உலகிலுள்ள இயற்கைப் பிரதேசங்கள்

Resource Info

Basic Information

இந்த பாடத்திட்டத்தின் மூலம், ஆசிரியரால் இயற்கைப் பிரதேசங்கள் உருவாவதற்கு காரணமான காரணிகளை மாணவர்களுக்குப் புரிய வைக்க முடியும்.

Lesson plan Details

Duration: 
04 hours 00 mins
முன்னுரை: 

பல சமயங்களில் ஆசிரியர்களாகிய நாம் பெரும்பாலும் ‘இயற்கைப் பிரதேசங்களை’ பற்றி மட்டுமே விவரிக்கிறோம், அது உருவானதன் அடிப்படையைப் பற்றிப் பல சமயங்களில் கலந்துரையாடுவதில்லை. ஆசிரியராக வேலை செய்பவர் இயற்கை, விலங்குகள் மற்றும் மனித வாழ்க்கை ஆகியவற்றில் இயற்கைப் பிரதேசங்களின் தொகுப்பு, எண்ணக்கரு மற்றும் தாக்கத்தைத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்த பாடத்திட்டத்தின் மூலம், ஆசிரியரால் இயற்கைப் பிரதேசங்கள் உருவாவதற்கு காரணமான காரணிகளை மாணவர்களுக்கு  புரிய வைக்க முடியும்.

Objective: 
 1. மாணவர்கள் ‘இயற்கைப் பிரதேசம்’ என்பதன் அர்த்தத்தையும், இயற்கைப் பிரதேசங்கள் உருவாவதற்கான அடிப்படைக் காரணிகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.
 2. அவர்களுக்குப் பல்வேறு இயற்கைப் பிரதேசங்களை அடையாளம் காணவும் அவற்றின் சிறப்பியல்புகளைப் பட்டியலிடவும் தெரிய வேண்டும்.
 3. அவர்கள் இயற்கைத் தாவர வளர்ச்சி, மற்றும் விலங்குகளை வைத்து வானிலையின் தாக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
 4. அவர்களுக்கு உலக வரைபடத்தில் அனைத்து இயற்கைப் பிரதேசங்களின் இடத்தையும் குறிக்கத் தெரிய வேண்டும்.
 5. அவர்களுக்குப் பல்வேறு இயற்கைப் பிரதேசங்களில் அமைந்துள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் மற்றும் பழங்குடியினர்களை அடையாளம் காணத் தெரிய வேண்டும்.
 6. இயற்கைப் பிரதேசங்களின் அமைவில் சூரியனின் நிலைப்பாடு, காற்றின் நிலை, அட்சரேகைகள், மற்றும் நிலம், தண்ணீரின் பகிர்மானம் ஆகியவற்றுக்கிடையே உள்ள தொடர்பை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Steps: 

 

ஆசிரியரின் ஆயத்தம்:

இதன் எண்ணக்கரு/தலைப்பு ‘இயற்கைப் பிரதேசம்’ என்பதாகும். இதன் மூலம் மேம்படுத்தப்படும் திறமைகள் - கவனித்தல், பகுத்தறிதல், பகுப்பாய்வு செய்து யோசித்தல் மற்றும் வரைபட செயல்பாடு ஆகியவைகளாகும்.

உங்களுக்கு நீங்களே இந்தக் கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்:

·         ’இயற்கைப் பிரதேசங்களின் உருவாக்கத்தில் முக்கியக் காரணிகள் யாவை?’

·         ‘இந்தக் காரணிகள் எப்படி இணைந்து இயற்கைப் பிரதேசங்களை உருவாக்குகின்றன?’

·         ‘இவை எந்தப் பிரதேசங்கள்?’, ‘இவை எங்கு அமைந்துள்ளன?’

நடவடிக்கை 1: ‘இயற்கைப் பிரதேசங்களின்’ எண்ணக்கரு பற்றிய அறிமுகம்

·         பறவைகள்/விலங்குகள், இயற்கைத் தாவர வளர்ச்சி மற்றும் பழங்குடியினர்கள் ஆகியவற்றின் பல படங்களைக் காட்டி, மாணவர்களிடம் இவற்றைத் தொகுக்கச் சொல்லுங்கள். (பயிற்சிக் கருவூலம் 1)

 • இது போன்று தொகுப்பதற்கான உள்ளார்ந்த காரணம் பற்றிக் கலந்துரையாடுமாறு மாணவர்களிடம்     கேளுங்கள்.
 • இந்த வேலை முடிந்த உடன், மாணவர்களிடம் கேள்விகளைக் கேட்டு ஆர்வத்தை ஏற்படுத்துங்கள்.

பின்வருபவை போன்ற வழிகாட்டும் கேள்விகளைக் கேட்பதிலிருந்து துவங்குங்கள்:

 • ஒரு குரங்கு எங்கு வசிக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
 • எந்த வகையான காட்டிற்குப் பலத்த மழைப்பொழிவும் சூரியஒளியும் தேவை?
 • ஏன் சில இடங்கள் பெரிய இலைகளைக் கொண்ட மரங்கள் இருக்கும் அடர்த்தியான காடுகளையும், ஊசி போன்ற இலைகள் இருக்கும் சில காடுகளையும் கொண்டுள்ளன?

செயல்பாட்டிற்கு நேரம் ஒதுக்குங்கள். இந்தச் செயல்பாடு முடிந்ததும், அந்தத் தொகுப்புக்களைச் சேகரித்து, வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பாடத்தின் இறுதியில் மாணவர்களும் நீங்களும் அதனைப் பார்க்கலாம். இந்தச் செயல்பாடு வானிலை, காடுகள், விலங்குகள் மற்றும் மனித வாழ்க்கை போன்ற பல்வேறு காரணிகளுக்கிடையே உள்ள தொடர்பை விவரிக்கும்.

 

நடவடிக்கை 2: மாதிரி உருவாக்கம்

இயற்கைப் பிரதேசங்களின் எண்ணக்கருவை குழந்தைகளுக்குப் புரியவைக்க இதுவும் ஒரு வழி. நீங்கள் பயிற்சிக் கருவூலம் 4ல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மாதிரியை உருவாக்க மாணவர்களுக்கு உதவலாம்.

சூரியன், காற்றின் நிலை, அட்சரேகைகள், மற்றும் நிலம், தண்ணீரின் பகிர்மானம் ஆகியவற்றின் பங்கை விவரியுங்கள்.

மாணவர்கள் பின்வருபவற்றை புரிந்துக் கொள்ள வேண்டும்:

1.    கடல்/சமுத்திரத்திலிருந்து வீசும் காற்று ஈரப்பதத்தை கொண்டுவரும், இதனால் மழைபொழியும்.

2.    மிதவெப்ப மண்டலத்தில் (Temperate zone) மேற்கிலிருந்து மட்டும் வீசும் காற்று மேற்குத் திசைக் காற்று எனப்படும். எனவே மழைப்பொழிவு பூமியின் நிலநடுக்கோட்டின் 30 முதல் 60 டிகிரி வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் இருக்கும்  மேற்குக் கரையோர  கண்டங்களின் மட்டும் ஏற்படும்.

3.    வெப்பமண்டலத்தில் கிழக்கிலிருந்து வீசும் காற்று வட கிழக்கு தடக்காற்று மற்றும் தென்கிழக்கு தடக்காற்று என்று முறையே பூமியின் வட திசை மற்றும் தென் திசை அரைக்கோளப் பாகங்களில் அழைக்கப்படுகின்றன.

4.    இந்த காற்றின் காரணமாக, மழைப்பொழிவு நிலநடுக்கோட்டின் 10 முதல் 30 டிகிரி வடக்கு மற்றும் தெற்கு திசைகளுக்கிடையே இருக்கும் கண்டங்களின் கிழக்குப் பகுதிகளிலும், நில நடுக்கோட்டின் 30 முதல் 60 டிகிரி வடக்கு மற்றும் தெற்கு திசைக்கிடையே உள்ள கண்டங்களின் மேற்குப் பகுதியிலும் மட்டும் ஏற்படும்.

5.    உயர் வெப்பநிலை வான் வெளிக் காற்றைச் சூடாக்கி உயரச் செய்யும். வான் பகுதியிலுள்ள ஈரப்பதம் வீழ்படிவிற்கு (precipitation) வழிவகுக்கும். இதன் காரணமாக, நிலநடுக்கோட்டின் 0 முதல் 10 டிகிரி வடக்கு மற்றும் தெற்குப் பகுதிக்கு இடையேயான பிரதேசங்களில் அதிக மழை தினமும் பெய்யும்.

நடவடிக்கை 3

ஏதேனும் தவறான கருத்துக்கள் இருந்தால் அதனைத் திருத்த மாணவர்களுடன் இந்த விஷயங்களைக் கலந்துரையாடி (சூரியனின் பங்கு, காற்றின் நிலை, அட்சரேகைகள், மற்றும் நிலம்-தண்ணீரின் பகிர்மானம்), இயற்கைப் பிரதேசங்கள் பற்றி அவர்கள் கற்றுக் கொண்டதை வலியுறுத்துங்கள். வானிலை, தாவர வளர்ச்சி, விலங்குகள், ஏதாவது குறிப்பிட்ட இயற்கைப் பிரதேசத்தில் வசிக்கும் பூர்வீக மக்கள் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்பை அடையாளம் காண்பது குறித்து அவர்கள் புதிதாகப் பெற்றிருக்கும் திறனைப் பயிற்சி செய்கையில் அவர்களுக்கு வழிகாட்டுங்கள்.

நீங்கள் பின்வருபவற்றை மாணவர்களைச் செய்யச் சொல்லவும்:

 • வரைபடத்தில் பல்வேறு இயற்கைப் பிரதேசங்களை குறிக்கச் சொல்லுங்கள்
 • உலகின் இயற்கைப் பிரதேசங்களை படம் மூலம் விளக்கத் தாவர வளர்ச்சி, விலங்குகள், பழங்குடியினர்கள், மனித செயல்பாடுகள் ஆகியவற்றின் படங்களை வரைபடங்களில் வரைய/ஒட்ட சொல்லுங்கள்.
 • ஓவியங்கள், வண்ண ஒட்டுப் படங்கள், செயற்திட்டங்கள் ஆகியவைகளை உருவாக்கச் சொல்லுங்கள் அல்லது அவர்களுக்குப் பிடித்த இயற்கைப் பிரதேசம் பற்றி எழுதச் சொல்லுங்கள்.

நீங்கள் பயிற்சிக் கருவூலம் 2ல் கொடுக்கப்பட்டுள்ளபடி கலந்துரையாடல்களைத் துவங்கலாம், புதிர் போட்டியை நடத்தலாம் அல்லது கேள்விகளைக் கேட்கலாம்.

 

இது போன்ற கேள்விகளை கேளுங்கள்: நமக்கு குளிர்காலத்தில் ஏன் குளிர்கிறது? குளிர் நாடுகளில் உள்ள விலங்குகள் ஏன் அடர்த்தியான முடிகளைக் கொண்டுள்ளன?

ஏன் சில மரங்கள் வறண்ட பருவத்தில் இலைகளை உதிர்க்கின்றன? பாலைவனங்களில் வளரும் தாவரங்களுக்கு இலைகள் இருக்குமா? ஏன் இருக்காது?

உயர்ந்த மலைகளில் உள்ள மரங்கள் ஏன் கூம்பு வடிவத்தில் உள்ளன?

 

      

          

திறனாய்வு: பூமியில் பல்வேறு இயற்கைப் பிரதேசங்களில் ஏற்படும் நிகழ்வுகள் பற்றிய எண்ணக்கரு சில மாணவர்களுக்குப் புரியவில்லை என்றால், பருவத்திற்குப் பருவம் உண்டாகும் மாற்றங்களின் தன்மைகளை ஒப்பிடுவதன் மூலம் நீங்கள் இதனை விவரிக்கலாம்.

உதாரணத்திற்கு, பல்வேறு பருவகாலங்களில் நாம் எப்படி வேறு வேறாக உடையணிகிறோம், அல்லது பல்வேறு பருவகாலங்களில் மரங்கள் பார்ப்பதற்கு எப்படி இருக்கின்றன என்பதை பற்றி கூறலாம். பிறகு பயிர்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனித வாழ்க்கையில் வானிலையின் தாக்கங்கள் பற்றிய கருத்தை அறிமுகம் செய்யுங்கள்.

 

Assessment: 

மதிப்பீடு:

மாணவர்கள் எந்தளவிற்குப் புரிந்துக் கொண்டுள்ளனர் என்பதைப் பின்வருபவை மூலம் நீங்கள் மதிப்பிடலாம்:

 • அவர்களிடம் உலக வரைபடத்தில் ‘இயற்கைப் பிரதேசங்களை’ வரையச் சொல்லலாம் (ஆக்கப்பூர்வமான மதிப்பீட்டிற்கு குழுக்களாகச் செய்யப்பட வேண்டும்)
 • இயற்கைப் பிரதேசங்களின் சிறப்பியல்புகளை அடையாளம் காண்பதன் அடிப்படையில் அவர்களுக்கு வீட்டுப்பாடத்தை அளிக்கலாம் (பயிற்சிக் கருவூலம் 3-செய்முறைத் தாள்)
Personal Reflection: 

தனிப்பட்ட சொந்தக் கருத்துக்கள்:

நீங்கள் இந்தப் பாடத்தை மற்ற பாடங்களுடனும் தொடர்புப்படுத்தலாம்.

 1. உயிரியல் வகுப்பில், பாலைவனங்களில் உள்ள வறட்சித் தாவரங்கள், காற்றுப் புகும் வேர்கள் கொண்ட  சதுப்பு நிலக்காட்டுச் செடிகள், மழைக்காடுகளில் படரும் கொடிகள் போன்ற தாவர இனங்களுடன் ஒப்பிடலாம்.
 2. சுற்றுச் சூழல் அறிவியல் வகுப்பில், இயற்கை வாழிடம் மற்றும் சூழலியல் போன்ற எண்ணக்கருக்களுடன் இந்தப் பாடத்தைத் தொடர்புப்படுத்தலாம்.
 3. கட்டுரை எழுதலாம்.
18473 registered users
7227 resources