'பை' (pi) கணித நாள்

By editor_ta | மார் 14, 2013

மார்ச் 14-ம் தேதி-  ‘பை’ - pi - நாள் - என்று கொண்டாடப்படுகிறது. அதாவது கணிதத்தின் ‘பை’ என்ற மாறிலி எண்ணைக் கொண்டாடும் விதத்தில் மார்ச் 14-ம் தேதி தேர்வு செய்யப்பட்டது.   

பை’ என்ற இந்த கணித அடையாளக் குறியின் மதிப்பு சுமார் 3.14.. என்ற அளவில் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 3/14 என்பது மார்ச் மாதம் 14-ம் தேதியைக் குறிப்பதாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் கணித ஆர்வலர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய நாளாகும். இந்த நன் நாளில் ‘பை’-யைக் காதலிக்கும் ஒவ்வொருவரும் இந்தக் கொண்டாட்டத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொள்ள அழைக்கிறோம். நாம் நம் மனத்தை இது குறித்து, தயிர் கடைவது போல் கடைந்து கணித மேதைகளின் வெண்ணை போன்ற கருத்து உண்மைகளை நினைவு கூறும் முகத்தான் இந்த மின் வலை விவாத மேடை மூலம் பகிர்ந்து கொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.  இந்த மாதம் முழுவதும் இந்த அற்புதமான தோண்டத் தோண்ட பலவிதமான உண்மைகளை வெளிப்படுத்தும் எண்ணைப் பற்றிய படைப்புகளை உங்களுக்கு விருந்தாக அளிக்க உள்ளோம். அதில் உங்களது பங்களிப்பையும் வருவேற்கிறோம் . இது குறித்த விவரங்களை - டீச்சர்ஸ் ஆப் இந்தியாவின்  ஃபேஸ் புக் பக்கங்களில் காணலாம்.

 

G.ARAVINDAN's படம்

pi பை என்பது எப்படி மாறாத எண்ணாக உள்ளது என்பதை முழு விளக்கத்தோடு விளக்கிச் சொல்ல வேண்டும். எந்த வட்டத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த வட்டத்தின் சுற்றளவுக்கும், அவ் வட்டத்தின் விட்டத்திற்கும் உள்ள தகவே (விகிதமே) 22 / 7 (அ) 3.14 என்பதை எடுத்துக் கூறி சான்றுகளோடு விளக்க வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் 22 / 7 (அ) 3.14 என்பதை ஒரு மாறா எண் என்று மட்டுமே மனப்பாடம் செய்து வைத்துக்கொள்கின்றனர். இது தவறான பயிற்றல் முறை.

கு.சீனுவாசன்'s படம்

22/7 என்பது விகிதமுறு எண்.ஆனால் π என்பது விகிதமுறா எண் ஆகும்.இது இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்துவது ஆசிரியரின் கடமையாகும். எந்த ஒரு வட்டத்திலும் அதன் சுற்றளவு மற்றும் விட்டம் ஆகியவற்றிற்கிடையே உள்ள விகிதம் ஒரு மாறிலி ஆகும்.இம்மாறிலியை கிரேக்க எழுத்தான π ஆல் குறிப்போம்.π இன் தசம விரிவு 3.141592653589793238...என்பதாகும். இது முற்று பெறாத ,திரும்ப திரும்ப வராத தொடராக உள்ளது. ஆனால் 22/7 என்பது 3.142857142857142857... என முற்று பெறாத,ஆனால் திரும்ப திரும்ப வரும் தொடராக உள்ளது.பல கோடி இடத் திருத்தத்துடன் π இன் விரிவை காண்பது தற்போது நடை பெற்று வரும் கடினமான ஆனால் வியத்தகு பணியாகும்.

Sridhar's படம்

S .ஸ்ரீதர்
(1) கி.பி . 475-550 காலகட்டத்தில் பாட்னாவில் வாழ்ந்த இந்திய கணித மேதை 'ஆரியபாட்யா ' π இன் மதிப்பு 62832 ஐ 20000 ஆல் வகுக்க கிடைப்பது என கூறினார்.

(2)அர்கிமிடிஸ் 3 1/7 க்கும் 3 10/71 க்கும் இடைப்பட்டது தான் π இன் மதிப்பு என கூறினார்.
3) தமிழ் கணித மேதை ராமானுஜர் π இன் மதிப்பு காண ஒரு வாய்பாட்டை உருவாக்கினார்.

18344 registered users
7154 resources