சுவாமி விவேகானந்தர் – ஒரு எல்லையில்லா உந்துசக்தி

புதுயுக இந்தியாவின் மிகப்பெரிய உந்து சக்தியாகத் திகழ்பவர் யார் என்ற கேள்வி எழுமானால், அதற்கு இரண்டு பதில்கள் இருக்கும் என்று நான் ஒருபோதும் சந்தேகப்படமாட்டேன். சுவாமி விவேகான்ந்தர் என்பது தான் அதற்கான ஒரே பதில். அவர் இடி முழக்கம் போல், இந்தியாவின் பெரிய மாஹான்களிடையே ஆகில உலகத்திற்கும் ஒளி காட்டும் விளக்காக சுடர்விட்டுப் பிரகாசிக்கிறார்.

40 வயது முடிவதற்குள்ளாகவே, உலகத்தை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். இருப்பினும், தனக்குப் பின்னால் வேண்டிய அளவு மக்களுக்கு சக்தியையும், உத்வேகத்தையும் பல தலை முறையினருக்கும் பயன்படும் அளவிற்கு விட்டுச் சென்றிருக்கிறார்.

பலகாலமாக நம் நாட்டின் அடிமை வாழ்வின் கடைசிக் கட்டத்தில் அதன்  இறுதி வீழ்ச்சியின் கடைசி தள்ளுக்கு இந்தியா தன்னை தயார் செய்து கொண்டிருக்கும் அந்தத் தருணங்களில்  தான் அன்னார் நம்முடன் வாழ்ந்த காலமாகும்.  அந்த நேரத்தில், மூடநம்பிக்கைகளின் பிடிகளிலும், பரவலான எழ்மை நிலைகளிலும் பாரத தேச மக்கள் கடின வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சோர்வும், அடிமைத்தனமும் பாரத மக்களின் ரத்த்த்தோடு கலந்தவைகளாகவே தோற்றமளித்தன. மக்கள் தங்கள் தலைவிதியை நொந்து கொண்டு வாழ்ந்தார்கள். அவர்களில் அனேகர் வெளி நாட்டுச் சரக்கு எதுவாக இருந்தாலும் அதைப் பெரிதாக மதித்தார்கள். நாட்டுப் பற்று கொண்ட தலைவர்களைக் காணமுடியவில்லை. இந்தத் தருணத்தில் தான், சுவாமி விவேகானந்தர் கிழக்கு வானத்தில் எழும் ஒரு உதயசூரியனாகத் தோன்றினார். வரண்டுபோன இந்திய மண்ணை எல்லாம் ஒளியுற்றுச் செழிப்புறச் செய்வதற்குத் தேவையான ஆன்மீக அமிர்த்த்த்தை சூரியனாக அவதரித்த சுவாமிகள் மழைபோல் பொழிந்தார்.

ஆயிரமாயிரம் உள்ளங்கள் அவரது அன்பான அமுதக் கிரணங்களால் பூக்கள் மலர்வதைப் போல் மலர்ந்தன. மலரும் அவதார மகிமையை அவரே ஒரு முறை விளக்கமாகச் சொன்னார் – “பெரிய ஆன்மீக அலைகள் ஆன்மீகச் சுனாமியாக உருவெடுத்து, இந்தியக் கரைகளைத் தாக்கி, வரண்ட குட்டைகள், கிணறுகள் மற்றும் நீர்த் தேக்கங்கள் அத்தனையையும் நீரால் நிரம்பி வழியும் அளவுக்குச் செய்துவிடும்!”

நம் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றினை நாம் படிக்கும் பொழுது, அந்தத் தலைவர்கள் அத்தனைபேருக்கும் பின்னணியில் ஒரு உண்மையான உந்து சக்தியாக இருந்தவர் யார் என்றால், அவர் வேறு யாருமில்லை - சுவாமி விகானந்தரே தான். சுபாஷ் சந்திரபோஷ் – காந்திஜி ஆகியவர்களில் ஆரம்பித்து டாக்டர் ஹெட்ஜ்வார் – அரவிந்த கோஷ் ஈராக, சுவாமி ராமா தீர்த்தாவிலிருந்து சுவாமி சின்மயானந்தா வரையிலும், மேலும், சி.வி.ராமனில் ஆரம்பித்து ஜாம்ஜெட்ஜி டாட்டா ஈராக என்று இப்படி பட்டியல் நீண்டு காணப்படுகிறது. ஈடு இணையற்ற சுவாமி விவேகான்ந்தரின் உந்து சக்தி எந்தவித தடையும் இன்றி தொடர்ந்து ஓடும் நதியாக, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கனக்கான மக்களின் இருதயங்களை ஈர்த்து ஒளிவிடுகிறது.

சுவாமி விவேகானந்தரின் பிரம்மாண்டமான ஆளுமை என்பது இந்தியாவின் புராதன ஞானத்தின் ஆழமும், இந்தியாவின் பெருமையும் சரியான அளவில் கலந்த ஒன்றாகும். அவர் வாழ்ந்த காலத்தில், உலகத்தில் உள்ள மற்ற நாடுகள் எல்லாம் மேற்கு தேசத்தின் ராணுவ வலிமை மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைக் கண்டு – ஆச்சரியம் – பயம் – ஆகிய நிலைகளில் இருந்தன. ஒரு கலங்கரை விளக்காக இந்தியாவின் வேத ஞானச் சுடர் விடும் நிரந்தரமான நம்பிக்கை விளக்கைக் கையில் ஏந்தியபடி சுவாமி விவேகானந்தர் அவர்கள் முன் தோன்றினார். புராண காலத்திலும், இதிகாசங்களிலும் விளக்கப்பட்டிருக்கும் ஞான புருஷர்களைப் போல் சுவாமிகளின் ஆளுமை பிரகாசித்தது. மிகப்பெரிய சிந்தனையாளர்களும், அறிவாளிகளும் மிகப் பெரிய பேராற்றல் கொண்ட நமது சுவாமிகளுக்கு முன்னால் அவர்கள் சிறியவர்களே என்று அவர்களே உணர்ந்தார்கள்.

உலகத்திலேயே புத்தமதம் தான் பிரசார வழியில் மதத்தைப் பரப்ப முதன் முதலில் மடங்களை நிறுவின மதமாகும். ஆனால், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் நாடு அந்நியர்களின் அடிமையிலும், சுயமரியாதையை இழந்தும் இருந்த காரணத்தினால், இந்தியாவிலிருந்து அதன் மதத்தைப் பரப்புவதற்கு எந்தவிதமான உருப்படியான ஸ்தாபன ரீதியான முயற்சிகள், புத்தமத்திற்குப் பிறகு எடுக்கப்படவில்லை. அதே சமயத்தில், அந்நிய மதத்தின் ஸ்தாபன ரீதியான மதப் பிரசாரங்கள் சில நூற்றாண்டு காலத்திற்குள் உலகத்தையே முழுதும் ஆக்கிரமித்தன.

கடவுள் என்பவர் – முடிவான உண்மை என்றும், என்றும் நிரந்தமான ஆனந்தம் என்றும் –  முழக்க மிட்ட அதே நேரத்தில், இந்து மதம் அதன் மூலாதாரக் கடமைகளான – அன்பு, கருணை ஆகியவைகளை இந்து மதத்தைக் கடைப்பிடிக்கும் மக்களில் அனேகம் பேர்கள் மறந்து விட்டார்கள். அந்த இடைவெளியை சுவாமி விவேகானந்தர் நிரப்பும் விதமாக ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் என்ற பெயர் கொண்ட ஒரு பெரிய ஸ்தாபனத்தை, ஆன்மீக சேவைகள் செய்வதற்காக உருவாக்கினார். இந்த இந்து சமய மடம் ஏழை எளிய மற்றும் படிப்பில்லா மக்களுக்கு மிகவும் தேவையான ஆன்மீகத்தை  வெற்றிகரமாக பரப்பியது.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது இந்தியாவின் தேசிய அளவில் மந்திரமாகியது. இதைப் போன்ற ஆயிரக்கணக்கான முயற்சிகள் இதை முன்னுதாரணமாகக் கொண்டு உருவாகின. அந்த முயற்சிகள் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிக்கிருக்கின்றன.

பாபா அம்டே, நானாஜி தேஷ்முக், ஏக்நாத் ராணடே போன்ற பெரிய மனிதாபிமான உத்தமர்களுக்கும்  ஊக்க சக்தியை அருவிபோல் சுவாமி விவேகான்ந்தர் அளித்து வருவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இன்று, விவேகானந்த கேந்திரம் மற்றும் சில தேசிய உணர்வுடன் செயல்படும் ஸ்தாபன்ங்கள் வட கிழக்கு மாகாணங்களில் வாழும் இந்திய மக்களிடம் தேசிய உணர்வை ஏற்படுத்தி, இந்தியாவின் தேசிய நீர் ஓட்டத்துடன் இணைய வைக்கின்றன. சுவாமி விவேகான்ந்தரை – ஒரு யோக ரிஷி என்றும், பிரம்ம ஞானி என்றும் அழைக்கும் அதே நேரத்தில், இந்தியாவின் தியாகச் சந்நியாசி என்ற பட்டமும் அவருக்குச் சாலப் பொருத்தமாகும். உலக வாழ்வு என்பது முழுமையான பிரம்மத்துடன் நிரந்தரமாக இணைவது மட்டும் தான் என்ற மேலான த்த்துவத்தை உபதேசிக்கும் அதே நேரத்தில், மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமாக இருக்கும் மூன்று மைல்கற்களை அவர் அடிக்கடி தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறார். அந்த மூன்று மைல் கற்கள் தான் – தனிப்பட்ட மனிதன், குடும்பம் மற்றும் தேசம் என்பதாகும்.

இன்று, சுவாமி விவேகானந்தர் மறைந்து ஒரு நூறு ஆண்டுகள் ஆனபிறகும், உலகம் இந்தியாவை ஆச்சரியத்துடனும், பெருமதிப்புடனும் நோக்குகிறது. ஆன்மிக ஞானத்தின் மதிப்பிடமுடியாத கருவூலமாக இந்தியாவை உலகம் கருதுகிறது. பொருளாதார செழிப்புடன் ஆன்மிகத்திற்கும் சரிசமமான முக்கியத்துவத்தை கொடுக்கிறார்கள் அந்த உயர்ந்த நோக்கத்துடன் தான்  உலகத்திலுள்ள அனைவரும் முன்னேற்றப் பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். உள்ளொளி பெறும் வழிகளை அறிந்து கொள்வதற்குப் பலர் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதை எல்லா இடங்களிலும் இருப்பதை நாம் காண்கிறோம்.  அதன் நிமித்தம் ஆயுர்வேதம், யோகம், தியானம் என்று பலவிதங்களிலும் அவர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள். இந்த கிழக்கு தேசத்தின் அறிவுரைகள் மேற்கு தேச மக்களின் மனங்களைக் கவர்ந்து, அவர்களின் மனத்தில் இடம் கொண்டுள்ளன.

சிகாகோ நாட்டில் நடந்த மதங்களின் மகாநாட்டில் 11-09-1893 அன்று நிகழ்த்திய விவேகாந்தரின் புகழ்பெற்ற உரை மக்களின் மனத்தில் கோட்டையாக எழும்புயுள்ள தான் என்ற அகம்பாவத்தை தூள் தூளாக்கியது. மேற்கு தேசத்தில் விவேகான்ந்தர் அடைந்த வெற்றி ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டிருந்த மேற்கத்திய அறிஞர்களில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, கிழக்கு தேசத்து பெரிய ஞானிகளைத் தேடி கிழக்கு திசைக்கு காட்டாற்று வெள்ளம் போல் பலரைப் பயணம் செய்ய வைத்தது. ஏன், இன்றும் அந்த வெள்ள அலைகள் ஹிமாலய மலையின் தொலைவில் இருக்கும் சுலபமாகச் செல்ல முடியாத குகைகளிலும் மோதிக் கொண்டிருக்கின்றன. 11-09-1893 –க்குப் பிறகு – அதாவது சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு குழுவாக இளைஞர்கள் மேற்கு நாடுகளுக்குச் சென்று, அவர்களது நம்பிக்கைகளைப் பற்றி எடுத்துரைத்தனர். இது வேறு விதமான மதப் போதனையாகும். அதுவும், திரும்பவும் ஒரு விழிப்பலைகளை உண்டாக்கி, பல மேற்கத்திய மக்களை கிழக்குத் திசைக்கு பயணப்படச் செய்துவிட்டது. ஆனால், இந்த முறை, சுலபத்தில் அடையமுடியாத ஹிந்து சமவெளிகளில் தீவிரவாதத் தலைவர்களை நாடி வரும் பயங்கரவாத ஆயுதக் கும்பலாக இருந்து விட்டது. இந்தியாவின் கலாசார, நாகரீகமான மனித சமூகத்தில் உள்ள அனைவரும் அமைதியாக வாழவேண்டும் என்ற  எண்ணத்திற்கு ஊறுவிளைவிக்கும் என்பதைத் தான் நமக்கு இந்த மாறுபட்ட சம்பவம் ஞாபகப்படுத்துகிறது.

சுவாமியின் பிறந்த தினமான ஜனவரி         12 – ம் தேதியை ஒரு தேசிய இளைஞர் தினமாக இந்தியா கொண்டாடுகிறது. சுவாமியை விட இந்தியாவின் இளைஞர்களுக்கு வழிகாட்டும் மேலான தூதுவரை நாம் காணமுடியாது.

அவரது 150-ம் பிறந்த தினம் 2013 ஆண்டு வருகிறது. பலதரப்பட்ட ஸ்தாபன்ங்கள் – மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் உட்பட அந்த தினத்தை வெகு விமரிசையாக்க் கொண்டாடத் திட்டம் வகுத்துள்ளனர். ஜனவரி 12 – லிருந்து தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு சுவாமி விவேகான்ந்தரின் பிறந்த தினத்தை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தினர் கொண்டாடத் தீர்மானித்துள்ளனர்.

அந்த சமயத்தில் ஸ்ரீராம கிருஷ்ண மடம் மிகப் பெரிய திட்டங்களை அமுல் படுத்த முடிவெடுத்துள்ளது. 150 பல்கலைக் கழகங்களில் படிப்பு மையங்கள், முழுமையான வளர்ச்சிக்கு 150 கிராமங்களைத் தத்து எடுத்தல், அகில உலகத்து மக்களையும் மனத்தில் கொண்டு பல உலக மொழிகளில் நிழற் படங்கள், டி.வி.சீரியல்கள் ஆகியவைகளை உருவாக்குதல், சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களை லட்சக்கணக்கில் அச்சிட்டு, அவைகளை மலிவு விலைகளில் விற்றல் ஆகியவைகள் அதில் அடக்கம்.

அவரது நூற்றாண்டு கொண்டாட்டம் கன்னியாகுமரியில் உலகம் போற்றும் மணிமண்டபம் உருவாக வழிவகுத்தது. அதன் மூலம், விவேகானந்தர் கேந்திரம் என்ற தேசிய அளவிலான ஒரு சேவை ஸ்தாபனம் உருவாக அடித்தளமாக அமைந்தது. அந்த கேந்திரத்தை உருவாக்கும் பணியில் இந்தியாவின் அனைத்துப் பாகத்தில் வாழும் மக்களும் கோடிக்கணக்கில் பங்கு கொண்டார்கள். மக்களிடம் ஒரு ரூபாய் நன்கொடை கூட அன்போடு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நோக்கம் சரியாக விளக்கப்படின், உற்சாகமாக மக்கள் முன்வருவார்கள் என்பது திண்ணம். இந்தத் தருணத்திலும், சுவாமிகளின் தாமரைப் பாதங்களில் இன்னும் அதிக அளவில் மரியாதை செலுத்தும் விதமாக திறம்பட நாம் செயல்படுவோம். அந்த மகத்தான விழாவிற்கு திட்டமிடப் போதுமான அளவு நேரம் இருக்கிறது. நாம் அதை நிறைவேற்றுவோமா?

ஆங்கில மூல ஆசிரியர்: சந்தேஷ் ரஸ்தோகி.

தமிழாக்கம்: எஸ். சங்கரன், ஆசிரியர், டீச்சர்ஸ் ஆப் இந்திய மின் தளம், தமிழ்ப் பகுதி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

18487 registered users
7228 resources