சஞ்சையரும் சரஸ்வதி நதியும் - ஆக்கம் - அருண் நிகுக்கர்

சஞ்சயனும், சரஸ்வதி நதியும்

மிகவும் மனத்தைக் கவரும் விதமான மஹாபாரதப் போரைப் பற்றிய விவரங்கள் சஞ்சயன் வாயிலாகத் தான் நமக்குத் தெரிகிறது. ஆனால், மஹாபாரதக் காப்பியம் முழுவதையும் வியாச முனிவர் தான் இயற்றி உள்ளார். திருதராட்சரனுக்கு யுத்தத்தை சஞ்சயன் விவரித்துக் கூறும் முறையில் அந்தக் காவியம் இருப்பது, நமது சிந்தனையைத் தூண்டும் அளவில் அமைந்துள்ளது. சஞ்சயனுக்கு ஞான திருஷ்டி அல்லது தொலை தூரத்தில் நடப்பதையும் காணும் சக்தி உண்டு. யுத்த பூமியில் நடக்கும் சண்டையை அவ்வப்போதே உடனுக்குடன் குருடரான அரசருக்கு விளக்குவதற்குப் அந்த ஞானப் பார்வை பயன்பட்டது. இந்த மஹாபாரத யுத்தம் சுமார் 5000 கி.மு. வருடத்தில் நடந்தது. இன்று, சஞ்சயரின் இந்த ஞானப் பார்வை ஒரு அறிவியல் நிகழ்வே அன்றி அது அற்புத நிகழ்ச்சி இல்லை என்று ஆராய்ச்சி வல்லுனர்கள் சொல்கிறார்கள். ஞானப் பார்வை என்பது இன்றைய செயற்கைக் கோள் டி.வி. மற்றும் கணினி போட்டப்படங்கள் போன்றதாகும்.

இதைப் போன்ற தலைப்புகளால் ஏற்படும் நன்மைகள் என்ன வென்றால், பலவிதமான விஷயங்களைப் பற்றி பேசி – விவாதிப்பதற்கு வழி வகுக்கின்றன. உதாரணமாக, மஹாபாரத அல்லது வேத கால நாகரீக காலத்தில், பாண்டவ-கவுரவர்களிடம் அத்தகைய யுத்திகளைக் கையாளும் திறமை இருந்தது உண்மையானதா என்ற கேள்வி எழும். அந்தக் கேள்விக்குப் பதில் ஆம் என்றால், நிகழ் கால அறிவியல் அற்புதங்களின் மூலத்தைக் கண்டறிய முடியும். யு.எஸ். நாட்டில், டாக்டர் நரஹரி ஆச்சார் என்ற யு.எஸ். மெம்பிஸ் சர்வகலாசாலையின் பெளதிகத் துறையில் பணிபுரிபவர் பகவத் கீதையின் 140 ஸ்லோகங்களை ஆராய்ந்து, அவைகளில் அறிவியலைப் பயன்படுத்திய செயல்பாடுகள் காணப்பட்டன. யு.எஸ். நாட்டில் இதைப் பற்றிய ஒரு செய்திப் படம் எடுக்கபட்டு, அது செயற்கைக் கோள் போன்ற ஒரு கருவிமூலம் பரப்பப்பட்டு, அதன் மூலம் சஞ்சயர் காட்சிகளைப் பார்க்க முடிந்தது.

ஆகாயத்தில் சுமார் 800 கி.மீட்டர் தூரத்திலிருந்து செயற்கோள் மூலம் படம் படிக்கும் கருவி மிகவு துள்ளியமாக செயற்கைக் கோள் மென் பொருட்களைப் பயன்படுத்திச் செயல்படுகிறது. டாக்டர் ஆசார் 140 பகவத் கீதையின் ஸ்லோகங்களின் உட் பொருளை உணர்த்த இன்னும் தீர்க்கமான முயற்சியை மேற்கொண்டார். அதன் படி, ஸ்லோகங்களின் உட் பொருட்கள் சில விஞ்ஞான உண்மைகளை வெளிக்கொணரும் என்று அவர் உறுதியாக நம்பினார். நமது வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் ஆகியவைகளை மேலும் ஆராய்ந்தால் நமது ஆதிகால நாகரிகத்தின் தோற்றத்தின் ஆணிவேரை அறிவதற்கு உதவிகரமாக இருக்கும். அந்த ஆதிகாலக் கருவூலங்கள் அனைத்திலும் அறிவியல் ஆதாரங்கள் காணப்படும். கணிப்பொறியின் மொழியைப் போல் அவைகளில் உள்ள ஸ்லோகங்களும் சங்கேத மொழியை உள்ளடக்கியதாகும்.

ஐ.எஸ்.ஆர்.ஓ (ISRO), நாசா (NASA) - ஆகியவைகளின் செயற்கைக் கோள்கள் மற்றும் பிற நாடுகளின் செயற்கைக் கோள்கள் அனைத்தும் கோள்களில் பயன்படுத்தும் மென் பொருட்களைக் கொண்டு பண்டைய கலாசாரத்தை ஆராய முனைந்துள்ளன. அவைகளின் மூலம் 5000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கலாசாரங்களும் ஆராயப் பட்டன. பூமியிலிருந்து மறைந்த சரஸ்வதி நதி உண்மையிலேயே பூமியில் ஓடிய நதி என்பதும், அது ஆதாரமற்ற புராணக் கற்பனை இல்லை என்பதும் இப்பொழுது நமக்குத் தெரியவருகிறது. அந்த சரஸ்வதி நதி கைலாசத்திலிருந்து 1600 கி.மீ. தூரத்தில் இருக்கும் சோமநாதம் வரையும் கி.மு.1900 வருடம் முடிய பாய்ந்து ஓடி இருந்தது. அதற்குப் பிறகு, தற்போதைய ராஜஸ்தான், சிந்து மற்றும் பாலுச்சான் நாடுகளில் இருக்கும் பாலைவனங்களில் அந்த நதி மறைந்து விட்டது. சரஸ்வதி நதி முழு வீச்சுடன் பாய்ந்த போது, இந்தப் பகுதிகள் மிகவும் பச்சைப் பசேல் என்ற செழுமையான பகுதியாக சில 7000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தன. பிறகு, நதி மறைந்து, பருவகால மழையினை நம்பி இருக்கும் நதியாக - காகர் - என்ற நிலைக்கு மாறிவிட்டது. இந்த ஆய்வின் மூலமாக, இந்திய விஞ்ஞானிகள் உறுதியாக நீரூபிப்பித்தது ராமாயண காலத்தில் வசித்த கபில முனியின் ஆஸ்ரமம் தான் காலாயாத் - Kalayat -  கிராமம் என்பதாகும். செயற்கைக் கோள் படங்கள் 4000-7000 வருடங்களுக்கு முன் ஓடிய நல்ல நீர் ஓடைகளை பூமிக்கடியில் மிகத் துள்ளியமாக காட்டுகின்றன. முன்பு பூமிக் கடியில் சென்ற ஒரு நதியை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும். ஆகையால், சரஸ்வதி நதி மீண்டும் பூமியில் ஓடி அந்தப் பகுதிகளைச் செழிப்பாக்கக் கூடும்.

 

19214 registered users
7452 resources