கல்வியின் நோக்கங்கள்

வகுப்பறையில் விவாதங்கள்

By editor_ta | அக் 31, 2015

வகுப்பறைகளில் குழந்தைகள் பேச வாய்ப்பளிக்கிறோமா? விவாதங்கள் நடைபெறுகிறதா? அத்தகைய விவாதங்களுக்கு ஆசிரியராகிய நாம் எத்தகைய வகுப்பறைச்சூழலை உருவாக்க வேண்டும்? இங்கு பகிருங்கள்.

அப்துல் கலாமிடமிருந்த கற்றது

By editor_ta | ஜூலை 30, 2015

டாக்டர். ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள், ஆசிரியர்களாகிய நம்மை எவ்வாறு ஈர்த்துள்ளார்? அவர் நம் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? குறிப்பாக, ஆசிரியர் வாழ்வில் நாம் அவரை பின்பற்றக்கூடியவற்றை இங்கே பகிர்ந்துகொள்ளலாமே!

மதிப்பிடுதல்

By editor_ta | ஏப் 9, 2015

தேர்வுகள் என்பது எதற்காக? யாருக்காக? குழந்தைகள் கற்கும் திறனை மதிப்பிடுவதற்காகவா? அல்லது ஆசிரியர்களாகிய நாம் நமது கற்பிக்கும் முறையை மாற்றிக்கொள்ளவா? தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவு செய்யுங்கள் .

வீட்டுப்பாடம்

By editor_ta | டிச 19, 2014

வீட்டுப்பாடம் என்றால் என்ன? வீட்டுப்பாடத்தின் தேவை என்ன? வீட்டுப்பாடம் எவ்வாறெல்லாம் இருக்கலாம்? தங்களுடைய அனுபவத்திலிருந்து, ஒரு சில கருத்துக்களை இங்கு பகிர்ந்துகொள்ளவும்.

கற்றல்-கற்பித்தல் சுதந்திரம்

By editor_ta | செப் 5, 2014

ஆசிரியர்களாகிய நமக்கு கற்றல்-கற்பித்தலில் சுதந்திரம் உள்ளதா? வேண்டுமா? அவ்வாறு சுதந்திரம் இருந்திருந்தால், எவ்வகையான மாற்றங்களை நாம் கொண்டு வந்துள்ளோம்? எவ்வகையான மாற்றங்களை, எவ்வாறு கொண்டுவரலாம்? சில அனுபவங்களை/கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாமே!

சமூக அறிவியலைக் கற்றல்

By editor_ta | ஏப் 5, 2014

பள்ளியில் சமூக அறிவியலை எவ்வாறெல்லாம் கற்கலாம்? உதாரணமாக, எனது பள்ளி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள விழைகிறேன். எனது பள்ளி உயி்ர் நிலைப்பள்ளி. அதில் 600 க்கும் மேற்பட்ட மாணவமணிகள் இருந்தோம். ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சிலர்(விருப்பபட்டோர்) தேரத்தல் வேட்பாளர்களாக நின்றனர். காலை நேர கூட்டத்தின் பொழுது ஒவ்வொருவரும் தனது வாக்குறுதிகளை மற்ற மாணவர்களிடம்(வாக்காளர்களிடம்) முன்வைப்பர். பின்பு, உணவு இடைவேளையின் போது ஒவ்வொரு வேட்பாளரும் தனது நணபர்களுடன் ஒவ்வொரு வகுப்பாக சென்று  பிரச்சாரம் செய்வர். மறுநாள் மதியம் வாக்காளர்கள் தத்தமது வகுப்பறையில் வாக்களிப்பர்.(சிறார்களை கைத்தூக்கி வாக்களிப்பர்.

18808 registered users
7333 resources