படைப்புகளைப் பற்றிய விதி முறைகள்

படைப்புகளைப் பற்றிய விதி முறைகள் - டீச்சர் போர்டல்

தாய் மொழியில் படைப்புகளை அனுப்புதல் - ஆசிரியர்களுக்கான விதிமுறைகள்

இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் தொலை நோக்குடன் உந்தப்பட்டு செயல்படுவது தான் டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா என்ற மின் இணைய தளமாகும். www.teachersofindia.org நாடுமுழுதும் பரவியுள்ள ஆசிரியர் சமூதாயத்தை ஒருங்கிணைக்கும் முகமாக, இந்த மின் இணைய தளம் ஆசிரியர்களை பயனாளர்களாகவும், வள நூல் படைப்பாளிகளாகவும், பகிர்வாளர்களாகவும் செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அனைத்துப் பகுதி அரசாங்க ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் தான் இந்த மின் இணைய தளத்தின் முக்கிய இலக்காகும். அந்த ஆசிரியர்கள் ஆங்கிலத்தை விட அவர்களது தாய் மொழியில் அனுபவம் அதிகம் பெற்றவர்களாக இருக்கக் கூடுமாகையால், படைப்புகளை இந்திய பன் மொழிகளில் டீச்சர்ஸ் ஆஃப் இந்தியாவின் இணைய தளத்தில் வெளியிடுவதை அதன் மையக் கொள்கை- நோக்கம் ஆகியவைகளாகக் கொண்டுள்ளது. ஆங்கில மொழியுடன், தற்போது நான்கு இந்திய மொழிகளில் படைப்புகள் இந்த இணைய தளத்தில் வெளியிடப்படுகின்றன. படிப்படியாக மற்ற இந்திய மொழிகளிலும் படைப்புகளை இந்த இணையதளத்தில் நீங்கள் காணலாம்.

ஆசிரியர்களான பயனாளர்களால் உருவாக்கப்படும் படைப்புகள் முக்கிய கொள்கை:
ஆசிரியர்கள் தங்களுக்குள் கலந்துரையாடவும், விவாதிக்கவும், சிந்திக்கவும், படைப்புகளை உருவாக்கவும், பகிர்ந்து கொள்ளவும் பயன்படும் ஒரு மேடையாக இந்த டீச்சர்ஸ் போர்டல் - www.teachersofindia.org இருக்கிறது.

ஆசிரியர் சமூகங்கள் - வளமான பாட நூலகள் என்பவைகள் தான் இந்த ஆசிரியர் போர்டலின் இரண்டு முக்கியமான பகுதிகளாகும்.

ஆசிரியர் சமூகங்கள் என்ற இந்தப்பகுதி ஆசிரியர்கள் தங்களுக்குள் சுதந்திரமாக கலந்துரையாடும் வெளிப்படையான மேடையாகும். இதில் உள்ள படைப்புகள் அனைத்தும் பயனாளர்கள், கூட்டாளி நிறுவனங்கள், எங்களது பாட வல்லுனர்கள் ஆகியவர்களால் உருவாக்கப் பட்டவைகளாகும். இந்தப் பகுதிகள் குறைந்த அளவில் - அதாவது சொல்லப்பட்டுள்ள கருத்து, மொழி ஆகியவைகள் சரியானபடி கையாளப்பட்டுள்ளனவா என்பதை கண்காணிக்கும் அளவில் - மட்டுமே சரிபார்க்கப்படுகின்றன. கல்வி மற்றும் முன்னேற்றம் ஆகிய விஷயங்களில் எழும் கருத்துக்களைப் பற்றி தரமாக கலந்துரையாடுவதை இந்த டீச்சர்ஸ் போர்டல் ஊக்குவிக்கிறது. ஆகையால், ஒரு அனுபவமிக்க முதிர்ச்சியான கருத்துப் பரிமாற்றங்களில் ஆசிரியர்கள் ஈடுபட அழைக்கிறோம். அந்த நேரத்தில், ஒருவருகொருவர் திட்டுதல், ஆபாச வார்த்தைகளை உபயோகித்தல், நிந்தனைப் பேச்சு ஆகியவைகளை தவிர்ப்பது மிக அவசியம். ஆனால், ஹாஸ்யம் கலந்துரையாடலில் வரவேற்கப்படுகிறது . ;-).

வகுப்பறை வள நூல்கள் அனைத்தும் தீவிரமான தரக்கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்படுகிறது. அதன் தரம், தேவை, தகுதி ஆகியவைகள் இதன் மூலம் கண்காணிக்கப்படுகிறது. எங்களது ஆசிரியர்கள்- பாட நூல் வல்லுனர்கள், மொழி வல்லுனர்கள், இணைய தள மின் வலை சக மதிபீட்டாளர்கள் (எங்கள் மதிப்பீட்டு வழிகாட்டு முறைகளை இதில் காணவும்) ஆகியவர்களின் துணையுடன் இந்தப் பணியினைச் செம்மையாகச் செய்கிறாரகள்.

படைப்புகளில் பெரும்பாலானவைகள் இந்தியாவின் பல பாகங்களில் உள்ள பல மொழிகள் பேசும் ஆசிரியர்களால் உருவாக்கப்பட இருக்கின்றன என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்களது போர்டலின் படைப்புகள் எல்லாம் ஒவ்வொரு பகுதியின் உண்மையான அடிப்படைத் தேவை, அதன் பண்பு, கல்வியின் தேவைகள் ஆகியவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் இதற்குக் காரணமாகும். அப்படிப் பட்ட படைப்புகள் எங்களது போர்டல் வழி மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது தூது அஞ்சல் (courier) மூலமாகவோ எங்களது போர்டல் குழுவினருக்கு அனுப்பி வைக்கலாம். ( படைப்புகளை அனுப்புவதற்கான வழிகாட்டுதலை இதில் பார்க்கவும்)

எங்களது இன்னொரு பெரிய முக்கிய பொறுப்பு மற்ற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தரமான படைப்புகளை தேர்வு செய்வதாகும். இந்தியா முழுதும் பரவி செயல்படும் பல நிறுவன்ங்கள் பல மொழிகளில் சிறப்பான படைப்புகளை உருவாக்கினாலும், அவைகளைப் பரவலாகப் பயன்படும் முறையில் செய்ய போதுமான அடிப்படை வசதிகள் அவர்களிடம் இல்லை. அப்படிப்பட்ட நிறுவனங்கள் எங்களுடன் படைப்புகளை பகிர்ந்து கொள்ளும் கூட்டாளிகளாகச் சேர்ந்து செயல் படலாம். ( எங்களது படைப்புக் கூட்டாளிகள் என்ற இக் குறிப்பைப் பார்க்கவும். எவ்வாறு எங்களுடன் கூட்டுச் சேர்ந்து படைப்புக் கூட்டாளியாகப் பணிபுரியலாம் என்பதற்கு, இதைப் படிக்கவும். )

தரமானமான வள நூல் படைப்புகள் பலவகையான குழுக்களுக்குப் பயன்படவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அந்தப் படைப்புகளை பல இந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்து, இந்தப் போர்டலில் வெளியிடுகிறோம்.

எங்களது குழுவின் பாட நூல வல்லுனர்களும் சில வளமான படைப்புகளை உருவாக்குகிறார்கள்.

போர்டலில் பிரசுரமாகும் படைப்புகளின் தன்மைகள்:
எங்களது டீச்சர்ஸ் போர்டலின் - www.teachersofindia.org - வளமான படைப்புகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. வகுப்பறை வளமான பாடப் படைப்புகள்: இந்தப் படைப்புகளை ஆசிரியர்கள் வகுப்பில் பாடங்களைக் கற்பிக்கப் பயன்படுத்தலாம். இதில் கட்டுரை, ஆடியோ, மின்வலை நூல், பவர் பாயிண்ட் விளக்கப் பாடங்கள், வீடியோ என்ற கண்ணொளி, செய்முறைத் தாள், பாட விளக்கமுறை, பாடப் பயிற்சி, படம் ஆகியவைகள் அடங்கும்.
  2. ஆசிரியர் முன்னேற வளமான பாடப் படைப்புகள்: இந்தப் படைப்புகள் ஆசிரியர்கள் தங்கள் பணியில் சிறக்க உதவும். இதில் கட்டுரை, ஆடியோ, மின்வலை நூல்கள், பவர் பாயிண்ட் விளளக்கப் பாடங்கள், வீடியோ படம் ஆகியவைகளுடன் பேட்டிகள், கலந்துரையாடல்கள், திரைப்படங்கள் ஆகியவைகள் இடம் பெறும். இந்தப் படைப்புகளில் கல்வி, கல்வியில் உளவியல், தேசிய மற்றும் உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் வெற்றிகரமான பயிற்சிகள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் ஆகியவைகளில் தற்போதைய நிலைகள் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும்.

படைப்புகள் எந்த அளவுக்கு இலவசமாக இருக்கிறது என்பதைப் பற்றி - பதிப்புரிமை (Copy Right) கொள்கை:
டீச்சர்ஸ் போர்டல் - www.teachersofindia.org கல்விக்காக இந்தியாவின் எல்லா மொழிகள் மற்றும் அனைத்து பாகங்களில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் எந்தவித கட்டணமும் இன்றி அதன் வளமான பாடப்படைப்புகளை பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறது. ஆகையால், பொது சிருஷ்டிகளுக்கான உரிமம் (Creative Commons Licenses) என்ற மிகவும் தாராளமாக, பொறுப்புடன் பயன்படுத்துவதை உறுதிசெய்யவதற்காக குறைந்த அளவாகக் கட்டுப்படுத்தும் இந்த உரிமம் - (License) எங்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த போர்டலில் உள்ள ஒவ்வொரு படைப்புகளும் கீழே உள்ள ஏதாவது ஒரு சின்னம் தாங்கி வெளிவரும். இந்த சின்னங்களின் அர்த்தங்களை நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள சில காலம் பிடிக்கும். அதாவது ஒவ்வொரு படைப்புகளையும் எந்த அளவு சுதந்திரமாக பயன்படுத்த முடியும் என்பதை பிறகு நீங்கள் புரிந்து கொண்டுவிடுவீர்கள்.

Attribution-NonCommercial-ShareAlike CC BY-NC-SA

மேலே உள்ள லைசன்ஸ் சின்னம் பயனாளர்களான உங்களுக்குக் கொடுக்கும் உரிமைகள்: நகல் எடுத்தல், வினியோகித்தல், இணைத்தல், மாற்றுதல், மேம்படுத்தல். ஆனால் இவைகளை எந்தவித லாப நோக்கமின்றிச் செய்வதற்குத் தான் அனுமதி உண்டு. அந்தப் படைப்புகளில் மூலப் படைப்புகளைக் குறிப்பிடுவதுடன், அந்தப் படைப்புகள் மூலப் படைப்பின் வகையான லைசன்ஸ் கீழே வெளியிடப்படவேண்டும்.

Attribution-NonCommercial-NoDerivs CC BY-NC-ND

மேலே உள்ள லைசன்ஸ் சின்னம் பயனாளர்களுக்கு அளிக்கும் உரிமைகள்: படைப்புகளைப் பதிவிறக்கம் செய்தல், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளல் ஆகிய இரண்டைத்தான் இது அனுமதிக்கிறது. பயன்படுத்தும் போது, மூலப் படைப்பைத் தெரிவிக்க வேண்டும். அதில் நீங்கள் எந்தவிதமான மாற்றங்களையோ அல்லது லாபம் ஈட்டும் வழியிலேயோ பயன்படுத்த இந்த லைசன்ஸ் இடம் அளிக்காது.

கிரியேடிவ் காமன்ஸ் லைசன்ஸ் (Creative Commons License) பற்றி மேலும் விவரம் தெரிய, இங்கே சொடுக்கவும் click here

© All Rights Reserved

அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பானவை என்ற இந்தச் சின்னம் காப்பி ரைட் சட்டத்தின் கீழ் வருகிறது. பயனாளர்கள் நகல் எடுப்பதோ, வினியோகிப்பதோ, படைப்புகளில் எந்தவித மாற்றமோ செய்வதாக இருப்பின், அந்த படைப்பின் காப்பி ரைட் உரிமையைப் பெற்றவர்களிடம் அனுமதி பெற்ற பிறகே செயல்படுத்த வேண்டும்.

ஸ்டேண்டார்ட் யு-ட்யூப் லைசன்ஸ் - (Standard YouTube License)
யு-ட்யூப் லைசன்ஸ் - ஆல் ரைட் ரிசர்வ்டு என்ற உரிமம் போன்றது மேலும் தெரிய, இங்கே சொடுக்கவும்

முன்பே பிரசுரமான கட்டுரைகளை மீண்டும் பிரசுரித்தல்:
பிரசுர உரிமை பெற்றவர்களின் அனுமதி பெற்று, முன்பே பிரசுரிக்கப்பட்டவைகளை மீண்டும் மறுபதிப்பாக நமது போர்டலிலும் வெளியிடலாம். கட்டுரையின் இறுதியில், ஆசிரியர் குறிப்பில் முன்பு பிரசுரமான தகவலின் விவரங்களான - பிரசுர இதழ் - இதழின் எண் ஆகியவைகள் வெளியிடப்படவேண்டும். முன்பே பிரசுரமான கட்டுரைகளை அனுப்பும் போது, முதல் காப்பிரைட் பெற்றவரின் அனுமதிக் கடிதத்தையும் உடன் இணைத்து, போர்டல் குழுவுக்கு அனுப்பவேண்டும்.

எங்களது டீச்சர்ஸ் போர்டலில் வெளியிடப்பட்ட கட்டுரைகளை மீண்டும் அவைகளின் படைப்பாளிகள் மறு பிரசுரம் செய்வதற்கு பூரண அனுமதி உண்டு. அப்படி வெளியிடும் போது, அந்தக் கட்டுரை முதன் முதலில் டீச்சர்ஸ் போர்டலில் வெளியிடப்பட்டது என்பதை அவர்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

படைப்பாளிகளின் நேர்மை (உரிமம் மற்றும் படைப்புகளை திருடுதல்):
படைப்புகளை பாதுகாக்கும் உரிமைகளை - (Intellectual Property Rights) - டீச்சார்ஸ் போர்டல் மதிப்பதுடன், அதைத் தீவிரமாகக் கடைப்பிடுத்தும், எங்களது படைப்பாளிகளையும் அதைக் கடைப்பிடிக்கும் படியும் அறிவுறுத்துகிறோம். எங்களுக்கு ஒரு படைப்பை அனுப்பும் போது, அதன் படைப்பாளி அந்தப் படைப்பு தனது சொந்த கற்பனை என்றும் - இல்லாவிடில் அதன் மூலத்தை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்க வேண்டும் - அது எந்தப் படைப்பிலிருந்தும் திருடப்பட்டதில்லை என்றும் உறுதி அளிக்க வேண்டும்.

போர்டலுக்கு அனுப்பிய வள நூல்கள் எல்லாம் போர்டலின் நிரந்தரமான படைப்புகளாகக் கருதப்படும். அதை உருவாக்கிய படைப்பாளிகளுக்கு போர்டலிருந்து அதை திரும்பப் பெறும் உரிமையையோ அல்லது அதை போர்டலிருந்து அழிக்கும் உரிமையையோ கிடையாது. ஆனால், சிலர் ஏதோ ஒரு காரணத்திற்காக சிலர் அந்த படைப்பை போர்டலிருந்து எடுக்க விரும்பினால், அவர்கள் போர்டல் ஆசிரியருக்கு எழுதலாம்.

படைப்புகளைப் பற்றிய திறந்த மனப்பான்மையை நாங்கள் கொண்டிருக்கும் நிலையிலும், போர்டலின் முக்கியமான வாசகர்களுக்கு எந்த ஒரு படைப்பின் வாசகங்கள் ரசனைக் குறைவாகவோ அல்லது பெறுத்த மற்றமாக இருப்பதாகவோ பட்டாலும், அதை வெளியிடுவது- வெளியிடாமல் இருப்பது என்ற உரிமையை ஆசிரியர் குழுமம் தான் தீர்மானிக்கும். அத்துடன், எந்தக் காரணத்தைத் தெரிவிக்காமலும், படைப்பாளர்களுக்குத் தெரியப்படுத்தாமலும், போர்டல் தளத்திலிருந்து எந்த வாசகத்தையும் அல்லது படைப்பையும் நீக்கும் உரிமையை டீச்சர்ஸ் போர்டல் கொண்டுள்ளது.

பொறுப்பு உரிமை கோராமை அறிவிப்பு:
டீச்சர்ஸ் அஃப் இந்தியா ஆசிரியர்கள், ஆசிரியர்களின் ஆசான்கள் ஆகியவர்களுக்குப் பயன்படும் படைப்புகளையும், தகவல்களையும் அளிக்கும் ஒரு தளமாக விளங்குகிறது. அத்துடன் இந்த தளம் அவர்களுக்குப் பயன்படும் கல்வி சம்பந்தமான பல வலைத் தளங்களின் மின் தொடர்புகளையும் அளித்து உதவுகிறது. பயனாளர்கள் மற்றும் மின் வலையினர் ஆகியவர்கள் அவைகளில் வெளிப்படுத்திய கருத்துக்களை நாங்களும் கொண்டிருக்கிறோம் என்பதை இவைகள் குறிப்பதாகக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அத்துடன் அவைகளில் வெளிப்படுத்திய தகவல்களை நாங்கள் சரிபார்ப்பதற்கு எங்களிடம் எந்த முகாந்திரமும் இல்லை. ஆகையால், இந்தத் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல்கள், விமரிசனங்கள், முடிவுகள் ஆகியவைகளால் எழும் எந்தவிதமான நேரிடையான அல்லது மறைமுகமான  எந்த இழப்புக்கும் அல்லது சேதத்திற்கும் எந்த விதத்திலும்  டீச்சர்ஸ் அஃப் இந்தியா பொறுப்பகாது.

19861 registered users
7801 resources