வகுப்பறை நிர்வாகம்

வகுப்பறையில் விவாதங்கள்

By editor_ta | அக் 31, 2015

வகுப்பறைகளில் குழந்தைகள் பேச வாய்ப்பளிக்கிறோமா? விவாதங்கள் நடைபெறுகிறதா? அத்தகைய விவாதங்களுக்கு ஆசிரியராகிய நாம் எத்தகைய வகுப்பறைச்சூழலை உருவாக்க வேண்டும்? இங்கு பகிருங்கள்.

அப்துல் கலாமிடமிருந்த கற்றது

By editor_ta | ஜூலை 30, 2015

டாக்டர். ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள், ஆசிரியர்களாகிய நம்மை எவ்வாறு ஈர்த்துள்ளார்? அவர் நம் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? குறிப்பாக, ஆசிரியர் வாழ்வில் நாம் அவரை பின்பற்றக்கூடியவற்றை இங்கே பகிர்ந்துகொள்ளலாமே!

கேள்விகள்

By editor_ta | ஜூன் 10, 2015

கேள்விகளை யார் கேட்பது? ஆசிரியர்களா அல்லது மாணவர்களா? அது சூழலை பொருத்தது அல்லவா. சரி. கேள்விகளுக்கு பதில் எவ்வாறு இருக்க வேண்டும்? பெரியதாகவா? சிரியதாகவா? எழுத்தின் மூலமா அல்லது பேச்சு மூலமா அல்லது நடத்தை மூலமா? என்பதையும் தாண்டிய ஒரு விஷயம் உண்டு. கேள்வி சரியானதாக இருக்கும் போது மட்டும் தான், பதில் முக்கியமானதாகிறது. அத்தகைய சரியான கேள்விகள் உங்களுடைய வகுப்பறையில் யாரேனும் கேட்டாரா? அவ்வாறெனில், அக்கேள்வி என்ன? அதை இங்கு பதிவு செய்யுங்களேன்!

கற்றல்-கற்பித்தல் சுதந்திரம்

By editor_ta | செப் 5, 2014

ஆசிரியர்களாகிய நமக்கு கற்றல்-கற்பித்தலில் சுதந்திரம் உள்ளதா? வேண்டுமா? அவ்வாறு சுதந்திரம் இருந்திருந்தால், எவ்வகையான மாற்றங்களை நாம் கொண்டு வந்துள்ளோம்? எவ்வகையான மாற்றங்களை, எவ்வாறு கொண்டுவரலாம்? சில அனுபவங்களை/கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாமே!

பல விதமான குழந்தைகள்

By editor_ta | மே 27, 2014
ஒரு ஆசிரியராக நான் ப்போது இரண்டு ஆண்டுகளாக இருக்கிறேன். எனது வகுப்பில் சில குழந்தைகள் கூச்சமுற்றும், சிலர் பயந்தசுபாவத்துடனும், சிலர் வாய் ஓயாமல் பேசிக்கொண்டும், சிலர் 

ஆசிரியராக நான் என்ன செய்யலாம்?

By krithika.krishn... | ஆக 13, 2013

எனது பள்ளியில் நிறைய தடைகள் உள்ளது, உதாரணமாக: ஆசிரியர் பற்றாக்குறை; எனது பள்ளையில் 100 மாணவர்களுக்கும் ஒரே ஆசிரியர் தான். ஒரு ஆசிரியராக குறையைக் கூறிக்கொண்டு காலத்தை தள்ளாமல், நான் என்னென்ன செய்தால் குழந்தைகளின் கற்றல் மேம்படும்?  குழந்தைகளைக் குழுக்களாகப் பிறித்தல்(கற்றல்திறன்களுக்கு ஏற்றவாறு). குழுக்களுக்கு ஏற்றவாறு செயல்பாடுகளும்/விளையாட்டுகளும் தருவது; ... இது போன்று உங்களது கருத்துக்களைப் (that should be possible/implementable)பதிவு செய்யுங்கள்...

பள்ளிகளில் மாணவர்களைத் தண்டிக்கும் பழக்கம்

By editor_ta | ஆக 30, 2012

 மாணவர்களைத் தண்டிக்கும் பழக்கத்தை பள்ளிகளிலிருந்து ஒழிக்கலாமா?

 

 

 

மாணவர்களை அடிக்காமல், ஒழுங்கை ஆசிரியர்கள் மாணவர்களிடம் ஏற்படுத்த முடியுமா? தண்டனை வழங்காமல், ஒரு கட்டுப்பாட்டை ஆசிரியர்கள் எப்படிக் கொண்டு வரமுடியும்?

உலகத் தரமான ஆசிரியர் பயிற்சிக்கான பாடங்கள்

By editor_ta | ஆக 30, 2012

ஆசிரியர் பயிற்சிக்கான பாடங்களை உலகக் தரத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க எவைகளை நீங்கள் சேர்க்க விரும்புவீர்கள்?

 

 

 

விவாதப் பொருள் விளக்கம்:

ஆசிரியராக இருக்கும் உங்களது அனுபவங்களையும், தகவல் மற்றும் தொழில் நுட்பங்களில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களையும் மனத்தில் கொண்டு, ஆசிரியர் பயிற்சிப் பாடத் திட்டங்களை இன்னும் ஒரு முழுமையான மற்றும் சக்திவாய்ந்ததாக உருவாக்குவதற்கு அவைகளில் நீங்கள் சேர்க்க பரித்துரைக்கும் பாடங்கள் எவை?

 

மாணவர்களின் கல்வித் தேவைகளை ஆசிரியர் பூர்த்தி செய்தல்.

By editor_ta | ஆக 30, 2012

மாணவர்களின் கல்வித் தேவைகளை ஆசிரியர் எவ்வாறு பூர்த்தி செய்கிறார்?

 

 

 

விவாதப் பொருள் விளக்கம்:

ஒரு ஆசிரியர் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களின் கற்கும் தேவைகளைப் பூர்த்தி செய்வது மிகவும் அவசியமாகும். வகுப்பில் உள்ள மாணவர்கள் வேறுபட்ட திறமைகள், பலதரப்பட்ட பின்னணிகள் ஆகியவைகளுடன் இருக்கும் நிலையில், ஆசிரியர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் அறிவுரைகள் யாவை?

17934 registered users
6760 resources