தினசரி வாழ்வில் புவியியல்

ஒலிம்பிக், எப்.ஐ.எப்.ஏ, அல்லது ஐ.பி.எல். கூட, புவியிலைக் கற்பிக்க கடவுள் காட்டும் வழி என்று சிலசமயங்களில் நான் நினைப்பதுண்டு.

ஒரு நாள் தெருவழியாக என் வீட்டிற்குத் திரும்பி நடந்து போய்க் கொண்டிருக்கும் பொழுது, ஒரு இளம் வயதுத் தாயாரும், அவள் 7-8 வயதுக் குழந்தையும் உரையாடுவதை நான் காது கொடுத்துக் கேட்க நேர்ந்தது. அவர்களுக்கு முன்னால், நடந்து போய்க் கொண்டிருந்த இரண்டு ஆப்பிரிக்க நாட்டு இளைஞர்களைப் பார்த்து அந்தச் சிறு குழந்தை தன் தாயிடம் கேட்டது: “இந்த மனிதர்களின் தலைமுடி சுருண்ட கம்பி வலைபோல் சுருண்டிருக்கும் போது, நமக்கு மட்டும் அப்படிப்பட்ட சுருள்முடி ஏன் இல்லை ? “ அவள் தாய் பதில் சொன்னாள்: “   எல்லா ஆப்பிரிக்கர்களின் தலைமுடியும் அப்படித்தான் இருக்கும் ” அந்தத் தாய் அதற்கான காரணத்தைச் சொல்லுவதைத் தவிர்த்துவிட்டாள். குழந்தைகள் அவர்களைச் சுற்றி உள்ளவைகளைப் பார்த்து, அவர்களாகவே, அவர்கள் விருப்பப்படி கற்பதற்கு கேட்கப்படும் அப்படிப்பட்ட கேள்விகளைக் குலைப்பதைப்பதைப் போல் தான் தாயின் பதில் இருந்தது. இதற்கான காரணத்தை நான் சொல்ல விழைகிறேன். ஏனென்றால், அந்தக் கேள்வி புவியலை மிகவும் சார்ந்த ஒன்றாக இருக்கிறது.

புவியல் எங்கு இருக்கிறது ?

என்னைப் பொருத்த அளவில், புவியியல் என்பது ஒரு வாழ்க்கை முறை. நமது ஒரு நாளையப் பயணம் கிழக்குத் திசையில் சூரியன் உதயமாவதுடன் தொடங்குகிறது என்பது ஒரு குழந்தைக்குக் கூட்த் தெரிந்த ஒன்றுதான். அந்தச் சூரியன் மேற்கே மறைகிறது என்பதும் அந்தக் குழந்தைக்குத் தெரியும். அதே போல், பருவகாலங்கள், ஓணம் – பொங்கல் பண்டிகைகள், பயிர்கள், வயல்கள், சுனாமி, தட்ப வெப்ப நிலை, உணவுப் பழக்கங்கள், கலாசாரம், வித விதமான ஆடைளை உடுத்துதல், உள்ளூரில் பரவும் வியாதிகள், சில வியாதிகள் உள்ளூரில் பரவாமை ஆகிய பலவற்றைத் தெரிந்திருந்தாலும், அந்தக் குழந்தை இவைகளுக்குள்ள புவியியல் தொடர்புகளை அறியவில்லை.  

தாய் மொழியைத் தவிர்த்து, குழந்தை இயல்பாகவே கற்கும் திறனைப் பெற்ற வேறு பாடம் புவியலாக இருக்கும் என்பது என் கருத்து. அந்தக் குழந்தை, புவியிலை தன் வாழ்நாள் முழுதும் தொடர்ந்து கற்கிறாள். 4 வயதிலிருந்து 14 வயது வரையிலுள்ள குழந்தைகள் கேட்கும் சில கேள்விகளை நாம் ஆராய்வோம்.

 • ·         மாமா, உலகம் பந்தைப் போல் உருண்டையாக இருக்குமானால், பிறகு நாம் ஏன் கீழே விழாமல் இருக்கிறோம் ?
 • ·         மோங்கோலில் இருப்பதைப் போல், பிரேசில் நாட்டில் சந்தாவால்  செளகரியமாக இருக்க முடியுமா ?
 • ·         மாமா, அராபியர்கள் தொப்பி அணிவது போல், ஏன் என் அப்பா தொப்பி அணிவதில்லை?
 • ·         ஏப்ரல்-மே மாதங்கள் மிகவும் வெப்பமாக இருக்கும் பொழுது, டிசம்பர் மாதம் குளிராக ஏன் இருக்கிறது?
 • ·         கேரளாவில் ஏன் கம்பளி ஆடையை அணியாமல், நான் பருத்தி ஆடைகளையே அணிகிறேன்?
 • ·         உச்சிக் காலத்தில் டெல்லியில் நிழல்கள் நீண்டு இருப்பதை நான் பார்க்கும் பொழுது, அவைகள் பூனாவில் அப்படி இருக்காமல் இருப்பதற்குக் காரணம் என்ன?
 • ·         பருவகாலங்கள் வந்து போய்கின்றன என்று மக்கள் ஏன் சொல்கிறார்கள்? அப்படி என்றால் அவைகள் எங்கு வசிக்கின்றன?
 • ·         டிசம்பர் மாதம் அன்று வரும் என்னுடைய பிறந்த நாளைக்கு, சில மாம்பழங்களை நான் சேமித்து வைக்க முடியுமா?
 • ·         வளர்ந்து – தேய்வதும், முழுமையாகவும் – முற்றிலும் மறைந்தும் எப்படி சந்திரனால் முடிகிறது?
 • ·         உதயமானதிலிருந்து, அஸ்தமனமாகும் வரை பயணிக்கும் சூரியன் எப்பொழுதும் மாறாமல் ஒரே மாதிரியாக இருக்குமா?
 • ·         அகர்ட்டலாவில் நான்கு பருவகாலங்கள் இருக்கும் பொழுது, சென்னையில் ஒரே பருவகாலம் ஏன் இருக்கிறது?
 • ·         கோடைகாலத்தில் மலை வாசஸ்தலங்களுக்கும், குளிர்காலத்தில் கடற்கரைக்கும் நாம் ஏன் செல்கிறோம்?
 • ·         சாப்பிடுவதற்குச் சிலர் சோலே-பஜூர் – பதார்த்தத்தையும், வேறு சிலர் இட்லி-சாம்பாரையும் ஏன் விரும்புகிறார்கள்?
 • ·         யு.எஸ். நாட்டில் அம்மை அல்லது மஞ்சல் காமாலை வியாதிகள் வராமல் இருப்பதற்குக் காரணம் என்ன?
 • ·         வானவில் எப்பொழுதும் வளைவாகத் தான் இருக்குமா? அது நான் அணியும் வளையல் போல் இருக்காதா?
 • ·         பனிப் பொழுவை ஹைதராபாத்தில் நான் ஏன் பார்க்க முடியவில்லை? அதைப் பார்க்க நான் ஏன் ஹிமாலயம் செல்ல வேண்டும்?
 • ·         சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, சூரியன் கிழக்கே உதயமாவதற்கு அது எவ்வளவு வேகமாக ஓடவேண்டும்?
 • ·         பனியும், பனிப்படலமும் உருவாவதற்கு, மேகம் குளிர் காலத்தில் ஆகாயத்திலிருந்து கீழே இறங்கி வருகிறதா?
 • ·         வேப்பிலை மரத்தைப் போல் இல்லாமல், தேவதாரு மரம் ஆலயமணியின் உருவத்தில் ஏன் இருக்கிறது?
 • ·         நம் நாட்டில் மான் – புலி போன்றவைகளைப் பார்க்கிறோம். ஏன், கிரில் – க்கிவி (Krill and Kiwi ) ஆகியவைகளைப் பார்க்க முடிவதில்லை?
 • ·         ஆகாயவிமான ஓட்டி ஆகாயத்தில் பறக்கும் பொழுது, தன் பாதையை விட்டு விலகாமல் எப்படிப் பறக்க முடிகிறது?
 • ·         இந்தக் கேள்விகளுக்கெல்லாம் – இன்னும் இவைகளைப் போன்ற கேள்விகளுக்கும், நான் பதில்களை எங்கிருந்து பெறமுடியும்?

தாத்தா – பாட்டி, பெற்றோர், ஆசிரியர் ஆகியவர்கள் மேலே உள்ள கேள்விகள் பலவற்றிற்கும் அவரவர்களின் அனுபவங்களிலிருந்து பதில் சொல்ல முடியும் என்பதில் நான் திடமாக இருக்கிறேன். ஒரு குழந்தைக்கு அவர்கள் சொல்லும் பதில்கள் நம்பும்படியும், ஒப்புக்கொள்ளும் அளவிலும் இருக்கின்றன. சில கேள்விகளுக்கு விளக்கம், சிலவற்றிற்கு அறிவித்தல், மற்றும் சிலவற்றிற்கு கருத்துபடிவ ஒப்பிடல் ஆகியவைகள் தேவைப்படும். சில முக்கிய கேள்விகளை எடுத்துக் கொண்டு, அவைகளுக்குரிய பதில்களைக் குழந்தைகளே அறிய உதவுவோம். இதற்கு நாம் முதல் கேள்வியை எடுத்துக் கொள்வோம் :

“மாமா, உலகம் பந்தைப் போல் உருண்டையாக இருக்குமானால், பிறகு நாம் ஏன் கீழே விழாமல் இருக்கிறோம்?”

ஒரு கால் பந்தை எடுத்து, அதில் ஒரு எறும்பை விட்டு, அதைக் குழந்தைக்குக் காட்டி, எறும்பு கீழே விழுமா அல்லது விழாமல் பந்தைச் சுற்றிவருமா என்று குழந்தையிடம் கேட்க வேண்டும். குழந்தையை பந்தை அசைக்கச் செய்து, குழந்தையே தன் கண்ணால் நடப்பதைப் பார்க்கச் செய்ய வேண்டும்.

கீழே உள்ள இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்:

“மாமா, அராபியர்கள் தொப்பி அணிவது போல், ஏன் என் அப்பா தொப்பி அணிவதில்லை?”

இந்தக் கேள்விக்கு குழந்தையே பதிலைக் கண்டுபிடிப்பதற்கு உதவ, குழந்தையிடம் இந்தக் கேள்விகளைக் கேட்கலாம் – “நீ ஏன் ஆடைகள், கம்பளிச் சட்டை, ஷூக்கள் அணிந்திருக்கிறாய் அல்லது கோடைநாளில் பிற்பகலில் நீ குடையை ஏன் நாடுகிறாய்? “

இதற்குக் குழந்தை, நான் நன்றாக பார்ப்பதற்கு இருக்க வேண்டும் என்றோ, உடம்புக்கு இதமாக இருக்க வேண்டும் என்றோ, சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றோ, பதில் அளிக்கலாம். இந்தக் குழந்தையின் பதிலிருந்து, தூசி, மணல் இவைகளிலிருந்து காத்துக் கொள்ளும் உபாயத்தைப் பற்றிய கருத்தினை நாம் தெரிவிக்க வேண்டும். அந்தக் குழந்தை நாம் சொல்வதை ஒப்புக் கொள்வாள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். இந்த நேரத்தில், அரேபிய நாடு உஷ்ண – தூசி – மணல் ஆகியவையால் ஆன இடம் என்பதை நாம் சொல்ல வேண்டும். பிறகு நாம் குழந்தையிடம் சொல்ல வேண்டும்: அத்தகைய சூரிய ஒளி இருக்கும் இடத்தில் வெளியில் செல்லும் பொழுது, தலையிலிருந்து கால் வரை உடம்பு முழுவதும் போர்த்திக் கொள்வது ஒரு சரியான செய்கையாக இருக்காதா?

நாம் இத்துடன் நமது விளக்கத்தை நிறுத்திக் கொண்டு, அந்தக் குழந்தையின் வயதுக்கேற்ப பொறுத்தமான அறிவினை தொடர்ந்து அடைய விட்டுவிடவேண்டும். முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது, குழந்தையை வெறும் மனப்பாடம் செய்து கற்பதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

தாய் மொழியைப் போல், உள்ளூர் புவியியலை எந்த விதமான தவறான அபிப்பிராயம் கொள்ளாமல், குழந்தை தானாகவே உருவாக்கிக் கொள்கிறது. இங்கு முக்கியமான தேவைப்படும் ஒன்று உண்டென்றால், அது குழந்தைக்குச் சரியான வழிகாட்டல் என்பதுதான். உதவியாளர் முக்கிய கேள்விகளை அறிமுகம் செய்து, அவைகளுக்குச் சரியான பதில்களை அளிக்க வேண்டும். பிறகு, அடிப்படைக் கல்வி வகுப்பின் நிலையிலிருந்த  குழந்தைகளின் எண்ண ஓட்டத்தின் பாதையை தத்துவார்த்தமான உயர் நிலைக்கு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். இதன் மூலம், நினைத்தல், கவனித்தல், கணித்தல், ஒப்புதல், அறிதல், இணைத்தல் ஆகியவைகளை குழந்தைகள் வளர்க்க முடியும்.

ஒரு புவியியல் ஆசிரியராக, வகுப்பில் காணப்படும் அனைத்துப் பொருட்களையும் அனேகமாக எப்பொழுதும் தொடர்பு படுத்தி நான் பார்ப்பதுண்டு. நான் உடுத்திக் கொண்டிருக்கும் புடவை, உயரம், மாணவர்களின் தோலின் நிறம், அவர்கள் பைகளில் இருக்கும் பொருட்கள், அவர்கள் கொண்டு வந்த சாப்பாடு, ஏன், சாக்பீஸ் மற்றும் கரும்பலகை கூட புவியியல் பாடததிற்குப் பயன்படும். ஆகாயம், காற்று, வெப்பம், மேகங்கள், மழை ஆகிய தலைப்புகளை வகுப்பிற்கு வெளியே மாணவர்கள் அவ்வப்போது காணுவதை எல்லாம் தொடர்பு படுத்தி குறிப்பாக – பருவகாலம் - என்பதைப் பற்றிய புவியில் பாடத்தைக் கற்பிக்கும் பொழுது பயன்படுத்துவேன். புவியியல் என்றால் அன்றாட வாழ்க்கையுடன் எப்பொழுதும் தொடர்புடையது என்பதும், ஆசிரியரின் வேலை குழந்தைகளின் மனத்திறனை மேம்படுத்த உதவி செய்வது அல்லது அந்தத் திறனை வெளிக்கொணர்வதுதாக இருக்கும். இதன் மூலம், வாழ்வின் அனுபவங்களுக்கும், அந்த அனுபவங்களில் பொதிந்திருக்கும் கருத்துப் படிவங்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை குழந்தை பார்த்துத் தெரிந்து கொள்ளும் நிலை ஏற்படும்.     

ஒரு புவியியல் ஆசிரியராக, வகுப்பில் காணப்படும் அனைத்துப் பொருட்களையும் அனேகமாக எப்பொழுதும் தொடர்பு படுத்தி நான் பார்ப்பதுண்டு. நான் உடுத்திக் கொண்டிருக்கும் புடவை, உயரம், மாணவர்களின் தோலின் நிறம், அவர்கள் பைகளில் இருக்கும் பொருட்கள், அவர்கள் கொண்டு வந்த சாப்பாடு, ஏன், சாக்பீஸ் மற்றும் கரும்பலகை கூட புவியியல் பாடத்திற்குப் பயன்படும்.

 

குழந்தைகளுக்குக் கற்பதற்குச் சிறந்த ஒரு ஆயுதம் அவர்களுக்குள் உரையாடுவதாகும் என்பதை கிருஷ்ண குமார் ஆணித்தரமாக நம்புகிறார்.  புதியதான ஒரு பொருளை குழந்தைகள் கவனிக்கும் பொழுது, அது ஒரு கம்பளிப் புழுவாக, ஒரு விட்டில் பூச்சியாக, ஒரு புதிய இடமாக, ஒரு சினிமாப்படம், ஒரு புத்தகமாக எதுவாக இருப்பினும், அவர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொழுது, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கற்றலினால் பயன் பெறுகிறார்கள். நண்பர்களுடன் உரையாடுவது குழந்தைகளுக்கு கற்பதற்கு - அதுவும் முக்கியமாக,  விடுமுறைக்குப் பிறகு சந்திக்கும் பொழுது நிகழும் உரையாடல் - உதவியாக இருக்கும். ஏனென்றால், குழந்தைகள் விடுமுறை நாட்களில் பல திசைகளில் இருக்கும் பல இடங்களுக்குப் பயணம் சென்று, பலவற்றைப் பார்த்த பல புதிய அனுபவங்களுடன் வந்திருப்பார்கள். இந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொழுது, கேட்பவர்களுக்கு அந்த இடங்களைப் பற்றிய கற்பனைகள் உருவாகி, அவர்களையும் அவர்களாகவே அவைகளைப் பற்றிய பலவற்றையும் கற்க ஊக்கப்படுத்துவதற்கு உதவிகரமாக இருக்கும். இங்கு, குழந்தைகள் கொண்டு வந்த போட்டோக்கள், வரைபடங்கள், படங்கள் ஆகியவைகள் கற்பதற்குப் பயன்படும் வகையில் ஆசிரியர்கள் செயல்படவேண்டியது அவசியமாகிறது.

படிக்கும் பயணத்திற்கு பெரிய குழந்தைகளுக்கு வண்ணமயமான பரந்த பல பொருட்கள் இருக்கின்றன.  தினசரிப்பத்திரிகைகள், டி.வி.யின் பல சானல்கள், சினிமா படங்கள், பாடல்கள், கதைப் புத்தகங்கள், சுற்றுலாக்கள், மலை ஏற்றங்கள் ஆகியவைகள் அவர்களுக்கு கிடைக்கின்றன. இந்த ஒவ்வொரு அனுபவத்தில் ஆர்வமுடன் ஈடுபடும் பொழுது, அந்தக் குழந்தைகள் ஒரு பெரிய பொக்கிஷத்தைப் பெறுகிறார்கள்.

சிறப்பான வாழ்வு வாழ, புவியியல் கருத்துக்களை அறிந்து கொள்வது உண்மையிலேயே அவசியமானதா? நமது அன்றாட வாழ்வில் இந்த புவியியல் கருத்துக்கள் நமக்குப் பயன்படுமா? குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இந்தக் கருத்துக்கள் ஒரு வகையில் வாழ்வின் ஆதாரத் திறனாக இருக்கின்றவா?  இந்தத் திறமையை சாணை பிடித்து கூர்மையாக நமது குழந்தைகள் வைத்திருக்க வேண்டியது அவசியமா?

எதார்த்த வாழ்வில் நடப்பவைகளுடன் கட்டுண்டு அல்லது வேரூன்றி அல்லது அடித்தளமாகி அல்லது ஒருவரின் வாழ்வில் நேரிடையான தாக்கத்தால் இருக்கும் இந்த அனுபவங்களையும் ‘புவியியல் அனுபவங்கள்’ என்று நாம் அழைக்கலாமா? உலகத்தில் உயிர் வாழவும், வாழ்வை அனுபவிக்கவும், பிற பாடங்களைக் கற்கவும், நம்மைச் சுற்றி நடப்பவைகளைப் புரிந்து கொள்ளவும், புவியியல் பாடத்தைக் கற்பிப்பதையே ஒரு தொழிலாகக் கொள்ளவும் ஆகிய அனைத்துத் திறமைகளை நமது வாழ்வுத் திறமையாக இந்தப் புவியியல் கருத்துக்கள் இருக்கின்றனவா? இந்த அநேக கேள்விகளுக்கும் ‘ஆமாம்’ என்ற ஒரே வார்த்தையால் பதில் சொல்லி விடலாம். 

இந்தக் கட்டுரையை எழுதும் பொழுது, ‘புவியியல்’ என்ற தலைப்பைப் பற்றி என் மன்னியிடம் வாழ்வில் தினமும் நடைமுறையில் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி அவர்களது கருத்தை நான் கேட்டேன். என் மன்னி ஒரு வங்கியில் வேலை செய்பவர் என்பதை இங்கு தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் படித்த பாடம் கணக்கு என்பதும், வங்கிக் கணக்கின் பணம் வளரும் உபாயம் தெரிந்தவரே அன்றி ‘புவியியல்’ பற்றி ஒரு சிறிதும் அறிந்தவரில்லை என்பதும் உண்மையாகும். நான் வியக்கும் வண்ணம், நான் இந்தக் கேள்வியைக் கேட்டவுடனேயே, அவர்கள் எந்தவிதமான தயக்கமும் இன்றி – இந்தக் கேள்வியைப் பற்றி வெகு நாட்கள் சிந்தித்து, ஒரு தீர்மானத்திற்கு வந்த மாதிரியான நிலையில் – எனக்குப் பதில் அளித்தார்கள். அவர்கள் இப்படிப் பதில் சொன்னாரகள்: “உலக நிகழ்வுகள், பிரச்சனைகள், இன்றைய வாழ்வு முறைகள் ஆகியவைகளைப் புரிந்து கொள்வதற்கு புவியியல் அறிவு அவசியம் என்று எனக்கு மட்டும் முன்பே தெரிந்திருந்திருந்தால், என்னுடைய பள்ளி நாட்களில் இந்தப் புவியியல் பாடத்தில் அதிகமான ஆர்வம் கொண்டு, இன்றைய நாளில் நான் நன்கு அதிகமாகத் தெரிந்தவளாக நிச்சயம் மாறியிருப்பேன். ஆனால், இப்பொழுது, பிரச்சனைகளை முழுதும் தெரிந்து கொள்வது என்பது எனக்கு ஒரு மலையேறுவதைப் போன்ற கடினமான வேலையாகும்.”

இந்த உரையாடல்கள் மூலம் நாம் என்ன முடிவுக்கு வர முடியும்?

என்னுடைய நண்பரின் மகனுக்கு புவியியல் பாடத்தில் ஆர்வம் அதிகம். பல நேரங்களில், புவியியல் பாடத்தின் பலவகையான கருத்துப் படிவங்களைப் பற்றி நாங்கள் உரையாடியும், விவாதித்தும் உள்ளோம். ஒரு சமயத்தில், பூமியின் அட்ச ரேகை, தீர்க்க ரேகை ஆகியவைகளைப் பற்றியும், அவைகளின் அவசியம் பற்றியும் விவாதித்தோம். பல வருடங்களுக்குப் பிறகு, அவனை ஒரு அழகான இளைஞனான விமான ஓட்டியாகச் சந்தித்தேன். கடந்த கால நிகழ்வுகளை நாங்கள் அசைபோட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில், விமானத்தில் பறக்கும் பொழுது ஒரு இடத்தினை அறிவதற்கு எப்படி முன்பு கற்ற பாடமான அட்ச ரேகை, தீர்க்க ரேகை – உதவிகரமாக இருந்தன என்பதை என்னிடம் சொன்னான். இதன் மூலம் நான் ஒரு பாடத்தைக் கற்றேன்: “ஒரு குழந்தையின் ஆர்வத்தைத் தூண்டுவது மிகவும் முக்கியமான ஒன்று.” 

தற்போதையை புவியியல் பாடங்கள் குழந்தைகள் கற்க பயனுள்ளதாக இருக்கின்றவா?

சில மாறுதல்கள் – குறிப்பாக இரண்டு இடங்களில் - நாம் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்:

 • ·         பொருளடக்கம்
 • ·         பொருளடக்கத்தின் விளக்கத்தின் வழி

குழந்தைகளுக்கு முன்பே பல விஷயங்கள் தெரியும் என்பதையும், அதை அவர்களால் வளர்த்து, கூட்டி, மாற்றி, மெருகூட்டி, ஊகித்து, அறிந்து, கற்பனை செய்து கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் நாம் நம்புவோமாக. ஏற்கனவே அவர்கள் அறிந்த வடிவமைப்புகளை மேலும் சோபிக்கும்  வகையில் உதவியாளர்களாக நாம் இருக்க வேண்டியது அவசியமாகிறது. அவர்களுக்கு என்ன தெரியும்?, அனுபவம் வாயிலாக அவர்கள் கற்பதற்கு உதவும் வகையில் தரவுகளை (Data) அளிப்பது எப்படி? - ஆகியவைகளை ஆரம்பமாக முதலில் வைத்துத் தொடங்கவேண்டும். உதாரணமாக, 1,2,3,4 ஆகிய வகுப்புகளில் உலகத்தின் கோள உருவத்தைப் பற்றிய கருத்தை அறிய வைப்பதுடன், கோளம் சுற்றுவதைப் பற்றிய கொள்கைகள், சுழன்று செல்லல், பருவங்கள் அல்லது பகல்-இரவு மாறி மாறி வருவதற்கு இந்த சுழற்சிகளின் தொடர்புகள் ஆகியவைகளையும் அறிய வைப்பது கஷ்டமான ஒன்றாகும்.  அவர்களுக்கு முன்பே தெரிந்த அறிதலான – கிழக்குத் திசை, உதய சூரியன், மேற்கு திசை, மறையும் சூரியன், பகலில் சூரியனின் பல நிலைகளும், குழந்தையின் நிழலில் பல மாறுபட்ட நீளங்கள், சூரியனின் பல மாறுபட்ட நிலையில் வெப்பம் மாறுபடல் – ஆகியவைகளை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். பிறகு, மேல் வகுப்புகளில், இந்தத் தகவல்களை - கோளம், அதன் சுழற்சி, அது சுழன்று நகர்தல் பற்றிய கொள்கைகளுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு விலாசத்தை வைத்து, குழந்தைக்கு அந்த வீட்டைக் கண்டு பிடிக்க நாம் உதவி செய்வோம்:

வீட்டு எண்: 5 பி, முதல் மெயின் ரோடு, பாய் லேஅவுட்.

தபால்காரருக்கு வீட்டைக் கண்டு பிடிப்பதற்கு எந்த இரண்டு தகவல்கள் கொடுக்க வேண்டும் என்று நாம் அந்தக் குழந்தையைக் கேட்போம். அந்தக் குழந்தையின் பதில் இதுவாகத்தான் இருக்கும்: வீட்டு எண்ணான  ‘5 பி’, தெருப் பெயரான ‘முதல் மெயின் ரோடு, பாய் லேஅவுட்’ இப்பொழுது, குழந்தையைக் கேட்போம்: நீயே தபால் காரராக இருந்தால், நீ என்ன செய்வாய்?

ஒரு சிறிய படம் வரைந்து அதில் தெருவையும், வீட்டு எண்ணையும் குறிப்பிட்டு, குழந்தைக்கு வழி காட்ட வேண்டும். வீட்டைக் கண்டு பிடிப்பதற்கு அவசியமான அந்த முக்கிய இரு தகவல்களையும் கோடிட்டு அதன் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். (இங்கு முக்கிய தகவல்கள் என்றால், வீட்டு எண்ணும், தெருப்பெயருமாகும்.) பிறகு அடுத்த வகுப்பில், இந்த இரண்டு தகவல்களை உலகக் கோளத்தில் அட்சரேகை – தீர்கரேகை என்ற இரு கோடுகளை வைத்து, ஒரு நகரத்தின் இடத்தை இந்த ரேகைகளைக் கொண்டு தொடர்புபடுத்தி நாம் விளக்க வேண்டும்.

முக்கோண வடிவமுள்ள அலிவா என்ற பிஸ்கட்டுகளை, நேத்ராவும், பிரீதியும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இப்பொழுது, நேத்ரா எந்த முக்கோண வடிவமுள்ள பொருட்களைப் பார்த்தாலும், அதை ‘அலிவா’ என்றே பெயரிட்டு அழைக்கிறாள். ஆனால், பிரீதி - அலிவா பிஸ்கட்டைப் பார்த்தால், அதை ‘முக்கோணம்’ என்று சொல்லி அழைக்கிறாள். உண்மையில், அவர்கள் இரண்டு பேர்களும் அந்த பிஸ்கட் பொருளின் உருவத்தை வைத்து அதன் பெயரை உச்சரித்தோ அல்லது உச்சரிக்காமலோ அதை வர்ணிக்கிறார்கள். இரண்டு பேர்களுக்கும் முக்கோண வடிவத்தின் தன்மை அவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் அமைகின்றது. ஆகையால், ‘அலிவா’ என்றால் ‘முக்கோணம்’ என்று ஒரு குழந்தை சொல்லும் பொழுது, ஆசிரியர் அதற்கு விளக்கத்தை இப்படிச் சொல்ல வேண்டும்: “ஆமாம், அலிவா ஒரு முக்கோண வடிவமுள்ள பிஸ்கட். அது ஒரு மலை உச்சியைப் போலவோ அல்லது ஒரு கிருஸ்துமஸ் மரம் போலவோ இருக்கிறது. ஆகையால், இவைகள் அனைத்தும் ‘முக்கோணம்’ என்று சொல்லப்படும் வகையினைச் சார்ந்தது.”

தன்னைச் சுற்றி உள்ளவைகளை அல்லது தன்னைச் சுற்றி உள்ள உலகத்தை ஒரு குழந்தை எப்படிக் கற்கிறது ?

தொடுதல், சாப்பிடல், பரிட்சித்தல், கவனித்தல், நடித்தல், கேட்டல் போன்றவைகளால் ஒரு குழந்தை கற்கிறது. Constructivism – என்ற இயந்திரப் பாகங்களைப் பயன்படுத்தி உருவான ரஷ்யாவின் நவீன கலை இயக்கக் கொள்கை இவைகளை வடிவமைத்தல் என்று சொல்லுகிறது. வாழ்நாள் பூராவும் இந்த அனுபவங்களினால், ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் அவரவர்களுடைய அறிவை அபிவிருத்தி செய்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களுடைய அறிவை அவர்களாகவே மேம்படுத்தும் அனுபவத்தை உண்டாக்கும் சூழ்நிலையை அவர்களின் விருப்பதிற்கேற்ப  அந்த நிலை உருவாகக ஒரு ஆசிரியர் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு – 2005 (The National Curriculum Framework – 2005) -  இந்த குறிக்கோள்களை சுட்டிக்காட்டி உள்ளது. “ஆசிரியர் இதை எவ்வாறு செயல்படுத்தப் போகிறார்?” என்பது தான் இப்பொழுது எழும் கேள்வியாகும்

குழந்தைகளின் முயற்சியிலேயே அவர்களின் அறிவு உருவாக ஆசிரியர் என்ன செய்ய வேண்டும்?

‘கேட்டல்’ என்பது ஒரு மிகவும் சக்தி வாய்ந்த கருவி. அதை ஆசிரியர் தகுந்த முறையில் பயன்படுத்த வேண்டும். ‘ஏன்’ என்று கேள்விகள் கற்பவர்களிடமிருந்து வருவது, ‘காரணம்’ அல்லது ‘விளக்கம்’ ஆகியவைகளுக்கான ஒரு தேவையாக இருக்கும். விளக்கம் என்பது காரணத்தைச் சொல்வதற்குச் சமமானது இல்லை. சிலவற்றை உண்மை என்று நம்புதல் அல்லது நம்பிக்கைகளைக் கொண்டிருத்தல் ஆகியவைகளுக்கான காரணங்களைச் சொல்ல வேண்டும். விளக்கம் என்றால் இயற்கையான நிகழ்வுகளையும், அவைகளின் முறைகளையும் குறிக்கும். உதாரணங்கள்: “எல்லா மலைச் சிகரங்களும் இல்லாமல் சில மலைச் சிகரங்கள் மட்டும் பனியால் மூடப்பட்டிருப்பது, ஏன்?’; “நாம்தாபா மற்றும் அருணாசலத்தில் காலை 5 மணி அளவில் சூரிய உதயமனத்தை நாம் பார்க்கும் அதே நேரத்தில், குஜராத்தின் துவாரகாவில் காலை 3 மணிக்கு மிகவும் தொடர்ந்து இருளாக இருப்பது, ஏன்?’

இங்கு கொள்கைகளையும், விதிகளையும் விளக்குவதற்குப் பயன்படுத்தவேண்டும். சில நேரங்களில், ஆசிரியர் சம்பவங்களை விளக்கி, பிறகு விதிகளை விளக்க வேண்டிய முறையினைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் உண்டாகும்.

பல சமயங்களில், ஆசிரியர்/பெற்றோர் ஆகியவர்களின் “விளக்கங்கள்” உண்மையிலேயே விளக்கங்களாக இருப்பதில்லை.

அதற்கு உதாரணங்கள் கிழே வரிசைப் படுத்தப்பட்டுள்ளன:

1.   சாவன்னா -  Savanna – என்ற பெயர், பூங்கா நிலம் -  Park Land – என்று ஏன் கூறப்படுகிறது? ஏனென்றால், இந்த சாவன்னா என்ற இயற்கை புல்லான நிலப்பரப்பில், ஆங்காங்கே ஒரு சில மரங்கள், ஒரு பூங்காவில் இருப்பதைப் போல், இருக்கின்றன.

2.   இயற்கை நீர் ஊற்றுக் கிணற்றின் முக்கியமான அம்சம் என்ன? ஏனென்றால், தண்ணீரை நீங்கள் இறைக்காமல், தண்ணீர் தானாகவே வெளியே பீச்சி அடிக்கும்.

3.   சஹாரா ஏன் பாலைவனமாக இருக்கிறது? ஏனென்றால், அந்த இடத்தில் மழை மிக மிகக் குறைவாயப் பெய்யும்.

இவைகள் எல்லாம் பொதுவான விளக்கங்கள். இந்த எந்தப் பதில்களிலும், கேள்வியின் வேரான மூலக்காரணங்களில் நுழைந்துள்ளோமா என்பது சந்தேகமே. உதாரணமாக, முதல் கேள்வியில், சவன்னா என்ற புல்வெளி நிலப்பரப்பில் அந்த நிலத்தின் தோற்றத்தை ஒரு பூங்கா நிலத் தோன்றமாக சில மரங்கள் வளர்ந்து ஏன் உருவாக்குகின்றன? இரண்டாவது கேள்வியில், நீரை இறைக்காமல், தானாகவே நீர் ஏன் மேலே வருகிறது? மூன்றாவது கேள்வியில், சகாராவில் ஏன் மழை அதிகமாகப் பெய்வதில்லை? இந்தக் கேள்விகளில் புதைந்துள்ள மூலக் கருத்துக்களுக்கு விடை காணப்படுவதில்லை. 

இன்றைய வாழ்க்கை வாழ்வதற்கு, புவியியல் ஒரு நங்கூரமாகும். பலவற்றையும் நமது சொந்த அனுபவங்களினால் கற்பதினால், அதற்கு கால அவகாசம் அதிகமாகிறது. பள்ளியும், ஆசிரியரும் மட்டும் நம்முள் திறனை ஏற்படுத்தி விட்டுவிட்டார்களானால், எங்கு வசிப்பது, எங்கு வீடு கட்டுவது, எந்த வீட்டை தேர்வு செய்வது, கார் வாகனத்திற்கு எங்கு டீசல்/பெட்ரோல் வாங்குவது ஆகியவைகளில் முடிவுகளை எடுப்பது பிறகு மிகவும் சுலபமாகிவிடும்.

 

சிந்தித்துச் தேர்வு செய்யும் திறனை அளித்து, அதன் மூலம் குழந்தைகளைச் சரியாகத் தேர்வு செய்வதற்கு வழி செய்யும் முறையில்,  விளக்க விதிகளைச் சரியான முறையில் ஆசிரியர் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். நிலத்தை விட நீர் குளிர்வதற்கும், சூடாவதற்கும் குறைவான நேரமாகிறது என்ற போது, அந்த இடம் கடற்கரைப் பிரதேசமானதால் மிதமான தட்பவெப்ப நிலை கொண்டது என்று குழந்தைகள் ஊகிக்கக் கூடும்.

அதே போல், இயற்கை நீரூற்றுக் கிணறு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இருக்கிறது என்றும், அதன் கீழே உள்ள பாறையின் வடிவம் கோப்பை வைக்கும் தட்டுப் போல் வடிவம் கொண்டதினால் அந்த வடிவ நிலத்தில் கிண்று வெட்டும் பொழுது, நீர் தானாகவே பீச்சி அடித்துக் கொண்டு மேலே வரும் என்பதையும், இந்த நீர் மேலே வருவது நீர் அழுத்த விசையினால் என்பதையும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

களப்பணிக்காக புவியல் வகுப்பை வெளியே அழைத்துச் செல்வதைப் பற்றி நாம் சிந்திப்போமா? ஆசிரியரும், பள்ளி மாணவர்களும் முன்னதாகவே இதற்குத் திட்டமிடவேண்டும். இதற்கு சில தலைப்புகளையும், சில பாடங்களையும் ஒன்றிணைத்துத் திட்டமிடவேண்டும். உதாரணமாக, மண், மண்ணரிப்பு, இயற்கைப் பயிர், விவசாயம், மக்களின் தொழில் ஆகிய தலைப்புகளையும், அறிவியல் மற்றும் புவியியல் பாடங்களான – சூரிய மண்டலம், கனிமங்கள் ஆகியவைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். சில தலைப்புக்களான – பருவகாலம் மற்றும் பருவநிலை ஆகியவைகளை வருடம் பூராவும் ஒவ்வொரு பருவகாலத்திலும் எடுத்துக் கொள்ளலாம் என்பதால், திட்டமிடுவதற்கு அவசரப்படவேண்டியதில்லை அல்லவா? இல்லாவிடில், இரண்டு பருவகாலத்தைப் பற்றி 6-ம் வகுப்பிலும், மற்ற இரண்டு பருவகாலத்தைப் பற்றி   7-ம் வகுப்பிலும் கற்பிக்கலாம். அத்துடன், குழுவாகச் செயல்படல், சினிமாப் படம் பார்ப்பது, பிரயாணக் கட்டுரை படிப்பது, கருத்துப் படிவ வரைபடம் உருவாக்குவது ஆகியவைகளும் நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்கள் அவர்களாகவே பாடத்திட்டத்தை உருவாக்கி, எந்த தலைப்புகளில் படிக்க விரும்புகிறார்கள் என்பதைத் தீர்மானித்து, அந்த பாடத் தலைப்புகளில் சிலவற்றை அவர்களுக்குள் கற்க வைத்தும் அல்லது மேல்வகுப்பில் படிக்கும் மாணவர்களைக் கொண்டு கற்பிக்கச் செய்தும் செயல்படச் செய்ய வேண்டும். தகுந்த தலைப்புகளைப் பற்றிய தகவல்களை சமீபத்தில் வெளியிடப்பட்ட புத்தகங்களிலிருந்து முக்கியமான பகுதிகளை வகுப்பில் அல்லது நூலக வகுப்பில் படிக்கக் கேட்கும் பழக்கத்தை உண்டாக்க வேண்டும். பலவிதமான தலைப்புகளில் பிரசுரமான செய்திகளை தினசரிகளிலிருந்து வெட்டி ஒரு நல்ல கற்கும் கருவூலமான உருவாக்கிய இந்தப் புத்தகத்தைப் படிக்கச் செய்தும் கேட்கலாம்,

இன்றைய வாழ்க்கை வாழ்வதற்கு, புவியியல் ஒரு நங்கூரமாகும். பலவற்றையும் நமது சொந்த அனுபவங்களினால் கற்பதினால், அதற்கு கால அவகாசம் அதிகமாகிறது. பள்ளியும், ஆசிரியரும் மட்டும் நம்முள் திறனை ஏற்படுத்தி விட்டுவிட்டார்களானால், எங்கு வசிப்பது, எங்கு வீடு கட்டுவது, எந்த வீட்டை தேர்வு செய்வது, கார் வாகனத்திற்கு எங்கு டீசல்/பெட்ரோல் வாங்குவது ஆகியவைகளில் முடிவுகளை எடுப்பது பிறகு மிகவும் சுலபமாகிவிடும்.

இவைகள் எல்லாவற்றிற்கும் – ஏன், இவைகளுக்கும் மேலே – அதாவது, ‘வாழ்க்கை’ இந்த உலகத்தில் உயிரோட்டமுள்ளதாக இருப்பதற்கும், புவியியல் பாடம் தேவையான ஒன்றாகும். 

தபஸ்யா சாஹா – என்ற பெயருள்ள கட்டுரை ஆசிரியை தொழில் துறைப் புவியியல் – Industrial Geography – என்ற பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கொல்கத்தாவிலும், பங்களூரிலும் புவியியல் பாட ஆசிரியராகப் பணியாற்றி உள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் ‘கல்வியைப் பற்றிய செய்திகள்’ பகுதியில் ‘மன வெளி’ -  Mind Field – என்ற தலைப்பில் வெளிவரும் கட்டுரைகளுடன் தொடர்பு உள்ளவர். அஸிம் பிரேம்ஜி பவுண்டேஷனில் கல்விக் கலை மற்றும் கற்பிக்கும் கலை- Academics & Pedagogy -  என்ற துறையில் நிபுணராக தற்போது பணிபுரிகிறார். 

அவரைத் தொடர்பு கொள்ள உதவும் மின் அஞ்சல்:

tapasya@azimpremjifoundation.org

 

19196 registered users
7451 resources