சரியான கேள்விகள் கேட்பது – சிந்தனைகளை மேம்படுத்தும் கேள்விகள்

 

சரியான கேள்விகள் கேட்பது மாணவர்களுக்குப் பல நிலைகளில் உதவக்கூடும். அவர்களுடைய சிந்தனை மற்றும் புரிதலை உயரிய இடத்திற்கு எடுத்துச் செல்ல இதனால் முடியும். ஆசிரியர்கள் கலந்துரையாடலுக்கு வழி வகுக்கும் வகையில் கேள்விகளைக் கேட்க வேண்டும். மிகவும் எளிமையாக உண்மையைப் புரிந்து கொள்வதிலிருந்து  அனுமானித்தல், புதிய சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு தகவல்களைப் பயன்படுத்துவது மற்றும் தகவலை அலசுவது போன்றவற்றிற்கு செல்ல வேண்டும். கதையின் வழியே கேட்கப்பட்ட பலதரப்பட்ட வகை கேள்விகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவைகள் பல நிலைகளில் சிந்திப்பதையும், புரிதலையும் வளர்க்கவும், மதிப்பீடு செய்யவும் உதவும். 

கதை:

 

சிங்கம் ஒன்று உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. எனவே அவருக்காக ஒரு டாக்டருக்கு பிற்கு இன்னொருவராக அனுப்பப்பட்டார்கள்.

முதலில் டாக்டர். வரிக்குதிரை. கதவைத் தட்டிக் கொண்டே “ அரசரே நான் உள்ளே வரலாமா?” என்று கேட்டது.

 “உள்ளே வரவும்” என்றது சிங்கம். டாக்டர் வரிக்குதிரை சிங்கத்திடம் வாயைத் திறக்கும்படி கேட்டுக் கொண்டது.

 “எவ்வளவு மோசமான சுவாசமாக இருக்கிறது அரசே!” என்றது டாக்டர் வரிக்குதிரை

இப்படி சொல்வதற்கு “உனக்கு என்ன தைரியம்” என்றது சிங்கம்

 “மன்னித்துக் கொள்ளுங்கள் அரசே. டாக்டராகிய நான் உண்மையைத்தான் சொல்லவேண்டும்”, என்றது டாக்டர் வரிக்குதிரை   

ஆனால் கோபமடைந்த சிங்கம் அதை கீழே தள்ளிவிட்டது.                                   

அதற்கு அடுத்து டாக்டர். கழுதைப்புலி சிங்கத்தின் அறைக்கதவைத் தட்டியது

 “உள்ளே வா” என்றது சிங்கம்

டாக்டர். கழுதைப்புலி சிங்கத்தின் வாயைத் திறக்கச் சொன்னது

 “ என்ன ஒரு வாசனையான சுவாசம் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்”, என்றது டாக்டர் கழுதப்புலி

சிங்கம் கோபத்துடன் கர்ஜித்து “ நீ என்ன என்னை முட்டாள் என்று நினைத்தாயா? ஏன் என்னை துதிபாடுகிறாய்?” என்றது

”என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்,அரசே,” என்ற டாக்டர் கழுதைப் புலி, “எனக்கு உண்மையைச் சொல்ல பயமாக இருந்தது”.

சிங்கம், “ இந்த சாக்குப் போக்கையெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறி டாக்டர் கழுதைப்புலியையும் கீழே தள்ளியது.   

இதற்கு அடுத்து புத்திசாலியான டாக்டர் நரி கதவைத் தட்டிக் கொண்டே, “ நான் உள்ளே வரலாமா, அரசே?” என்று கேட்டது.

 “உள்ளே வரவும்” என்றது சிங்கம்

”சார், நீங்கள் தயவு செய்து வாயைத் திறந்து காண்பிக்கிறீர்களா?” என டாக்டர் நரி வேண்டிக்கொண்டது

 “என்னுடைய சுவாசத்தைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்?” எனக் கேட்டுக் கொண்டே தனது வாயைத் திறந்தது.

நரி, “ அரசே எதிர்பாராதவிதமாக எனக்கு ஜலதோஷம் பிடித்துக் கொண்டதால் என் மூக்கு அடைத்துக் கொண்டது”. என்று கூறியது.

 

கேள்விகளின் நிலைகள்

A. சிந்திக்கும் திறன்: உண்மையைப் புரிந்து கொள்ளுதல்

செயல்முறை விளக்கம் – என்ன? யார்? போன்றவைகள்    

1. யாருக்கு உடல்நிலை சரியில்லை?

2. உடல்நிலை சரியில்லாதவரை எத்தனை டாக்டர்கள் சென்று பார்த்தார்கள்? அவர்கள் யார்?

3. சிங்கம் வாயைத் திறந்தபோது வரிக்குதிரை என்ன சொல்லிற்று?

4. கழுதைப் புலியை சிங்கம் என்ன செய்தது?

5. சிங்கம் வாயைத் திறந்தபோது டாக்டர் நரி என்ன சொல்லியது?

 

B. சிந்திக்கும் திறன்: தூண்டக்கூடிய பகுத்தறிவு

நுண்ணறிவு

1. சிங்கம் ஏன் வரிக்குதிரையை கீழே தள்ளியது?

2. சிங்கம் ஏன் கழுதைப் புலியை கீழே தள்ளியது?

3. மூன்று விலங்குகளில் எது உண்மை பேசியது? நீ ஏன் அப்படி நினைக்கிறாய்?

உணர்ச்சிவசமான அடையாளம்

1. சிங்கம் வரிக்குதிரையை கீழே தள்ளிவிட்ட போது நீ எந்த மாதிரி உணர்ந்தாய்?

2. நரி பதிலைக் கேட்டு நீ எப்படி உணர்ந்தாய்?

அனுமானித்தல்

1. இந்தக் கதையிலிருந்து பின்வரும் விலங்குகள் பற்றி நீ என்ன முடிவுக்கு வருவாய்?

- வரிக்குதிரை

- கழுதைப்புலி

- நரி

- சிங்கம்

2. புத்திசாலித்தனமான விலங்கு எது?

பொதுமைப்படுத்துதல்

இந்தக் கதையிலிருந்து உங்களுக்குத் தெரியவந்தது என்ன? ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?

பயன்பாடு

 நரி வேறு ஏதாவது காரணம் சொல்லி தனது உயிரை பாதுகாத்துக் கொண்டிருக்கமுடியும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

c. சிந்திக்கும் திறன்: ஆராயும் பகுத்தறிவு

மதிப்பீடு

1.      “நரி செய்தது புத்திசாலித்தனமான செயல்தானா?” என்று முடிவு செய்யவும். உங்களுடைய பதிலுக்கு காரணம் தரவும்.

2.      “சிங்கம் நரியையும், கழுதைப்புலியையும் கீழே தள்ளிவிட்டிருந்தால் என்னவாயிருக்கும்?” எனத் தீர்மானியுங்கள்

3.      இது போல நீங்கள் படித்த இன்னொரு கதையுடன் ஒப்பிடவும்.

 

 

18487 registered users
7228 resources