வெள்ளி இடை நகர்வு 6-ஆம் நாள் ஜூன் 2012

 

 

ஒரு வித்தியாசமான சூரிய கிரகணம் வரும் ஜூன் 6 – 2012 அன்று தோன்ற இருக்கின்றது. வெள்ளிக் கோள் மிகச் சரியாக நமக்கும் சூரியனுக்கும் இடையே வருகின்றது.

பல கடுமையான ஆராய்ச்சிகளின் மூலம் நம் அருவில் உள்ள நட்சத்திரங்களைச் சுற்றி 763-க்கும் மேற்பட்ட கோள்கள் சுற்றி வருகின்றன என கண்டுபிடித்துள்ளோம்.

இவற்றில் 230-க்கும் மேற்பட்டவை இந்த இடை நகர்வு முறையின் மூலமே கண்டுபிடிக்கப் பட்டன. இவற்றில் ஏதேனும் ஒரு கோள் அதன் நட்சத்திரத்திற்கும் பூமிக்கும் இடையில் வரும் போது ஒரு சில மணி நேரங்களுக்கு நட்சத்திரலிருந்து வரும் ஒளி சிறிதளவு குறையும் – [தோராயமாக 1 %] – நட்சத்திரத்திலிருந்து வரும் முழு ஒளியை அளவிட மிக மிக அதி நுட்பமான செயல்திறனுள்ள முறை தேவைப்படுகிறது. வெள்ளி இடை நகர்வை ஆராய்ச்சி செய்வதன் மூலம் இந்த அளவீட்டு முறைய மேலும் துரிதப்படுத்தலாம் என வானவியலாளர்கள் நம்புகின்றனர். ஜுன் 6-ம் தேதி அவர்கள் சூரியனிலிருந்து வரும் ஒளியை கவனமாக அளவிடுவார்கள்.

அடுத்த இடை நகர்வு இன்றிலிருந்து 105 வருடங்கள் சென்றபிறகே மீண்டும் நிகழும் என்பதை அறியவும்.

 

19292 registered users
7708 resources