செய்முறைப் பயிற்சிகள், களப்பணிகள், மதிப்பீட்டுக் கண்டுபிடிப்புகள் ஆகியவைகளின் பங்குகள்

“பயன்படும் அனைத்தையும் கூட்ட முடியாது. கூட்டமுடிந்த அனைத்தும் பயன்படுபவைகள் அல்ல.”  – ஆல்பர்ட் ஈன்ஸ்டின்.

ஒரு அனுபவம்

மஹாராஸ்டிரா கிராமத்தில் இருக்கும் ஒர் குன்றின் கீழே இருக்கும் பள்ளிக்கு நடந்து சென்று படிக்கும் குழந்தைக்கு சமூகப் பாடங்கள் அதன் 10 வயதினேலே ஆரம்பித்துவிடுகிறது. அவர்களின் அன்றாட வாழ்விலே ஒரு அங்கமாக அவர்கள் செல்லும் பாதையில் கிராமத்தின் கிழே ஓடும் நதியைப் பற்றி அறிந்து கொள்ளச் செல்கிறார்கள். இந்த அறிதல் பயிற்சி அவர்கள் வகுப்பறையிலேயே ஆரம்பித்து விட்டது. நூலகத்தில் இருக்கும் புத்தகங்களைப் பார்த்து, நதியின் பாதையைச் சரியாக எழுதிக் காட்டச் சொல்லும் அந்தத் தருணத்திலேயே ஆரம்பித்து விட்டாலும், நேரிலே பார்க்கும் நேரத்தில் தான் அந்த நதியுடன் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டாகிறது. அந்த நதியிலும் அதைச் சுற்றி வாழும் பலவைகயான ஜந்துக்களான – பலவிதமான மீன்கள், பறவைகள், நிலம்-நீர் வாழ் இனங்கள், ஊர்வனவைகள், நதியை நம்பியே வாழும் மீனவர்கள் ஆகியவைகள் பற்றி அறிதல் ஏற்படுகின்றன. அப்பொழுது, நிரந்தமாக வசிக்கும் உள்ளூர் வாசியான மீனவர்களைப் பற்றிய சுவாரஸ்யமான விவரங்களை அறியும் அந்தச் சமயத்தில்,   ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வருடத்திற்கு ஒரு முறை தவறாது அந்தக் கிராமத்திற்கு வந்து நதியில் நண்டுகளையும், இறால்களையும் விடுபவர்களைப் பற்றி தற்செயலாகத் தெரிந்து கொண்டார்கள். நண்டுகளையும், இறால்களையும் சில மாதங்கள் வரை அங்கு வளர விட்டு விடுகிறார்கள். அவைகள் நன்கு வளர்ந்த பிறகு, திரும்ப வந்து அவைகளைப் பிடித்து, பிற பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து, அதன் மூலம் பெரும் லாபம் அடைகிறார்கள். அந்த விழிப்படையாத கரடுமுரடான கிராமத்தில் உள்ள கிராம மக்கள் எல்லோருக்குமே இப்படிப்பட்ட சந்தைப் பொருளாதார முன்னேற்றக் கருத்துள்ள செயல்கள் ஒரு வியப்படைய வைக்கும் ஒன்றாகும். வெளியூர்களிலிருந்து வந்த அந்த மீனவர்கள் அவர்கள் தங்குவதற்குப் போடப்பட்ட தற்காலிகக் நீலக் கொட்டகைகள் இந்த அவர்களின் வியாபார உத்திகளின் சிறப்பான கதையினைப் பற்றி, மலைக் குன்றிற்கு மேலே உச்சியில் குடியிருக்கும் கிராம மீனவ மக்களுக்கு கொஞ்சமும் தெரியப்படுத்தவில்லை. பள்ளிப் பிள்ளைகள் அந்தக் கிராம மீனவர்களின் குடியிருப்புகளுக்குச் சென்று, அவர்களின் நிலையற்ற வாழ்க்கை, போராட்டங்கள், ஆனந்தங்கள் ஆகியவைகளைப் பற்றி அறிந்து கொண்டார்கள். இவைகளை எந்தப் பாடப்புத்தகமும் வெளிப்படுத்த முடியாது. வெளி மாநிலங்களிலிருந்து தற்காலிகமாக இந்தக் கிராமத்திற்கு வரும் மீனவர்களால் உள்ளூர் மீனவர்களின் சமூக மற்றும் பொருளாதார வாழ்வு எந்தவிதத்திலாவது பாதிப்படைந்துள்ளனவா என்பதைப் பற்றி அந்தக் குழந்தைகள் அறிய முயன்றார்கள். சில குழந்தைகள் மீன் பிடிப்பை ஒரு தொழிலாகச் செய்வது பாவமில்லையா என்ற அளவில் கேள்வியை எழுப்பினார்கள். இருப்பினும், அந்தத் தொழில் அவர்கள் வாழ்விற்கு அவசியமான ஒன்றாக இருப்பதைப் பிறகு உணர்ந்து கொண்டார்கள்.

அடுத்த பயிற்சியாக, நிதியில் கட்டப்பட்ட அணையை அது எப்படிச் செயல்படுகிறது என்பதைக் கவனத்துடன் பார்த்தார்கள். அந்தப் பிரதேசத்திற்கு அணையின் அவசியம், அதிலிருந்து உற்பாதியாகும் மின்சாரம், கிராமத்து மக்களின் அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பத்து வருடங்களாக நடந்த போராட்டம் ஆகிய அனைத்து விவரங்களையும் அங்குள்ள பொறியாளரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். அதன் மூலம், அணையின் சரித்திரம் அவ்வளவு எளிமையான ஒரு கதை இல்லை என்பதை அவர்கள் ஒவ்வொருவரும் கடைசியாக நம்பினார்கள். உண்மை என்னவென்றால், அணை கட்டியதால் அங்கு குடியிருந்த மக்கள் குடிபெயரவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகி, முழு கிராமமுமே நீரில் மூழ்க வேண்டியதாகி விட்டது. குடிபெயர்ந்த மக்கள் அனைவருக்கும் தகுந்த இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டதாகவும், உள்ளூர் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பைவிட அந்த அணை கட்டியதால் ஏற்படும் நன்மை அதிகம் என்று அந்தப் பொறியாளர் அறிவித்தாலும், அந்தக் குழந்தைகள் கூட அவர்கள் மனதில் இந்த அணையின் கதையில் சொல்லப்படாத சோகம் அதிகம் என்பதை உணரமுடிந்தது. ஆகையால், சில உள்ளூர் கிராம வாசிகளைச் சந்திக்க முடிவெடுத்தார்கள். அந்தக் கிராம வாசிகளில் சிலர் அவர்கள் படிக்கும் பள்ளியில் வேலை செய்பவர்களாகவார்கள். அவர்களுடன் உரையாடும் பொழுது, அணையின் கதையைப் பற்றிய முற்றிலும் மாறுபட்ட விபரங்களான கிராம மக்களின் கோபங்கள், வெறுப்புகள், நிலங்கள் - வீடுகள் இழப்பு, அரசாங்கம் உறுதி அளித்தபடி இழப்பீட்டுத் தொகைகள் கிடைக்காமை அல்லது அவர்களது செழிப்பான சொந்த நிலத்திற்குப் பதில் மிகவும் வெகு தூரத்தில் உள்ள மிகவும் வளமற்ற நிலத்தை அளித்தது ஆகியவைகள் வெளிப்பட்டன. இந்த ஓடும் நதியின் பயிற்சியின் மூலம் அறிந்த புதிய செய்திகளால் மிகவும் உற்சாகமாகிய மாணவர்கள் அந்தத் தகவல்கள் அத்தனையையும் அறிக்கைகளாகவும், போட்டோக்களாகவும், உணர்ச்சியூட்டும் வரைபடங்கள் மற்றும் உரையாடல்கள் ஆக உருவாக்கி, அவைகளை பள்ளியில் உள்ள அனவருக்கும் தெரியப்படுத்தும் முகமாக வெளியிட்டார்கள்.   

எந்த ஒரு செயலையும் துள்ளியமாகவும், முழுமையுமாக அளவிட முடியாவிடில், அந்தச் செயலைச் செய்வதில் என்ன பயன்? வெறும் பேப்பர்-பென்சில் மூலம் பழமையான வழியில் மதிப்பிடுவது ஒரு வரலாறாகக் கடைப்பிடிக்கப்படும் ஒரு நாட்டில், திட்டங்கள், களப்பணி மற்றும் பிற அனுபவங்களை ஆய்வுகள் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட வழிகள் உண்டா என்று கேட்கப்படுவது இயற்கையே.

களப்பணியின் முக்கியக் கருப்பொருளை அறிந்து கொண்டார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், அதே சமயத்தில் எனக்கு எழுதுவதற்குக் கொடுக்கப்பட்ட தலைப்பினைப் பற்றியும் நினைத்து, எழுதும் கருத்துக்கள் அனைத்தும் மதிப்பிட வேண்டியவைகள் என்ற உலக நியதியை நான் கடைப்பிடிக்க வேண்டியவளாக இருப்பதை உணர்கிறேன்.

எந்த ஒரு செயலையும் துள்ளியமாகவும், முழுமையுமாக அளவிட முடியாவிடில், அந்தச் செயலைச் செய்வதில் என்ன பயன்? வெறும் பேப்பர்-பென்சில் மூலம் பழமையான வழியில் மதிப்பிடுவது ஒரு வரலாறாகக் கடைப்பிடிக்கப்படும் ஒரு நாட்டில், திட்டங்கள், களப்பணி மற்றும் பிற அனுபவங்களை ஆய்வுகள் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட வழிகள் உண்டா என்று கேட்கப்படுவது இயற்கையே.

இந்த மதிப்பிடல், மரபு வழியிலான தேர்வுகளின் மூலமாக நிகழலாமா அல்லது மாணவர்களின் கற்றலை இன்னும் நம்பகரமான, ஒருங்கிணைந்த, முழுமையான மதிப்பீட்டு முறைகள் நமக்குத் தேவையா?

மதிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களை வைத்து, அவைகள் எவ்வளவு தூரம் குழந்தைகளின் கல்வியின் அனுபவத்தை உயர்த்தும் என்ற கேள்வி எழும். குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டி, அவர்களை ஈடுபடுத்தி, அவர்கள் மனத்தைக் கவர்ந்து ஒரு இயற்கையான அனுபவத்தை களப்பணிப் பயிற்சி அளித்தது. இந்த மாதிரியான அனுபவங்கள் வகுப்பறைகளைத் தாண்டி வெளி உலகத்தில் நடக்கும் பல சம்பவங்களை அவர்களாகவே கண்டு கொள்ளும் ஒரு வாய்ப்பை மாணவர்களுக்கு அளிப்பதின் மூலம், அந்த அனுபவத்தில் கிடைத்த உண்மைகளை ஆராய்ந்து – அதனால் பல முறைகள் பெறப்படும் விளக்கத்தினால் குழப்படைந்தாலும் – நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் பற்றி மீண்டும் நினைத்து, கேள்விகளுக்குப் பதில் சொல்வதும், மீண்டும் முதலில் கண்ட முடிவுகளையே ஏற்பதும் நிகழும்.

ஒரு குறிப்பிட்ட பயிற்சியில், மாணவர்கள் குழுக்களாக ஒன்றைப் பற்றி அறிந்து ஆராய்வதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். மாணவனின் செயல், அவனது செய்கையின் முடிவின் தரம், அறிதலை வெளிப்படுத்திய தன்மையின் ஆழம், தொடர்ந்து கற்கும் பயிற்சியில் அவனின் பங்களிப்பு ஆகியவைகளைப் பொருத்து அமைகிறது. ஒவ்வொரு மாணவனும் தனிப்பட்ட முறையில் மதிப்பிடப்படலாம் அல்லது மதிப்பிடப்படாமலும் இருக்கலாம். முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டிய விஷயம் என்ற வென்றால், இந்தப் பயிற்சிகள் மாணவர்களது சொந்த அபிப்பிராயங்கள் மற்றும் கருத்துக்கள் ஆகியவைகளைப் பற்றி மறுபரிசீலனை செய்வதற்கான  ஒரு வாய்ப்பையும், நுண்ணியமாக சிந்தித்து தேர்வு செய்யவும், அவர்களது அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதன் மூலம் சரியான அறிவுபூர்வமான முடிவுகள் எடுக்கவும் மாணவர்களை உருவாக்குகின்றன. பாடத்தின் பொருளை நேரிடையான அனுபவத்தின் மூலம் கற்பதால், அதன் கருத்தினை ஆழமாக அறிய உதவ இந்த அனுபவம் உதவிகரமாக இருக்கின்றது. உற்சாக மில்லாத அல்லது அர்த்தமில்லாத வகுப்பறைப் படிப்பை மாற்றி, மாணவர்களை ஊக்கப்படுத்தும் முறையாக இந்த நேரடி அனுபவங்கள் அமைகின்றன.

கற்றல் வெளிப்படல்

அனுபவ அறிதலை மனதில் பதிய வைப்பதற்கு பலவகையான புதுவழிகள் காணப்படுகின்றன் – அறிக்கைகள், பவர் பாயிண்ட் மூலம் விளக்குதல், வரைபடங்கள், வரைவுகள், திரட்டுகள், கட்டுரைகள், கவிதைகள், துக்கடாக்கள், மாடல்கள், பலவகைத் தொகுப்புப் புத்தகங்கள் ஆகியவைகள் அவைகளில் சில வழிகளாகும்.

திறனை வளர்த்தல்

மாணவர்களின் பலவகையான திறன்களை கீழே குறிப்பிட்டுள்ளவைகளின் அனுபவங்கள் மூலம் வளர்க்க முடியும்: ஆய்வு மற்றும் காரணங்களைத் தெரிந்து கொள்ள விழையும் ஆர்வம் ஆகிய திறமைகள், உரையாடல் மற்றும் வெளிப்படுத்துதல் திறமைகள், நிர்வாகம் மறறும் காலத்திற்குள் முடிக்கும் திறமைகள், சுய மதிப்பீடு – மறுபரிசீலனை திறமைகள், குழுவினராகச் செயல்படல் மற்றும் தலைமை தாங்கும் திறமைகள்.

மதிப்பிடும் உத்தி

ஒரு ஆசிரியராக நான் இருந்து, மேலே கூறிஉள்ள அனுபவங்களில் பலவற்றின் அனுபவத்தைப் பெற்ற காரணத்தால், நான் என்னையே இந்தக் கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன்: மாணவர்களின் கற்றலை ஆணித்தரமாக என்னால் மதிப்பிட முடிந்ததா?

இதற்குப் பதில், ஆமாம் என்றாலும், ஒரு அளவுக்குத்தான் என்று சேர்க்க வேண்டிய நிலையில் தான் இருக்கிறது. வேறு பிற பயிற்சிமுறையில், திட்டப்பயிற்சி – களப்பணிக்கான நேர்காணல் ஆகியவைகளை மதிப்பிடுவதில் ஏற்படும் தன்மை யோசித்துத் திட்டமிடுவதைப் பொருத்துத் தான் அமையும். பயிற்சிகளின் வெற்றி இலக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள், அவைகளை அடைவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிகள், குறிக்கோள்களை அடைந்து விட்டோமா என்பதை அறிய பயன்படுத்தும் அளக்கும் கருவிகள் ஆகியவைகளைப் பற்றி ஒருவருக்கு ஒரு தெளிவான சிந்தனை இருக்க வேண்டும். ஒரு பயிற்சியை திட்டமிடுவதற்கு முன்னால், இந்தக் கேள்விகளை எப்பொழுதும் கேட்க வேண்டியது அவசிமாகும்: “நான் இதை ஏன் செய்கிறேன் அல்லது இதை எதைக் குறிவைத்துச் செய்கிறேன்? இந்த எனது பயிற்சி வெற்றி அடைந்தது என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வேன்? மாணவர்கள் இந்தப் பயிற்சியால் கற்றுக் கொண்டு விட்டார்கள் என்பதை நான் எப்படித் தீர்மானிப்பது?”

எனது சொந்த அனுபவத்தின் வாயிலாகத் தெரிந்த ஒன்றை நான் இங்கு கட்டாயம் எடுத்துரைக்க வேண்டும்: பயிற்சி செய்யும் போது, வெற்றி இலக்குகள் மற்றும் குறிக்கோள்கள் ஆகியவைகள் மாற்றமடையும். அதனால், இவைகளுக்கு இடம் அளிக்கும் வகையில் ஒருவர் தம் மனத்தை வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

மதிப்பீட்டுத் திட்டத்தில், திட்டமிட்ட வடிவத்தில் மதிப்பிடும் பொழுது,  பயிற்சி நடக்கும் தருணத்திலும் பின்னூடல் பெற வாய்ப்புண்டு. மொத்தமான இறுதி மதிப்பீட்டில் மாணவர்களின் ஒட்டு மொத்த செயல் திறன்கள் வெளிப்படும். அறிவுக் கூர்மை என்பது பலதரப்பட்டதானதால், மதிப்பிடலும் பலதரப்பட்டனவாக இருக்க வேண்டும். 

ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகாட்டுச் சுவடிகளில் ஆசிரியர்கள் மாற்றங்கள் செய்து பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்பது இதில் அவசியமான தேவையாகப் படுகிறது. ஆகையால், ஆசிரியர்களே தங்கள் தேவைக்குத் தகுந்த படி வழிகாட்டுச் சுவடிகளை உருவாக்கிக் கொண்டு, உள்ளூர் பயிற்சிகளை மதிப்பிடும் போது பயன்படுத்துவதன் மூலம் அந்தச் சுவடிகள் குறிப்பிட்ட உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவில் உருவாகி விடுகின்றன.

மதிப்பிடுதலைக் குறிப்பதற்கு பலவிதமான வழிகாட்டுச் சுவடிகள் இருக்கின்றன. அந்த வழி காட்டுச் சுவடிகளைத் தேர்வு செய்வதைத் தீர்மானிப்பவைகள் கீழ்க்கண்டவைகளாகும்: மதிப்பிடப்படும் பொருளை அறிதலின் ஆழம், அதன் பிழை அற்ற தன்மை, நிர்வகிக்கும் முறை, நினைக்கும் மற்றும் உரையாடல் திறன்கள், பேச்சு மற்றும் எழுத்துத் திறன், ஆய்ந்து செயல்படுத்தல் ஆகியவைகளுடன் இறுதியாக – ஆனால், முக்கியமான ஒன்றான குழுவாகச் செயல்படும் திறமைகள்.

கல்வி கற்றலின் பிற குணங்களை மேலே குறிப்பிட்ட வழிகாட்டுச் சுவடிகள் மற்றும் மதிபீட்டு அளவுகோல்கள் ஆகியவைகளைப் பயன்படுத்தி, வேறு எந்த வகையான பயிற்சியையும் துள்ளியமாக ஒருவர் மதிப்பிடமுடியும். ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகாட்டுச் சுவடிகளில் ஆசிரியர்கள் மாற்றங்கள் செய்து பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்பது இதில் அவசியமான தேவையாகப் படுகிறது. ஆகையால், ஆசிரியர்களே தங்கள் தேவைக்குத் தகுந்த படி வழிகாட்டுச் சுவடிகளை உருவாக்கிக் கொண்டு, உள்ளூர் பயிற்சிகளை மதிப்பிடும் போது பயன்படுத்துவதன் மூலம் அந்தச் சுவடிகள் குறிப்பிட்ட உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவில் உருவாகி விடுகின்றன.  இதை விடுத்து, மாணவர்களின் பல் முக அனுபவங்களை மதிப்பெண்கள் அல்லது தரவரிசைகளால் அவர்களை மதிப்பிடுவது வேண்டாத – நியாயமற்ற ஒன்றாக எனக்குப் படுகிறது.  

இதன் மூலம் என் மனத்தில் மதிப்பீட்டில் கையாளப்படும் அள்வுகோல்கள் பற்றிய பொருத்தமான கேட்கப்பட வேண்டிய சில பெரிய கேள்விகள் எழுகின்றன.

எழுப்பப்பட வேண்டிய கேள்விகள்

  • அளவுகோள்கள் எப்பொழுதும் துள்ளியமான திடமானவைகளா? மனப்பான்மைகள், பார்வைகள், புலனலறிவு, குறிக்கோள்கள், கருணை ஆகிய குணங்களை ஒருவர் எப்படி அளவிட முடியும்? இந்த மாதிரியான பார்வைக்கு அப்பாற்பட்ட பொருட்கள் ஒரு அனுபவத்திற்குப் பிறகு ஒருவரை உடனேயே ஆட்கொண்டு விடுகிறதா அல்லது ஒருவரது வாழ்வின் பிற்பகுதியில் ஆட்கொள்ளும் வாய்ப்பு உள்ளதா? ஒருவரின் குண மேம்பாடு என்பது ஒரே நாளில் ஏற்படும் நிகழ்வு இல்லை என்பது தெரிந்த ஒன்று.
  • நாம் எதிர்பார்த்த விளைவுகள் எப்பொழுதும் ஏற்படுவது சாத்தியமாகுமா அல்லது விரும்பத்தக்கதா? முற்றிலும் திட்டமிடப்பட்ட பயிற்சி எதிர்பார்த்த முடிவுகளை உண்டாக்கும் என்பது நம்பப்படும் ஒன்றாகும். கற்றலில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பலவகையான காரணிகளை மனத்தில் கொண்டோ, சில சமயங்களில் முன்பே திட்டமிட்ட இலக்குகள் மற்றும் குறிக்கோள்கள் ஆகியவைகளைத் தாண்டிச் செயல்படும் வாய்ப்பையோ அவைகள் கணக்கில் கொள்வதில்லை.
  • எதிர்பார்ப்புகள் மற்றும் சீரிய செயல்கள் ஆகியவைகளில் கற்பித்தல் அல்லது கற்றல் ஆகியவைகளில் புதியவைகளுக்கும், சுயசிந்தனைக்கும் எந்த இடமும் இருப்பதில்லை. பரிபூர்ணமான தலைப்பைப் பார்க்கும் பொழுது, “கற்பித்தல்-கற்றல் முறை ஒரு நீண்ட துறையா?” என்று ஒருவர் இறுதியாக வியப்படையலாம்.
  • ஒருவர் செயல்படும் பொழுது, பொறுப்பின் மிக அதிகமான பளுவால், தேர்வு செய்யப்பட்ட பொருளைப் பற்றிய ஆழமான, சரியான வழியினை அளிக்கும் திறனை ஆசிரியரோ அல்லது கற்பவரோ பெறமுடியாத சூழ்நிலை நிகழும் என்ற இன்னொரு வியப்பும் ஏற்படும்.
  • தகவல்களின் சிக்கலானவைகளை குழந்தைகளின் மனங்கள் எவ்வாறு அலசி ஆராய்கின்றன என்பதை  விவரமான தலைப்புகள் கொண்ட சிறந்த சுவடிகள் தெரிவிக்க முடியுமா?
  • புதுமையை உருவாக்குதல் என்பது ‘மாற்றி யோசி’ என்ற மனநிலையைப் பொருத்தது.  ரூப்ரிக் என்ற தலைப்பு விவரச் சுவடி நிர்ணயிக்கப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட விடைகளை அளிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட மற்றுமொரு பெட்டகமாகும்.
  • சிறந்த மதிப்பீட்டுப் படிவத்தால் மட்டும் ஒரு பயிற்சியை நிர்ணயிப்பது சரியாகுமா? பயிற்சித் திட்டங்களின் முக்கிய சொந்த மதிப்பு காரணமாகவோ அல்லது கற்றலை நிரூபிக்கும் நிலையை முழுமையாக மதிப்பிட முடியும்  என்ற காரணமாகவோ இந்தக் திட்டங்களை கற்பதற்குச் சிறந்த வழி என்று ஒருவர் கணிக்கலாமா? ஐயகோ! தகுந்த வார்த்தைகளில் கல்வியை அடைக்க எவ்வளவு அளவு முயலுகிறார்களோ, அந்த அளவில் அவர்களின் அந்த முயற்சியின் ஆர்வமும், ஆச்சரியமும் மறைவதைக் காண்பார்கள்.
  • தத்துவார்த்தமான ஒரு நிலையில் இருந்து நோக்கும் பொழுது, கடமையில் பொறுப்புணர்வு என்ற கருத்து தேசம் முழுவதும் இப்பொழுது பேசப்படும் தருணத்தில் ஒரு கேள்வி கேட்கத் தோன்றுகிறது: மேலும் மேலும் விதிகள், தடைகள், அளவைகள் ஆகியவைகளை உருவாக்குவதில் உள்ள ஆர்வத்திற்கும், மக்களிடம் கொண்டுள்ள நம்பிக்கை இழப்பின் ஒரு அடிப்படைத் தோற்றத்திற்கும் நேரடியான ஒரு தொடர்பை நாம் காண்கிறோமா? கடமையாற்றுவதில் பொறுப்புணர்வு ஓரளவு அவசியம் என்றாலும், அடித்தட்டு அளவில் திட்ட மதிப்பீட்டு முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது.
  • கடைசியாக ஆனால், முக்கியமான ஒன்றை நான் கேட்டுத்தான் ஆகவேண்டும்: இன்றைய நிலையில், கல்வியின் பயன் என்ன? கல்வியின் குறிக்கோள் – திறமை பெற்றவர்களையும், பொருள்களை உற்பத்தி செய்பவர்களையும் – உருவாக்குவதுதானா அல்லது இவைகளை எல்லாம் தாண்டி எல்லையற்ற பெரிய கருத்துகள் கொண்டிருப்பது தான் கல்வியின் சாரமா? கல்வி கற்றதற்கான அத்தாட்சி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு, கல்வி கற்றலின் ஆனந்தம், அதிசயம் ஆகியவைகளைப் புறம் தள்ளி இருக்கும் நிலைக்கு நிரந்தரமாக நம்மை ஆளாக்கிக் கொள்ளலாமா?

ஜிப்ரான் பொன் மொழியை இங்கே நினைவு கூறுவோம்: “உங்களது அன்பை நீங்கள் அளிக்கலாம், ஆனால், உங்கள் எண்ணங்களை அளிக்க முடியாது. ஏனென்றால், எண்ணங்கள் உங்களுக்கே சொந்தம். அவர்களின் உடல்களுக்கு நீங்கள் அடைக்கலம் கொடுக்கலாம். ஆனால், அவர்களது உயிர்களுக்கு முடியாது. ஏனென்றால், அவர்களது உயிர்கள் எல்லாம்  நேற்று என்ற வீட்டில் வசிக்கின்றன. அங்கு உங்களால் செல்ல முடியாது, கனவில் கூட செல்ல முடியாது.”

தரமாக மதிப்பிடும் தருணத்தில், குழந்தைகளின் வாழ்வைச் சுற்றி நடக்கும் அனுபவங்களால், நம் மனத்தை திறந்த அளவில் இருக்கும்படிச் செய்யும் முக்கிய தேவை ஒன்று இருக்கிறதை உணரவேண்டும். ஒவ்வொரு குழந்தையிடமும் காணப்படும் எதிர்ப்பார்க்காத, அளவிடமுடியாத, கற்பனைக்கு எட்டாத சக்தியை அறிவதற்கும், குழந்தையின் போக்கிலே பொருள்களை அறியும் படி அந்தக் குழந்தையை வளர்ப்பதற்கும், குழந்தையின் உலகப் பார்வையை அதனாகவே உருவாக்குவதற்கும், எந்தக் குறைகளும் இல்லாத அளவில் திட்டமிட்டபடி வெளிப்பாடுகள் வருவதற்குத் பெரியவர்களின் தலையீடு இருந்தாலும் அல்லது இல்லாவிடினும் – ஆகிய அத்தனையும் நிகழ திறந்த மனப்பான்மை தேவையாகும். கடைசியில் முடிவாக கண்ணுக்குத் தெரியும், நம்பகமான சாட்சியாக மட்டும் இல்லாமல், கற்கும் செயல் ஒருவர் வாழ்வில் நிகழும் சந்தோஷமான விழாவாகும்.

மேலும் படிப்பதற்கு: 

ஸ்ரீபர்ணா 15 வருடங்களாக ஜே.கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் பள்ளியில் சமூகப் பாடங்கள் – ஆங்கிலம் கற்பித்தார்கள். பாடத்திட்டங்களை உருவாக்குவதிலும், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் அவர்கள் ஈடுப்பட்டிருந்தார்கள். தற்போது, அஸிம் பிரேம்ஜி பவுண்டேஷன் – கல்வி மற்றும் கற்பித்தல் குழுவில் அங்கம் வகித்துள்ளார். தற்போது கணினியில் அவருக்கு உண்டான ஆர்வத்தால், உயிரோட்ட முள்ள கற்கும் கருவூலங்களை அதன் மூலம் உருவாக்கி, கற்பிப்பதில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் நினைக்கிறார்.

அவரைத் தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல்:

sriparna@azimpremjifoundation.org

 

 

19196 registered users
7451 resources