படங்கள் மூலம் சரித்திரப் பாடங்கள்

Resource Info

Basic Information

கடந்த கால நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டுவதற்குத் தகுந்த ஜன்னலாக உதவும் சக்திவாய்ந்த கற்பிக்கும்-கற்கும் கருவிகளாகப் பயன்படுபவைகள் தான் கண்ணால் பார்க்கப்படும் உருவப் படங்களாகும். அத்தகைய படங்களும்  மற்றும் அது போன்ற இதரவகையான ஆதாரங்களும் கடந்த காலத்தை இணைக்கும் சாதனங்களாகி ஒரு நேரடியான அனுபவங்களை அளிக்க வல்லவைகளாகத் திகழ்கின்றன. ஆகையால், படங்களைச் சரித்திரக் கருவூலங்களாகக் கருதி,  குழந்தைகள் அந்தப்  படங்களைப் பார்த்து அறியும் திறமைகளை ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பது அவசியமாகிறது.  ஆசிரியர்களின் உதவியுடனோ அல்லது அவர்கள் உதவி இல்லாமலோ, மாணவர்களே படங்களைக் கூர்ந்து நோக்கி, ஒரு சரித்திர முடிவிற்கு அவர்களாகவே வரும்படிச் செய்யவேண்டும். இப்படி,   ஆசிரியர்கள் நேரடியாக பதில்களைத் தெரியப்படுத்தாமல்,  சரித்திரப்பாடங்களைக் கற்பிப்பது மிகவும் சிறப்பாக அமையும். கண்களால் பார்க்கப் படும் புராதனச் சின்னங்கள் மூலம் கற்பிக்கும் போது சரித்திர ஆசிரியர்களின் திறமைகள் நன்கு வெளிப்படும். சரித்திரத் தகவல்களை பகுத்து ஆய்வு செய்தல், காரணங்கள் அல்லது ஆதாரங்கள் ஆகியவைகளின் அடிப்படையில் தகவல்களைப் பாகுபடித்தி அனுமானித்தல், வேறு தகுந்த கருத்துக்களை வெளிப்படுத்துதல் ஆகியவைகளின் மூலம் மாணவர்கள் தங்களது சிந்திக்கும் திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள்.  இந்தச் சிந்திக்கும் திறமைகள் தான் கற்பவர்கள் என்ற  மாணவர்களின் நிலையின் கற்கும் சக்தியினை அதிகரிக்கும்.

Lesson plan Details

Duration: 
02 hours 15 mins
முன்னுரை: 

Objective: 

நோக்கங்கள்:

மாணவர்கள் கீழ்க்கணடவைகளைச் செய்ய முடியும்:

 • படங்களைப் பார்த்து, வேட்டையாடி ஜீவிப்பவர்களின் வாழ்வைப்பற்றி ஊகிக்கவும்.
 • நாடோடி வேடுவர்கள் - நிரந்தரக் குடியிருப்புகளில் வாழும் விவசாயிகள் ஆகியவர்களின் படங்களை ஒப்பிடவும்.
 • நாடோடி வேடுவர்கள் - நிரந்தரக் குடியிருப்புகளின் வாழும் விவசாயிகள் ஆகியவர்களின் வாழ்க்கையினை ஒப்பிட்டுப் பார்க்கவும்.
 • புதைபொருள் இடுபாடுகளின் படங்களின் அடிப்படையில் இந்து சமவெளி நாகரிகம் பற்றி அனுமானிக்கவும்.
 • இந்த அனுமானிக்களை எதிர்த்தும், கேள்வி கேட்டும், ஆதரித்தும் விவாதிக்கவும்.

Steps: 

ஆதார ஆவணங்கள்:

 • கருவூலம் 1 - பவர்பாயிண்ட் காட்சி - படம் பார்த்து, ஒப்பு நோக்கிக் கற்றல்
 • கருவூலம் 2 - பவர்பாயிண்ட் காட்சி - இந்து சமயவெளி நாகரிகம்.

பயிற்சி 1 - படம் பார்த்து, ஒப்பு நோக்கிக் கற்றல்

பயிற்சி வழி முறைகள்:

பவர்பாயிண்ட் காட்சியின் 1 முதல் 6 வரை உள்ள ஸ்லைடுகளை - அதாவது கருவூலம் 1 - படம் பார்த்து ஒப்பு நோக்கிக் கற்றல் என்ற காட்சிப் படங்களை மாணவர்களுக்குக் காண்பிக்கவும்.

மாணவர்களை காண்பிக்க்கப் படும் படங்களை உன்னிப்பாக்க் கவனிக்கச் சொல்லவும். அந்தப் படங்களைப் பார்க்கும் பொழுது, அவர்கள் மனதில் எழும் கேள்விகளை பட்டியலிடச் சொல்லவும். வகுப்பில் உள்ள மாணவர்களிடம் அந்தக் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளச் சொல்லவும்.

மாணவர்கள் கீழ்க்கண்ட கேள்விகள் போல் கேட்பதற்கு அவர்களைத் தூண்டவும்:

இரண்டு காலங்களின் சரித்திர நிகழ்வுகளின் ஒப்பிட்டு ஆராயும் வாய்ப்பை நாம் மாணவர்களுக்கு அளிக்கும் போது, அவர்கள் தங்களின் பகுத்து ஆராயும் திறமைகளை மேம்படுத்துகிறார்கள்.

 • உணவை மக்கள் எப்படிச் சேகரிக்கிறார்கள் ?
 • அவர்கள் என்ன வகையான ஆடைகளை அணிதுள்ளார்கள்?
 • அவர்கள் பருத்தி அல்லது கம்பளி ஆடைகளை அணிவதற்கான காரணங்கள் யாவை?
 • அவர்கள் பயன்படுத்தும் கருவிகள் என்ன ?
 • இக்காலத்தில் அப்படிப்பட்ட கருவிகளை நாம் பயன்படுத்துகிறோமா?
 • அந்தக் கருவிகள் எந்த வகையான பொருள்களால் உருவாக்கப்பட்டவைகள் என்று நீங்கள் ஊகிக்கிறீர்கள்?
 • நவீன கருவிகள் அந்தப் பழங்காலக் கருவிகளிலிருந்து எந்த வகையிலும் மாறுபட்டுள்ளனவா?
 • படத்தில் காணப்படும் மக்கள் வேறு என்ன வேலைகள் செய்வதைப் பார்க்கிறீர்கள் ?
 • இந்தப் படங்களிலிருந்து இங்குள்ள மக்களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள முடிவைப் பற்றிய  சில விவரங்கள் யாவை ?

ஆசிரியருக்கான குறிப்பு: படங்களை மிகவும் கவனமாகப் பார்த்து சரித்திரத்தை மீண்டும் உயிர்ப்பிக்கலாம். சரித்திர வகுப்புகளில் ஆசிரியர் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பினைக் கொடுப்பது அவசியமாகும்.

பயிற்சி 2: படங்களை ஆராய்ந்து சரித்திர காலங்களை ஒப்பிடல் (கால நேரம்: 30 நிமிடங்கள்)

பயிற்சி தொடங்க ஆயத்தம் செய்தல்:

கருவூலம் 1 என்ற பவர்பயிண்ட் காட்சியில் 7 மற்றும் 8 ஸ்லைடுகளில் அமைக்கப்பட்டுள்ள “படம் பார்த்து, ஒப்பிட்டுக் கற்றல்” என்பதைக் காண்பிக்கவும்.

பயிற்சியை ஆரம்பித்தல்:

 • நிரந்தர குடியிருப்பு விவசாயிகள் மற்றும் வேட்டையாடிப் பிழைக்கும் மக்கள் ஆகிய இருவர்களின் படங்களைப் பார்த்து, அவர்கள் வாழ்ந்த காலத்தின் வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கவும்.  நிரந்தமாக ஒரே இடத்தில் மனிதர்கள் வாழ்வதால்  ஏற்படும் தாக்கத்தைப் பற்றி சிந்திக்கவும்.  தீ, விவசாயம், உருளும் சக்கரம் ஆகியவைகளைக் கண்டுபிடிக்கப்பட்டதால் அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய மாறுதல்களைப் பற்றிச் சிந்திக்கவும்.
 • கடந்த கால கிராமப் படம் உள்ள 10-வது ஸ்லைடைக் காண்பிக்கவும். இந்த பவர் பாயிண்ட் காட்சியைக் காண்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், கீழ்க்கண்ட ஸ்லைடுகளின் அச்சடித்த படங்களை மாணவர்களுக்குக் காட்டவும்: ஸ்லைடுகளின் எண்கள்: 10, 5 & 6. கிராமங்களில் காணப்படும் மாற்றங்கள் என்ன என்பதைப் பற்றி மாணவர்களிடம் கேட்கவும்.
 • ‘இன்றைய கிராமங்கள் - படங்களில் காணப்படும் கிராமங்களிலிருந்து எவ்வாறு மாறுபட்டுள்ளனவாக நீங்கள் கருதுகிறீர்கள்?’  என்று மாணவர்களைக் கேட்கவும்.
 • இப்படிப்பட்ட ஒரு கிராமப் படம் ஒன்றை மாணவர்கள் வரையும் படிச் சொல்லவும். அந்தப் படத்தில் இன்று கிராமங்களில் காணப்படும் சில பொருட்கள் ஒரு கால கட்டம் கடந்து அந்தப்  பொருட்களில் காணப்படும் மாறுபாடுகளை விளக்கிக் காட்டும் வகையில் படத்தை அவர்கள் வரைந்து காட்ட வேண்டும்.

ஆசிரியருக்கான குறிப்பு: கடந்த காலப் பொருட்களை தற்காலத்தில் மாணவர்கள் காணும் பொருடகளுடன் கூடிய மட்டும் தொடர்பு படுத்தி பார்க்கச் செய்வது ஒரு அவசியமான தொன்றாகும்.

பயிற்சி 3: ஒரு சரித்திர ஆசிரியராக உருவாகுதல் (கால நேரம்: 1 மணி 30 நிமிடங்கள்)

பயிற்சி தொடங்க ஆயத்தம் செய்தல்:

மாணவர்களை 6 குழுக்களாகப் பிரிக்கவும். கருவூலம் 2 - இந்து சமவெளி நாகரிகம் என்ற பவர்பாயிண்ட் காட்சி விளக்கத்தைப் போட்டுக் காண்பிக்கவும்.  காட்சி விளக்கத்தைப் போட்டுக் காண்பிக்க முடியாவிடில், இந்தக் காட்சி விளக்கத்தினையும்,  படங்களையும் பிரதி எடுத்து மாணவர்களுக்குக் காண்பிக்கவும்.

பயிற்சியை ஆரம்பித்தல்:

 • இந்து சமவெளி நாகரிகத்தின் படங்களை மாணவர்கள் நன்கு கவனிக்கச் சொல்லவும். அந்தக் காலத்தில் அவர்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றிய ஒரு முடிவிற்கு வரவும். உதாரணம்: இந்து சமவெளி மக்களுக்கு எழுதத் தெரியும். மாணவர்களின் முடிவுகள் அனைத்தும் அறிவுபூர்வமானதாகவோ அல்லது தகுந்த சான்றுகளின் அடிப்படையிலோ இருப்பது அவசியமாகும். மாணவர்களை அவர்களது முடிவுகளை குறித்துக் கொள்ளும் படிச் சொல்லவும்.
 • எல்லாக் குழுவினர்களும் தங்கள் பயிற்சிகளைப் முடித்தவுடன், அவர்களின் முடிவுகளை மற்றவர்களுடன் ஒவ்வொரு குழுவாகப் பகிர்ந்து கொள்ளச் சொல்லுங்கள்.  ஒரு குழுவினர் தங்கள் கருத்துக்களைச் சொல்லும் போது, மற்ற குழுவினர்களைக் கேள்வி கேட்கும் படி ஊக்கிவிக்கவும். குழுவினர்களின் கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லாவிடில், மற்ற குழுவினர் அவைகளை மறுதளிக்க வேண்டும்.  கருத்தினைத் தெரிவிக்கும் குழுவோ,  தங்கள் கருத்தினை தகுந்த ஆதாரங்களுடன் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளனர்.
 • உண்மைக்குப் புறம்பான ஊகங்களை வைத்து கருத்துக்களை சொல்லும் நிலையைத் தவிர்க்க வேண்டிய அவசியத்தை பங்குகொள்ளும் மாணவர்களின் கவனத்திற்கு ஆசிரியர்கள் கொண்டு வரவேண்டும். ஊகங்களை கேள்விகள் மூலம் விளக்கம் கேட்டல் மற்றும் கற்பனையை உண்மையிலிருந்து பிரித்து கூடிய மட்டும் அறிதல் - இவைகள்அனைத்தும் எவ்வளவு முக்கியமானவைகள் என்பதை மாணவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். என்றாலும், இவைகள் எல்லாம் எப்போதும் செய்ய முடியும் காரியமில்லை என்பதையும் ஆசிரியர்கள் மனத்தில் கொள்ள வேண்டும்.

Assessment: 

மதிப்பிடல்:

இந்தப் பயிற்சிகள் மூலம் தொடர்ச்சியானதும், முழுமையான கீழ்க் கண்ட மதிப்பிடல் ஏற்படுகிறது:

 • வேடுவ மக்களின் வாழ்க்கையினைப் பற்றிய கருத்துக்களை, படங்களைப் பார்த்து அறிதல்.
 • வேடுவ மக்கள் மற்றும் நிரந்த குடியிருப்பு விவசாயிகள் ஆகியவர்களின் படங்களை ஒப்பிட்டுப் பார்த்து, அவர்களைப் பற்றிய முழுமையான ஆய்வு மேற்கொள்ளல்.
 • புதைபொருட் சான்றுகளின் படங்களின் அடிப்படையில் இந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றிய விவரங்களை ஊகித்து அறிதல்.
Personal Reflection: 

நன்றி நவிலல்:

முதல் இரண்டு பயிற்சிகள் ஏகலைவா வெளியிட்ட சமூக அறிவியல் புத்தகத்திலிருந்து தழுவி எழுதப்பட்டுள்ளது. இங்கு பிரசுரமான படங்கள் ஏகலைவாவின் வெளியீடான சமூக அறிவியல் - வகுப்பு 6 பாட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவைகள்.

பின் இணைப்புகள்:                                              

 • கருவூலம் 1 - பவர்பாயிண்ட் காட்சி - படம் பார்த்து, ஒப்பு நோக்கிக் கற்றல்
 • கருவூலம் 2 - பவர்பாயிண்ட் காட்சி - இந்து சமயவெளி

18490 registered users
7234 resources