10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை ஏன் மாற்றவேண்டும்

By Pugazhendi | ஐன 18, 2016

பள்ளிக்கல்வித் துறை பத்தாம் வகுப்புக்கும் மற்ற வகுப்புகளுக்கு உள்ளது போல மதிப்பீட்டு முறையை மாற்றிட வேண்டும். அல்லது அறிவியல் பாடத்திற்கு செய்முறைத்தேர்வுக்கு 25 மதிப்பெண்களும் எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்களும் வழங்கியது போல் மற்ற பாடங்களுக்கும் செயல்படுத்தலாம். இதனால் அறிவியல் பாடத்தில் தோல்வி இல்லை என்னுமளவிற்கு வெற்றி பெறுவோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதேமுறையைப் பின்பற்றி மொழிப்பாடங்களுக்கு வாய்மொழித்தேர்வுக்கு 25 எழுத்துதேர்வுக்கு 75 எனவும், கணக்கு, சமூக அறிவியல் பாடங்களுக்கு செய்முறைத் தேர்வுக்கு 25 எழுத்துத் தேர்வுக்கு 75 எனவும் மதிப்பெண் நிர்ணயம் செய்து தேர்வு முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவது காலத்தின் கட்டாயம்.

13014 registered users
5584 resources