சமூக அறிவியல் பாடங்கள் என்றுமே என்னை ஏன் ஈர்க்கவில்லை ?

“சரித்திரப் பாட்த்தைக் கற்பதால் என்ன பயன்?” – ஒரு 13 வயது சிறுமியாக இருந்த பொழுது, இந்தக் கேள்வியை கேள்விப் பெட்டியில் விடைகாணும் வேகத்தில் போட்டுவிட்டு, எனது ஆசிரியையின் சிறந்த பதிலைக் கேட்பதற்கு ஆவலோடு காத்திருந்தேன். ஆசிரியையிடம் நேருக்கு நேர் இப்படிப்பட்ட கேள்வியை கேட்கும் துணிவு என்னிடம் இல்லை. என்னுடைய கேள்வியை அந்தப் பெட்டியிலிருந்து ஆசிரியர் எடுப்பதைப் பார்க்க ஆர்வமாக எப்படி நான் கத்திருந்தேன் என்பதை இன்றும் என்னால் நினைவு கூறமுடிகிறது.

அன்றைய தினம் பலவிதமான சீட்டுக்கள் அந்தப் பெட்டியில் இருந்தது.

ஆசிரியை அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டார் – என்னுடைய கேள்விச் சீட்டை எடுப்பதற்கு முன்னால், மற்ற பல கேள்விகளைக் கேலி செய்த வண்ணம் இருந்தார். வகுப்பு முடியும் நேரத்தில் தான் என்னுடைய சீட்டு வந்தது. நான் ஏமாற்றமடையும் விதமாக, ஆசிரியை என் கேள்வியைப் படித்துச் சிரித்துக் கொண்டே சொன்னார் – “இது தான் கடைசிக் கேள்வி – சரித்திரத்தைக் கற்பதால் என்ன பயன்?” -  இதைக் கேட்டு வகுப்பில் உள்ள அனைவரும் ஆசிரியையுடன் சிரிப்பில் கலந்து கொண்டனர். ஆனால், ஆசிரியை என் கேள்விக்கு ஒரு பதிலும் சொல்லாமல், வகுப்பை விட்டுச் சென்று விட்டார்.

இதனால், நானாகவே என்னுடைய கேள்விக்கு விடைகாணும் படி விடப்பட்டேன். என்னுடைய பள்ளி நாட்கள் வரை நான் என் கேள்விக்கு விடை காண முயன்ற  செய்கைகள் ஒன்றும் வெற்றி பெற வில்லை. பதின்மூன்று வயது வரை எனக்குக் கொடுக்கப்பட்ட பாடங்கள் அனைத்தையும் எந்தவிதமான முணுமுணுப்பு மின்றிப் படித்தேன். ஆனால், பல வேறு பாடங்களைத் தேர்வு செய்யும் நிலை எனக்கு ஒன்பதாவது வகுப்பில் ஏற்பட்ட பொழுது, பாடங்களின் பயன்களைப் பற்றி மீண்டும் கேள்வியை நான் எழுப்பினேன்.

“ஒரு காரியம் செய்து முடிக்கப்பட்ட பிறகு, அதைப் பற்றி விரிவாக நாம் ஏன் மனப்பாடம் செய்ய முயலவேண்டும்?”  - என்ற வினாவினால் நான் ஆச்சரியமடைந்தேன். அறிவியல் பாடங்களின் கவர்ச்சி மிகவும் சக்தி வாய்ந்தது. அவைகளின் பயன்கள் குறித்து ஒருவரும் என்னை ஒப்புக்கொள்ள வைக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையில், அறிவியலைப் பற்றி என்னுடைய சிநேகிதிகளில் ஒருவர் கூட இப்படிக் கேள்வி கேட்ட்தாக எனக்கு நினைத்துப் பார்க்க முடியவில்லை: “அறிவியல் பாடத்தைப் படிப்பதால் உண்டாகும் நன்மை என்ன? அறிவியல் சலிப்பை உண்டாக்கும் பாடமா? “  என்று கேட்டால், பலரும் “ஆமாம்!  அப்படித் தான் உணருகிறோம்” என்பதாகச் சொல்வார்கள். “அறிவியல் கடினமா?” என்ற கேள்விக்கும் பலரும் “நிச்சயமாக”  என்று தான் சிலர் ஒப்புக்கொள்வார்கள். ஆனால், “அறிவியல் படிப்பு பயன் அற்றது” என்று மட்டும் ஒருவரும் சொல்ல மாட்டார்கள். 

அந்த அறிவியல் பாடம் ஒரு குறிப்பிட்ட பாதையில் நிச்சயமாக உங்களை வழி நடத்தும் என்பது காரணமாக இருக்க வேண்டும். ஒரு டாக்டர் பணிக்காகவோ அல்லது ஒரு இன்ஜினியராகவோ அல்லது ஒரு விஞ்ஞானியாகவோ அல்லது வெறுமனே அறிவியலைப் படித்துத் தெரிந்து கொள்ளும் நோக்குடனோ – அவைகள் எதுவாக இருப்பினும், நானோ அல்லது எனது சக மாணவிகளோ அறிவியல் படிப்பதின் அவசியத்தைப் பற்றி ஒருவரும் எங்களுக்கு உணர்த்த வேண்டிய அவசியமில்லை. எங்களில் சிலர் அறிவியலில் விரும்பும் பாடங்களைத் தேர்வு செய்துள்ளோம் என்பது உண்மைதான். நான் ஒரு பொழுதும் டாக்டராகப் போவதில்லை என்ற போது, ஏன் தவளைகளின் கால்களை வெட்டிப் படிக்கும் உயிரியல் பாட்த்தைத் தேர்வு செய்ய வேண்டும்? ஆகையால், பெளதிகம், ரசாயனம், கணிதம் ஆகிய பாடங்கள் தான் என்னுடைய தேர்வுக் கூடையில் இருப்பவைகள்.

பூகோளப் பாடத்தின் அவசியம் கூட குறைவான அளவில் தான் உணரப்பட்டது. எந்த பிரபலமானவர்களின் பெயர்களைச் சொல்லியும் அந்தப் பாடத்தைக் காப்பாற்ற முடியாது. உண்மையிலேயே, மித வெப்ப மண்டலங்களில் காணப்படும் இலையுதிர் மரங்களைப் பற்றியோ அல்லது தங்கச் சுரங்கங்கள் இருக்கும் இடங்களைப் பற்றியோ தெரிந்து கொள்வதை யார் கவனிக்கப்போகிறார்கள்?  நாடுகளின் வரைபடங்களில் மிகுந்த கவனம் செலுத்தி, அவைகளை வரைவதில் திறமைகளை வெளிப்படுத்தி, சீதேஷ்ண மண்டலங்களைப் பற்றியும், அவைகளில் வளரும் பயிர்களைப் பற்றியும் மனப்பாடம் செய்து கொள்ள அவசியமான அந்தப் பாடத்தைத் தேர்வு செய்பவர்களும் மிகவும் சிலரே. ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் அந்தப் பூகோளப்பாட்த்தை ஒரு தர்க்கப் பாடம் என்று உயர்வாகப் போற்றியதை நான் இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். இருப்பினும், அந்த ஆசிரியரும் அந்தப் பாடத்தின் பயனைப் பற்றி நான் ஒப்புக் கொள்ளும் அளவுக்கு விளக்க முடியவில்லை.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சமூக அறிவியல் பாடங்கள் நடத்தப்படும் நேரங்களில் எல்லாம் மாணவர்கள் கொட்டாவி விடும் அளவில் தான் இருக்கின்றன. அந்தப் பாடங்கள் நடக்கும் பொழுதெல்லாம் முகலாய ராணிகளின் படங்களுக்கு மீசைகள் வரைந்தும், புருவங்களுக்கு மை தீட்டி பயங்கரமாகச் செய்தும், வீர அரசர்களின் படங்களுக்கு பொட்டுக்களை வைத்தும், புருவங்களுக்கு மை தீட்டியும்   நாங்கள் சந்தோஷமாக காலம் கடத்துவோம். அப்படி மாற்றி வரைந்த படங்களை மேஜையின் அடிவழியாக ஒவ்வொருக்கொருவர் பரிமாறிக்கொண்டு, அதனால் நாங்கள் ஒவ்வொருவரும் மெதுவாகச் சிரித்து மகிழ்ந்து கொள்வது தான் அந்த அலுப்புத் தட்டும் சரித்திர வகுப்புகளில் எங்களுக்கு நாங்களே உண்டாக்கிக் கொண்ட கேளிக்கையாகும். இந்த எங்களது படங்களைச் சிதைக்கும் பேனாவிற்கு தப்பிய ஒரு சரித்திர நாயகர் உண்டென்றால் அது அதிகக் கவர்ச்சியான காரணத்தால் லார்ட் மவுண்ட்பேட்டன் ஒருவர்தான்.

கணித்தில் உள்ள வடிவங்கள், அறிவியலில் அறியப்படும் அழகான தருக்கம், நமது வாழ்க்கையில் உடனேயே எந்த எதிர்ப்புமின்றி பொருத்தமாக அமைந்து பயன்படும். அவைகள் அனைத்தும் சரித்திரம், பூகோளம் ஆகிய பாடங்களில் இல்லை என்பது தெளிவு.

 

கணித்தில் உள்ள வடிவங்கள், அறிவியலில் அறியப்படும் அழகான தருக்கம் ஆகியவைகள் நமது வாழ்க்கையில் உடனேயே எந்த எதிர்ப்புமின்றி பொருத்தமாக அமைந்து பயன்படும். அவைகள்  அனைத்தும் சரித்திரம், பூகோளம் ஆகிய பாடங்களில் இல்லை என்பது தெளிவு.

இதன் காரணமாக ஒரு பாடத்தில் உள்ள ஈர்க்கும் சக்தி உற்பத்தியாகும் அந்த இடம் எது என்று நான் எதைக் கருதுகிறோனோ அதுவே அந்தப் பாடத்தின் அருகில் என்னைக் கொண்டு செல்கிறது – அதாவது கற்பவர் ஒருவரை அந்தப் பாடத்தில் உள்ள எது இழுக்கிறது என்ற கேள்வி எழும். அதற்கு என் கருத்து இதுதான் – எதைக் கற்பித்தாலும் மூன்றில் ஏதாவது ஒன்றாவது அதில் இருக்க வேண்டும் – கற்பவர்களின் நோக்கில் பொருத்தம், பயன் அல்லது அழகு (அல்லது மனத்திற்கு பிடித்ததாகவாவது) இருக்க வேண்டும். உதாரணமாக, அறிவியல் நம்மில் பலருக்கும் அவசியமான ஒன்றாக ஏன் இருப்பதாகப் படுகிறது ? ஒரு காரணம், அது மிகவும் பொருத்தமாகக் காணப்படுகிறது. ஒருவரும் இந்தக் காரணத்தை மறுக்க முடியாது. இருப்பினும், பிரபஞ்சத்தின் விதிகளைப் பற்றி – அதாவது நம்மைச் சுற்றிலும் உள்ள உயிரினங்கள்-மரம் செடிகள் ஆகியவைகளில் உண்டாகும் மாற்றங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவைகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இவைகளுடன், பானிபட் சண்டைகள் நடைபெற்ற தேதிகள் அல்லது அசோகச் சக்கரவர்த்தியால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் ஆகியவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் – சலிப்பில் கொட்டாவி விடத்தான் தோன்றும்! நமது தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்துள்ள மாற்றங்களைப் பற்றி நாம் அறியும் படி இருந்தால் ‘அது நமக்குப் பயன்படும் விதமாக இருக்காதா?’ என்று எங்களில் ஒரு குறும்புக்காரச் சிறுமியைக் கேட்கத் தூண்டலாம்.

ஆமாம், அறிவியல் பாடம் பயன் தரும் ஒன்று தான். பால் ஏன் புளித்துப் போகிறது,  எப்படிச் செடிகள் வளர்கின்றன, காயத்திற்கு எப்படிக் கட்டுப் போடவேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் தெரிவதற்கு அறிவியல் எங்களுக்கு உதவியது. சிறந்த ஒழுங்கு மற்றும் நியாயமான முறையில் அறிவியல் நம்மை ஊகிக்கவும் செய்கிறது. அனுமானங்களின் பின்னணியில் பொதிந்துள்ள உண்மைகளைப் பற்றி ஆராய அறிவியல் நம்மைத் தூண்டும். நமது வாழ்க்கையை மிகவும் சுகமாக ஆக்க அறிவியல் உதவும். சோம்பேறியான ஒரு ஆசிரியரால் அந்த அறிவியல் பாடம் கற்பிக்கப்படும் துரதிருஷ்டம் எங்களுக்கு ஏற்பட்டாலும் அந்த அறிவியல் நமக்கு அவசியம்.

ஆஹா, சில சமயங்களில் அறிவியல் அழகுடன் மிளிர்வதும் உண்டு – என்னுடைய உயர்நிலைப் பள்ளி ரசாயனத்தைப் பற்றிய என்னுடைய ஆரம்ப கால வியப்பிலிருந்து எனது எம்.எஸ்சி. நாட்களின் எனது ஆச்சரியமான அனுபவங்கள் வரை – அதாவது நமது உடலில் உள்ள டி.என்.ஏ. என்ற மரபு அணுக்களைப் பற்றிய நுணுக்கமான அறிதல்கள் – இவைகள் எல்லாம் எனக்கு அழகானவைகள் மட்டும் அல்ல, அவைகள் அறிவியலுடன் எந்த வகையிலும் மாறுபட்டு இருப்பதாக ஒருபோதும் காணப்படுவதில்லை. ( சில அதிரிஷ்டசாலிச் சிறுமிகள் கணிதத்திலும் இந்த அனுபவத்தைப் பெற்றதாகத் தெரிகிறது – ஆனால், அதைப் பற்றிப் பிறகு  சொல்கிறேன். ) எப்பொழுதும், ஒரு பாடத்தில் எனது ஆர்வத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான தன்மை அதன் அழகு தான். என் கணிப்பில், கவிதை என்பது பயனோ அல்லது பொருத்தமோ இல்லாதது. ஆனால், அது அழகாக அடிக்கடித் தோன்றக்கூடியது தான். இலக்கியம் உண்மையிலேயே அழகைச் செழிப்பாக உள்ளடைக்கியது என்பதை நான் மறுக்க முடியாது. ஆனால், சரித்திரம்-பூகோளம் ஆகியவைகளை வர்ணிக்க நான் உபயோகிக்கும் வர்ணம் பழுப்பு – அதாவது விரும்பமில்லாத ஒன்று. ஆனால், அறிவியல், இலக்கியம், சில சமயங்களில் கணிதம் ஆகியவைகள் அலை அலையான ஒளிமயமான ஊதா, இளஞ்சிவப்பு வர்ணங்களால் தெளித்த வர்ணக்கலவைகளாகும்.

இந்த மூன்று அம்சங்களையும் சமூக அறிவியல் பூர்த்தி செய்யாவிடினும், சமூக அறிவியல் பாடத்தைச் சுவைப்பதற்கு மிகவும் இலகுவாக எவ்வகையாகிலும் செய்திருக்க வேண்டும் என்று நான் இப்பொழுது நினத்துப் பார்க்கும் நிலையில் இருக்கிறேன். ஒரு கணிதக் கேள்விக்குச்  விடை காணும் பொழுது, சரியாகச் செய்யும் நேரத்தில் கிடைக்கும் சந்தோஷத்தை யார் தான் மீண்டும் நினைவுகூறாமல் இருப்பார்கள்? ஒரு சிக்கலிருந்து நீங்கள் எப்படியோ விடுபட்டுச் சமாளித்து விட்டோம் என்று நினைக்கும் அந்தச் சிறப்பான மனத்திருப்தியைப் போல், கணிதமும் மிகவும் சகிப்புத் தன்மையை உண்டாக்கும். ஆனால், உங்களது ஞாபகசக்தி உங்களை ஏமாற்றாமல் இருந்தால் மட்டுமே, உங்களது கூற்று உண்மையாக இருக்கும். நீங்கள் விடைகளை எல்லாம் நினைவில் வைத்துக் கொண்டிருக்க முடியாது. ஆகையால், நீங்கள் யூகத்தில் செயல்பட வேண்டியதாகி விடும்.  

இந்தப் பாடத்தின் கடைசி ஆதாரமாக இருக்கும் ஒன்று உண்டென்றால், அது என்னிடமிருந்து அதீதமான நினைவாற்றலை எதிர்பார்ப்பதாக உள்ளது. ஆகையால், அந்தப் பாடத்தை தவிர்ப்பதில் நான் கால தாமதம் செய்யவில்லை. தக்க தருணத்தில் நான் அதைச் செய்து முடித்தேன்.

ஒரு மூட்டைத் தகவல்களைக் கொண்டவைகள் தான் சரித்திரமும், பூகோளமும் என்பதால், அவைகளை நினைவில் வைத்துக் கொள்ளாமலே ஒருவர் நன்கு சிறப்பாக வாழமுடியும். அவைகளில் எப்படிப் பட்ட அம்சங்கள் இருக்கின்றன?   அவைகள் காட்டும் வழிகள் என்ன? நமது சொந்த வாழ்விற்கு அவைகளின் தொடர்பு என்ன?  நாம் நினைவில் கொள்ளும் ஒரு பெரிய அளவு தகவல்களுக்கு அடியில் புதைந்தோ அல்லது காணாமலோ அவைகள் போய்விடும். இருப்பினும், கடந்த காலத்தைப் பற்றிய அறிவு தற்காலத்தில் சிறப்பாக வாழ்வதற்கு வழிவகுக்கும் என்ற ஞானோதயம் நான் கல்லூரியில் சேர்ந்த வருடங்கள் வரையிலும் எனக்கு எழவே இல்லை. என்றாலும், சலிப்படையச் செய்யும் அந்தப் பாட்த்தை நம் தலையில் திணிக்க செய்வதற்கு ஒரு நொண்டிச் சாக்கு என்பதாகத் தான் அதை நான் தொடர்ந்து உணர்கிறேன். இதற்குக் காரணம் என்னெவென்றால், என்னைச் சுற்றி உள்ள ஒரு தனிப்பட்ட நபரோ, சமூகமோ அல்லது நாடோ, அவர்கள் தங்களது சரித்திரத்தைக் கற்ற காரணத்தால், குறைவான தவறுகளைச் செய்தோ அல்லது சிறப்பான வாழ்வை அடைந்தோ இருந்ததாக எனக்குப் படவில்லை. அந்த ‘  அறிவை   ’ – அது அறிவு என்று நீங்கள் சொல்வதாக இருந்தால் – சரித்திரப் பாடப்புத்தகங்களின் தூசிபடிந்த பக்கங்களிக்குள் பத்திரமாக ஒளிந்து கொண்டிருக்கும். அவைகளை அன்றாட வாழ்விற்குப் பயன்படும் முறையில் ஒருவரும் வெளிக்கொனற முயலுவதில்லை. என்னுடைய கல்லூரி நாட்களில் பிரபலமானவர்களின் வாழ்க்கைச் சரித்திரங்களைப் படிப்பதில் நான் கொண்ட ஆர்வம் என்னை அறியாமலேயே இப்பொழுது சரித்திரம் என்று சொல்லும் அந்தப் பாடத்திற்கு என்னைக் கொண்டு சென்றது. இருப்பினும் அது முற்றிலும் மாறுபட்டதாகும். சரித்தில் உள்ள வேண்டாத சம்பவங்கள், உயிரில்லா தேதிகள் ஆகியவைகள் அடங்கிய சரித்திரத்தைக் காட்டிலும், சுயசரிதைகளான இத்தகைய அற்புதமான புத்தகங்களின் பக்கங்களில் மக்களைப் பற்றிய விவரங்கள் இருக்கும்.  என்னுடைய சரித்திர புத்தகமோ மனிதாபிமான கருத்துக்கள் ஒன்றும் இல்லாமல் இருந்தது.

ஒரு மூட்டைத் தகவல்களைக் கொண்டவைகள் தான் சரித்திரமும், பூகோளமும் என்பதால், அவைகளை நினைவில் வைத்துக் கொள்ளாமலே ஒருவர் நன்கு சிறப்பாக வாழமுடியும். அவைகளில் எப்படிப் பட்ட அம்சங்கள் இருக்கின்றன? அவைகள் காட்டும் வழிகள் என்ன? நமது சொந்த வாழ்விற்கு அவைகளின் தொடர்பு என்ன? நாம் நினைவில் கொள்ளும் ஒரு பெரிய அளவு தகவல்களுக்கு அடியில் புதைந்தோ அல்லது காணாமலோ அவைகள் போய்விடும்.

 

பத்து வருடங்களுக்குப் பிறகு, ஹிமாலய மலைகளில் நான் பயணிக்கும் தருணத்தில், அங்குள்ள பலவிதமான பாறைகள், கற்கள் ஆகியவைகளைப் பார்க்கும் பொழுது, அங்குள்ள பலதரப்பட்ட மாறுபட்ட வண்ணமயமான வேலைப்பாடுகளைக் கொண்ட வடிவங்கள் என்னிடம் அந்த இடத்தின் அமைப்புகளைப் பற்றி உற்சாகமாகத் தெரிவித்தன. “இதைப் பற்றி எல்லாம் ஏன் ஒருவரும் எனக்குக் கற்றுக் கொடுக்க வில்லை?”  என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உத்தரகாசியின் சரிவான மேடுகள், சிறப்பாகச் சமையல் செய்யும் மலைவாசிகள், அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவுவகைகள் ஆகிய அனைத்தும் அதிசயமானவைகளாக இருப்பதைப் போல் அவைகள் தெரிவதற்கும் பொருத்தமானவைகளாகும். இப்பொழுது, அந்த மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதைப் பற்றித் தெரிவதற்கு நான் மிகவும் ஆவலாக இருந்தேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். கற்கலால் நிரப்பப்பட்ட போம்பீ நகர வீதிகளில் நடப்பதில் ஏற்பட்ட என்னுடைய அதீத ஆர்வம் – இதே கற்கலின் மேலே ரோமா புரியின் அரசர்கள் நடந்து சொன்றார்கள் என்பதை அறிந்த பிறகு – நம்பக்கூடியதே - என்னுடைய வாலிப வயதில் இந்து சமவெளி கலாச்சாரத்தின் இடிபாடுகளை லோதால் என்ற இடத்தில் நான் பார்த்த பொழுது, சரித்திரத்தை ஆர்வமாகக் கற்றதன் பலனை நான் அந்த  நேரத்தில் அனுபவித்தேன்.

ஐயகோ !  நிறைவேறாத கனவுகள் இதோ – இன்று வரை, சரித்திரம், பூகோளம் ஆகியவைகளைக் கற்பது மிகவும் சுவாரஸ்யமற்ற  அனுபவங்களைக் கொண்டதாகும். வர்ணம் குழைக்கும் கைப்பலகைகளில் தூரிகைகளைத் தோய்த்துக் கொண்டு நமது ஆசிரியர்கள் இந்தப் பாடங்களைக் கற்பிக்க முனையும் பொழுது, உலர்ந்த சருகுபோலும். எந்தவிதமான வர்ணமின்றி அழகற்றும் காணப்பட்டன. வறண்ட பாலைவனங்களும், ஆடம்பரமிக்க அரசர்களும் எல்லா வர்ணங்களையும் உலரவைத்து விட்டார்களோ என்னவோ! 

நீரஜா ராகவன் அஸிம் பிரேம்ஜி பவுண்டேஷன், பங்களூர் நிறுவனத்தின் ஆலோசகர், கல்வி மற்றும் கல்விப் பயிற்சி ஆகிய துறைகளில் பணியாற்றுகிறார். அவர் பல வருடங்களாக சுதந்திரமான எழுத்தாளராக பல முன்னணி நாளிதழ்கள், சஞ்சீகைகள் ஆகியவைகளில் 70 கட்டுரைகளுக்கும் மேலாகாக எழுதி, பிரசுரமாகி உள்ளன. அத்துடன், நான்கு புத்தகங்களுக்கு ஆசிரியர். Curiouser and Curiouser, Full Circle 2004, I wonder why and I wonder hoy, Children’s Book Trust 2005, 2006 – என்பன அந்தப் புத்தகங்களாகும். அத்துடன் – Alternative Schooling In India, Sage Publications 2007 – என்ற பிரசுரத்திற்கு துணை ஆசிரியராக இருந்தும், “மதங்களை அறிவோம்” என்ற தலைப்பில் வெளியான – Jain Vishva Bharathi Insititute, Ladnun, Rajasthan 2004 – குறுந்தகட்டின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.

அவரைத் தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் – neeraja@azimpremjifoundation.org

 

 

 

19196 registered users
7451 resources