சேவாகிராமத்திலிருந்து ஷோத்கிராம் வரை

பொருளடக்கம்:

மகாராஷ்டிரா மாநிலத்தின் மிகவும் பிற்படுத்தப் பட்ட ஆதீவாசிகளின் இருப்பிடமான கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள ஷோத்கிரராமில் கடந்த 20 ஆண்டுகளாக ஆதிவாசிகளின் உடல் நலம், பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியம், மக்களின் விழிப்புணர்வு ஆகிய பணிகளை திரு. அபய் பங் மற்றும் அவரது துணைவியார் திருமதி. ராணி பங் தம்பதிகள் ஆற்றி வருகிறார்கள்.

திரு.அபய் பங்க காந்திஜியின் சேவா கிராமத்தில் பிறந்தவர். ஏனனென்றால் அவரது தந்தை தாகூர்தாஸ் பங் - சிறந்த பொருளாதார வல்லுனராக இருந்து, காந்தீய வழியில் பணியாற்றியவர். அவரது தாயும் குருஜி ரவீந்திர நாத் - காந்திஜி மூலம் நிறுவப்பட்ட "ஆதாரக் கல்வி" பள்ளியில் தலைமையாசிரியையாக இருந்தவர். இப்பள்ளியில் தான் திரு.,அபய் பங் தம் படிப்பைத் துவங்கி, பின் M.B.B.S -M.D - பட்டங்கள் பெற்று டாக்டர் ராணியை மணந்தார். பிறகு, பால்டி மோரின் (அமெரிக்கா) ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் முதிநிலைப் பட்டமும் பெற்றார்.

தம் தந்தையைப் போல் காந்திஜியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு சமூக சேவையில் ஈடுபடலானார்.

"சேவா கிராமத்திலிருந்து ஷோத்கிராம் வரை" என்ற இந்த மின் நூல் அந்தத் தம்பதிகளின் தியாக மனப்பான்மையுடன், சேவை மனப்பான்மையையும் படம் பிடித்துக் காட்டி உங்கள் மனத்தை உருக வைக்கும் உண்மைச் சரித்திரம் இது.

ஆசிரியர் சமூகம் இதைப் படித்து, மாணவர்களுடன் பகிர்ந்து பயன்பெற வேண்டுகிறோம்.

.

Download Document: seva2shodh-tamil.pdf
18487 registered users
7228 resources