அஸிம்பிரேம்ஜி பவுண்டேஷன்

நேர்மை, சமுத்துவம், மனிதாபிமானம் ஆகிய அனைத்தும் நிரந்தமாக நீடிக்கும் ஒரு சமூதாயத்தை இந்தியாவில் உருவாக்குவதிற்கு உழைப்பதை திடமான இலக்காகக் கொண்டு லாப நோக்கமின்றி செயல்படும் ஒரு நிறுவனம் தான் அஸிம்பிரேம்ஜி பவுண்டேஷன். ஆழமான பெரிய அளவு தொலை நோக்குடன் இந்தியாவில் சமதர்மக் கல்வியையும், தரமான கல்வியையும் ஏற்படுத்த பவுண்டேஷன் பாடுபடுகிறது. அத்துடன், இத்தகைய நோக்கங்களுடன் தொடர்பு கொண்ட முன்னேற்றப் பட வேண்டியவைகளான குழந்தை ஆரோக்கியம், ஊட்டச் சத்து, நிர்வாகம், உயிர்ச் சூழலியல் (Ecology)  ஆகியவைகளும் அடங்கும். இந்த ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய துறைகளின் பிரச்சனைகளைத் தீர்க்க முயலும் அதே நேரத்தில் கல்விதான் பவுண்டேஷனின் மையக் கருத்தாகும் என்பதை அது  நினைவில் வைத்துக் கொண்டுள்ளது.  பவுண்டேஷன் இந்தப் பணிகளைச் சாதிக்க, ஒரு ஒருங்கிணைந்த வழி மூலம், சக்தி வாய்ந்த தீர்வாக தன் பங்கினைச் செய்கிறது. பவுண்டேஷனின் முக்கிய நான்கு கடமைகள் இதோ:

  • திறமையானவர்களை உருவாக்கல் :  தொலை நோக்குப் பார்வை, தகுதி மற்றும் சமூக சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு ஆகிய பண்புகளை தீவிரமாகக் கடைப்பிடிக்கும் மக்களை உருவாக்கல். தற்போதைய திறமையான ஆசிரியர்கள், ஆசிரிய ஆசான்கள், கலவி அதிகாரிகள், தலைவர்கள், முன்னேற்றும் வல்லுனர்கள் ஆகியவர்களின் தகுதிகளை மேலும் வளர்த்தல், புதிய திறமைசாலிகளை உருவாக்கல் ஆகியவைகளும் அதில் அடங்கும்.
  • கல்விக் கருவூலங்களை உருவாக்கல்:  இந்திய சூழ்நிலை, கலாச்சாரம் ஆகியவைகளின் பின்னணியில் கல்வி - முன்னேற்றம் போன்றவைகளில் எதிர்கொள்ள வேண்டிய தடைகளைத் தாண்டி தீர்வுகாணுவதற்கு ஆழமான உள்ளுணர்வுக் கருத்துக்களை எழச்செய்யும் கல்விக் கருவூலங்கள் மற்றும் ஆதாரங்களை உருவாக்குதல். இது கொள்கை - திட்டங்கள் ஆகியவைகளின் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுக்கும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்குகிறது.
  • பல கிளை நிறுவனங்கள்: திறமைகளை தீவிரமாக வளர்த்தல், அறிவை உயர்த்தல், கல்வி மற்றும் அதைச் சார்ந்தவைகளை மேம்படுத்தும் சீர்திருந்தங்களுக்காகப் பாடுபடல் ஆகிய செயல்களை தொடர்ந்து நீடித்து நிலைத்து இருக்கும் அடிப்படையில், நாட்டின் பல பகுதியிலும் பரவலாக கிளைகளைக் கொண்ட நிறுவனங்களை உருவாக்குதல்.
  • சமூக நிர்ப்பந்தம்: வலிமையான நிர்வாக கிளைகள், தொடர் கல்வி, களப் பணி மற்றும் விழுப்புணர்ச்சி ஆகியவைகளின் மூலம், கல்வியில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளைப் பற்றி சமூகங்களும், அதன் அதிகாரிகளும் சிந்திப்பதின் முறையிலே மாற்றங்களைக் கொண்டு வந்து, அதன் மூலம் தரம் - சமதர்மம் ஆகியவைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த சமூக ரீதியான நிர்ப்பந்தத்தை உருவாக்க உதவுதல்.
19861 registered users
7801 resources