படைப்புகளை அனுப்புவதற்கான வழிகாட்டுதல்கள்.

படைப்புகளை அனுப்புவதற்கான வழிகாட்டுதல்கள் - (www.teachersofindia.org : 

டீச்சர் போர்டல் என்ற இணைய தளம் ஆசிரியர்கள் தங்களுக்குள் கலந்துரையாடியும், விவாதித்தும், வளமான படைப்புகளை உருவாக்கிப் பகிர்ந்து கொள்வதற்கும் பயன்படும் ஒரு மேடையாகத் திகழ்கிறது. இந்தியாவின் பல பாகங்களில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை முக்கிய அங்கத்தினராகக் கருதித் தான் இந்த போர்டல் இயங்குகிறது. எங்களது நோக்கமும், கொள்கையும் அந்த அரசாங்க ஆசிரியர்களது தாய் மொழிகளிலேயே பாடப் படைப்புகளை அளிக்க வேண்டும் என்பதுதான். தற்போது, ஆங்கிலம் தவிர்த்து, பிற நான்கு இந்திய மொழிகளிலும் இந்த போர்டலில் வெளியிடப்படுகிறது. மற்ற மொழிக் குழுவினர்களுக்கும் பயன்படும் வகையில் அவர்களது ஒவ்வொரு மொழியிலும் படைப்புகளை வெளியிட நாங்கள் முயன்று வருகிறோம்.

ஒவ்வொரு மொழி ஆசிரியர்களுக்கும் படைப்புகளின் உள்ளடக்கங்கள் பயன்படும் விதமாகவும், உதவிகரமாகவும் இருப்பதுடன், படைப்புகளின் பொருளும் எளிதில் புரியும் படி இருக்கும் விதமாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதைச் செயல்படுத்துவதற்கு, கீழ்க்கண்ட வழிகாட்டு முறைகள் வறையறுக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் சமூகங்கள், பாட வள நூல்கள் என்பது போர்டலின் முக்கிய இரண்டு பகுதிகளாகும்.  

நீங்கள் ஒரு படைப்பை அனுப்புவதற்கு முன்பு, படைப்புக் கொள்கை என்ற எங்களது விதிகளை தயவு செய்து படிக்கவும்.

சமூகங்கள்:

ஆசிரியர் சமூகங்கள் என்ற இந்தப்பகுதி ஆசிரியர்கள் தங்களுக்குள் சுதந்திரமாக கலந்துரையாடும் வெளிப்படையான மேடையாகும். இதில் உள்ள படைப்புகள் அனைத்தும் பயன்படுத்துபவர்களால் உருவாக்கப் பட்டவைகளாகும். இந்தப் பகுதிகள் குறைந்த அளவில்  - அதாவது சொல்லப்பட்டுள்ள கருத்து, மொழி ஆகியவைகள் சரியானபடி கையாளப்பட்டுள்ளனவா என்பதை கண்காணிக்கும் அளவில் - மட்டுமே சரிபார்க்கப்படுகின்றன. கல்வி மற்றும் முன்னேற்றம் ஆகிய விஷயங்களில் எழும் கருத்துக்களைப் பற்றி தரமாக கலந்துரையாடுவதை இந்த டீச்சர் போர்டல் ஊக்குவிக்கிறது. ஆகையால், ஒரு அனுபவமிக்க முதிர்ச்சியான கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட ஆசிரியர்களை அழைக்கிறோம். அதே நேரத்தில், ஒருவருக்கொருவர் திட்டுதல், ஆபாச வார்த்தைகளை உபயோகித்தல், நிந்தனைப் பேச்சு ஆகியவைகளை தவிர்ப்பது மிக அவசியம். ஆனால், ஹாஸ்யம் கலந்துரையாடலில் வரவேற்கப்படுகிறது . ;-).

பாட  வள நூல்கள்

பாட நூல்களை இரு வகையாகப் பிரிக்கலாம்:

 1. வகுப்பறை வளமான படைப்புகள் -  இதை ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுப்பதற்குப் பயன்படுத்தலாம்.
 2. ஆசிரியர் மேம்பாட்டுக்கான வளமான படைப்புகள் - இது அவர்கள் பணியில் சிறக்க உதவிகரமாக இருக்கும்.

இந்த வளமான படைப்புகள் - பல வடிவங்களில் இருக்கும் - எழுத்து வடிவத்தில், ஆடியோ, வீடியோ போன்றவைகள்.

போர்டலில் வெளியிடப்பட்ட படைப்புகள் விவாதப் பொருளாக இருக்கக் கூடும். இருப்பினும், அவைகளில் எழுப்பப் பட்ட பிரச்சனைகள், அதனால் எழுந்த விவாதங்கள் அனைத்தும் ஒரு நிரந்தரமான மதிப்பைக் கொண்டிருப்பதுடன், வருங்கால பயனாளர்களுக்குப் பயன்படும் ஒரு சிறந்த பொருளாக உருவாகும் சக்தியுடன் திகழும். உங்களது படைப்புகளை மின் அஞ்சல் மூலமாக போர்டலுக்கு அனுப்பலாம். தபால் அல்லது தூது அஞ்சல் (courier)  மூலமாகவும் போர்டல் குழுவினருக்கு அனுப்பலாம். 

படைப்புகளை மூன்று வழிகளில் அனுப்பி வைக்கலாம்:

 1.  ‘படைப்புகளை அனுப்பவும்’ என்ற போர்டலில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் படைப்புகளை அனுப்பலாம். (படைப்புகளை அனுப்ப, இது மிகவும் எளிய வழியாகும். இந்த வழியில் அனுப்பப்படும் உங்களது படைப்புகளை நாங்கள் சுலபமாக சரிபார்த்து, துரிதமாக போர்டலில் அந்தப் படைப்புகளை வெளியிடமுடியும்.)
 2. teachers@azimpremjifoundation.org என்ற மின் அஞ்சல் வழி உங்கள் படைப்புகளை அனுப்பலாம். (உங்கள் படைப்புகளை தனியாக ஒரு இணைப்புக் கோப்பாக அனுப்பவும். மின் அஞ்சல் பக்கத்திலேயே படைப்புக்களின் அனைத்துப் பக்கங்களையும் பதிவு செய்து அனுப்பாதீர்கள். உங்களது படைப்புகளை மைக்ரோ சாஃப்ட் வேர்ட் அல்லது ஒபென் ஆபீஸ் ரைட்டர் - (Microsoft Word or Open Office Writer) -  என்ற வடிவத்தில் டைப் செய்து, அதை கோப்பாக்கி அனுப்பி வைக்கவும். அந்த மின் அஞ்சலில் உங்களது போன் நம்பரைக் குறிப்பிடவும். அப்போது தான், ஏதாவது விளக்கங்கள் அவசரமாகத் தேவைப்பட்டால், நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்ள முடியும். )
 3. தபால் அல்லது தூது அஞ்சல் (courier) மூலமாக அனுப்புவதற்கான விலாசம்:  The Editor - Tamil, Teachers of India, Azim Premji Foundation, 134 Doddakannelli, Sarjapur Road, Bangalore – 560035, Tel: 080-66 144 900
  ( அனுப்பும் போது, உங்களது தபால் விலாசம், போன் நம்பர் ஆகியவைகளைக் குறிப்பிடவும். அனுப்பப் படும் படைப்புகள் அச்சுப் பிரதி - கை எழுத்துப் பிரதி -  என்ற இரண்டையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். அவைகள் தாளின் எல்லா பக்கங்களிலும் 1.5” இடைவெளி விட்டும், வாக்கியங்களுக்குள் இரண்டு இடைவெளி இருக்கும்படியும்,  பார்த்துக் கொள்ளவும். அச்சுப் பிரதி/எழுத்துப் பிரதி ஆகியவைகள் ஒரே பக்கத்தில் மட்டும் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
  சி.டி. என்ற குறுவட்டு மூலம் உங்கள் படைப்புகளை அனுப்புவதாக இருப்பின், அந்த வட்டில் அதில் அடங்கி உள்ள பொருள் பற்றிய சிறு குறிப்பை அதிலே எழுதவும். மேலும், அதில் உங்கள் பெயர், தொடர்பு போன் எண் ஆகியவைகளையும் எழதவும். )

கோப்புகளுக்கு சரியாக அடையாளம் காணும் பெயர்களை இடவும்:

மின் அஞ்சல் அல்லது குறுவட்டு (C.D.) மூலம் உங்கள் படைப்புக் கோப்புகளை அனுப்பும் போது, அந்த கோப்புகளின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் பெயர்களைக் கோப்புகளுக்குக் கொடுப்பதற்கு மறக்காதீர்கள். இந்த பெயரிடுதலை மிகவும் முக்கியமானதாக நீங்கள் தயவு செய்து கருத வேண்டும். ஏனென்றால், எங்களது மின் தள ஆசிரியர்கள் பல மொழிகள், பல பாடங்கள், பல மாநில பாட திட்டங்களின் அடிப்படையில் உள்ள பல தர நிலை வகுப்புகளின் படைப்புகள் ஆகியவைகளைக் கையாளுகிறார்கள். 

உங்களது மின் அஞ்சல்களில், ‘பொருள்’ என்ற தலைப்பில் தெளிவாக, படைப்பின் முக்கிய அம்சங்களை குறிப்பிட்டு எழுதவும்.

சி.டி. என்ற குறுவட்டில் அடங்கி இருக்கும் விஷயக் குறிப்பை அதில் தெளிவாக எழுதவும். அதில் உங்கள் பெயர், போன் நம்பர் ஆகியவைகளையும் எழுதவும். எங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைப் போக்க உங்களைத் தெடர்பு கொண்டு, அந்த சி.டி.யை துரிதமாக பதிவேற்றம் செய்ய  அந்தத் தகவல்கள் உதவிகரமாக இருக்கும். 

கோப்புகளுக்குப் பெயரிடல், மின் அஞ்சல் பொருளடக்கங்கள், சி.டி. தலைப்புகள் -ஆகியவைகளுக்கு சில பரிந்துரைகள்:

உங்களது மொழி, உங்களது மாநிலம் ஆகியவைகளின் பெயர்களைக் கோப்பின் பெயரில் சேருங்கள். படைப்பின் பாடம், படைப்பின் தலைப்பு, படைப்பின் வகை, உங்கள் பெயர் ஆகியவைகளும் கோப்புப் பெயரில் இடம் பெறலாம்.

உதாரணங்கள்
Hindi-MP-EVS-Reptiles-lesson plan-Uday
Hindi-UP-Maths-Addition-worksheet-Suneeti Chakravarthy
Tamil-Puducherry-English language-game-Selvarajan
Tamil-Tamil Nadu-Science-photosynthesis-video-Vasumathi

படைப்புகளில் கொடுக்கப்பட  வேண்டிய முக்கிய தகவல்கள்:

சில அடிப்படைத் தகவல்கள் ஒவ்வொரு படைப்பிலும் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அப்பொழுதான், எங்களது மின் இணைய ஆசிரியர்கள் படைப்புகளை வேகமாகவும், திறம்படவும் ஆராய்ந்து பார்க்க முடியும். ஆகையால், கீழ்க்கண்ட விவரங்களை உங்களது இணைப்புக் கடித்த்திலோ அல்லது படைப்பின் முதல் பக்கத்தின் ஆரம்பத்திலோ தயவு செய்து குறிப்பிட வேண்டுகிறோம்.

மொழி: படைப்பில் பயன்படுத்தப்பட்ட மொழி

பாடம்: சுற்றுச் சூழல் அறிவியல், கணிதம், சமூக அறிவியல், அறிவியல் போன்றவைகள் (EVS, Maths, Social Studies ,Science etc.),

தலைப்பு: அடிப்படைக் கூட்டல், தாவர வாழ்க்கை, பருவ காலம், தனிநபர் ஆரோக்கியம் (Basic addition, Plant life, Seasons, Personal hygiene etc.)

படைப்புகளின் வகை: கட்டுரை, வகுப்பறைப் பயிற்சிகள், பயிற்சித் தாள், வீடியோ, அனிமேஷன் போன்றவைகள் (article, classroom activity, worksheet, video, animation etc.)

பாடத்திட்டம்: படைப்புகள் எந்த பாடத்திட்டத்திற்குப் பொருந்தும் - கேரளா மாநில அரசு கல்வி வாரியம், மத்திய பிரதேச அரசு பாடத் திட்டம் போன்றவைகள் - (Kerala state board, Madhya Pradesh state syllabus etc.)

வகுப்புகளின் தர நிலை: படைப்புகள் எந்த வகுப்புகளுக்குப் பொருந்தும் என்ற விவரம் - 1-2 வகுப்புகளுக்கு, 4-6 வகுப்புகளுக்கு, 8-ம் வகுப்புகளுக்கு மட்டும், அனைத்து வகுப்புகளுக்கும். (for classes 1-2; for classes 4-6; for any class; for class VIII etc.)

உங்களது வாழ்க்கைக் குறிப்பு:
படைப்பாளிகளான நீங்கள் உங்களது அனுபவங்கள், உங்கள் துறையைப் பற்றிய விவரங்கள் ஆகியவைகளின் சிறு குறிப்பு 50 வார்த்தைகளுக்குள் எழுதி அனுப்பும்படிக் கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் உங்களது பாஸ்போர்ட் அளவு போட்டோவை - தபால், மின் அஞ்சல் அல்லது சி.டி.யில் பதிவு செய்து இணைத்து அனுப்பவும்.

படைப்புகளின் வடிவ அமைப்பு:
தாளில் ஒரு பக்கம் மட்டும் அச்சிட்ட/எழுதியதாக இருக்க வேண்டும்.
தாளின் எல்லாப் பக்கங்களிலும் 1.5” இடம் விடப்பட்டிருக்க வேண்டும்.
ஒவ்வொரு வாக்கியங்களுக்கும் உள்ள இடைவெளி இரண்டு அளவு - double space - இருக்கும் படி எழுதியோ/அச்சடித்தோ அனுப்பலாம்.

எழுத்துருக்கள், வடிவமைப்பு:
ஆங்கில மொழிப் படைப்புகளுக்கு, பொதுவாக உபயோகத்திலுள்ள எழுத்துருக்களான - Times New Roman, Arial or Calibri - உபயோகிக்கவும்.
ஒரு படைப்புகள் முழுதும் ஒரே வகையான எழுத்துருவையே பயன்படுத்தவும். தலைப்புகளுக்கு, கொட்டை எழுத்து (Bold), சாய்வான எழுத்து (italics) ஆகியவைகளைப் பயன்படுத்தவும்.

இந்திய மொழிகளுக்கு, யுனிகோட் எழுத்துருக்களைப் பயன்படுத்தவும். ஒவ்வொரு மொழிக்கும் நாங்கள் பரிந்துரைக்கும் எழுத்துருக்களுக்கு கீழே உள்ள அட்டவணையப் பார்க்கவும். அதன்படி கொடுக்கப்பட்டுள்ள அளவு எழுத்துருக்களைப் பயன்படுத்தவும்.

 

Language

Name of Font

Body text

Main Title

Sub heading—level 1

Sub heading—level 2

Tamil Latha 9pt 16 pt bold 14pt 9 pt bold

 

மொழி  மற்றும் எழுத்து நடை:

எளிமையான சிறிய வாக்கியங்கள்

தெளிவான எளிய மொழியைப் பயன்படுத்தி, கோர்வையாக ஆற்றொழுக்குப் போல், சீரிய முறையில் விளக்கங்கள் அளிப்பதாக எழுதப்பட வேண்டும். சிறிய வாக்கியங்களையே நாங்கள் உங்களுக்கு சிபாரிசு செய்கிறோம். அப்போது தான், சொல்லும் விஷயங்களைச் சராசரி வாசகரும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

பெயர் சுருக்கம் - (Abbreviation), பெயரின் முதல் எழுத்துகளின் சுருக்கம் - (Acronym)

கட்டுரையில் முதலில் வரும் பெயர்களை சுருக்கி எழுதுதல் கூடாது. அதை விரித்து முழு அளவில் எழுதி, அதன் சுருக்கத்தை அடைப்புக் குறிக்குள் காட்ட வேண்டும். பிறகு, பின் வரும் அந்தப் பெயர்களை சுருக்கி எழுதி நீங்கள் பயன்படுத்தலாம்.

 

உதாரணம்: தேசிய பாடத் திட்ட வடிவமைப்பு - 2005 -  (National Curriculum Framework (NCF -2005 ) விதிமுறைகளை அனுசரித்தே இந்தக் குறிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கல்வித் தேசியக் கொள்கை - (National Policy on Education - NPE) - அறிக்கையில் தேசிய கல்வி முறை, NCF அடிப்படையில் செயல்படும். NCF  - 2005  என்பது 1986 மற்றும் 2000 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த அறிக்கையாகும். NPE - பரிந்துரை என்னெவென்றால் ….

குறிப்பு: பெயர் சுருக்கத்தில் ஆங்கிலச் சுருக்கம் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. 

கல்வித் தேசியக் கொள்கையில் கீழ்க்கண்ட விதிகள் காணப்படுகின்றன:

படங்கள், போட்டோக்கள், விளக்கப் படங்கள்:
படங்கள், போட்டோக்கள், விளக்கப்படங்கள் சில சமயங்களில் பாடப் படைப்புகளின் தரத்தை வெகுவாக உயர்த்தி விடுகின்றன. இருப்பினும், இந்த வரைபடங்கள் தெளிவாக பளிச்சென்று இல்லாவிடில், அவைகள் ஒளியிழந்து, தெளிவில்லாமல் தாளில் அச்சரிடிக்கும் போது தோற்றமளிக்கும். அவைகளும் ஆசிரியர்களுக்குப் பயன்படாது போய்விட வாய்ப்புண்டு. மேலும் தரமான வரைபடங்களாக இருப்பின் அதன் தெளிவுத் திறன் அதிகமாக இருப்பதால், அந்தக் கோப்பின் அளவு மிகவும் அதிகமாகி, அதை மின் அஞ்சலில் அனுப்புவதில் கஷ்டங்கள் நேரிடும். ஆகையால், அந்த வரைபடங்களை தரவேற்றம் செய்வதற்கு முன்போ அல்லது அவைகளின் படங்களை படைப்புகளில் சேர்ப்பதற்கு முன்போ அல்லது அவைகளை ஊடகம் மூலம் காட்சியாக காண்பிப்பதற்கு முன்போ, அவைகளின் அளவைக் குறைப்பது மிகவும் முக்கியம்.

உங்களது இத்தகைய வரைபடங்களின் அளவு குறைந்தது dpi resolution 100-ம், அதிகமான் அளவு 200-ம் - இருக்கும் படி நிச்சயப்படுத்திக் கொள்ளவும். Dpi resolution 100-க்குக் கீழே இருக்கும் படங்கள் கணிப்பொறியின் திரையில் தெளிவாகத் தெரியாது. மேலும், நமது ஆசிரியர்கள் பல படைப்புகளை பிரிண்ட் செய்ய விழைவார்களாதலால், தாளில் அச்சடிக்கும் போதும் அந்தப் படங்கள் தெளிவில்லாமல் காணப்படும். ஆகையால், dpi resolution 100-க்கும் மேற்பட்ட அளவில் அமைத்த படங்களையே பயன்படுத்த நீங்கள் முயலவும்.

இருப்பினும், அதிக தெளிவுத் திறனை (higher resolution) பயன்படுத்துதல் என்றால் கோப்பின் அளவு பெரிதாகும் என்று பொருள். ஆகையால், மின் வலையில் பதிவேற்றம் செய்யவதற்கு முன்போ அல்லது மின் அஞ்சலில் அனுப்புவதற்கு முன்போ அல்லது படைப்புகளிலும், ஊடக காட்சியில் சேர்ப்பதற்கு முன்போ, அவைகள் கொண்ட கோப்புகளின் அளவுகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அந்த அளவு குறைத்து விடவும்.

கோப்புகளின் அளவுகளைக் குறைத்தல்:
போட்டோ படங்களை பதிப்பிக்கும் மின் மென் பொருளைப் பயன்படுத்தி கோப்பின் அளவினைக் குறைக்க முடியும். கீழ்க் கண்ட மின் மென் பொருட்களைப் பயன்படுத்தலாம்.

 1. Microsoft Office Picture Manager’ (part of Microsoft office package).
 2.  ‘Picasa Photo Editor’ (available for free download).
 3.  ‘Adobe Photoshop’ (professional software sold commercially).
 4. GIMP (free and open source alternative for Photoshop).

இந்த மின் வலை - www.freeonlinephotoeditor.com போட்டோக்களை மாற்றிப் பதிப்பிப்பதற்கு உதவுகிறது. இதன் மென் பொருளை பதிவிறக்கம் செய்யாமலே, அதன் மின் வலை மூலமாக போட்டாக்களை மாற்றிப் பதிப்பிக்க முடியும். எந்தவிதமான முன் அனுபவமும் இல்லாதவர்களும், அதில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் மூலம், சுலபமாக போட்டோக்களை திருத்திப் பதிப்பிக்க முடியும்.

கோப்பு வடிவங்கள்:
நாங்கள் தேர்வு செய்வது JPEG வடிவம். படங்களை கீழ்க்கண்ட வழிகளில் சேமிக்கலாம். JPEG, TIFF, BMP, GIF, PNG போன்றவைகள். இதில் TIFF, BMP -  என்ற இரண்டும் அதிக கோப்பு அளவுகளால், பயனாளர்களுக்கு பல தொல்லைகளை அளிக்கக் கூடும். ஆனால், மற்ற வடிவக் கோப்புகளான JPEG, GIF, PNG போன்றவைகள் குறைவான அளவு கோப்பு இடத்தையே கொண்டுள்ளது. அதிலும் JPEG என்ற மென் பொருள் பரவலாகப் பயன்படுத்துவதுடன், அது எல்லா மென் பொருளுடனும் இணைந்து செயல்படும் தன்மையால், படங்களைப் பார்ப்பதற்கும்,  மாற்றங்கள் செய்வதற்கும் ஏற்றதாகும். ஆகையால் உங்களது படங்களை JPEG என்ற வடிவத்திற்கு மாற்ற பரிந்துரை செய்கிறோம். குறிப்பாக TIFF, BMP - என்ற இந்த கோப்பு வடிவங்களை JPEG-க்கு மாற்றுவது மிக அவசியமாகும்.

படங்களைத் தனியாகச் சேர்க்கவும்:
படங்களை படைப்புகளின் பக்கங்களில் பதிப்பது அதன் கோப்பின் அளவை அதிகரிக்கும். ஆகையால், படங்கள் படைப்புகளின் முக்கியமான அங்கமாக இருந்தால் மட்டுமே, படைப்புகளின் பக்கங்களில் படங்கள் சேர்க்கப்படவேண்டும். சேர்ப்பதற்கு முன், அப்படிப்பட்ட படங்களின் அளவு - குறைந்தது 100 dpi resolution - இருப்பதை நிர்ணயம் செய்வது அவசியம். அதன் ரொசொலுஷன் என்ற தெளிவுத் திறனின் அளவு அதிகமாக இருந்தால், அதை 200 dpi அளவுக்குக் குறைக்க வேண்டும். (‘கோப்புகளின் அளவுகளைக் குறைத்தல்’ என்ற மேலே இருக்கும் பகுதியைக் காண்க.)

தனியாக உபகரணங்களாக பயன்படுத்த வேண்டிய போட்டோக்களையும், பிரதி எடுக்க வேண்டிய போட்டோக்களையும், படைப்புகளுடன் பிரசுரிக்காமல் இருக்கவும். அப்படிப்பட தருணங்களில், அந்தப் போட்டோக்களைத் தனியாக இணைக்கவும். அவைகளை எங்களுக்கு அனுப்பும் போது, சி.டி. அல்லது மின் அஞ்சலில் தனியான சேர்ப்பாக வடிவக் கோப்பாக அனுப்பவும்.  

விடியோக்கள் என்ற கண்ணொளிக் காட்சிகள்

உங்களது வீடியோக்களை மூன்று வழிகளில் அனுப்பலாம்.

 1. மின் தளத்தில் தரவேற்றம் செய்தல்.
 2. மின் அஞ்சல் மூலம்.
 3. சி.டி./டி.வி.டி.யில் பதிவு செய்து தபால் மூலம்

மேலே உள்ள பகுதியில் விளக்கமான விவரங்களைக் காணவும்.

தொழில் நுட்பம் கொண்ட காமிராவில் எடுக்கப்பட்டவைகளாக உங்கள் வீடியோ இருக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல கல்வித் தரம் வாய்ந்த, ஒலி-ஒளிக் காட்சியில் எடுக்கப்பட்ட ஒரளவுக்கு தரம் கொண்ட உங்களது மோபைல் அல்லது டிஜிடல் ஸ்டில் காமராவில் எடுக்கப்பட்ட காட்சிகளையும் நாங்கள் எங்கள் இணைய தளத்தில் வெளியிடுகிறோம்.  

ஒலி-ஒளிக் காட்சியின் தரத்தை மேம்படுத்த சில ஆலோசனைகள்:

 1. படம் பிடிக்கும் போது உங்கள் காமிராவை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவும். அதிகமாக காமிரா அசையாமல் பார்த்துக் கொள்ளவும். படம்பிடிக்கும் கோணத்தை அடிக்கடி மாற்றாதீர்கள். காமரா ஸ்டாண்டையோ அல்லது ஒரு மேஜையையோ அல்லது அதே போல் அசையாத ஒரு பொருளின் மேலோ கமிராவை வைத்து படம் பிடிக்கவும்.
 2. போதுமான வெளிச்சம் படம் பிடிக்கப்படும் பிம்பத்தில் விழும்படி பார்த்துக் கொள்ளவும்.
 3. வெளிச் சத்தம் பதிவு செய்யும் ஒலியைப் பாதிக்காமல் இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். ஒலிப் பதிவு கருவிக்கு மிக அருகில் மைக்கைப் பிடித்துக் கொள்ளவும்.  

வீடியோ வடிவங்கள்:
வீடியோக்கள் கீழ்க்கண்ட பல வடிவங்களில் சேமிக்கப்படுகின்றன: mpeg, avi, flv, 3gp, wmv, mp4 - இன்னும் பல வடிவங்கள். நமது போர்டல் இந்த அனைத்து வடிவங்களின் கோப்புகளையும் ஏற்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனினும், கீழ்க் கண்ட வடிவங்களை நாங்கள் பரிந்துரை செய்கிறோம்: flv, mp4 and mpeg. இந்த வடிவங்கள் அனைத்தும் பார்வையாளர்கள் அதிகம் பயன்படுத்தும் மென் பொருட்களுடன் இணைந்து செயல்படும் தன்மை கொண்டது.

டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா போர்டலுக்குப் பயன்படும் பிற மின் வலைகளில் சில வீடியோக்களை நீங்கள் காண நேரிட்டால், அந்த மின் வலைகளின் தொடர்புகளை எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்பாளிகளின் நேர்மை ( உரிமம், படைப்புகளை திருடுதல், அங்கீகரித்தல் ):

படைப்பாளர்களின் நேர்மையை நாங்கள் மதிக்கிறோம். ஒருவரின் அல்லது ஒரு நிர்வாகத்தின் காப்பிரைட் உள்ள எந்த ஒரு படைப்புகளையும் எங்களுக்கு அனுப்புதல் கூடாது. பிறரது படைப்புகளைத் திருடி உங்களது படைப்பாக அனுப்புதல் கூடாது. மூலப் படைப்புகளைக் குறிப்பிடாமல் அதை நகல் எடுத்து அனுப்புவதும் திருடிய படைப்பாகத்தான் கருதப்படும். உங்களது சக பணியாளர், மாணவர்கள் ஆகியவர்களின் குறிப்புகளும் இதில் அடங்கும்.

இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இணையத்தில் வெளியிடப்படும் அனைத்துப் படங்களும் இலவசமாகப் பயன்படுத்துவதற்கு அல்ல. காப்பிரைட் படங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளவும்.

உங்களுக்கு உதவ, கீழே இலவசமாக அனைவரும் பயன்படுத்தும் படங்களைக் கொண்ட சில இணைய விலாசங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:

www.dreamstime.com/freeimages,

http://www.gettyimages.com,

http://www.flickr.com/,

http://www.freeimages.co.uk/

மற்றவர்களின் படைப்புகளிலிருந்து மேற்கோள்களைக் கையாளும் போது, அதைத் தகுந்த முறையில் சுட்டிக் காட்ட வேண்டும். மற்றவர்களின் மூலக் கருத்துக்களை அடிப்படையாக வைத்து நீங்கள் எழுதும் பொழுது, மூல நூலை அங்கீகரிக்க வேண்டும். புத்தகங்கள், சினிமா, மின் வலைகள் போன்ற வற்றிலிருந்து மேற்கோள்களை நீங்கள் காட்டுவதாக இருப்பின், அவைகளை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இப்படி மேற்கோள் காட்டிய மூலப் படைப்புகளையும், எடுத்தாண்ட படைப்புகளையும் கட்டுரையில் இறுதியில் அதே வரிசையில் குறிப்பாகக் காட்ட வேண்டும். குறிப்பிடும் வழிமுறைகளுக்கு, Chicago Manual of Style என்ற விதிகளைக் கடைப்பிடிக்கவும். இன்னும் உங்களுக்கு சந்தேகம் இருப்பின், நீங்கள் எங்களது ஆசிரியரைத் தொடர்பு கொள்ளவும்.

19861 registered users
7801 resources