நம் கல்வி... நம் உரிமை! - சமூக வளர்ச்சிக்கு அரசுப் பள்ளிகளே அடிப்படை!

"கல்வி என்பது சாதி, மதம் சார்ந்தது அல்ல; வர்க்கம் சார்ந்தது அல்ல. கல்வியறிவு என்பது பிறப்போடு தொடர்புடையதல்ல என்பதை பள்ளிகள் வெளிப்படையாகச் சொல்லாமலே சமூக மாற்றத்தை ஏற்படுத்தின. ஆசிரியருக்கு வகுப்பறைக்குள் தேவையான அடிப்படைச் சுதந்திரம் ‘கல்விசார் சுதந்திரம்’. அந்தச் சுதந்திரத்துடன் பாடங்களைப் பயிற்றுவிக்கும்போதுதான் உண்மையான கற்றலை நிகழ்த்த முடியும். தனியார் பள்ளியில், ஒரே ஒரு ஆசிரியருக்குக்கூட இந்தச் சுதந்திரம் அனுமதிக்கப்படுவதில்லை. தனியார் பள்ளிகளில் ஆகப்பெரிய கற்றல் குறைபாடு என்பது இந்தக் கல்விசார் சுதந்திரமின்மைதான். ஆசிரியரின் கல்விசார் சுதந்திரம் முடமாக்கப்படும்போது, மாணவர்களின் படைப்பாக்கத்துக் கான சிறகுகளும், சேர்த்தே முறிக்கப்படுகின்றன. ‘பறப்பது சுமை’ என்று கற்றுக் கொடுக்கப்படாமலே கற்றுக்கொடுக்கப் பட்டுவிடுகிறது." என்று தான் பெற்ற அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் பேராசிரியர் மணி அவர்கள்.

இக்கட்டுரை "தி இந்து" நாளிதழலிலிருந்து (வெளியிடப்பட்ட தேதி மே 20, 2015) எடுக்கப்பட்டது.

நன்றி: "தி இந்து" தமிழ் நாளிதழ், பேராசிரியர் ந. மணி(இக்கட்டுரையை எழுதியவர்)

19270 registered users
7629 resources