தமிழ் மரபு - ஆக்கம்: பொன். முத்துக்குமாரன்

தவறுகளின்றித் தமிழை எழுதுவதற்குரிய வழிகாட்டி என்ற உத்தரவாதம் நூலின் முகப்பிலேயே பொறிக்கப்பட்டுள்ளது. இது உயர் வகுப்புக்கான மொழி நூலாகும்.

இந்த நூலின் முன்னுரையில் ஆசிரிய்ர் பொன். முத்துக்குமாரன் தமது நோக்கம் பற்றி இப்படிக் கூறுகிறார்: "ஆங்கிலம், வடமொழி போன்ற பிற மொழிகளின் சேர்க்கையினாலே, காலத்துக் காலம் அம்மொழிச் சொற்கள் பல தமிழிற் கலக்கலாயின. அச் சொற்களைத் தமிழ் மரபு தழுவி வழங்குதலே தக்கதாம். அவ்வாறின்றி வரை துறையில்லாது பல மொழிகளையும் கலந்து வழங்குவது அம்மொழிகள் அனைத்தையுமே இகழுவதாக முடியும். அன்றியும், உள்ள மொழி அழிந்து புது மொழியொன்று தோன்றுதற்கும் இடமாய் விடும். இம்முறையிலேயே தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகள் தோன்றித் தமிழினம் சுருங்க நேர்ந்து விட்டது."

இந்த நூலில் சொல் மரபு, சொற்றோடர் மரபு, வாக்கிய மரபு, கட்டுரை மரபு என நான்கு அத்தியாயங்கள் இருக்கின்றன.

இந்த மின் நூல் தமிழ் க்யூப் மின் தளத்திலிருந்து வெளியிடப்படதாகும்.

 

Download Document: tamil_rules.pdf
18100 registered users
6936 resources