தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?
தேசிய அறிவியல் கழகம்

தேசிய அறிவியல் கழகம் - National Knowledge Commission - NKC - 13-06-2005 அன்று உருவாக்கப்பட்டது. இது பாரதப் பிரதமருக்கு நேரடியாக ஆலோசனை வழங்கும் ஒரு உயர்மட்ட ஆலோசனை அளிக்கும் குழுவாகும். கல்வி, விஞ்ஞானம், தொழில் நுட்பம், விவசாயம், தொழிற்சாலை, மின் வலை வழி நிர்வாகம் போன்ற சில முக்கிய துறைகளைக் கருத்தில் கொண்டு, கொள்கை - நேரடியான சீர்திருத்தங்கள் ஆகியவைகளில் வழிகாட்ட தேசிய அறிவியல் கழகத்திற்கு சட்ட உரிமை அளிக்கப்பட்டுள்ளது. எளிதாக அறிவியல் பெறல், கல்வி அமைப்புகளை உருவாக்கிப் பாதுகாத்தல், கல்வியைப் பரவலாக்குதல், கல்விச் சேவைகளின் தரத்தை மேம்படுத்தல் ஆகியவைகள் அனைத்தும் இந்தக் கழகத்தின் அக்கறையாகும்.
டீச்சர் போர்டலுக்கு தேசிய அறிவியல் கழகத்தின் பங்களிப்பு:
சக்தி, சுற்றுச் சூழல், கல்வி, பல உயிரினப்பெருக்கம் (Biodiversity), நீர் போன்ற சில துறைகளின் முன்னேற்றத்திற்காக அவைகளை தேசிய அறிவியல் கழகம் தேர்வுசெய்து, அவைகளின் மேம்பாட்டிற்காக அறிவியல் பூர்வமாக விவரங்களைச் சேகரித்தும், பரப்பியும் செயலாற்றுகிறது. இத் துறைகளில் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் முக்கியமான நிறுவனங்களை இந்தக் கழகம் அழைத்து, அவர்களுடன் இணைந்து ஒரு இணைய தளத்தை உருவாக்கி, நிர்வகிப்பதற்கு அது வேண்டுகோள் விடுத்தது. அதன் பின்னணியில், கல்வித் துறையில் ஆசிரியர்களுக்காக ஒரு இணைய தளத்தை உருவாக்க அஸிம்பிரேம்ஜி பவுண்டேனுக்கும் தேசிய அறிவியல் கழகம் வேண்டுகோள்விடுத்தது.
ஒரு ஆசிரியர் இணைய தளத்தை நிறுவ, தேசிய அறிவியல் கழகம் செயலரங்கங்கள்/கூட்டங்கள் ஆகியவைகளை ஏற்பாடு செய்தது. அடிக்கடி உரையாடுதல், சிறந்த பாடப் பயிற்சிகளைப் பற்றி பகிர்ந்துகொள்ளுதல், அறிவியல் களஞ்சியம் உருவாக்குதல் ஆகியவைகளுக்கான ஒரு மேடையாக அமைப்பதுதான் அந்த இணைய தளத்தின் நோக்கமாகியது. இந்த இணைய தளத்தின் கல்விக் களஞ்சியங்களை ஆசிரியர்கள் படித்து, செயல்படுத்தி, அனுபவமிக்க ஆசிரியர்களின் வாயிலாக நடைமுறைக் கல்வியின் தரத்தை உயர்த்தும் செயல்களைச் செய்ய ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற இந்த டீச்சர் போர்டலின் நோக்கம் தேசிய அறிவியல் கழகம், அஸிம்பிரேம்ஜி பவுண்டேஷன் - ஆகிய இருவரும் இணைந்து நினைத்து உருவான கருத்தாகும். தற்போது, இந்த இணைய தளம் அஸிம்பிரேம்ஜி பவுண்டேஷனால் நிர்வகிக்கப்படுகிறது.