ஞாபக சக்திக்கு அப்பால்: சமூக அறிவியலில் சரியான மதிப்பீடு

பள்ளியில் சமூக அறிவியலைக் கற்பிப்பதில் உள்ள குறைபாடுகள் அதன் மதிப்பிடும் முறையில் காணப்படுகிறது. பெயர்கள்-தேதிகள், ஒரு வரலாற்றுக்  காலத்தில் வாழ்ந்த பிரபலமானவர்கள், ஒரு சம்பவம் நடந்ததற்கான காரணங்கள், நடந்த சம்பவத்தில் உள்ள நிகழ்வுகள், நிகழ்வுகளின் முடிவுகள் ஆகிய அனைத்தும் பாடப் புத்தகத்தில் பட்டியலிடப்பட்டு அவைகளை நினைவு படுத்திச் சொல்லும் மாணவர்களின் திறமைகளைச் சோதிக்கும் ஒரு மதிப்பீடாகவே தற்போதைய மதிப்பிடும் முறைகள் அமைகின்றன. இந்தக் கட்டுரையில், எவைகளை சமூக அறிவியலில் நாம் மதிப்பிட வேண்டியது அவசியம் என்பதைப் பற்றியும், கற்றல்-கற்பித்தலில் வரலாற்றுப் பாடத்தைப் பயன்படுத்தி அந்த மதிப்பீட்டை எப்படி நாம் செய்ய வேண்டியது அவசியம் என்பதைப் பற்றியும், நான் ஆராயப் போகிறேன். வரலாற்றுப் பாடத்தை நான் தேர்வு செய்ததற்குக் காரணம், அந்தப் பாடத்தில் நான் அதிகம் ஈடுபட்டுள்ளேன். அந்தப் பாடத்தைத் தேர்வு செய்ததற்கு இன்னொறு காரணம், வரலாற்றுப் பாடம் கற்பிப்பதிலும் - கற்பதிலும் அன்றாட வாழ்வு மற்றும் செய்முறைப் பயிற்சி ஆகியவைகளுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதாகும். ஆசிரியர்-மாணவர்களுக்கு குடிமையியல் மற்றும் புவியல் ஆகியவைகளில் நடைமுறைச் சாத்தியக் கூறுகளைக் காண்பது சுலபமாகிறது. குடிமையிலை ஒரு பயிற்சியாகவும், புவியிலை அறிவியலோடு தொடர்புள்ள நடைமுறை நிகழ்வுகளாகவும் பலர் கருதும் நிலை காணப்படுகிறது. குடிமையில்-புவியல் ஆகியவைகளில் ஒன்றைத் தெரிந்து கொள்ளும் தருணத்தில் மற்றதின் தன்மைகளையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உண்மையிலேயே ஏற்பட்டு விடுகிறது என்பது இந்தக் கட்டுரையைப் படிக்கும் போதே மறைமுகமாகமாவது தெளிவாகிவிடும் என்று நான் நம்புகிறேன்.

எதை, எப்படி மதிப்பிட வேண்டும்?

கற்பித்தல் என்பது கற்றல் – மதிப்பிடல் என்ற இந்த இரண்டுடன் ஒன்றாகக் கலந்து இருக்க வேண்டியது அவசியமாகிறது. மாணவர்கள் பாடப்புத்தகங்களில் உள்ள தகவல்களை அறிந்து, அவைகளை நினைவுறுத்தி அவர்கள் படித்த புத்தகத்திலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் எழுதுவது மட்டும் தான் என்பது என்னுடைய கருத்தாக இருக்குமானால், பிறகு என்னுடைய கற்பித்தல் அந்த குறிக்கோளை அடைய நிச்சயம் போதுமானதாகும். இந்த முறையில், வகுப்பில் ஒரு பாடத்தை விளக்கி, மாணவர்களை அந்தப் பாடத்தினை நன்கு தெரிந்து கொண்டு கேள்விகள் கேட்கப்படும் பொழுது திரும்பிச் சொல்லும் படிச் செய்வது  அவர்களின் திறனை மட்டும் அளிப்பதாகும். இருப்பினும், மாணவர்களின் கற்றல் – புரிதல் ஆகியவைகளில் மாணவர்களின் திறன்களை அளவிட வேண்டு மென்றால், என்னுடைய மாணவர்களுக்கு மிகவும் மாறுபட்ட திறன்களையும், சக்திகளையும் நான் கற்றுக் கொடுக்க வேண்டும். கவனமாக எப்படி ஒரு பொருளைப் பார்ப்பது, எப்படி முழுதும் படிப்பது, படித்த அல்லது பார்த்தவைகளைப் பற்றி எப்படி நினைத்துப் பார்ப்பது ஆகிய அனைத்தையும் நான் கற்றுக் கொடுக்க வேண்டும். கேள்விகள் கேட்கவும், எதையும் திறந்த மனத்துடன் பேசுவதற்கும், நான் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

உற்று நோக்குதல்

வரலாறு பாடத்தைக் கற்பதற்கு உற்று நோக்குதல் என்பது ஒரு முக்கியமான திறனாகும். ஒரு வரை படத்தையோ அல்லது ஒரு படத்தையோ நீங்கள் உற்று நோக்கும் பொழுது, அதில் உள்ளவைகளை நேரடியாக, அன்னியர் யாருடைய இடையூறின்றியும், அன்னியருடைய பார்வையின் மூலமாக இல்லாமலும் – அவர் ஒரு வரலாற்று ஆசிரியராகவோ அல்லது ஒரு பாடப்புத்தக எழுதாளராகவோ இருக்கலாம் – அறிந்து கொள்வது ஒரு முக்கியமான ஒன்றாகும்.

கல்விச் சுற்றுலாவில்  ஹம்பிக்கு செல்லும் பொழுது, கிருஷ்ணதேவராயர் காலத்தின் அரச சபையின் வாழ்வைச் சித்தரிக்கும்  சிதிலமடைந்த மஹானவமி டிப்பா விழாவினைக்  கொண்டாடும் சிற்பம் அங்கிருந்த ஒரு மேடையில் வைக்கப்பட்டிருப்பதை கவனிக்கும் படி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். யானைகள் மரங்களைச் சாய்ப்பதைப் போல் அந்தச் சிற்பத்தில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. வேடுவர்கள் அம்புகளை எய்தும் பொழுது மான்கள் சிதறி நாளாபக்கவும் ஓடுவதாகக் காண்பிக்கப் பட்டிருக்கிறது. இதைக் கவனித்து, பார்த்தவைகளைப் பற்றி எழுத வேண்டும் என்று சொல்லப்பட்ட ஒரு 13 வயது சிறுவனிடம் கேட்கப்பட்ட கேள்வி இது தான்: “ஹம்பி விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகராக அமைவதற்கு முன், ஹம்பியின் நிலப்பரப்பைப் பற்றி இது என்ன தகவல்களை அறிவிப்பதாக  நீ நினக்கிறாய்?” இந்தக் கேள்வியால் தூண்டப்பட்ட மாணவர்கள் சிற்பங்களை மிகவும் உன்னிப்பாகவும், முழுமையாக கவனித்து – அது அவர்களின் சொந்தமான முயற்சி – அந்த நிலப்பரப்பு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி -  ‘அந்தப் பிரதேசம் மிகவும் காடுகள் அடங்கிய ஒன்று’ என்ற முடிவுக்கு வந்தார்கள்.

ஹம்பியின் சீர்குலைந்த சிற்பங்களுடன், அங்குள்ள வேறு எவைகள் அவர்களின் கணிப்புச் சரியானது என்பதை நிரூபிக்கின்றன? அங்குள்ள கட்டிடங்களின் அடித்தளங்களில் கட்டிடங்கள் எழுப்பப் பட்டதற்கான அறிகுறிகள் இல்லாவிடினும், அவைகளில் பள்ளங்கள் காணப்பட்டதால், ஒரு ஒழுங்கு முறையில் தூண்கள் எழுப்பப்பட்டிருக்கக் கூடும் என்று அனுமானிக்க முடிகிறது. இந்தத் தூண்கள் மரத்தால் ஆனவைகளாக இருக்குமோ? அந்தத் தூண்கள் இப்பொழுது இங்கு இல்லாதற்குக் காரணம், அவைகள் மரங்களால் ஆனதால், அவைகள் களவாடப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோ இருக்கலாம் அல்லவா? தலிக்கோட்டா யுத்தத்திற்குப் பிறகு, விஜய நகர சாம்ராஜ்யத்தின் தலை நகரம் ஆறு நாட்கள் எரிந்ததாகவும், பிறகு கொள்ளையடிக்கப்பட்டும், சூறையாடப்பட்டும் இருந்ததாக நாம் அறிகிறோம். முதலில் கண்ட கவனிப்புகளை வேறு ஒரு சம்பவத்திற்குப் பயன்படுத்தி, அதனால் அறிந்த விவரங்களைத் தொடர்பு படுத்தி, மூன்றாவதாகக் கண்ட விபரத்தினால் முடிவான தீர்மானத்திற்கு மாணவர்களால் வர முடிந்தது. இதன் மூலம், மாணவர்கள் எதைக் கற்க வேண்டுமோ அதைக் கற்றார்கள். இந்தக் கற்றலை, வேறு கருத்துக்களுக்கும், சம்பவங்களுக்கும் அவர்களுடைய படிப்பு மற்றும் வாழ்வு ஆகிய இரண்டிலும் பயன்படுத்தும் திறன் பெறுகிறார்கள்.

இத்தகைய திறமைகளான – உற்று நோக்குதல், தொடர்புபடுத்தல் ஆகியவைகள் மெஸோபோடாமியாவைப் பற்றிய பாடத்திலும் பயன்படுத்த முடியும். அந்த இடத்தைக் குறிக்கும் வரைபடத்தில், மலைக் குன்றுகளிலிருந்து நில மார்க்கமாக கடலுக்குள் இரண்டு ஆறுகள் ஓடுவதாகக் காட்டப் பட்டுள்ளன. அந்த ஆறுகள் ஓடும் நிலப்பரப்பு தாழ்வான பகுதியாகவும், மலைக் குன்றுகளுக்கு வெகு தூரத்திலும் இருக்கின்றன. அங்கு வாழும் மக்களின் முக்கிய தொழில்கள், உள்ளூர் பொருளாதாரம், கட்டுமானப் பொருட்கள், அடிக்கடி நடந்த யுத்தங்கள் ஆகியவைகளைப் பற்றி அறிந்து கொள்ள மாணவர்களுக்கு அந்தப் பகுதிகளை உற்று நோக்குதலும், பலவிதமான கேள்விகளும் உதவிகரமாக இருக்கும். மாணவர்களின் அனுபவம் மற்றும் அறிவு வாயிலாக அறிந்த மக்களின் வாழ்க்கையின் பின்னணியில் அவர்களைக் கவனிக்கச் சொல்லி, அந்தக் கவனிப்புகளை வெளிப்படுத்தும் முறையில் மாணவர்களை இங்கு ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம். இதன் மூலம் கண்ட கருத்துக்களை விளக்கவோ அல்லது தள்ளவோ மாணவர்கள் இந்தத் தருணத்தில் முடிவெடுக்கிறார்கள்.

இளைய தலைமுறை மாணவர்களின் மனித உரிமைகளைச் சுருக்கி எழுதப்பட்ட  ‘நாம் சுதந்திரமாகப் பிறந்தோம்’ என்ற தலைப்புக் கொண்ட ஒரு மிகச் சிறந்த புத்தகத்தை நான் பார்க்க நேர்ந்தது.  

தவறாக ஒருவர் ஒரு காரியத்தைச் செய்து விட்டார் என்று யாரும் அவரைக் குற்றம் சொல்லுவதற்கு முன், அவரிடம் முதலில் அதைப் பற்றிக் கேட்க வேண்டியது அடிப்படை உரிமை என்று “ஷரத்து 11 என்ற பாத்திரத்தை” ஏற்றுள்ளவர் விளக்குகிறார். இதை விளக்குவதற்கு ஒரு படத்தைப் பயன்படுத்துகிறார். அந்தப் படத்தில் ஒரு குழந்தை தன் கையில் பூக்கொத்துக்களின் தண்டுகளை வைத்திருக்கிறாள். தரையில் ஒரு ஜாடி விழுந்திருக்கிறது. விழுந்த ஜாடியிலிருந்து தண்ணீரும், பூக்கொத்துத் தண்டுகளும் சிதறி இருக்கின்றன. குழந்தைக்கு அடுத்ததாக, இரண்டு வாலிபக் கால்கள் இருக்கின்றன. இந்தப் படத்தைக் கவனித்து, அதைப் பற்றி உரையாடுவது இதைப்போன்று மாணவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஞாபகப்படுத்த அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். சில சமயங்களில் எப்படி நாம் வெகு சுலபத்தில் முடிவுக்கு வந்து விடுகிறோம் என்பதையும், நமது தவறான அபிப்பிராயங்கள் எவைகள் என்பதையும் மாணவர்கள் தெரியப்படுத்த வேண்டும். கேட்கப்பட வேண்டிய கேள்விகள்: ‘இது போல் உங்களுக்கு ஏற்பட்டதுண்டா?’ ‘சிலரைப் பற்றி எப்பொழுதாவது தவராக மதிப்பிட்டு நடந்த ஒரு சம்பவத்தை நீங்கள் நினவு கூற முடியுமா?’ ‘இந்தச் செயல் எப்படி நிகழ்ந்திருக்கலாம் என்பதை யூகித்துச் சொல்ல முடியுமா?’ ‘தவறானவைகளையும் அல்லது கொடியவைகளையும் எப்படி விளம்பரங்கள், சீரியல்கள், சினிமாப்படங்கள் ஆகியவைகள் காட்டுகின்றன?’ இதன் மூலம், மனித உரிமைகளைப் பற்றி ஒரு அர்த்த புஷ்டியுள்ள அளவில் கற்று, அறிய முடிகிறது.

மேலே விவரிக்கப்பட்டுள்ள உதாரணங்களில் என்ன கற்றுக் கொடுக்கப் படுகின்றன, கற்கப்படுகின்றன, மதிப்பிடப்படுகின்றன என்பவைகள் அனைத்தும் உற்று நோக்குதல், தொடர்பு ஏற்படுத்துதல், ஒருவரின் கண்டுபிடித்தலை பயன்படுத்தி உறுதிசெய்யும் அதிகாரத்தை நிலைநாட்டல்  ஆகிய பலவகையான திறன்களாகும். இந்தத் திறன்களைக் கற்பிக்க, அதற்குரிய பாடங்கள் நேரடியாகவும், சொந்த அனுபவங்களாலும் கற்கப்படுகின்றன. ஆகையால், கற்பிப்பதும் – கற்பதும் இரட்டையர்களாக ஒன்றாக நிகழுகின்றன. மதிப்பீடும் கற்கும் செயல் நிகழும் போதே ஏற்பட்டுவிடுகிறது. அப்படி என்றால், மதிப்பீடு என்பது ஒரு முடிவான தீர்ப்பு என்று கொள்ளலாகாது. மேலும் என்ன கற்பிக்க – கற்க வேண்டும் என்பதின் அவசியங்களைச் சுட்டிக் காட்டும் ஒரு சுட்டியே மதிப்பீடு என்பதையும், இது தான் மதிப்பீட்டுப் பாத்திரத்தின் மிக அத்தியாவசியமான தன்மையாக இருக்க வேண்டும் என்பதையும் மறப்பதற்கில்லை.

சிந்திப்பது எப்படி?

நேர்மையாகச் சிந்திக்கும் செயல் தான், வரலாற்று பாடத்தைக் கற்பிப்பதும்-கற்பதும் என்பதில் உள்ள மிகவும் சிக்கலான கருத்தாகும். கற்பனை, புராணக் கதை, அபிப்பிராயங்கள் ஆகியவைகளில் உண்மைகள் மூடி மறைக்கப்படுகின்றன. தெய்வசக்திகள் கொண்டவைகளைப் பற்றிய கதைகளை இயற்கையான அல்லது சமூக நிகழ்வுகளாக சிந்திரிப்பதையும் ஒருவர் கவனத்தில் கொள்வது அவசியம். உறுதி செய்யப்படாத பரம்பரையாக வழங்கப்படும் ஒருவரைப் பற்றியோ அல்லது ஒரு குறிப்பிட்ட வரலாற்று இடத்தைப் பற்றியோ - தனிப்பட்ட மாறுபட்ட ஒன்றாகக் கொள்ள வேண்டும். தடயங்களை வைத்து விளக்கமுடியும் தன்மைகள் கொண்ட கடந்த காலக் கதைகள் இந்த இரண்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டவைகளாகும்.

ஒரு அபிப்பிராயம் என்பதை தடயங்களின் அடிப்படையில் உருவான வரலாற்று ‘உண்மை’ யான அறிக்கையிலிருந்து பிரிப்பது என்பது மிக மிகக் கடினமான ஒன்றாகும்.

பாடப்புத்தகத்தில் கீழே உள்ளது போல் எழுதப்பட்டுள்ளது:

‘டெல்லி சுல்தான் ஆட்சியில், ராசியாவின் குறை, அவள் ஒரு பெண்ணாகப் பிறந்தது தான்.’

‘அசோகா அஹிம்சையைப் போதித்து, நாட்டை சக்தியற்றதாக ஆகிவிட்டார்.’

இத்தகைய வாக்கியங்களைச் சரியாக அமைத்து, அவைகளைப் பொருத்தமான கருத்தை விளக்கும் இடத்தில் சேர்த்து, பிறகு இப்படிப்பட்ட வாக்கியங்களின் மூலம் சிந்திக்க மாணவர்களுக்கு வழிகாட்டுவது ஆசிரியரின் முக்கிய பொறுப்பாகும்.

அடுத்து, பாடப் புத்தகங்களில் சில உண்மைகளை தெரிவித்தும், சிலவற்றைத் தவிர்த்தும் செய்வதினால், கடந்த கால மனிதனின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு விளக்கம் உருவாக்கப்படுவதை நாம் காண்கிறோம். கடந்த கால நிகழ்வுகளைச் சொல்லும் விதத்தின் அடிப்படையில் தேசிய உணர்வுகள் ஏற்படுகின்றன. அதற்கு ஒரு பகுதி அல்லது தேசம் ஆகியவையை முன்னிலைப் படுத்தி உருவாக்க, வரலாறு பயன்படுகிறது. இப்படிப்பட்ட குறிப்பிட்ட சரித்திர கால நிகழ்வுகள், மக்கள் மற்றும் உண்மைகள் உலகத்தைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை உருவாக்குகின்றன. கஜ்னி – கோரி அவர்களின் சூரையாடல்கள், வட இந்தியாவில் உள்ள கங்கை சமவெளியில் நடந்த யுத்தங்கள், கொடுமைகள் ஆகியவைகள் விவரிக்கப்பட்டு இஸ்லாம் மதம் வேரூண்டியது என்பது சரித்திர பாடப்புத்தகங்களில் ஒரு அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுவதைக் காண்பது ஒன்றும் புதிமையான ஒன்றில்லை. அதே சரித்திரப் புத்தகங்களில், மலபார் கடற்கரைப் பிரதேசங்களில் அநேக மக்கள் பல வருடங்களாக நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதைப் பற்றி ஒன்றும் அநேகமாக எழுதப்படவில்லை. சரித்திரம் என்றாலே, சண்டை- சச்சரவுகள் ஆகியவைகளை அறியும் பாடம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டு, மக்களின் ஒரு கூட்டத்தாரை ஒரு குறிப்பிட்ட குணம் கொண்டவர்களாகப் பார்க்கும் அபாயம் நிகழுகிறது. இத்தகைய கடந்தகால மனித வாழ்வு மாணவர்களின் மனத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

உலக சரித்திரப்பாடத்தைக் கற்பிக்கும் பொழுது, அதிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நடந்த சண்டைகள், சச்ரவுகள் ஆகியவைகளைச் சுற்றியே பொதுவாக குறிப்பிடப்பட்டிருக்கும். இதைக் குறிப்பிடும் பொழுது, உலகத்தில் உள்ள சில பகுதிகள் அதிகார மையங்களாகிவிடுகின்றன; சண்டைகளும், சச்ரவுகளும் சரித்திர சம்பவங்களாக முக்கியத்துவம் வாய்ந்து. உலகம் முழுவதும் பரவிவிடுகின்றன. சண்டை என்பது மனித வாழ்வில் ஒரு தவிர்க்க முடியாத அம்சம் என்ற கருத்துக்கள் வளரும் மாணவ மனங்களில் மிகவும் அழுத்தமாக ஒருவரும் சொல்லாமலே பதிந்து விடுக்கின்றன. ஜாதியைப் பற்றி பாடப் புத்தகங்களில் பொதுப்படையாகச் சொல்லப்படும் கருத்துக்களும், எப்படிப் பெண்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதான ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நிகழும் இப்படிப்பட்ட பிரச்சனைகள் தீர்க்கமாக ஆராயப்படுவது அவசியமானதாகும். இந்த மாதிரியான பொதுப்படைக் கருத்துக்கள் சரித்திரத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்பதால், அவைகள் சரியான கோணத்தில் அறியப்பட வேண்டிய       வைகளாகின்றன. மனித வாழ்வு மற்றும் நாம் வாழும் உலகம் ஆகியவைகளைப் பற்றிய கருத்துக்கள் இப்படித்தான் உருவாகின்றன. சரித்திர வகுப்புகளில், நாம் பார்த்த, படித்தவைகளைப் பற்றிக் கேள்விகள் கேட்கப்படவேண்டும். நாம் பார்த்தவைகளுக்கும், படித்தவைகளுக்கும் உள்ள வேறுபாடுகள், அனுபவங்கள், கேட்டவைகள், நினப்பவைகள் ஆகிய அனைத்தைப் பற்றியும் கேள்விகள் எழுப்பப்படவேண்டும். இவைகளுக்குள் இருக்கும் இடைவெளிகளை ஆராயும் பொழுதுதான், உண்மையான கற்றல் நிகழுகின்றது.

கற்பிப்பதும் – கற்பதும் இரட்டையர்களாக ஒன்றாக நிகழுகின்றன. மதிப்பீடும் கற்கும் செயல் நிகழும் போதே ஏற்பட்டுவிடுகிறது. அப்படி என்றால், மதிப்பீடு என்பது ஒரு முடிவான தீர்ப்பு என்று கொள்ளலாகாது. மேலும் என்ன கற்பிக்க – கற்க வேண்டும் என்பதின் அவசியங்களைச் சுட்டிக் காட்டும் ஒரு சுட்டியே மதிப்பீடு என்பதையும், இது தான் மதிப்பீட்டுப் பாத்திரத்தின் மிக அத்தியாவசியமான தன்மையாக இருக்க வேண்டும் என்பதையும் மறப்பதற்கில்லை.

பொருட்கள் மற்றும் கேள்விகள் ஆகியவைகளை அறிந்து கொள்வதின் அடிப்படையில், மாணவர்கள் சிந்திக்கக் கற்றுக் கொள்கிறார்கள். ‘என்னால் சுயமாகச் சிந்திக்க முடியும்’ என்று ஒரு மாணவன் அறியும் பொழுது, அந்த மாணவனுக்கு ஒரு பெரிய தன்னம்பிக்கை பிறக்கிறது. நடைமுறையில், பள்ளிக் கல்வி என்ன நினக்க வேண்டும் என்பதைத் தான் கற்றுக் கொடுக்கிறதே அன்றி, ஏன் அப்படி நினைக்க வேண்டும் என்பதை அல்ல. திரும்பத் திரும்ப இயந்திரமாக ஞாபகப்படுத்திச் சொல்வதில் இல்லாமல், புதுமையானவற்றை உருவாக்கும் மனித வர்க்கமாக மாணவர்கள் வளர்வதற்கு, தரமான நினைப்புகள் தான் வழிகாட்டும். இந்த நினக்கும் திறனைத் தான் உரம் விட்டு, மதிப்புடன் காக்க வேண்டியது அவசியமாகும்.

கேள்வி கேட்டல்:

 கவனித்தல் – கற்றல் மூலமாக எப்படி யோசிக்க முடியும் என்பதை மாணவன், சரித்திரப் பாடங்களில் நடந்த சம்பவங்களின் உண்மைகளை அறிதலின் மூலமாகப் பெறுகிறான். சரித்திரப் பாடத்தைக் கற்றல் என்பது எப்படி சமூகங்கள் இயங்குகின்றன என்பதை அறிவதற்கு மட்டுமின்றி, தற்கால நிகழ்வுகளை தீர்க்கமாக அறிந்து கொள்வதற்கும் சரிசமமாகப் பொருந்தும். தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் தகவல்கள் மற்றும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான திறமைகள், நிகழ்கால முறைகளை அறிதல் ஆகியவைகளுக்கு சரித்திரம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கற்றல், நினத்தல் – மதிப்பிடுதல் என்ற கருவிகளால் சாணைப்பிடிக்கப்பட்டு ஒரு மாணவனை உயர்த்தி விடும்.  இந்த நிலையால், அந்த மாணவன் கற்றலைப் பயன்படுத்தி, ஒரு முடிவு அல்லது தீர்மானம் செய்வதற்கு உணர்ச்சிபூர்வமாக இல்லாமலும், எந்தவித சரியான தகவல்களும் பெறாமலும் செயல்படமாட்டான்.  

இதை எப்படிக் கற்பிப்பது, கற்பது, மதிப்பிடுவது? தற்காலத்தை அறிவதற்கு ஒரு வழி என்று சரித்திரத்தைச் சொன்னால், பிறகு சரித்திரத்தின் ஆரம்பம் நிகழ்காலமாகத் தான் இருக்க வேண்டும்.

அப்படி என்றால், வகுப்பறைகளில் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டு, விவாதத்தினை ஆரம்பிக்கலாம்:

“இந்தியப் பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் மொழியாக ஆங்கிலமொழி ஏன் இருக்கிறது?”

“இந்தியப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் ஆங்கிலப் பிள்ளைகளைப் போல் சீருடையான டை, சாக்ஸ், ஷீக்கள் ஆகியவைகளை ஏன் அணிகிறார்கள்?”

“தற்கால கல்வியில் குழந்தைப் பருவம், வாலிபப் பருவம் ஆகியவைகளைப் பற்றி எந்தமாதிரியான கருத்துக்கள் உருவாகி உள்ளன?”

இந்த மாதிரியான கேள்விகளுக்கான பதில்களின் தேடல்களில் தான், பொருத்தமான சரித்திரம் அடங்கி உள்ளது.

சரித்திரபாடத் திட்டத்தைப் பார்க்கும் பொழுது, மாணவர்கள் மனத்தில் எழும் கேள்விகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக சரித்திரப் பாடங்கள் ஆரம்பிக்கின்றன. ‘ஆங்கில ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும், ஆங்கில ஆதிக்கத்தின் முன்னேற்றம், ஆங்கில ஆட்சியை ஒருங்கிணைத்தல்’ – ஆகிய தலைப்புகள் சரித்திரப் பாடத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. இவைகள் மாணவர்களை கீழ்க்கண்ட கேள்விகள் கேட்கத் தூண்டும்: “ஆங்கிலேயர்கள் ஏன் இந்தியாவிற்கு வந்தார்கள்? இந்தியர்கள் பல பேர்கள் இங்கு இருக்கும் பொழுது, ஒரு சிறு குழுவினராக வந்த ஆங்கிலேயர்கள் எப்படி பலம் பெற்றதுடன், அதை வளர்த்து கால் ஊன்றினார்கள்? இவைகள் நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இந்திய மக்கள் என்ன செய்தார்கள்?

இவைகள் அனைத்தும் மிகவும் முக்கியமான கேள்விகள். இந்த மாணவர்களின் கேள்விகளிலிருந்து தான், கற்றல் ஆரம்பமாகிறது. இவைகளைத் தவிர்த்து, வேறு மாதிரியான கேள்விகளும் உண்டு. கடந்த காலத்தின் மூலம் நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ள உதவப் பிறந்த கேள்விகளான அவைகள், உரையாடல்களின் போது வெளிச்சத்திற்கு வரும். உதாரணம்: அயோத்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது உணர்ச்சி வசப்பட்ட செய்கை என்பதை நாம் எப்படி புரிந்து கொள்ள முடியும்?

இறந்த காலம் – நிகழ் காலம் ஆகியவைகளுக்கு இடையில் நிகழும் நிகழ்ச்சிகள் இயற்கையானதைப் போல், முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். ஒரு வருடமாக இடைக்காலம் மற்றும் முற்பகுதி நவீன இந்தியாவைப் படித்த பிறகு, மாணவர்களை ஒரு கட்டுரை மூலமாக நினைக்கவும், தொடர்பு படுத்தவும், பதில் சொல்லவும் உதவுவதற்கு, கீழே சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன:

அதிகாரத்தைக் கைப்பற்ற போராட்டம்.

முன்னுரை: ‘அதிகாரம்’ என்றால் என்ன பொருள்? அதிகாரம் ஒரு அரசனுக்கு ஏன் தேவைப்படுகிறது?

மேலும் கேட்கப்படும் கேள்விகள்:

  • ஒருவன் தன்னை அரச பதிவியில் இருத்திக் கொள்ள எந்த குறிப்பிட்ட நிபந்தனைகள் வேண்டும்? (ராஜஸ்தான் அரச வம்சக் கொள்கை, குதிப்-உத்-அபக், பாபர், ஹுமாயூன், சிவாஜி)
  • ஒரு அரசன் தன் அதிகாரத்தை எப்படிப் பாதுகாத்துக் கொள்வான்? (சோழ அரசர்கள், பால்பன், அலாவுடின் கில்ஜி, கிருஷ்ணதேவராயர், அக்பர், அவுரங்கசீப்)
  • அதிகாரங்கள் அரசர்களை எப்படித் தனிப்பட்ட முறையில்  பாதித்துள்ளன? ( அலாவுடின் கில்ஜி, முகமது பின் துக்ளக், ஜஹாங்கீர், ஷாஜகான்). இந்த அதிகாரப் போராட்டங்கள் அவர்களின் மற்றவர்களிடம் கொண்டுள்ள உறவுகளை எவ்வாறு பாதித்தன? அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட விளைவுகள் என்ன?
  • இங்கே குறிப்பிட வேண்டிய துக்கமானவைகள் எவைகள்? (ராசியா, பாமினி அரசர்கள், முகலாய அரசர்களுக்குள் பதவிக்கு நடந்த சண்டைகள், அவுரங்கசீப் அரசுக் கட்டிலைக் கைப்பற்றிய விதம்.)

முடிவுரை:

நீங்கள் படித்தவைகளைப் பற்றி உங்கள் கருத்துக்களை எழுதவும்.

மதிப்பிடும் வேலைகள்

மதிப்படப்படுவது ஒரு செயல், குழு வேலை அல்லது ஒரு களப்பணிச் சந்திப்பு ஆகியவைகளாக இல்லாமல், ஒரு எழுதும் தேர்வாக இருப்பின், மதிப்பிடும் வேலைகள் எப்படிக் காணப்படும்? இதுவரை இங்கு சொல்லப் பட்டவைகளிலிருந்து ஆங்காங்கே இருந்து தொகுத்த சிலவற்றைக் கீழே கொடுத்துள்ளோம்:   

கேள்வி 1:

புராதனமான எகிப்தின் கீழே உள்ள ஒரு கல்லரைப் படத்தைக் கவனமாகப் பார்த்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதில் சொல்லவும்: 

நீங்கள் பார்க்கும் மக்கள் செய்து கொண்டிருக்கும் மூன்று வேலைகளை என்ன?

அவர்கள் பயன்படுத்தும் கருவிகளை விவரிக்கவும்.

மக்கள் பலவிதமான அளவுகளில் காட்டப்பட்டுள்ளனர் என்பதைப் பற்றி நீங்கள் என்ன நினக்கிறீர்கள்? உங்களின் காரணங்களை விளக்கவும்.

கேள்வி 2:

கீழே ஒரு செய்தித் தாளின் கதை இருக்கிறது. அதில் எந்த மனித உரிமை குறிப்பிடப்பட்டிருக்கிறது? உரிமையைக் குறிப்பிடவும். பிறகு, அந்த உரிமை இங்கு எப்படி மீறப்பட்டது என்பதை விளக்கவும்.

கேள்வி 3:

கல்கத்தா கருங்குழிச் சம்பவம் பற்றி சரித்திர ஏடுகளிலிருந்து இரண்டு பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியரின் அறிக்கைகளில் காணும் ஒற்றுமைகள் என்ன? அவைகளில் எவைகளை உண்மைகள் என்று நீங்கள் கணிக்க முடிகிறது?

கேள்வி 4:

ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அந்த வரைபடத்தைக் கவனமாகப் பார்க்கவும். பிறகு கீழே உள்ள கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும்.

  • மக்களின் தொழில் எதுவாக இருக்கும்? ஏன்?
  • ஓய்வு நேரத்தில் அவர்கள் செய்யும் தொழில் என்னவாக இருக்கும்? அப்படி நீங்கள் யூகிப்பதற்கு எது காரணம்?
  • அந்தப் பகுதியில் நடைபெறும் முக்கிய வியாபாரத் தொழில் எதுவாக இருக்கும்?
  • எந்தப் பகுதிகளுடன் இந்தப் பகுதி தொடர்பு கொண்டிருக்கக் கூடும்?
  • இந்தப் பகுதியில் என்ன பயிர்கள் விளையும் என்று நீங்கள் ஊக்கிக்கிறீர்கள்?

உங்களின் காரணங்களைக் குறிப்பிடவும்.

மேலே உள்ள பயிற்சிகளில் மூன்று கருத்துக்கள் தெளிவாகின்றன.

முதலில், கொடுக்கப் பட்ட ஒரு படத்தை, ஒரு வரை படத்தை அல்லது ஒரு உரையை படிக்கவோ அல்லது ஆராயவோ வேண்டப்படுகிறார்கள். இந்தத் தகவலை மாணவர் முன்பே அறிந்த தன் அறிவின் படிவத்தில் அமைத்துக் கொண்டு, பிறகு அதைப் பற்றித் தெளிவாக நினக்க வேண்டும். பிறகு, மாணவர் தான் கவனித்ததைப் பற்றி தீவிரமாக ஆலோசித்து நினைத்ததைக் கவனமாக எழுதிக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, பயிற்சி நடைபெறும் போது, பதிலை உருவாக்கும் சக்தியாகி, அந்தப் பதிலில் ஒரு திட நம்பிக்கையுடன் தொடர்ந்து வேலை செய்ய முடிகிறது.

மூன்றாவதாக - அது தான் மிக முக்கியமானதாகும் – சில புதிய திறமை அல்லது பயிற்சிமூலம் அறிவு ஆகியவைகளைப் பெறுவதுடன், உள்ளொளியையும் பெறுகிறார்கள்.

எந்த ஒரு மதிப்பீட்டுப் பயிற்சியில் மாணவர் எதையும் கற்க முடியவில்லையோ அதைக் குறையுள்ள, அர்த்தமற்ற ஒன்றாகத் தான் கொள்ள வேண்டும்.

மதிப்பிடலுக்கு அப்பால்

சமூக அறிவியல்களின் மதிப்பீடுகள் எவ்வாறு அர்த்த புஷ்டியாகச் செய்யப்படுகின்றன என்பதைப் பற்றிய விவரங்களைச் சொன்னதற்குப் பிறகு, நான் சொல்ல விரும்பது என்னெவென்றால்  சமூக அறிவியல்களின் மூலமாக மிகவும் முக்கியமாகக் கற்பிக்கப்படுபவைகளை மதிப்பிட முடியாது என்பதுதான்.

சமூக அறிவியல் பாடத்திலிருந்து முக்கியமாகக் கற்க வேண்டியது சரியாக வாழ்வதும், அந்த வாழ்வைச் சரியாக கீழ்க்கண்ட வழிகளில் தொடர்பு படுத்துவதுமாகும் – எந்த விதமான முடிவுகளுக்கும் வராமல் கவனிப்பது, வார்த்தைகள், கருத்துக்கள் மற்றும் சம்பவங்களுக்கு நமது நரமபு, மற்றும் உணர்ச்சிகளின் தாக்கங்களுக்குக் காரணமான கொள்கைகளின் செயல்பாடுகளில் விழுப்புணர்வை வளர்ப்பது, எந்தவிதமான முரண்பாடுகளும் மனத்தில் இல்லாமல் பல மாறுபட்ட அபிப்பிராயங்களை வைத்திருக்கப் பழகுதல்.

ஒவ்வொரு நாள் வாழ்வின் உண்மைகள் தெளிவான கண்ணோட்டத்தில் நமக்கு உதவியாக இருப்பதுடன் நமது கடமைகள் என்ன என்பதைப் பற்றியும், தப்பான எண்ணங்களிலிருந்து நம்மை விடுவித்து, கேள்வி கேட்டுச் சுயபரிசோதனைக்கு ஏற்ற களத்தை உருவாக்குவதற்கும் கற்பது எனபது உதவிகரமாக இருக்க வேண்டும்.

என்னுடைய கருத்தில், சமூக அறிவியலின் கற்பதின் குறிக்கோள் இரண்டு வகைப்படும். ஒன்று – தற்போதைய காலத்தில் வாழ்பவர்களைப் பற்றி அறிவதற்கு, மற்றொரு இடம், காலம் ஆகிவற்றில் வாழ்பவர்களின் மனித இனத்தின் சம்பவங்கள் மூலம் நமக்குக் கற்றுக் கொடுப்பதாகும். நம்மைச் சூழ்ந்துள்ள இயற்கைச் சூழ்நிலை, மிருகங்கள், மனிதர்கள் ஆகியவைகளுடன் நட்பான தொடர்பை ஏற்படுவதற்கு இது இயலச்செய்யும். கடமை மற்றும் ஆதரவு இவைகளுடன் ஒரு உறவை ஆழமாக ஏற்படுத்தினால் மட்டுமே, அறிவும் திறமையும் மதிப்பினை அடைகின்றன.

ஜயஸ்ஸ்ரீ நம்பியார், சென்னையில் இயங்கும் கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் பள்ளியில் ஆங்கிலம் மற்றும் வரலாறு ஆகியவைகளைக் கற்பிக்கிறார். தற்போது அவர் அந்தப் பள்ளியின் தலைவராக இயங்குகிறார்.

அவரைத் தொடப்பு கொள்ள வேண்டிய முகவரி-

Jayashree.nambiar@gmail.com

 

18490 registered users
7234 resources