. இருபது ஆண்டுகளுக்கு முன் சந்தான் அவர்களை மீண்டும் உயர்நிலைக்குக் கொண்டு வரப் பெரிதும் உதவியது. அதற்காக, இளம் பருவத்தினர், குழந்தைகள் ஆகியவர்களுக்கு ஒருங்கிணைந்த கல்வியை அளிக்கும் ஒரு தேசிய அறிவு பரப்பும் மையமாக நின்று அதுவே ஒரு பெரிய வழிகாட்டலாகவும், ஒரு உயரிய நோக்கமாகவும் உருவாகும்படி செயல்பட்டது. இதன் மூலம் அவர்களின் சுகாதாரம், தொழில் திறமைகள், வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தல் ஆகியவைகளின் முக்கியத்துவத்தைக் தொழிற் கல்வி மூலம் அவர்களை உணர வைத்தார்கள். ஆழ்ந்து ஆராய்தல், அரவணைத்துச் செல்ல்ல் ஆகியவைகள் மூலம் அமைதியையும், முன்னேற்றத்தையும் அடைவதைக் கொள்கைகளாகக் கொண்டுள்ளது என்பது தான் சந்தானின் மிகச் சிறந்த அடையாளமாகும்.  

கெளரவத்தோடும், ஒற்றுமையாகவும் வாழும் மக்களைக் கொண்ட   நேர்மையும், சமத்துவமும் ஆட்சிசெய்யும் சமூகத்தை நோக்கமாகக் கொண்ட கொள்கையால் உந்தப்பட்டு, வரையறுக்கப்பட்ட ஒழுங்கான கல்வியின் மூலமாக மக்களை ஒதுக்கி வைக்கும் வழிமுறைகளை எதிர்த்துப் போரிடுவதை சந்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது.

http://www.sandhan.org/

சிக்க்ஷாமித்ரா: ஒரு சோதனைப் பள்ளியும், ஒரு கல்விக் கருவூல மையமும், ஏப்ரல் 2005ல் சிக்க்ஷ மித்ராவால் ஆரம்பிக்கப்பட்டன. அவைகள் இரண்டும் குறிப்பாக நடுத்தரப் பள்ளிக் கல்விக்காக - உருவாக்கப்பட்டவைகளாகும்.. அந்தப் பள்ளியில் கல்வியை - வேடிக்கையாகவும் அதே சமயத்தில் திறம்படவும் அதன் மூலம் படிப்பின் சுமை தெரியாமல் இருக்க சோதனையாக கற்பிக்கிறார்கள். கல்விக் கருவூல மையத்தில் இந்த சோதனைப் பள்ளியின் வெற்றிக் கனிகளை பல மாணவர்களும், ஆசிரியர்களும் பயன் அடையும்படி அவைகளை நடைமுறைப்படுத்த விரும்பி செயலாற்றுகிறார்கள். மாலை வகுப்பில் குறிப்பாகத் தொழில் சார்ந்த பாடங்களை வசதிவாய்ப்பற்ற உள்ளூர் அடித்தட்டு மக்களுக்கு வழங்கி அவர்கள் தேவையை நிறைவு செய்கிறது. 

இதன் தி எஜுகேஷன் ரிசர்ச் சென்டர் (Education Resource Centre (ERC)  ) போதனா முறைக்கான எல்லாவகை உபகரணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.  ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், பத்திரிக்கை நிருபர்கள்,  அரசின் கொள்கை தீட்டுபவர்கள், அரசு சாரா அமைப்புகள், கல்விக் கூடங்கள்- இவைகள் அனைத்தையும் ஒருங்கினைத்துச் சேவை செய்வது இதன் முக்கிய நோக்கமாகும். இம்மையம் சிறந்த கல்வி சார்ந்த புத்தகங்கள், பாடல் ஒலி  நாடாக்கள்,  திரைப்படங்கள், கற்பித்தல் - கற்றல் கருவிகள் - TLM - அறிக்கைகள் -  தன்னகத்தே கொண்டுள்ளது.

இங்கு அவ்வப்போது ஆசிரியர்-மாணவர்கட்கான பயிற்சி அரங்குகள் - training workshops- நடைபெற்று வருகின்றன. மொழித் திறமையை மேம்படுத்தல், நவீன உத்திகள் மூலம் பயிற்றுவித்தலுக்கான நடைமுறைகள் ஆகியவைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  மேலும் புதுமைகளை விரும்பும் ஆசிரியர்கள், பள்ளிகள், அரசு சாரா கல்வி நிறுவனங்கள் ஆகியவைகளுக்கு ஒன்றோடொன்று தொடர்பு கொள்ள இந்த இ.ஆர்.சி மையம் வழிவகை செய்கிறது. மேலும், மாநில மற்றும் தேசிய அளவில் இயங்கும் ஆசிரியர் அமைப்புகள், ஆய்வுக் கூடங்கள் ஆகியவைகளுடனும் இந்த மையம் தொடர்பு கொள்ள விழைகிறது.

2010 டிசம்பர் முதல் இந்தப் பள்ளியின் பணி அதன் மாலை நேர வகுப்பையும் சேர்த்து முடிவுக்கு வருகிறது. ஆயினும், சிக்க்ஷ மித்ரா தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இணைப்புடன் கல்வி வழங்கும் ஒரு மையமாகத் தொடர்ந்து பணி ஆற்றும்.

http://www.shikshamitra-bengal.org

சித்- தி சொசைட்டி பார் இண்டக்ரேட்டட் டெவலப்மெண்ட் ஆப் ஹிமாலயாஸ் (இமயமலையின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கான சங்கம்):  இந்த சொசைட்டி மத்திய இமாலயத்தின் முசூரி (Mussoorie)க்கு  12 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கெம்ப்டி (Kempty) யில் உள்ளது. உத்தரகண்ட் மாவட்டம் டெஹ்ரி கார்வால் மாவட்டம் ஜான்பூர் ப்ளாக்கில் அமைத்துள்ள SIDH அப்பகுதியிலுள்ள குழந்தைகள் இளைஞர்களுக்குப் பொருள் பொதிந்த, பொருத்தமான, முழுமையான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ளது. சமூகப் பொருளாதார மாவட்டங்களில் மட்டுமின்றித் தனி மனித மனங்களிலும் சிறந்த பொருள் பொதிந்த விளக்கங்களையும், கலந்துரையாடல்களையும் ஊக்குவித்து, அதன் மூலம் சமூக மாற்றத்தைக் கொண்டு வர கல்வியை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதே இவ்வமைப்பின் பிரதான நோக்கமாகும். தற்போது SIDH  மழலையர் ஆரம்பப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை 11 பள்ளிகளை நடத்துகின்றது. இதில் ஜான்பூர் அக்லார் பள்ளத்தாக்கைச் சார்ந்த 40 கிராமங்களிலுள்ள 500 குழந்தைகள் பயில்கின்றார்கள். SIDH  தனது கல்விச் சேவையை விரிவு படுத்தி இளைஞர்கட்கான பயிற்சிப் படிப்பு ஆசிரியர் பயிற்சி கல்வித்துறை ஆராய்ச்சி, சட்ட நுணுக்கம் மற்றும் அச்சுக்கூடங்களை நிறுவுதல் போன்றவற்றால் தரமான கல்வியைப் பெற விரும்புபவர்களின் கவலைகளைப் போக்கி, பணியாற்றுகிறது.

SIDHசமூகத் தன்னார்வ முன்னோடிகள் எனப்படும் உள்ளூர் இளைஞர்களைக் கொண்ட குழுவாகும். SIDH  குழுவினர்கள் இளைஞர்களையும் யுவதிகளையும் குழுக்களாகச் அமைத்து, அவர்களை  மகளிர் நலம், கல்வி, விவசாயம், கிராமப் பொருளாதாரம் ஆகிய பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்வுகாண ஊக்குவிப்பதில் வெற்றி கண்டுள்ளார்கள்.

http://www.sidhsri.info

ஜோடோ ஞான்: ஜோடோ ஞான்  வகுப்பறைப் பயிற்சிகளில் ஏற்படும் பிரச்சினைகளை சாத்தியமான முறையில் தீர்க்கமுயலும் ஒரு அமைப்பாகும். 1998-ம்  ஆண்டிலிருந்து இது செயல்பட்டு வருகிறது. பள்ளிக் குழந்தைகள் கற்றுக் கொண்ட்தை நன்கு உணர்ந்து மகிழ்ச்சியுடன் இருக்க கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களைக் கற்பிப்பதில் புதுமையைப் புகுத்தி - மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர்களின் பயிற்சிப் பேராசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியவர்களுடன் நெருக்கமாகப் பழகிப் பயிற்றுவிப்பதை இவ்வமைப்பினர் மேற்கொண்டுள்ளனர். பணியிலுள்ள மற்றும் பயிற்சி பெற்று வரும் ஆசிரியர்களுக்குப் பயிலரங்கம்  நடத்துதல், மலிவு விலையுள்ள கற்பிக்கும்,கற்கும் உபகரணங்களை வடிவமைத்தல், உருவாக்கல், பங்கிடுதல் போன்றவை முக்கியமாக இம்முயற்சியின் ஒரு பகுதியாகும். அவர்கள் அதிகமான பள்ளிகளில் கணிதப் பாட்டத்திற்கான போதனைக்கூடங்களயும், விஞ்ஞானக் கண்டுபிடிப்பு ஆய்வுக்கூடஙகளையும் நிறுவியுள்ளனார்கள். தற்போது அவர்கள்  மூலம் நான்கு நவீன கருத்தை ஏற்கும் பள்ளிக்கூடங்களில் ஆரம்ப கணிதப் பாடத்திட்டத்திற்கான 'டிசைன் அண்டு டெவலப்மெண்ட் ஆப் இன்னொவேடிவ் கரிகுலம்'  - Design and Development of Innovative Curriculum for Primary Mathematics - என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முனைந்துள்ளர்கள். இதில் பாடத்திட்டத்தை வடிவமைத்தல், பாடம் அமைத்தல், மாதிரி வகுப்பறைப் பயிற்சிகள், மதிப்பிடல், கணித்தல் ஆகியவைகள் அடங்கும்.

இவர்கள் இருப்பிடமான மேற்கு டெல்லியிலுள்ள ஷகுர்பூர் என்ற ஊரில் முதன் முறையாக ஆரம்பக்கல்வி பயிலும் முதல் தலைமுறையினருக்கான ஒரு பரிசோதனைப் பள்ளிக்கூடத்தை நடத்தினார்கள். இப்பள்ளியில் கணிதபாடம் நவீன முறைகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு ஒருங்கிணைந்த திட்டமாக - அதில் எந்த ஒரு தர மதிப்பீட்டுக் கற்பித்தல் இன்றி - கடைப்பிடிக்கப்படுகிறது.

ஜோடோஞ்ஞான் என்ற இந்த அமைப்பு பொருளாதார அடிப்படியற்ற லாபநோக்கமற்ற சமூகசேவையை நோக்கமாகக் கொண்டதாகும். ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கல்விப் பாதையில் பயணம் செய்ய குழந்தைகளை அனுமதிக்கும் தரமான கல்வியை அளிக்கும் அனைத்து அமைப்புகள், மற்றும் தனிநபர்கள் ஆகியவர்களுடன தொடர்புகொண்டு தங்களது பணியைத் தொடர்ந்து செய்து முன்னேறுவ்து அவர்கள் எண்ணமாகும்.

http://www.jodogyan.org

டி ஆர் ஸி எஸ். ஸி. (Development Research Communication and Services Centre):  இந்த மையம் என்பது மேற்கு வங்காளத்தில் 12 மாவட்டங்களிலும் மற்றும் சில மாநிலங்களிலும் உள்ள அரசு சாராத சமூக முன்னேற்றம் கருதிச் செயல்படும் ஒரு அமைப்பாகும். கிராமத்து ஏழைகளுக்கு உணவு - வாழ்வாதாரம் ஆகியவைகள் கிடைப்பதில் பாதுகாப்பான நிலையை இயற்கை வளங்களின் நிர்வாகத்தின் கொள்கைகள் மற்றும் செயல்களின் வாயிலாகத் தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்வதுடன். அவைகள் இயற்கைக்கு உகந்த, பொருளாதாரத்திற்கு ஏற்ப, சமூக நீதியுடன், அனைவரின் ஒத்துழைபுடன் உருவானதாக அமைய வேண்டும் என்பது இவர்களது முக்கியமான அக்கறையாகும்.   

1982-ம் ஆண்டு உருவான டி.ஆர்.சி.எஸ்.சி. என்ற மையம் பலவகைப்பட்ட சமூக-பொருளாதாரப் பிரச்சனைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தும், தொகுத்தும், அலசி ஆராய்ந்தும் செயல்படும் ஒரு கருவூலமாகத் திகழ்நதது. மேலும் அந்த மையம் பலவகையான அரசு சாரா மற்றும் சமூக அடிப்படை அமைப்புகள், தனி நபர்கள் ஆகியவர்களின் சமூக நீதியினை நிலை நாட்ட நடத்தப்படும் போராட்டங்களை - அதிலும் குறிப்பாக தினக்கூலித் தொழிளார்கள், உள்ளூர் சமூகத்தினர், சிறு மற்றும் குறுநில விவசாயிகள்/நிலமற்ற கூலைத் தொழிலாளர்கள் ஆகியர்களின் போராட்டங்களை - வெளிப்படுத்தி வந்தது. 1992லிருந்து நீடித்து நிலைத்திருக்கும் விவசாயம் மற்றும் இயற்கை வள நிர்வாகத்தின் மூலம் கிராம ஏழை மக்களின் உணவு உறைவிடம் போன்ற வாழ்வாதாரங்களை வளப்படுத்துவதில் இவர்கள் கவனம் செலுத்தினார்கள். அவர்களின் இந்தப் புனிதப் பயணத்தில், இளைய தலைமுறையினருடன் சேர்ந்து செயலாற்றுவதன் அவசியத்தை டி.ஆர்.சி.எஸ். நன்கு உணர்ந்தார்கள். ஆகையால், அவர்களின் ஒத்துழைப்புடன், வாழ்வுக்கும், வாழ்க்கைத் தேவைகளுக்கும் பயன்படும் பயிற்சிவழிக் கல்வியை - இயற்கையை முன்னிலையப் படுத்தி அதையே கற்பதின் கருவாயாக பள்ளிகளிலும் கிராமப்புறக் கூட்டமைப்புகளிலும் - இவர்கள் செயல்படுத்தினார்கள்.  இவ்வமைப்பு ஆசிரியர்கள், மாணவர்கள் அவர்களே பல பாடத் திட்டங்கள் , புத்தகங்கள், கருத்துக்கள், உபகரணங்கள் ஆகியவைகளை உருவாக்க உதவி செய்கிறது. இந்த மையம் தனது சேவைகளை உள்ளூர் அரசு சாரா அமைப்புகள் மற்றும் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் குழுக்கள் மூலம் விரிவாக்கம் செய்துள்ளது.

http://www.drcsc.org

தமிழ் நாடு சயின்ஸ் போரம் (தமிழ்நாடு விஞ்ஞான ஆய்வு மன்றம்): இந்த மன்றம் 1980ல் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களால் ஒரு சங்கமாக விஞ்ஞானிகள் விஞ்ஞான அறிவை எல்லோருக்கும் பரப்பும் நோக்கத்துடன் துவங்கப்பட்டது. எண்பதுகளின் பிற்பகுதியில் TNSF  மக்கள் விஞ்ஞான இயக்கத்துடன் இந்திய அளவில் இணைந்து செயல்படத் துவங்கித் தன்னை மறுபரிசீலனைக்கு உட்படுத்திக் கொண்டது. அதன்படி சுற்றுச்சூழல் கல்வி, தமிழ் விஞ்ஞானக் கட்டுரைகள் வழங்குதல் போன்ற பணிகளை ஏற்று அன்றாட வாழ்வில் விஞ்ஞானக் கல்வியை இணைத்தது.

தொன்னூறுகளில் இம்மன்றத்தின் அறிவொளி இயக்கம் தீவிரமடைந்து, 12,000 அங்கத்தினர்களைக் கொண்டதாக விரிவடைந்தது. இதில் விஞ்ஞானிகள் மட்டுமல்லாது, கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் இவர்களுடன் விவசாயிகள், சுய உதவிக் குழுப் பெண்கள் -அநேகமாக அனைத்து மக்களும் - இதில் அங்கத்தினராகினர்.

இதன் செயல் திட்டங்களில் விஞ்ஞான அறிவைப் பரப்புதல், விஞ்ஞானம் சம்பந்தமான தகவல்களை வெளியிடல், முதியோர் கல்வி, மீண்டும் கல்வியைத் தொடர ஊக்குவித்தல், ஆரம்பக் கல்வி, சுகாதாரம், கிராமப்புர மகளிர் மேம்பாடு, பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துதல் போன்றவைகள் அடங்கும்.

இந்த மன்றம் பல தமிழ் பத்திரிகைகள் மூலம் சிறப்பாக கல்விப் பணியாற்றுகிறது.

  • 'துளிர்' என்பது குழந்தைகள் அறிவியல் மாதப் பத்திரிக்கை.
  • 'விழுது' என்ற காலாண்டு இதழ் ஆசிரியர்களுக்காக வெளியிடப்படுகிறது.
  • 'சிறகு'  என்ற மாதப் பத்திரிக்கை சயன்ஸ் மற்றும் தொழில் நுற்பம் - அவைகளின் முன்னேற்றங்கள் ஆகியவைகள் பற்றிய கொள்கைப் பிரச்சனைகளை விவாதிக்கும் தளமாக வெளியிடப்படுகிறது.
  • 'அறிவுத்தென்றல்' என்ற பதிப்பு புதிய படிப்பாளிகளைக் கருத்தில் கொண்டு வெளியிடப்படுகிறது.
  • 'ஜந்தர் மந்தார்' என்ற இருமாதங்களுக்கொருமுறை வெளியிடப்படும் சயன்ஸ் இதழ் வயது வந்த குழந்தைகளுக்காக வெளியிடப்படுகிறது.

TNSF  இதுவரை பெரும்பாலும் பொது விஞ்ஞானம் பற்றிய 250க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது.

http://www.tnsf.in/

திகந்தர்: திகந்தர் 1978ல் நீல் பாக், கர்நாடகாவில் வாழ்ந்த  மிஸ்டர் டேவிட் ஹார்ஸ்பர்க் என்பவரிடம் பயிற்சி பெற்ற இரண்டு ஆசிரியர்களால்  நிறுவப்பட்டது. ராஜஸ்தான் ஜெய்ப்பூருக்குச் சற்றுத் தள்ளி உள்ள திகாந்த்ர் சிக்-ஷா இவாம்கெல்குட் சமிதி - Digantar Shiksha Evam Khelkud Samiti - அதன் துவக்க காலத்திலிருந்தே வறுமையில் வாடும் சிறுபான்மை இன மக்களுக்குத் தரம் வாய்ந்த மாறுபட்ட கல்வி வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

கல்வியின் நோக்கம் குழந்தைகளுக்குச் சுய ஆர்வம் ஊட்டுவதும், சுதந்திரமாக பகுத்தறிந்து நல்லது கெட்டதை ஆய்ந்து செயலாற்றச் செய்வதும் ஆகும் என்பதைத் திகந்தர் நம்புகின்றது. இந்த எண்ணத்தின் அடிப்படையில் எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி புகட்ட இது தீவிர முயற்சி செய்கிறது.

தற்போது திகாந்தர் ஜெய்ப்பூரின் எல்லைப் பகுதியில் தனது சொந்தப் பள்ளிக்கூடங்களை நடத்தி வருகின்றது. நான்கு திட்டங்களைத் திகந்தர் நிறைவேற்றி வருகிறது. திகாந்தர் வித்யாலய் (Digantar Vidyalay -DV) தி அகடமிக் ரிசோர்ஸ் யுனிட் (The Academic Resource Unit (TARU) ) தி ரிசோர்ஸ் சப்போர்ட் யூனிட் (The Resource Support Unit (TRSU)  )  மற்றும் ஷிக்-ஷா சமர்த்தான் பிராஜெக்ட், பாகை, ஜெய்பூர் (Shiksha Samarthan Project(SSP)   ) ஆகியவைகளாகும்.

http://www.digantar.org
பிரதம் புக்ஸ்:

இந்திய குழந்தைகளின் வாழ்வினில் ஒரு மாற்றத்தை உருவாக்குதல்!  பிரதம் புக்ஸ் 2004-ம் ஆண்டு – குழந்தைகளிடையே படிக்கும் பழக்கத்தை உண்டாக்கும் நாடு தழுவிய இயக்கமான ரீட் இந்தியாவின் – Read India Movement -  ஒரு அங்கமாக உருவானது. பிரதம் புக்ஸ் ஒரு லாபநோக்கமின்றி செயல்படும் ஒரு நிர்வாகமாகும். பிரதம் புக்ஸ் உருவாகக் காரணம்-

  • இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் குறைந்த விலையில் உயர்தரமான புத்தகங்களைத் தேடி அளித்தல்.
  • இந்திய மொழிகளில் குழந்தைகள் புத்தகங்களை வெளியிட்டு இந்தியாவின் எந்த மூலையிலும் இருக்கும் குழந்தைகளுக்கும் புத்தகங்கள் கிடைக்கும் படிச் செய்தல். 

அவர்களது நோக்கம் – ஒவ்வொரு குழந்தையின் கையிலும் ஒரு புத்தகம் இருக்கும் படிச் செய்து, படிப்பதில் உள்ள ஆனந்தத்தை அனைவரும் சுதந்திரமாக அனுபவிக்கச் செய்தல். கடந்த ஏழு ஆண்டுகளில், அவர்கள் 235 தலைப்புகளில் 11 மொழிகளில், புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். அதன் மூலம், கோடிக்கணக்கான குழந்தைகளிடம் படிப்பதில் உண்டாகும் ஆனந்தத்தைப் பரப்பி இருக்கிறார்கள். அவர்களது புத்தகங்கள் அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் வண்ணம் பரந்த கொள்கையின் அடிப்படையில் அமைந்ததாகும். அவர்களின் 50 புத்தகங்களுக்கு மேல் – அவைகள் பல மொழிகளில் உள்ளவைகள் – கிரியேட்டிவ் காமன்ஸ் – Creative Commons – என்ற காப்பி ரைட் என்ற பொதுவான அனைவரும் பயன்படும் அளவில் வெளியிடப்பட்டுள்ளன. அஸ்ஸாமி, பிரன்சு, ஸ்பானிஷ், ஜெர்மன் ஆகிய அயல் மொழிகளிலும் புத்தகங்களை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்ட புத்தகங்களின் அடிப்படையில் பல நூறுவகையான புதிய பதிப்புகளையும் உருவாக்கி உள்ளனர். பழைய புத்தகங்களின் ஆடியோவிலிருந்து, முற்றிலும் புதிய நூலகள் வரை இவைகளில் அடங்கும்.

http://prathambooks.org/
ரிஷிவேலி இன்ஸ்ட்டிடியூட் பார் டெக்னிக்கல் எஜுகேஷன்,கிருஷ்னமூர்த்தி பவுண்டேஷன்,இந்தியா:

 இந்த பவுண்டேஷன் ரிஷிவேலி கல்வி மையத்தின் தொடரும் அக்கறை, ஆசிரியர்களை உரமூட்டி வளர்த்து அவர்களைக் கொண்டு தத்துவ விசாரணைகளை விரிவு படுத்தியும், ஒரு முழுமையான கல்வி வழங்குவதைச் சுற்றிச் சுழலும் கல்வி கற்பிக்கும் கொள்கைகளை  வகுப்பதிலும் அவர்களை ஈடுபட வைக்க முயல்வதாகும். இதற்காகத்தான் ரிஷிவேலி இன்ஸ்ட்டிட்யூட் பார் டீச்சர் எஜுகேஷன் - Rishi Valley Institute for Teacher Education (RVITE) - 2006 ம் ஆண்டு நவம்பரில் நிறுவப்பட்டது.

ஆர்.வி.ஐ.டி.இ. பாட்த்திட்ட்த்தை மேம்படுத்தும் முயற்சிகளை ஆதரிப்பதுடன், ரிஷிவேலி பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு - வகுப்பில் நேர்முகப் பயிற்சி - முறை கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் இம்முறையை பலதரப்பட்ட  பள்ளிகளுக்கும், ஆசிரியர்கள், வருங்கால ஆசிரியர்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு செல்லவும் அதற்காகத் திட்டமிடவும் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தவும் வழிவகை செய்துள்ளது.

இன்றைய ஆர்.வி.ஐ.டி.இ.யின்  ஆசிரியர்களின் பணிகளில் இவைகள் இடம்பெற்றுள்ளன

1 பாடங்கள் மற்றும் உபகரணங்கள் உருவாக்கும் திட்டங்களுக்கானவைகள் -

  • முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி இரண்டாம் மொழிப்பாடம்
  • ஆறாம் -  ஏழாம் வகுப்புகளில் (ஆங்கிலம் தெலுங்கு) விஞ்ஞானப் பாடம்.

2 . பலதரப்பட்ட பள்ளிகளிலிருந்து வரும் ஆசிரியர்களுக்குப் போதிக்க பயிற்சி வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்.

3 அஸிம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்துடன் இணைந்து இரண்டாண்டு ஆசிரியர் கல்விப் பயிற்சித் திட்ட்த்தை - B.Ed level - ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்காக உருவாக்கல்.

http://www.rishivalley.org

 

விக்ரம்ஷிலா கல்வி கருவூலக் கழகம் (Vikramashila Education Resource Society) மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் 1989-ம் வருடத்திலிருந்து கல்வித் துறையில் செயலாற்றி வருகிறது. அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வியை அளிப்பதை ஒரு நிதர்சனமான உண்மையாக அமைக்கும் செயலில், ஆசிரியர்கள், குழந்தைகள், சமூகங்கள் மற்றும் அரசாங்க அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து செயலாற்றுகிறது இந்தக் கழகம். 

 

விக்ரம்ஷிலா தாழ்த்தப்பட்ட - வசதியற்ற சமூகப் பிரிவினர்களுக்கு கல்வியை அளித்து, அவர்கள் வாழ்க்கைக்கு ஏற்றபடி அந்தக் கல்வி பயன்பெறும் வகையில் சேவை செய்து வருகிறது. கடந்த 20 வருடங்களாக, விக்ரம்ஷிலா இந்தியா முழுவதும் ஆய்வு மற்றும் ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும் பலவிதமான முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளது. இதன் மூலம் 200-க்கும் மேற்பட்ட அடிமட்டத்து நிலையில் உள்ள 25,000 ஆசிரியர்கள் மற்றும் 14,00,000 குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர். 

 

குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் அரசாங்கத் துறைகள் ஆகியவர்களுடன் விக்ரம்ஷிலா  ஆசிரியர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் கல்விக்கு உதவும் திட்டங்கள் மூலம் செயல்படுகிறது. விக்ரம்ஷிலா தனது பலவிதமான களவு ஆய்வு முயற்சிகள் மூலம் குடிமைக் கல்வியினை தனது மையங்களில் ஆரம்பித்து, மதராசா மையங்களில் தர மேம்பாட்டினை உருவாக்குவதுடன், அந்தக் கல்வியினை பள்ளிப் படிப்பின் அமைக்குள்ளேயே வேலைவாய்ப்புக்கு ஏற்றபடி இணைத்து இயங்குகிறது. 

 

மேலும், விக்ரம்ஷிலா என்ற அமைப்பு குழந்தைகளின் கல்வி உரிமை, சமதர்மம் மற்றும் மக்களின் பொதுவான கல்வி கற்கும் அமைப்புகளைச் சக்திவாய்ந்ததாக உருவாக்கல் ஆகியவைகளை தீவிரமாக கடைப்பிடிக்கிறது. விக்ரம்ஷிலா மாநில அரசாங்கத் துறையுடன் சேர்ந்து ஆர்வமாகச் செயல்படுகிறது. விக்ரம்ஷிலா பல மாநில படைப்புக் குழுக்களில் அங்கத்தினராகவும் இருக்கிறது. 

http://www.vikramshila.org

வித்யா பவன்: 1931-ம் ஆண்டிலேயே வித்யா பவன்  ராஜாதானில் நான்கே வகுப்புகளுடன் இடைநிலைப்பள்ளியாகத் துவங்கியதாகும். இதன் நோக்கம் குழந்தைகளுக்கு வெறும் ஏட்டுக்கல்வியைப் போதிப்பதிலிருந்து மாறுபட்ட குணநலக் கல்வி வழங்குவதாகும். மாணவர்களின் உடற்பயிற்சி, கலை, நன்னடத்தை  இவைகள் வித்யா பவன் கல்வித்திட்டத்தின் பிரிக்க முடியாத அம்சங்களாக விளங்கின.

உதய்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வித்யா பவனின் 14 கல்வி நிலையங்கள் அமைந்துள்ளன. இதன் தற்போதய செயல்பாடுகள் பள்ளிக் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் கல்வி,  ஆசிரியர் பயிற்சி, கல்வி ஆராய்ச்சி, விவசாயிகளுக்கான உதவி, மற்றும் விவசாய ஆராய்ச்சி, கீழ்த்தட்டு இடைநிலை மக்களுக்குக் கையால் காகிதம் செய்தல், பஞ்சாயத்துராஜ் பணியாளர்களுக்கான பயிற்சி, அங்கன்வாடி மக்களுக்கான பயிற்சி வழங்குதல்  என்பன ஆகும்.

வித்யா பவனின் பணியின் பரவல் மிகவும் அதிகம். இதன் உதவியை ராஜஸ்தானில் உள்ள வெவ்வேறு நகரங்கள், கிராமங்களிலுள்ள குழந்தைகள் பெற்று வருகிறார்கள். அந்த மாநிலத்தின் பல கல்வி நிலையங்களுக்கு வித்யா பவனின் நிறுவனங்கள் உதவி வருகின்றன. வித்யா பவனின் ஆசிரியர் குழுவின் ஒரு சாரார், கல்வித்துறையில் முன்னேறுவதற்கான ஆசிரியர் பயிற்சி வழிகாட்டிகள், பாட நூல்கள் ஆகியவைகளை உருவாக்குவதற்கு மற்ற மாநில அரசுகளுக்கு உதவுகின்றனர். அத்துடன், பல  மாநில- இந்திய அளவிளான பயிலரங்கங்கள், ஆசிரியர் பயிற்சிக் கூடங்களை ஆகியவைகளையும் வித்யா பவனின் ஆசிரியர் குழு நடத்தி வருகின்றது.

வித்யா பவனின் நான்கு பள்ளிகளின் தொலைநோக்குப் பார்வை என்னவென்றால் சுதந்திரமான மதச்சார்பற்ற சமூகத்தின் அர்த்தமுள்ள தரம் வாய்ந்த கல்வியை எல்லாப் பிரிவையும் சேர்ந்த குழந்தைகளுக்கு வழங்கி அவர்கள் நாட்டின் சிறப்பான கெளரவமான குடிமகன்கள் ஆக்குவதுதான். குழந்தைகள் கூட்டாக இணைந்து ஒற்றுமையுடன் செயல்படுவதை ஊகுவிப்பதும் போட்டி மனப்பான்மையை விலக்குவதும் இதன் நோக்கம். இங்கு வரும் குழந்தைகள் கலப்படமான பின்னனி கொண்டவர்கள் -அதாவது அவர்கள் பஸ்தீஸ் என்ற உதய்பூரைச் சுற்றுயுள்ள கிராமங்களில் வாழ்பவரகள், சுகர் என்ற இடத்தில் உள்ள அனாதை இல்லவாசிகள் மற்றும் சமூகத்தில் பின் தங்கிய குறைந்த வருமான்முள்ளவர்கள் ஆவார்கள்.

வித்யா பவன் எடுகேஷன் ரிசோர்ஸ் சென்டர் (Vidya Bhawan Education Resource Center (VBERC)  ) 1995ல் துவங்கப்பட்டது. இதன் நோக்கங்கள் - வித்யா பவன் கல்வி நிறுவனங்களுக்கிடையே பரஸ்பரம் கல்வி சம்பந்தமான கருத்துக்களை உரமிட்டு வளப்படுத்துவதற்கு உதவுவது, வித்யா பவன் அமைப்புகள் ஒவ்வொன்றும் அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உதவுவது - ஆகியவைகளாகும். ராஜஸ்தான்,சட்டீஸ்கர், பீஹார், ஆந்திரப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களின் அரசாங்கத்துடன் இந்த வித்யா பவன் கல்வி வளநூல மையம் பல வகைகளில் இணைந்து செயல்புரிந்து வருகிறது.   க்ருத்துக்கள், பாடங்களின் தன்மை, பாடப் புத்தகங்கள், பாட்த்திட்டங்கள், கலைத் திட்டங்கள் ஆகியவைகளை ஆழமாக அறிந்து கொள்வதற்கு உகந்தபடி அறிவாய்ந்த குழுக்களை உருவாக்கும் நோக்கத்தில் ஆசிரியர்களின் பயிற்சிகளை உருவாக்கிச் செயல்படுத்து இதில் அடங்கும்.

http://www.vidyabhavansociety-seminar.org/default.htm

ஸ்கூல் ஸ்வாட்டர் போர்ட்டல்: ஸ்கூல்ஸ் வாட்டர் போர்ட்டல் என்ற இந்த மின் வலைத் தளம் கணணி மயமாக்கப்பட்ட அனைவரும் பங்குகொள்ளும் அளவில் அமைந்த ஒரு தகவல் மேடையாகும். கல்வியாளர்கள், மாணவர்கள் பள்ளி நிர்வாகிகள் பெற்றோர்கள் இவர்களிடையே நீராதாரங்கள் பற்றிய அறிவைப் பகிர்ந்துகொள்ள இது பயன் படுகிறது. என்றாலும் இவர்கள் மட்டுமின்றி நீராதாரம் பற்றிய அடிப்படை அறிவைப் பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள அனைவரையும் அடிப்படையான நீர் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள  ஸ்கூல்ஸ் வாட்டர் போர்ட்டல் வரவேற்கிறது.

ஸ்கூல்ஸ் வாட்டர் போர்ட்டல் என்பது இந்திய வாட்டர் போர்ட்டலின் ஒரு அங்கமாகும். இந்திய வாட்டர் போர்ட்டல் என்பது இத்துறையில் பயிற்சி பெறுவோர் மற்றும் பொது மக்கள் இவர்களுக்கு நீர் நிர்வாகம் பற்றிய அறிவை ஆன் லைன் மூலம் பரப்பும் ஒரு அமைப்பாகும். இது மிஸ் ரோகிணி நைல்கனி என்பவரால் நிறுவப்பட்ட, லாப நோக்கமற்ற அர்கயம் எனும் அறக்கட்டளையாகும். தண்ணீர் பற்றியும் சுகாதாரம் பற்றிய துறைகளில் இவ்வறக்கட்டளை பணியாற்றுகிறது.

https://washresources.wordpress.com/tag/sch2ools-water-portal/