21 – வது நூற்றாண்டுக்கான பூகோளக் கல்வி

3-ம் தேதி டிசம்பர் மாதம் 1971-ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை அன்று, பாகிஸ்தானின் ஆகாய விமானப்படை விமானங்கள் இந்திய ஆகாய எல்லையை மீறிய அந்தச் செயல் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் ஏற்பட்ட ஒரு முழு யுத்தத்திற்கு வித்தாகிவிட்டது. அதற்கு அடுத்த நாளான 4-ம் தேதி சனிக்கிழமை அன்று, பங்களூரில் உள்ள நேஷனல் உயர்நிலைப் பள்ளியின்  8-ம் வகுப்பு B – பிரிவு சமூக அறிவியல் ஆசிரியர் திரு. நரசன்னா காலையில் எங்களது முதல் பிரிவு பாடம் நடத்த வகுப்பில் உள்ளே நுழைந்தார்.

அவர் எங்களிடம் சொன்னார்: “இன்று, உலகச் செய்திகளைப் பற்றி ஒரு ஐந்து நிமிடங்கள் நாம் செலவிடுவோம்.” நாங்கள் எல்லோரும் சிறிது உற்சாகமானோம். பாடப் புத்தகத்தில் நேரிடையாக இல்லாத எதையும் நாங்கள் திறந்த மனத்துடன் ஏற்கத் தயாராக இருந்தோம். ஒரு உலக வரைபடத்திற்காக அவர் சுற்று முற்றும் பார்த்தார். ஒன்றும் எங்கள் வகுப்பில் காணப்படவில்லை. அந்த வகுப்பில் உள்ள 82 பேர்களான நாங்கள் எந்தவிதமான எதிர்பார்ப்போ அல்லது உணர்ச்சியோ இல்லாமல் ‘ஆ’ என்றபடி அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

பிறகு அவர் எங்களை உணர்ச்சியின் எல்லைக்கே அழைத்துச் சென்று விட்டார். அவர் கரும்பலகையை முழுதும் துடைத்துச் சுத்தம் செய்து விட்டு, உலக வரைபடத்தை அதில் கோடிட்டு வரைந்து காட்டினார்! எங்களது அனைவரின் ஆர்வம் மேலோங்கி, அது அந்த அறை முழுதும் பரவுவதை நாங்கள் உணர்ந்தோம். அவர் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய பல குணங்களில் ஒன்றான – ‘ஆசிரியர்களின் அபூர்வ நேரங்கள்’ என்று நான் அதை இப்பொழுது இப்படி குறிப்பிட விழைகிறேன் – அந்த நேரத்தில் எங்களது ‘மூளையில் அறிவுப் பிரகாசமான வெளிச்சம்’ ஏற்றப்பட்டு, ஒளி பரவுவதை உணர்ந்தோம். என்னுடைய ஒளியின் சக்தி 2 வாட் அளவுக்கு மேல் இருக்கும். ஆனால், அது அணையாமல் சுடர் விட்டுக் கொண்டே இருந்தது.

பாகிஸ்தான்- இந்திய யுத்தத்தின் பின்னணியைப் பற்றிய ஒரு விரிவான வர்ணனையை எங்களுக்கு அளிக்க அவர் ஆரம்பித்தார். 1947-ஆம் ஆண்டிலிருந்து 1971-ஆம் ஆண்டு வரையிலும் நடந்த சம்பவங்களை விரைவாக எங்களுக்கு எடுத்துரைத்தார். கிழக்கு பகிஸ்தானுக்கு இழைக்கைப்பட்ட  அநியாயங்கள், அவர்களின் எதிர்ப்புகள், ராணுவ அடக்குமுறை, சீனாவின் தலையீடு, ‘இந்தியா ஒரு போதும் யுத்தத்தில் செயல்பாடாது’ என்ற இந்தியாவின் கொள்கையை - (இருப்பினும் உண்மையில் இந்தியா யுத்தத்திற்கு ஆயத்தமாக்கி கொண்டிருந்த போதிலும்) - எடுத்துரைக்க இந்திரா காந்தி அம்மையார் மேற்கொண்ட மேற்கத்திய பல நாடுகளின் தலைநகரங்களின் சுற்றுப்பயணம் ஆகிய அனைத்தையும் அவர் விளக்கிச் சொன்னார். இதை அனைத்தையும் கன்னடத்தில் விளக்கியது நேரில் அவைகளை நாங்கள் பார்ப்பதாக இருந்தது. அவைகளைப் பற்றி குழந்தைகளான நாங்கள் பேசினோம். மேலும், படம் வரைவதில் அவர் ஒரு சிறந்த நிபுணர். இந்திரா காந்தி மற்றும் ரிச்சர்ட் நிக்சன் இருவரும் நேருக்கு நேர் முகம் பார்த்த படி அவர்களின் நீண்ட மூக்குளை நீட்டியபடி படமாக கரும்பலகையில் வரைந்தும், இந்தியாவின் அநியாயமான நடவடிக்கையைப் பற்றி இறுக்கமான முகத்துடன் இருக்கும் சூ-என்-லாய் - (Zhou En-Lai) இடம் கோபமாகக் கத்தும் டிக்கா கான்- (Tikka Khan) - ஆகியவர்களின் படங்களை வரைந்தும் அவர் காட்டினார். அந்த ஐந்து நிமிடங்கள் அனைத்து சமூகப் பாட வகுப்புகளாக அந்த யுத்த நாட்களில் மாறியது. (யுத்தம் 16-ம் தேதி டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்தது.) பூகோள அரசியல், அரசியல் சரித்திரம், அரசியல் மற்றும் சரித்திரப் பூகோளம் ஆகிய பாடங்களை எனக்கு அவர் தான் அறிமுகம் செய்தார்.

1993-ஆம் ஆண்டு – அதாவது 22 வருடங்களுக்குப் பிறகு – பூகோளத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்ற பொழுது, அந்தப் பட்டம் பெற எழுதிய என்னுடைய ஆய்வுக் கட்டுரைகளை திரு. நரசன்னாவின் ஞாபகார்த்தமாக அவருக்கு அர்ப்பணம் செய்தேன். அதன் பிறகு 2010-ஆம் ஆண்டு – அதாவது 39 வருடங்களுக்குப் பிறகு கூட, அந்த சனிக்கிழமையில் காலை வேளையில் அந்த வகுப்பில் நடந்த ஒவ்வொரு உணர்ச்சிகரமானவைகளை நான் என் மனத்திரையில் நன்றாக நினைத்துப் பார்க்கிறேன்.

இது தான் ஆசிரியரின் சக்தியாகும். இந்த சம்பவம் பலவகைகளிலும் இன்று நமக்கு பல பாடங்களைக் கற்பிக்கின்றன. அவைகளில் சிலவற்றை நான் இங்கே வர்ணிக்கப் போகிறேன். 

ஆசிரியரின் சக்தி

பாடங்களை விளக்கிச் சொல்வதில் முழு மனதுடன் ஈடுபட்டு, அந்தப் பாடத்தைப் பற்றிய ஆழ்ந்த ஆர்வம் கொண்டுள்ள ஒரு பெரிய உன்னதமான ஆசிரியர் வம்சத்தைச் சேர்ந்தவர் திரு. நரசன்னா ஆசிரியர் அவர்கள். பூகோளக் கற்பனையைப் பயன்படுத்திப் பாடம் சொல்லும் அவரது பாணியைப் போல் - எந்த ஒரு அரசாங்கம் வெளியிட்ட பூகோளப் பாடபுத்தகத்தினால் ஆர்வத்தைத் தூண்டமுடியாது.

ராணுவங்களின் முன்னேற்றங்களையும், தந்திரங்களையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியும். டெலிவிஷன், மின் அஞ்சல், செய்திச் சுருள் – ஆகிய ஒன்றும் இல்லாத காலம் அது. அவைகள் எல்லாம் பிற்காலத்தில் வந்தவைகள். ஆனால், அவைகள் ஒன்றும் இல்லாவிடினும், திரு. நரசன்னாவின் விளக்கங்கள், அவரே வரைந்து காட்டும் வரை படங்கள், சிந்திரங்கள், நாடகமாக நடித்துத்துக் காட்டல், பத்திரிகைகள் ஆகியவைகளைப் பயன்படுத்துவார். 4-12-1971 – அன்றிலிருந்து தான் நான் முதன் முதலில் பத்திரிகை படிக்க ஆரம்பித்தேன். அன்றிலிருந்து, பூகோளத்தை நான் எப்பொழுதும் நடப்பு சம்பவங்களுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பேன். அதன் மூலம், நமது உலகத்தைப் பற்றித் தெரிவதற்கு, பூகோளம் அடிப்படையான ஒன்று என்பதை நான் தெரிந்து கொண்டேன்.

இந்தியாவின் தீபகற்பத்தின் வடிவத்தின் முக்கியத்துவம், ஹிமாலய மலை அமைந்திருக்கும் இடம், பிரிவினையால் உண்டான வளங்கள் பிரிக்கப் பட்டது, சீதோஷ்ண மாறுதல்கள், கலாச்சார பூகோளங்கள் போன்றவைகளுடன் இன்னும் கணக்கில்லா பிறசம்பவங்களான பங்களா தேசம் உருவானது ஆகியவைகள் அனைத்தும் என் மனத்தில் உயிர்பெற்று மீண்டும் தோன்றின.

பொருத்தமானதில் மேலும் பொருத்தமானவைகள்

கிழக்கு ஆசியாவின் பூகோளம் நானே தொடர்ந்து பங்குகொள்ளும் பயிற்சியின் மூலமாக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது பங்கீட்டு முறைகள், நமது ராணுவீரர்களுக்கு நிதி திரட்டுதல், இரவில் வெளிச்சம் வெளியே தெரியாமல் இருட்டடிப்புச் செய்ய ஜன்னல்களை பழுப்பு நிறக் காகிதங்களால் ஒட்டுதல் ஆகியவைகளில் நான் பங்கு கொண்டேன். அவர் எங்களுக்கு வகுப்பில் கற்றுக் கொடுத்தது மிகவும் உடனே பயன்படும் பொருத்தமான ஒன்றாக இருந்தது. பழுப்புக் காகிதத்தால் இருட்டடிப்பை பங்களூரில் செய்ததின் மூலம் பூகோள ரீதியான காரணங்களை நான் அறிய முடிந்தது. ‘எல்லாம் சரியாக இருக்கிறது’ என்ற அறிவிப்பு கிடைக்கும் வரை விளக்குகளை அணைக்கும் படி மக்களிடம் வேண்டிபடி எங்களது தெருவில் அங்கும்-இங்கும் செல்லும் ஒல்லியான சிறுவர்கள் கூட்டத்தில் ஒருவனாக நானும் இருந்தேன்.

இப்பொழுதுள்ள நிலையைப் பற்றிச் சொல்ல வேண்டும். சமீபத்தில் நான் கன்னட மொழி மூலம் கற்பிக்கும் ஒரு அரசாங்கப் பள்ளியின் சமூகப் பாட 7-ம் வகுப்பிற்குச் சென்றேன். ஐரோப்பாவின் நாட்டு அமைப்புகளைப் பற்றி கற்றுக் கொண்டிருப்பதாக அந்த வகுப்பு மாணவர்கள் என்னிடம் சொன்னார்கள். ‘ரொம்பவும் மனத்தை மகிழ்விக்கும் ஒன்று’ என்று நினைக்கத் தோன்றியது.

நான் கரும்பலகையில் ஒரு வட்டம் வரைந்து, அதில் முக்கியமான அட்ச ரோகைகளை வரைந்து, அவைகளை அடையாளம் காட்டும் படி மாணவர்களைக் கேட்டுக் கொண்டேன். பிறகு, ஒரு மாணவரை உதவியாளராக இருக்கும் படி கரும்பலகைக்கு அருகில் வரும்படி அழைத்து, அந்த மாணவனை அந்த பூமியின் பூகோளப்படத்தில் ஐரோப்பா இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் படிச் சொன்னேன். ஒருவராலும் அதைச் செய்ய முடியவில்லை. அந்த வகுப்பு மாணவர்களுக்கு ஐரோப்பா எங்கு இருக்கிறது என்பது தெரியவில்லை. இந்தியா இருக்கும் இடத்தைக் காண்பிக்கச் சொன்னபோதும் இந்த நிலைதான் நீடித்தது.

‘உங்களது வாழ்விற்கு இப்படிப் பட்ட படிப்பால் என்ன நன்மை உண்டாகும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?’ என்று நான் அவர்களைக் கேட்டேன். அதற்கு அவர்களிடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. ஆனால், இந்தப் படிப்பால் பல பலன்கள் உண்டு. அதற்கு அந்தப்படிப்பை சரியான சந்தர்ப்பத்தில் பயன்படும் விதமாக அமைக்க நாம் முயல வேண்டுவது அவசியமாகும். ‘ஏதாவது குறிப்பிடும் விதத்தில் தினசரி வாழ்வில் நீங்கள் பூகோளத்தைப் பயன்படுத்துகிறீர்களா?’ என்று நான் அவர்களிடம் கேட்டதற்கு, அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

நான் அவர்களிடம் கேட்டேன்: ‘தினமும் நீங்கள் பள்ளிக்கு எப்படி வருகிறீர்கள்? பள்ளிக்கு வந்து போகும் பாதையை நீங்கள் எப்படித் தெரிந்து கொள்கிறீர்கள்?’

‘அந்த மாதிரியான சமயங்களில் பூகோள அறிவினை நீங்கள் பயன் படுத்துகிறீர்கள்’ என்று நான் விளக்கினேன். மாணவர்களில் பல அறிந்ததற்கு அறிகுறியாகத் தங்கள் தலைகளை ஆட்டினார்கள்.

அதன் பிறகு, நான் கேட்டேன்: ‘விவசாயத் தொழில் செய்யும் குடும்பத்திலிருந்து வரும் மாணவர்கள் எத்தனை பேர்கள்?’ அதற்கு அநேகமாக எல்லோரும் ‘ஆம்’ என்றார்கள். அவர்களது குடும்ப நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களைப் பற்றிய விவரங்களை விரைவாக நாங்கள் சேகரித்தோம். பிறகு, நான் அவர்களிடம் ‘ஏன் ஒரு சில குறிப்பிட்ட பயிர்களே நிலங்களில் பயிர்ச் செய்யப்படுகின்றன? மற்றவகைப் பயிர்கள் ஏன் பயிர் செய்யப்படுவதில்லை?’ என்ற சில கேள்விகளை நான் எழுப்பினேன். ஒரு துரித விவாதம் எழுந்து, அதன் காரணமாக, மண்ணின் தன்மையின் முக்கியம், வானிநிலை, தண்ணீர், சந்தை, ஆகார விருப்பங்கள், காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் பழக்கங்கள் தெரியவந்தன. அவர்களது பெற்றோர்கள் பூகோளத்தைப்  நடைமுறையில் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் என்பதுடன், ஒவ்வொரு நாளும் பூகோளத்தை  பயன்படுத்தி வருகிறார்கள் என்று நான் விளக்கினேன். வீட்டிலேயே பூகோளப் பாடம் நடை முறைப் படுத்தப்படுகிறது!

நம் காலடியிலேயே நடைபெறும் பல பூகோளப் பாடங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல், தூரதேசத்தைப் பற்றிக் கற்பதனால் ஏற்படும்  பயனைக் குறித்து நாம் கேள்வி கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மாணவர்களின் வாழ்விற்கு அவைகள் பொருத்தமாக இருப்பின், அப்படிப் பட்ட எந்த பாடமாயினும் அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கும்.

பாடம், ஒழுங்கு முறை, ஒருங்கிணைப்பு

பாடப் புத்தகங்களில் சொல்லப்பட்டவைகளை விடுத்து மற்ற எவைகளையும் சொல்லாத ஒரு இறுக்கமான சூழ்நிலைகளிலேயே பள்ளிகளில் பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. பெளதிகம் (physics), வேதியல் (chemistry), உயிரியல் (biology), வடிவகணிதம்( geometry), பொருளாதாரம் (economics), மானிட இயல்  (anthropology), சமூக இயல் (sociology), மொழி (language), கலைகள் (arts) ஆகியவைகளுடன் பூகோளம் எப்படி தொடர்பு கொள்ள முடியும் என்பதைப் பற்றி நமது பல மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுவதில்லை. ஆதலால், உலக நடப்புக்களை அறிவதில் எந்தப் பிரயோசனுமும் இல்லாது  போய்விடுகிறது.

பூகோளத்தின் சக்தி இருவகைப்படும்: (a) நமது உலகத்தை அறியப் பயன்படும் – அதாவது பூமி மற்றும் பல இடங்களிளைப் பற்றி அறிய உதவும் - ஒரு உன்னதமான வடிவமைப்பாக அமைந்துள்ளது. (b) எல்லா பாடங்களையும் ஒரு சட்ட அமைப்பில் ஒருங்கிணைத்து ஒரு பரந்த உலகத்தை நம் மனத்தின் முன் திறந்து காட்டும் விதமாக, அந்தப் பாடங்களில் காணப்படும் தொடர்புக் கொள்கைகள் நமக்குத் தெளிவாகின்றன. நாம் இந்த வழியைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, பூகோளப் பாடத்தை நாம் ஒரு ஒழுங்குமுறையைக் கற்பிப்பதாகக் கொள்வோமே அன்றி அதை வெறும் ஒரு பாடமாக அல்ல.

இது ஏதோ வெறும் அறிவுப் பயிற்சி அல்ல. இது ஒரு ஒருங்கிணைந்த – ஒரு முழுமையான நமது உலகத்தைப் பற்றிய புரிதலாகும்.  பிரச்சனைகளை அலசி, தீர்வு காணவும், திட்டமிடவும், சமூக நீதிக்குப் பாடுபட்டுச் செயல்படுவதற்கும் அந்தப் புரிதலால் நாம் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக உருவாக்கப்படுவோம். இந்த ‘கிடைமட்ட ஒருங்கிணைப்பு’ (horizontal integration) – அதாவது ஒரு மாதிரியின் கீழ் பலவிதமான பாடங்கள் தொடர்பு கொள்ளும் இணைப்பு முறை - என்ற வழியின் மூலம் பூகோளம் நன்கு சக்தி பெற்று விடும். தென்மேற்கு பருவ மழைப் பாடத்தை நான் பயன்படுத்தி, பூகோளம் எப்படி மற்ற பாடங்களையும் தன்னுடன் ஒருங்கிணைப்பதற்கு உறுதுணையாக இருக்கிறது என்பதை ஆசிரியர்களும், மாணவர்களும் புரிந்து கொள்ளும்படிச் செய்வேன்.  தென் மேற்குப் பருவங்களின் அற்புதமான அழகினை - பெளதிகம், வேதியல், பூகோளம், கலாச்சாரம், உயிரியல், கணிதம், நுண் மற்றும் மேடைக் கலைகள், மொழி ஆகியவைகளைப் பயன்படுத்தாமல் உங்களால் அவைகளை முற்றிலும் அறிந்து கொள்ள முடியாது. பூகோள ஆசிரியர்கள் இந்த ஆய்வுப் பட்டறை முடிந்த உடன் என்னை அணுகிச் சொன்னார்கள்: ‘நீங்கள் சொன்ன இந்த வழியில் நாங்கள் பூகோளப்பாடத்தைப் பற்றி ஒரு போதும் யோசித்ததில்லை!’ அந்த வழியில் பூகோளப்பாடத்தைப் போதிப்பது பிரகாசமானது, ஆனந்தமானது, சக்திவாய்ந்தது. ஆசிரியர்கள் தங்கள் வகுப்புகளில் பாடங்களின் தலைப்புகளை இணைப்பதின் மூலம் வகைப்படுத்தி, அவைகளை தென்மேற்கு பருவக்காலங்களுடன் தொடர்பு உண்டாக்கி செய்வதைத் தான் இது குறிக்கிறது. பொதுவாக, வேறு சில உதாரணங்களை விடுத்துப் பருவகால உதாரணங்களைப் பயன்படுத்துவதைத் தான் இது காட்டுகிறது. இந்த வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது, பூகோளப் பாடத்தின் சக்தியைப் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருப்பதுடன், பல பாடங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் சிந்தனையை வளர்க்கும். 

பூகோளத்தின் சக்தி இருவகைப்படும்: (a) நமது உலகத்தை அறியப் பயன்படும் – அதாவது பூமி மற்றும் பல இடங்களிளைப் பற்றி அறிய உதவும் - ஒரு உன்னதமான வடிவமைப்பாக அமைந்துள்ளது. (b) எல்லா பாடங்களையும் ஒரு சட்ட அமைப்பில் ஒருங்கிணைத்து ஒரு பரந்த உலகத்தை நம் மனத்தின் முன் திறந்து காட்டும் விதமாக, அந்தப் பாடங்களில் காணப்படும் தொடர்புக் கொள்கைகள் நமக்குத் தெளிவாகின்றன.

 

மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பாக முன்னேறும் பொழுது, அவர்களது பூகோள அறிவும் பகுத்துணர்ந்து பயன் படும் வகையில் மாணவர்களின் திறமைகள் உருவாகும் அளவு அமையவேண்டும். இதை ‘செங்குத்து ஒருங்கிணைப்பு’ – ‘vertitical integration’ என்று சொல்வார்கள். மேலே விவரித்த தென்மேற்கு பருவமழை உதாரணம் இங்கும் பொருந்தும். பருவ மழைக்காலத்தில் ஏற்படும் சில சாதாரண வடிவங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்வது ஆரம்ப வகையான செயலாக இருக்கும். பிறகு, அடை மழை, மழையில் விளையாடல், மழையில் விளையாடுவதால் மக்களுக்கு ஏற்படும் பயங்கள், மழைகாலங்களில் எந்தவகையான உணவுகளை நான் சாப்பிடவேண்டும் என்ற பலவகையானவைகள் அடங்கும். பிறகு வரும் ஒவ்வொரு வருடத்திலும், பருவகால முறையின் சிக்கலானவற்றைப் பார்த்து அதைப் பற்றிய விவரங்களை அறிந்தும், அவைகளை எவ்வாறு நாம் அறிந்து கொள்ள முயலுகிறோம், அவைகளின் செயல்பாடுகளால் ஏற்படும் காரணிகள் ஆகியவைகளைத் தொகுத்து உருவாக்குதல் வேண்டும். இப்படியாக, ஒரு பூகோள மாணவன் வருடா வருடம் பலவிதமான திறமைகளை  அமைப்புப் படிவங்களை ஒப்புநோக்குதலில் ஆரம்பித்து, அவ்வப்போது ஏற்படும் காரணிகள் மற்றும் அமைப்புகளையும்  தாக்கங்களையும் ஆராயும் நிலைக்கு நகர்ந்து, பிறகு இறுதியாக அவைகளைப் பயன்படுத்துவதில் வந்து முடியும். 

21-ம் நூற்றாண்டின் பூகோளக் கல்வியை மீண்டும் புதுப்பித்தல்

21-ம் நூற்றாண்டின் சக்திவாய்ந்த ஆசிரியர்களாகவும், மாணவர்களாகவும் உருவாக்கப் பூகோளக் கல்வியின் கொள்கை மற்றும் பயிற்சியில் அவர்களின் திறமைகளை அதிகரிக்க வேண்டிய மிக முக்கியமான அவசியம் இருக்கிறது. ‘இயற்கையான அறிவியல்கள்’ என்ற அளவில் மனித உயர்வுக்கு சமூகக் கல்வி ஆதாரமான ஒன்று என்பதை அடிப்படைத் தத்துவமாக ஒத்துக்கொண்டு தான் நாம் ஆரம்பிக்க வேண்டியது அவசியமாகிறது. கல்வி கற்பிப்பவர்களை இதை உணரும்படிக் ‘கற்பிக்காமல்’ இது சாத்தியப்படாது!

நமக்குத் தேவை ஒரே சமயத்தில் மூன்று வழிப் பாதையைக் கடைப்பிடிக்க வேண்டியதாகும்:

  1. பாடத்திட்டத்தை மேம்படுத்தல்

பாடத்திட்டம், பாட விளக்கம், பரிட்சைகள், வெற்றியின் சதவிகிதங்கள் ஆகியவைகள் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாதவைகள். இருப்பினும், கருத்துக்களைப் புரியவைப்பதிலும், அவைகளைச் செயல்படுத்துவதிலும் சிறிது அதிக முயற்சி எடுத்தால் ஒரு சக்தி வாய்ந்த ஆசிரியர் பூகோள வகுப்பை மாணவர்கள் விரும்பும் அளவில் ஆக்கி விடலாம்.

இதற்கு ஒரு சக்தி வாய்ந்த வழி என்ன வென்றால், நிகழ்கால சம்வங்கள் மற்றும் அனைவருக்கும் தெரிந்த பல்வேறு செயல்களைப் பயன்படுத்தி, பூகோளக் கருத்துகளை விவரித்துக் கூறவேண்டும், உதாரணமாக, நடுத்தரப் பள்ளி பூகோள ஆசிரியர்களுக்கு அட்ச ரேகைகள்-தீர்க்க ரேகைகள் ஆகியவைகளைக் கற்றுக் கொடுப்பது மிகுந்த சிரமமான ஒன்றாகும்.  இரண்டு நாள்காட்டி மாதங்களைப் பயன்படுத்தி – அதாவது கிருஸ்மஸ் – புதுவருடம் – ஆகிய இரண்டினை வைத்து, ஆசிரியர்கள் திறமையாகக் கற்றுக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பாண்டி என்ற தரையிலே கட்டம் வரைந்து நொண்டி நொண்டி விளையாடுவது ரொம்பவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு இடப்பரிமாணங்களின் அடிப்படைத் தத்துவங்களை விளக்குவதற்கு இந்த விளையாட்டு ஒரு சிறந்த வழியாகும். (இந்த விளையாட்டின் மூலம் ஆண்-பெண் பாகுபாடுகளை உடைத்தெரியலாம்!)

தற்கால நிகழ்வுகளைப் பயன்படுத்துவதற்கு ஆசிரியர் ஒரு சிறிது ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். அத்துடன் மாணவர்களும் தினசரிகளைப் படிக்க வேண்டியதும் அவசியம். பலவிதமான தினசரிகளைப் பயன்படுத்திக் கற்பித்தல் என்ற பயிற்சியை மும்முறமாகப் பள்ளிகளில் செயல்படுத்துவது பயன் அளிக்கும்.

பல வகுப்புகளில், ஆசிரியர்-மாணவர்களின் விகிதாசாரம் இந்த மாதிரியான பயிற்சி வழிக் கற்பித்தலுக்கு இடையூறாக இருக்கிறது. ஒரு கதை சொல்லல், ஒரு கவிதையை நினைவு கூறல், ஒரு சினிமாப்பாட்டுப் பாடுதல் –ஆகிய அனைத்தும் பாடங்களுக்கு பொருத்தமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். வேடிக்கையை இணைத்துப் பாடம் சொல்வது அறிவதில் ஒரு தெளிவை அதிகமாக்கும் தன்மை கொண்டது. ஒரு நல்ல உரையாடல் திறமைகளை வளர்த்துக் கொண்டால், அதன் மூலம் பரிட்சையிலும் நன்கு செயல்பட முடியும். 

  1. பாடம் தழுவிய மற்ற பயிற்சிகளை ஊக்குவித்தல்

பாடம் தழுவிய மற்ற பயிற்சிகளைக் கற்பது என்பது பாடப் புத்தகங்களுடன் ஒருங்கிணைந்து, தொடர்புகொண்டு இருந்தாலும், பரிட்சையின் தேர்வுக்கு நேரடியாகப் பயன்படும் விதமாக இருக்காது. இருப்பினும், ஒரு தலைப்பினை மாணவர்கள் நன்றாக அறிந்து கொள்ளவும், அதைச் செயலில் நன்கு ஈடுபடுத்துவதற்கும் அவர்களுக்கு முடிகிறது. இதனால், தேர்வில் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு நன்கு பதில் எழுதும் திறனைப் பெறுகிறார்கள். (இது பல பயன்களில் இறுதியாகக் கிடைக்கும் பயனாகும்.)  இந்தப் பயிற்சிகள் நேரிடையாக பரிட்சை மதிப்பெண்களாக உருமாறி உதவ வேண்டிய அவசியமில்லை.

உதாரணம்: தினசரியைப் பயன்படுத்தி ஒரு இடத்தின் சீதோஷ்ண மாறுபாடுகளை அறிந்து கொள்ளும் பயிற்சியை சீதோஷ்ணம்/பருவகாலம் ஆகிய பாட அத்தியாயத்தின் ஒரு பகுதியாகச் செய்தல். தேர்வில் இதைப் பற்றிய கேள்வி நேரிடையாகக் கேட்கப்படாவிடினும், இந்தப் பயிற்சி  இயற்கையாக நிகழ்வதைப் பார்க்கும் சூழ்நிலையில், பூகோளம் எப்படி இயங்குகின்றது என்பதைப் பற்றி மாணவர்கள் அறிய உதவுகிறது.

  1. பாடம் தவிர்த்து பயிற்சிகளை ஊக்குவித்தல்

இத்தகைய பயிற்சிகள் பூகோள அறிவிற்கு மிகவும் முக்கியமான வழியாகும். கற்பவர்களின் மனங்களில் பூகோளத்தைப் பற்றிய அதிகமான ஆர்வத்தை ஏற்படுத்த உதவுவதுடன், பாடத்தைப் புரிந்து கொள்வதிலும் உதவிகரமாக இருக்கின்றது. பூகோளத்தை அறிந்து கொள்வதில் சிறந்த மதிப்புக் கூட்டும் வழியாக இருக்கின்றது. ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்கள் ஆகிய இருவர்களையும் சக்திவாய்ந்த அங்கமாக உருவாக்குவதில்  மனித சமூதாய அமைப்புகளின் பங்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது.

கீழ்க்கண்டவைகள் இதில் அடங்கும்:

a.     களப்பணி – நடந்து சென்று நிலத்தின் தன்மைகளை ஆராய்தல், பேட்டிகாணல், நில அளவு எடுத்தல் போன்ற களப்பணியின் மூலம் பூகோளத்தை அறிதல்.

பூகோளத்தில் எப்படி மனிதனின் சூழ்நிலையை சுலபமாக காட்டுவது என்பதை அறிவதற்குச் சுலபமான வழியை கீழ்க்கண்ட உதாரணங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன: பாதசாரிகள் நடைபாதைகளுக்கு முன்னுருமை கொடுக்காமல் எப்படி நாம் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் (இந்தியாவில் இது நகரங்களுக்கான பெரும் பிரச்சனையாக இருக்கிறது.);  சின்னஞ் சிறுவர்கள், மிகவும் வயதானவர்கள் ஆகியவர்களின் பாதுகாப்புகளில் நமது பூகோள ரீதியாக எவ்வாறு நாம் அவைகளில் கவனம் செலுத்துகிறோம்; மாற்றுத் திறனாளிகளுக்கு பூமியில் வலம் வர எவ்வாறு அனுகூலமாக அல்லது தடையாக செயல்படுகிறோம்.

பல வழி முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் – அதாவது பேசுதல், உச்சரித்தல், எழுதுதல், வரைபடங்கள் போன்றவைகளின் மூலம் – குழந்தைகளுக்கு கட்டளைகள் இடும் பொழுதும், செய்முறைகளை விளக்கும் பொழுதும் மிகவும் விளையாட்டாகவும், பயன் உள்ளதாகவும் பயிற்சிகள் அமைந்து இருக்க வேண்டும். இப்படி இருப்பதின் காரணமாக, அவர்களது பூகோள ஞானம் மற்றும் அவற்றைத் தெரியப்படுத்துவதில் திறமைகள் ஆகியவைகள் வளர்ச்சி அடைந்து, அதன் மூலம் தங்களது திறமைகளை முதலில் உணர்ந்து, நாள்பட, அவைகளும் ‘இயல்பான குணங்களாக’ அவர்களிடம் குடிகொண்டு விடும்.  

ஒரு சக்தி வாய்ந்த வழி என்ன வென்றால், நிகழ்கால சம்வங்கள் மற்றும் அனைவருக்கும் தெரிந்த பல்வேறு செயல்களைப் பயன்படுத்தி, பூகோளக் கருத்துகளை விவரித்துக் கூறவேண்டும், உதாரணமாக, நடுத்தரப் பள்ளி பூகோள ஆசிரியர்களுக்கு அட்ச ரேகைகள்-தீர்க்க ரேகைகள் ஆகியவைகளைக் கற்றுக் கொடுப்பது மிகுந்த சிரமமான ஒன்றாகும்.  இரண்டு நாள்காட்டி மாதங்களைப் பயன்படுத்தி – அதாவது கிருஸ்மஸ் – புதுவருடம் – ஆகிய இரண்டினை வைத்து, ஆசிரியர்கள் திறமையாகக் கற்றுக் கொடுக்கலாம்.

 

களப்பணி தொழில் நுட்பங்கள் உரையாடலில் உள்ள பல  திறமைகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கவும் முடியும். மாணவர்கள் கீழ்க்கண்டவைகளை அறிந்து கொள்ள வேண்டும்:  சுற்று வட்டாரங்களில் இருக்கும் பொது மரங்களால்  மக்களுக்கு என்ன பிரயோசனம்; எந்த வகையான கேள்விகளை மாணவர்கள் கேட்க வேண்டும்; அந்தக் கேள்விகளை எப்படிக் கேட்க வேண்டும்; அவர்கள் கேட்கும் கேள்விகள் அவர்கள் பெறும் பதில்களால் தெளிவு பெறுகிறார்கள் என்பதை அவர்கள் எப்படி அறியமுடியும் - என்பனவைகள்.

பள்ளி வளாகத்திலுள்ளேயே ஒரு சிறிய விவரங்கள் சேகரிக்கும் பயிற்சியை என்னுடைய மாணவர்களுக்கு ஒரு முறை நான் அளித்தேன். அந்த மாணவர்கள் உடனே என்னிடம் சொன்னார்கள்: ‘ஐயா, சில மனிதர்கள் எங்களிடம் பேசவே மாட்டார்கள்.’ பலவிதமான விளையாட்டான கேள்விகளாலும், ஒருவருக்கு ஒருவர் கேலி செய்து கொண்டும், ஒரு வழியாக நான் மனிதர்களிடமிருந்து பூகோளத் தகவல்களைப் பெறுவதற்கு அவர்களுடன் தொடர்பு கொள்ள சைகைகள் எவ்வளவு முக்கியமானதாக உள்ளது என்பதை மாணவர்கள் உணரும் படிச் செய்தேன்.  ‘நீங்கள் குழந்தைகள். பால் வடியும் முகத்துடன் பரிதாபமான பார்வையுடன் நீங்கள் கேட்டால், ஒருவரும் உங்களுக்குப் பதில் சொல்லாமல் இருக்க மாட்டார்கள்’ என்று நான் விளக்கினேன். இந்த யுக்தியை ஒரு சில குழந்தைகள் தான் பயன்படுத்தும் அவசியம் ஏற்பட்டது. ஆனால், அவர்கள் அனைவரும் மேற்கொண்ட பயிற்சியில் வெற்றி அடைந்ததைத் தெரிவித்தார்கள்.

a.   பொருள் பற்றிய ஆய்வுகள் – உலகத்தின் நிஜமாக நடைபெற்ற சம்பவங்களின் ஆய்வுகளைப் பயன்படுத்துதல், உண்மையான தகவல்களைப் பயன்படுத்தல், வாழ்வின் அவலங்களை அறிதல், நேர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பற்றிய ஆய்வு ஆகியவைகளுக்கான உதாரணங்கள்: சமூக நீதி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பெரும் சேதத் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு, சேவைப் பணி, வணிகம் ஆகியவைகள். அரசு சேரா அமைப்புகள் சமூகப் பிரச்சனைகளைப் பற்றிய விவரங்களிலிருந்து பெற்ற தகவல்களை நான் பயன்படுத்தினேன். உதாரணமாக, விபசாரத் தொழிலில் ஈடுபட்ட  பங்களூரில் உள்ள பெண்குழந்தைகளைப் பற்றிய ஆய்வு அறிக்கையைக் குறிப்பிடலாம். அதன் மூலம், நகர வாழ் பூகோளப் பிரச்சனைகளைப் பற்றிக் கற்பித்தோம். மாணவர்கள் மிகவும் அறிவு பூர்வமாகவும், உணர்ச்சி வசப்பட்டும் சமூக நீதிக்கான பிரச்சனையாக இவைகளைப் பற்றி அறிந்து கொண்டார்கள்.

b.   தகவல் தொழில் நுட்பப் பூகோளக் கல்வி -  நவீன எலக்ரானிக் கருவிகளை பூகோளத் தகவல்களை ஒழுங்கு முறைப் படுதுவதற்குப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது உலக செயற்கைக் கோள் செயல்முறை (GPS – Global Position System), பூகோள தகவல் செயல்முறை  (GIS – Geographic Information System), மின் அஞ்சல் (Internet) ஆகியவைகள் மிகவும் தேவையான ஆய்வுக்கும், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் திறமைகள் அடங்கிய பெட்டகமாக அமைகின்றது. 21-ம் நூற்றாண்டின் சந்தையில்  வேலைக்கும், கருதுக்களுக்கும்  போட்டி போட மாணவர்களுக்கு அது உதவிகரமாக இருக்கும்.

துரதிருஷ்டவசமாக, அநேகமாக எல்லா பாடத் திட்டங்களும் இதை மும்முரமாக கவனத்தில் கொள்வதில்லை. இந்த இடைவெளி நாகரீக சமூக அமைப்புகளால் நிரப்படவேண்டும். இந்தக் கட்டுரையினை எழுதும் தருணத்தில், இந்திய பூகோளப் பாடக் கழகம் (Indian Insitute of Geographical Studies) GeoVidyaa Geography Center of Excellence என்ற அமைப்பை பங்களூரில் ஒரு பள்ளி வளாகத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அது வருங்காலத்தில் இந்த இடைவெளியை நீக்கக் குறிப்பிட்ட துறைகளில் நுணுகி ஆராயும் வண்ணம் செயல்படும்.  

அடிப்படையான பூகோள தத்துவங்களில் நல்ல அறிதலுடன் கணினியைப் பற்றிய போதிய புரிதலைக் கொண்டு மாணவர்கள் இத்தகைய கருவிகளை உபயோகிக்கும் திறமை பெற்று, அவைகளை ஓரளவுக்கு வேகமாகப் பயன்படுத்தத் தெரிந்து கொண்டுவிடுவார்கள். இந்த வகையான தொழிற் கருவிகளையும் தொழில் நுட்பங்களையும் பற்றி எல்லா மாணவர்களும் 8-ம் வகுப்பிலிருந்து அறிவித்து, அவைகளை உபயோகிக்கும் படிச் செய்ய வேண்டும். கூகுலின் பூமியைப் பற்றியது போன்று உள்ள நவீனக் கருவிகளைப் பற்றிய அறிதல் இதற்கு ஆரம்ப படிக்கட்டுகள் என்றாலும், பூகோள அறிவிற்கு அவசியமான பொருட்கள் மற்றும் பயன்படுத்துவதற்கு வேண்டியவைகள் ஆகியவைகளைப் பெறுவதற்கான தீவிரமான திறமைகளை அவைகள் அளிக்க பெறமுடியாது. இருப்பினும், இதற்கான ஆரம்பத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

தொகுத்துச் சொல்லும் பொழுது, பூகோளக் கல்வி என்பது நமது கற்பவர்களின் அறிவின் தன்மைகளை விரிவாக்கி மேம்படுத்த மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். சமூகம் மற்றும் இயற்கை அறிவியல்களை இணைக்கும் ஒரு பாலமாக பூகோளம் ஒப்புக்கொள்ளப் படவேண்டும். 60 வருடங்களுக்கும் மேலாக, கல்வியில் ‘பூகோள அடிப்படைகளின்’ அவசியத்தை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அது மிகவும் சரியான முடிவு என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

இருப்பினும், பூகோள பாடங்களில் ‘மதிப்பை அதிகரித்தல்’ என்ற முறையில் நாங்கள் விரைவாகவும், விடாமுயற்சியுடனும் வலியுறுத்த ஆரம்பிக்க வேண்டியது அவசியமாகும். அப்பொழுதுதான், மேலும் மேலும் மக்கள் புதிதான வலிவான உலகம் உதிப்பதில் பங்கு கொள்ள உதவுவதற்கு வழி வகுக்க முடியும்.

இவைகளை விடக் குறைந்த செயலினால் பிரயோசனம் ஒன்றும் ஏற்படப் போவதில்லை.

 

சந்திர சேகர் பாலசந்திரன் பங்களூரைச் சேர்ந்தவர். யு.எஸ். மற்றும் இந்தியாவில் சுமார் 25 வருட காலம் பள்ளிகள்-கல்லூரிகளில் புகோளக் கல்வியைப் புகட்டுவதில் அவர் வேலை செய்துள்ளார். இந்தியன் இன்ஸ்டிடூட் ஆப் ஜியாக்கிரபிகல் ஸ்டடீஸ் (http://tiigs.org), பங்களூரில் (Indian Insitutue of Geographical Studies) உள்ள அமைப்பின் ஸ்தாபகராகவும், டைரக்டராகவும் இருக்கிறார். அந்த அமைப்பு, புதுமையானதும், பொருத்தமானதுமான பூகோளக் கல்வி மூலம் ஆசிரியர்கள்-மாணவர்களை சக்திவாய்ந்தவர்களாக உருவாக்கச் செயல்படுகிறது.  ஹிந்து நாளேடின் ‘young world’ என்ற பகுதியில் இளய மாணவர்களுக்கு பூகோள சம்பந்தமான கட்டுரைகளை அடிக்கடி அவர் எழுதி உள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள உதவும் மின் அஞ்சல்: balachandran@tiigs.org

 

19196 registered users
7451 resources