நதிகளின் இணைப்பு

 

வளம் என்பது தீர்ந்து போகக் கூடிய ஒன்றாகும். பிற இயற்கை வளங்களைப் போல் அதிகபடியான நீர் சில இடங்களில் இருப்பினும், வேறு சில இடங்களில் நீர் முற்றுலும் இல்லாமலும் இருக்கின்றது. இது குறித்து ஒருவர் சிந்திக்கையில், சிறப்பான விஷயமாக இருப்பது என்னவெனில் நாம் நீரின் வரத்து எங்கு அதிக அளவில் இருக்கிறதோ அங்கிருந்து அவற்றை நம் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொண்டு, பிறகு   நீரற்ற பகுதி மக்களுக்கு நீரை வழங்குகிறோம். இந்த சிந்தனையின் அடிப்படையில், இந்திய அரசாங்கம் இந்தியாவின் முக்கிய நதிகளை இணைக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 

 

முன்னுரை

நதிகளை இணைக்கும் திட்டம் தான் இந்தியாவின் நீர் பிரச்சனைக்கு தீர்வாக உள்ளது. தேசத்தின் ஒவ்வொரு பகுதியும் அதற்குத் தேவையான நீரைப் பெறுவதற்கும், யாரும் தண்ணீர் தட்டுப்பாட்டால் சிரமப்படாமல் இருப்பதற்கும் இந்த நதி இணைப்புத் திட்டம் தான் மிகவும் சிறந்த  சரியான வழியாகும். மத்திய அரசு இந்தத் திட்டத்தை நிறை வேற்றுவதில் தீர்மானத்துடனும் உறுதியுடனும் இருக்கும் இந்நிலையில், நமக்கு நாமே இரண்டு வினாக்களை எழுப்பிக் கொள்ள வேண்டும்.

அவைகள் - “ இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும்? இந்தத் திட்டம் தகுதியானதுதானா? ” என்பனவே ஆகும்.  

நதிகளின் இணைப்பு

இந்தியாவின் உச்சநீதி மன்றம் இந்திய நதிகளை இணைக்கும் இந்த திட்டத்தை 2016ம் ஆண்டில் துவக்கி செயல்படுத்தி முடிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது. இந்தியப் பிரதமர் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய பணிகளை மேற்கொள்ளும் நிமித்தம் காரியக் கமிட்டி (Task Force) ஒன்றை நிறுவி  உள்ளது. எதிர்காலத்தில் வரவிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் எண்ணத்தில் அரசாங்கம் நதிகளை இணைக்கும் திட்டத்தை பல பெரிய அளவில் செயல்படுத்த முனைந்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு தோராயமாக  5,60,00,00 மில்லியன் ரூபாயை ஒதுக்கி, இமயத்திலிருந்து வரும் நதிகள் முதல் தென்னாட்டு நதிகள் வரை சுமார் 30 நதிகளை இணைக்க திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம்  நதிகளின் அதிகமான நீரானது வீணாகக் கடலில் கலந்து விடாமலிருக்க வேண்டுமென்பதைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படி கடலில் கலந்து வீணாவதை தவிர்த்து நீர் மிகுதியான நதிகளிலிருந்து நீர்ப்பற்றாக்குறையான பகுதிகளுக்கு அவற்றைத் திருப்பி விடுவதன் மூலம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் போதுமான அளவு நீர் எல்லோருக்கும் கிடைத்து விடும். இன்னும் கூறப்போனால், இந்த திட்டத்தின் வாயிலாக தேசிய ஒருமைப்பாடு வலியுறுத்தப் படுகிறது. இதன் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் நீரை நேர்மையான முறையில் பங்கிட்டுக் கொள்ளவும் முடியும்.

 

 

 

பத்தாவது திட்ட அறிக்கையின் படி செயல்படும் நீர்வள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள மொத்த தொகையில் ஏறக்குறைய 50 மடங்குகள் அதிகமாக இந்த நதி இணைப்புத் திட்டத்திற்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. மேலும் இதில் தனியார் முதலீடு செய்ய அனுமதிப்பது பற்றியும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன; அவ்வாறு செய்தால், நீர் வளத்தில் மக்களுக்குள்ள பாரம்பரிய உரிமைபாதிக்கப்படும்.  மேலும் சுற்றுச்சூழல் பாதிப்புடன் இத்திட்டத்தின் மக்கள் இழப்பீட்டுத் தொகையும் மிகப் பெருமளவு செலவினமாகிவிடும். இதில், வளம் மிகுந்த இடங்களின் உயிரியலின் வாழ்வாதாரத்துக்கும் பங்கம் நேரிடலாம், பழங்குடி மக்கள் வாழ்வும் பாதிக்கப்படும், நதிநீர்வாழ் உயிரினங்கள், நீர்த்தரம் இவற்றிலும் மாற்றம் நிகழக்கூடும், பசுமையான விவசாய நிலங்கள், வனங்கள் பலவும் நீரில் மூழ்கக்கூடும். இமயமலையிலிருந்து வரும் நதிகளை தீபகற்ப நதிகளுடன் சுமார் 40,000 கிலோ மீட்டர் தூரம் உள்நாட்டு நீர்வழியாக இணைக்கும் போது மனிதர்கள் மிகப்பெரிய அளவில் இடம் பெயர வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். ஆங்காங்கு இருக்கும் அணைக்கட்டுகளும் கால்வாய்களும்  ஏற்கனவேயுள்ள நீர்ப்பாதைகளிலிருந்து மாற்றுப் பாதைகளில் பாயக் கூடும். இதனால் திடீரென வெள்ளப் பெருக்குகளும் மற்றும் பல லட்சம் ஹெக்டேர் பரப்புள்ள விவசாய நிலங்களில் திடீரென மிகுதியாக நீர் தேங்கி சேதமுண்டாக்கும் வாய்ப்பும்  உள்ளது . இந்தத் திட்டம் கண்டிப்பாக தேசத்தின் புவியியல் அமைப்பையே  மாற்றி விடும். நதிகளை இணைப்பதன் மூலம் நதிகள் கடலில் சென்று கலக்கும் முன் ஏற்படும் பல தாவரயியல் செயல்பாடுகளும், நீர் சுழற்சியின் காரணமாக விளையும் சுற்றுச் சூழல் மாற்றங்களும் முழுவதுமாகவே பாதிக்கப் படலாம்.

மேலும், மாறிவரும் உலக சீதோஷ்ண நிலையினால் இன்று நமக்குக் கிடைக்கும் அதிகப்படியான நீர்வளம், வரப்போகும் சில ஆண்டுகளில் இல்லாமலேயே கூடப் போய் விடக் கூடும்.  உள்நாட்டு நீர் தேக்கங்களை இணைத்து நீரைப் பாயச் செய்வதற்கான ஒரு தொழில் நுட்பமோ வசதியோ இல்லை. மத்திய அரசும் இது குறித்து முடிவு செய்ய சட்டரீதியான அதிகாரமில்லை என்பதும் மற்றும் எந்தவொரு மாநில அரசும் இதற்கு ஒத்துக் கொள்ளாது என்பதும் கவனத்திற்கொள்ள வேண்டியவையாகும்.

 

 

18487 registered users
7228 resources