குடியரசு நிலைபெற கல்வியின் அவசியம் – பள்ளிகளில் சமூக அறிவியல் கல்வி கற்பிப்பதின் அவசியம்

உலகம் பூராவும் உள்ள பள்ளிகளில் சமூக அறிவியல் என்ற ஒரு பாடம் ஏதோ ஒரு வகையில் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. சில சமயங்களில், அந்தப் பாடம் இந்தியாவில் உள்ள இன்றைய ஆரம்ப்பப் பளிகளில் சுற்றுச் சூழல் என்ற பெயரைப் பெற்றுள்ளது. சில சமயங்களில் அந்தப் பாடம் தனியான பாடங்களாக – அதாவது வரலாறு, புவியியல், குடிமையியல் என்பனவாகவோ அல்லது பல நாடுகளில் தற்கால குடியுரிமை கல்வி என்ற பாடமாகவோ அல்லது இந்தியாவில் செயல்படும் சமூக மற்றும் அரசியல் வாழ்வு என்ற பாடமாகவோ நடுத்தரப்பள்ளி வரை இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு, உயர் நிலைப் பள்ளியில், வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல், சமூகவியல் என்பதாக அந்தப் பாடம் விரிவாகியது. சில நாடுகளில் சில சமயங்களில் சமூகப் பாடங்கள் என்று சொல்லப்படும் ஒரு பாடம் இருந்தது. சமூக அறிவியல்களில் வரலாறு மற்றும் புவியியல் பாடங்களைச் சேர்க்காமல் அவைகள் தனியான் பாடங்களாகக் கருதப்படவேண்டும் என்பதும், பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் ஆகியவைகள் சமூக அறிவியல்களில் சேர்க்கப்பட வேண்டும் என்பதும் சிலரது கருத்துக்களாக உள்ளன. இந்தக் கட்டுரைக்காக, எவ்வளவுதான் பொருத்தமாக இருப்பினும், அந்தக் கருத்தைக் குறித்து நான் வாதாடப்போவதில்லை. என்னைப் பொருத்த வரையில், சமூக அறிவியல் என்றால் ஒருவகையான ஊடகங்கள் மூலம் எல்லா சமூக அமைப்பு மற்றும் சமூக வாழ்வு ஆகியவைகளின் சகல அம்சங்களில் சிலவற்றை ஆராயும் அனைத்துப் பாடங்களைக் கொண்டதாகும். இந்தக் கோணத்தில் பார்க்கும் பொழுது, வரலாறு என்பது சமூக அறிவியலின் ஒரு அங்கம் என்றாகிறது. ஏனென்றால், பல காலங்களில் உண்டான சமூகத்தின் பலவிதமான மாறுபட்ட கொள்கைகள், அவைகள் ஒவ்வொன்றுக்கும் உள்ள உறவுகளில் உள்ள மாற்றம் – தொடர்பு ஆகியவைகளைப் பற்றி வரலாறு ஆராய்கிறது. புவியியல் – புவியின் பாகங்களைப் பற்றியும், பொருளாதாரம் – பொருளாதரக் கொள்கைகளைப் பகுத்தறியும் வழி மற்றும் கருத்துக்களைப் பயன்படுத்தியும் விரிவாக்கியும், சமூகவியல் – சமூகக் கொள்கைகளையும், அரசியல் - அரசியல் கொள்கைகளையும் பற்றியதாகச் செயல்படுத்துகின்றன. ஆரம்பக் கல்வி படிப்பு வரையில், மேலே இறுதியாகச் சொல்லப்பட்ட மூன்று பாடங்களும் தனியான பாடங்களாக கற்பிக்கப்படவில்லை. இருப்பினும் அந்த மூன்று பாடங்களும், குடிமையியல், குடிமை உரிமைக் கல்வி அல்லது சமூக-அரசியல் வாழ்வு – என்ற பாடங்களின் மூலமாக ஏதோ ஒரு வகையில் இடம் பெற்று விடுகின்றன.

குடியரசை  தத்துவ நிலையிலிருந்து செயல் நிலைக்கு உட்படுத்தி, உயரவைக்க வேண்டு மென்றால், அதற்கு ஒரு முழு மனமுடன் ஈடுபடும் முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும். அந்த முயற்சியில் கல்வி என்பது ஒரு அம்சமாக இருந்தாலும், மனப்பான்மைகள், மதிப்புகள், தகுதிகள் ஆகியவைகளும் அதில் அடங்கும். 

 

சமூக அறிவியல்களை நாம் எப்படி அறிந்து கொள்கிறோம் என்பது ஒரு புறம் இருப்பினும், மக்களுக்கு சமூக அறிவியல் பாடங்கள் அவசியமானதாக இருக்குமா என்ற ஒரு பொதுவான கருத்து பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினர்கள் மனத்தில் ஒரு கேள்வியாக அடிக்கடி எழுகின்றது. மக்கள் எழுப்பும் முதல் கேள்வி என்ன வென்றால், கல்லூரி அல்லது பிளஸ் 2  பள்ளிப் படிப்பில் சமூக அறிவியல் பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தினை எடுத்துப் படிக்கும் சிறுவர்-சிறுமியர் அதன் பிறகு என்ன செய்ய முடியும்?  அந்தப் படிப்பினால் எந்த வகையான வேலை வாய்ப்புகள் அவர்களுக்கு உண்டு?  ஒரு பள்ளியில் அல்லது கல்லூரியில் ஆசிரியராகவோ, ஒரு ஆய்வளராகவோ அல்லது கல்வித் துறையிலோ சேரலாம். நுழைவுத் தேர்வுகள் எழுதி, ஏதோ ஒரு அரசுத் துறைகளில் சேரலாம். நிர்வாகத் துறையில் – குறிப்பாக மனித வள மேம்பாட்டு நிர்வாகத்துறையில் – சேரலாம். இந்த வாய்ப்புகளின் வழிகள் அனைத்தும் தொழிற்கல்விப் பட்டம் அல்லது மருத்துவப் பட்டம் பெறுபவர்களுக்கும் திறந்திருக்கின்றன என்பதால், தொழிற் கல்விகளை விடுத்து சமூக அறிவியல்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது.      

இந்த மனப்பான்மை கீழ்மட்டப் பள்ளிகளில் படிப்பவர்களின் மனங்களிலும் புகுந்து விடுகிறது. ஆகையால், சமூக அறிவியல் பாடங்களில் குறைந்த தேர்வுக்குத் தேவையான மதிப்பெண் பெற்றால் போதும் என்ற கருத்து பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் ஏற்படுகிறது. முக்கியமான கீழ்க் கண்ட இந்தக் கேள்விகள் மிகவும் அரிதாகவே கேட்கப்படுகிறன்றன – ஒரு மாணவனை ஒரு சிறந்த நபராக உருவாக்குவதற்கு எப்படி சமூக அறிவியல்கள் உதவுகின்றன? அல்லது ஒரு குடியரசை முன்னேற்றவும்,  நிரந்தமாக்கவும் எந்த வகையில் சமூக அறிவியல்களைக் கற்பிப்பதும், கற்பதும் உதகின்றன? கல்லூரி அளவில் சமூக அறிவியலைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படிப்பதை, பள்ளிப் படிப்பு அளவில் சமூக அறிவியல்களைப் படிப்பதைப் போல் கருதாமல் வித்தியாசமாக மிக முக்கியமான ஒன்றாகக் கருதுவது அவசியமாகும்.

இப்படிச் சொன்னதற்குப் பிறகு, நான் இந்தக் கட்டுரையில் இன்றைய நாளில் பள்ளியில் கற்பிக்கப்படும் சமூக அறிவியல் பாடத்தின் பொருளடக்கம் மற்றும் முறை ஆகியவைகளின் அவசியம் பற்றி என் சிறப்புப் பார்வை பதியும். குறிப்பாக, குடிமையியல், குடி உரிமைக் கல்வி, சமூக மற்றும் அரசியல் வாழ்க்கை ஆகியவைகளைப் பற்றி இருக்கும். ஒரு ஜனநாயகத்தை உருவாக்கி, உரமிட்டு, உயர்த்தி செயல் படுத்துவதில் சமூக அறிவியல் கல்வியின் பங்கைப் பற்றிச் சொல்வது தான் என்னுடைய முக்கிய நோக்கமாகும். அதைச் செய்யும் பொழுது, தற்கால சமூகத்தின் சக்திவாய்ந்த அமைப்புகள், அந்த அமைப்புகளில் வழிவழியாக கடைப்பிடிக்கப்படும் பழைமையான தனிப்பட்ட வழக்கங்களை ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஏற்றுக் கொண்ட நிலையில்  சமூக அறிவியல் கல்வியில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைப் பற்றி கோடிட்டுக் காண்பிக்கப் போகிறேன்.

சமூக அறிவியல் கல்விதான் குடியரசைக் காக்கும் கல்வி

 குடியரசுச் சமூகங்கள் என்று சொன்னாலே அவைகள் ஒரளவு விழுப்புணர்வுச் சமூகங்கள் என்பது தான் பொருள். சுதந்திரமான மனிதர்களிடம் காணப்படும் ஒதுக்கப்பட வேண்டிய இயற்கையான குணங்களை மிகவும் அதிக அளவில் நீக்கும் வழிகளுக்கு - நோக்கம், அறம், திறன், தகுதி ஆகியவைகள் உண்மையிலேயே தேவைப்படும். அப்பொழுது தான், குடியரசுத் தத்துவம் குடியரசு கடைப்பிடிக்கும் வழியாக உண்மையிலேயே மாறிவிடும். குடியரசை  தத்துவ நிலையிலிருந்து செயல் நிலைக்கு உட்படுத்தி, உயரவைக்க வேண்டு மென்றால், அதற்கு ஒரு முழு மனமுடன் ஈடுபடும் முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும். அந்த முயற்சியில் கல்வி என்பது ஒரு அம்சமாக இருந்தாலும், மனப்பான்மைகள், மதிப்புகள், தகுதிகள் ஆகியவைகளும் அதில் அடங்கும்.

வரலாற்று உண்மையின்படி, அதிகார மையங்கள், வெறுக்கத்தக்க பரம்பரையாக வரும் அதிகார வர்க்கங்கள், ஒருசிலரின் கைகளில் குவிந்திருக்கும் அதிகாரங்கள், சம நிலை அற்ற ஆதிகார முறைகள் ஆகியவைகளை எதிர்த்துப் போராடிய பிறகு தான்  நவீனக் குடியரசு உதயமானது. முதன் முதலில் விடுதலை வேண்டும் என்று போராடிய அதே நபர்களிடம் இருக்கும்  பரம்பரையாக கடைப்பிடிக்கப்படும் பழக்கங்கள், நெறிமுறைகள், மனப்போக்குகள் ஆகியவைகளை அடிக்கடி எதிர்கொள்ள வேண்டி வரும். இவைகள் ஏன் ஏற்படுகின்றன என்றால், நமது சமத்துவக் கொள்கை என்பது பெரிய வரலாற்று முறையின் ஒரு பாகமாக இருக்கிறது. அந்தப் பாகத்தில், ஏற்றத் தாழ்வுகளையும், வாரிசுகளின் ஏற்றங்களையும் நியாயப்படுத்தும் வழியாக, அவைகள் எல்லாம் தகுதிகளின் அடிப்படையில் அமைந்தவைகள் என்றும், அவைகள் கடவுள் கொடுத்த வரம் என்றும்  விதியின் மேல் பழிபோடும் நிலை தான் நீடிக்கிறது. இந்த எண்ணம் ஒவ்வொரு மனிதனின் உள்மனத்தில் சுயநலத் தேவையினைப் பூர்த்தி செய்வதற்காகவும், மற்றவர்களின் வாழ்கைகளில் ஆதிக்கம் செலுதுவதற்காகவும் ஊறிப்போன ஒன்றாகும். ஆகையால், நடைமுறையில் குடியரசினை ஏற்படுத்துவது என்பது தனிப்பட்ட மனிதர்களின் போராட்டமாக மட்டும் இருப்பதுடன், அது சமுக வட்டங்களிலும், வழிகளிலும் அந்தப் போராட்டம் காணப்படுகிறது. இந்தப் போராட்டங்களைப் பற்றி, பள்ளி அறைகளிலும், கல்வி கூடங்களிலும் இடம் பெறும் படிச் செய்வது அவசிமாகும். இவைகளை நாம் எப்படிச் செய்ய முடியும் என்பதைப் பற்றி விவாதிப்பதற்கு முன், நாம் சிறிது பாதை மாறி, குடியரசின் அடிப்படைக் கொள்களை என்ன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

சமத்துவம் – குடியரசின் மூலமான முக்கிய கருத்து இந்த சமத்துவமாகும். குடியரசாட்சி எல்லா மக்களையும் சமமாக நடத்தும்.  ஒருவருக்கு ஒரு வாக்குச் சீட்டு என்ற கொள்கை, சமத்துவக் கொள்கையின் அடிப்படையில் எழுந்தது தான். ஆனால் நம் எல்லோருக்கும் தெரியும், நடைமுறையில், இந்த அரசியல் சமத்துவம் என்பது பொருளதார மற்றும் சமூக சமத்துவம் பல நவீன குடியரசு நாடுகளில் ஏற்படவில்லை. உண்மையில், பொருளாதார மற்றும் சமூக ஏற்றத் தாழ்வுகள், அரசியல் சாசனம் மூலம் பெயரளவுக்குக் கொள்கை அளவில் கொடுக்கப்பட்ட அரசியல் சமத்துவத்தை பெரும் அளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டன.  சமூக அறிவியல் கல்வி என்பது எல்லாத் துறைகளிலும் சமுத்துவத்தை உண்டாக்க முயல்வதாகும். மேலும், அந்தக் கல்வியானது பாகுபாடுகளை அல்லது ஒதுக்கி வைக்கும் முறைகளை எதிர்க்கும் மனப்பான்மைகளை உருவாக்குவது ஒரு தீவிர குடியுரிமையினை மேம்படுத்த அவசியமான ஒன்றாகும். உதாரணமாக, பணம் கொடுக்கும் சக்தியைப் பொருத்து மருத்துவம் மற்றும் கல்வி வசதிகளைப் பெறுவதில் மாறுபட்ட நிலைகள், பொதுவான இடங்களான உணவுவிடுதிகள் மற்றும் விமான நிலையங்களுக்கு சில வாகன வசதிகளான ஆட்டோக்களில் செல்ல அனுமதி மறுக்கப்படுதல், ஜாதிகள் மற்றும் பலவகையான வகுப்புப் பிரிவுகள் ஆகியவைகள் ஒன்றாக இணைவதை வன்முறையால் தடுப்பவர்களின் மேல் நடவடிக்கை எடுக்கக் கோருதல் ஆகியவைகளைச் சொல்லலாம். அனைவரையும் சமமான முறையில் மதிப்புடன் நடத்தும் கொள்கைதான் குடியரசுக் கொள்கையின் மூல இலக்கணமாகும்.

நீதி – சமூக அந்தஸ்தை எந்த விதத்திலும் கருத்தில் கொள்ளாமல் அனைவருக்கும் சம நீதி என்ற கொள்கை, சமத்துவக் கொள்கையிலிருந்து தான் வந்துள்ளது. நிர்வாகக் கண்ணோட்டத்தில் தவறு என்று தெரிந்தும் சில பேர்கள் தண்டிக்கப்படாமல் தப்ப அனுமதிப்பதை சரி என்று ஒரு பொழுதும் விட்டு விடக்கூடாது.

சுதந்திரம் – அனைவருக்கும் சுதந்திரம் என்ற கொள்கை குடியரசின் மேலும் ஒரு முக்கியமான கொள்கையாகும். அதன் காரணமாகத்தான், எந்தக் குடியரசு அரசியல் சாசனமானாலும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் போல் பேச்சுச் சுதந்திரம், இடம் பெயரும் சுதந்திரம், பல மத நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்கும் சுதந்திரம் ஆகிய சுதந்திர உரிமைகளை அளிக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் அவனது சுதந்திரமான வைராக்கியத்தின் சின்னமாவான் என்பது தான் இதில் உள்ள அடிப்படை நம்பிக்கைக் கருத்தாகும். இருப்பினும், சுமூகத்தில் அனைவரும் நிம்மதியாக வாழவேண்டி இருப்பதால்  மற்றவர்களுடைய சுதந்திரத்தில் தலையீடாமல் இருக்கும் அளவில் ஒரு தனிப்பட்டவரின் சுதந்திரம் தடுக்கப்படவேண்டியது மிக அவசியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எந்த அளவுக்கு சில சுதந்திரம் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்பது ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையில் தீர்க்கப்படவேண்டியது மட்டுமில்லை என்பதும், அது எல்லோரும் ஒப்புக் கொண்ட பலவிதமான சுதந்திரங்களைப் பற்றிய ஒட்டு மொத்த கருத்துக்களின் அட்ப்படையில் நிகழ வேண்டியது என்பதும் கண்கூடு. 

ஆகையால், நடைமுறையில் குடியரசினை ஏற்படுத்துவது என்பது தனிப்பட்ட மனிதர்களின் போராட்டமாக மட்டும் இருப்பதுடன், அது சமுக வட்டங்களிலும், வழிகளிலும் அந்தப் போராட்டம் காணப்படுகிறது. இந்தப் போராட்டங்களைப் பற்றி, பள்ளி அறைகளிலும், கல்விக் கூடங்களிலும் இடம் பெறும்படிச் செய்வது அவசிமாகும். இவைகளை நாம் எப்படிச் செய்ய முடியும் என்பதைப் பற்றி விவாதிப்பதற்கு முன், நாம் சிறிது பாதை மாறி, குடியரசின் அடிப்படைக் கொள்கைகள் என்ன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

 

பங்கேற்றல் – குடியரசு பற்றிய பொன் மொழிகளில் மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்ட பொன் மொழி ஆப்ரஹாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க்கில் ஆற்றிய சொற்பொழுவில் உள்ள இந்த உரையாகும் – மக்களுடைய, மக்களால், மக்களுக்கான அரசாங்கம். ஆகையால், ஒரு குடியரசின் கொள்கைகளும், சட்டங்களும் மதிப்பீடு செய்யப்பட்டு, மாற்றப்பட்டு, இவைகள் அனைத்தும் குடிமக்களின் பங்கேற்புடன் செய்யப்படவேண்டும். குடிமக்கள் இதில் ஈடுபடுத்துவதை வேண்டாத தலைவலியாகக் கருதி, இன்னும் பொருத்தமான கொள்கைகளை உருவாக்குவதில் பங்கேற்காமல் இருப்பின், அதன் காரணமாக சிறப்பான கொள்கைகளும், திட்டங்களும் இந்தப் பங்கேற்பில் ஈடுபட்ட ஒரு சிலருக்கு மட்டுமே பயன்படும் அபாயம் உண்டாகும்.

பிரதிநிதியாகவும், பொறுப்புள்ளவர்களாகவும் மக்களுக்குப் பணியாற்றல் -

தேசங்கள் மிகவும் பரந்து இருப்பதினால், நவீன குடியரசுகள் நேரடியான குடியரசுகளாக இல்லாமல், பிரதிநித்துவமுறையிலான குடியரசுகளாக இருக்கின்றன. ஆகையால், அதை ஓட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியான நபர் என்று ஒரு விதியாக மட்டும் கொள்ளாமல், தலைமை தாங்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களுக்குக் கட்டுப்பட்டும், பதில்சொல்லும் நபர் என்று கொள்ள வேண்டும்.  இது தான் பிரதிநிதித் தலைமை என்பதின் பொருள் என்பதை மக்கள் அறிந்து கொள்வது அவசியமாகிறது. தலைமை ஏற்போர் ஒரு கட்டுப்பாட்டுடன் தான் செயல்பட முடியும்  என்பதும், அவர் தனக்கு விருப்பமான எதையும் செய்ய முடியாது என்பதும் தான் இதன் பொருள். அரசியல் சாசனத்தின் கொள்கைகளாளும், குடிமக்களின் தீவிரமான முக்கிய பங்குகளாலும் இவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்

மேலே சொல்லப்பட்டவைகள் குடியரசின் ஆரோக்கியமான, சக்தி வாய்ந்த அடிப்படைகளாக இருப்பினும், குடிமக்கள் பிறகு செய்யவேண்டியவைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன –

  • அனைவரையும் சமமாக நடத்துதல்.
  • மக்கள் எங்கெல்லாம் சம்மாக நட்த்தப் படவில்லையோ அங்கெல்லாம் அவைகளைப் பிரச்சனைகளாக எழுப்ப முயலுதல்.
  • தவறுகளைப் பற்றி துச்சமாகவோ அல்லது பாராமுகமாகவோ இருக்காமல், தவறுகளைச் சரிசெய்யும் வழிகளைக் காணமுயலும் மனப்பான்மை கொண்டிருத்தல்.
  • கொள்கைகள், விதிகள் மற்றும் சட்டங்கள் மக்களைப் பாதிக்கும் போது, அவைகளை நுணுகி ஆராயும் வல்லமை பெறுதல்.
  • பிரச்சனைகளை ஒருங்கிணைத்து முடிவுக்குக் கொண்டுவரும் வழிகளைக் காணல், ஒருங்கிணைக்கும் திறன்களை வளர்த்தல், ஒற்றுமையாகச் செயல்படல் ஆகியவைகளில் விழிப்புடன் இருத்தல். 
  • விவாதத் திறமைகளை வளர்த்தல் – அதாவது கேட்டல், மற்றவர்களின் கருத்துகளைப் புரிந்து கொள்ளல், கருத்தொற்றுமை ஏற்பட வழிவகுத்தல் போன்றவைகள்.

மேலே குறிப்பிட்டவைகள் சமூக இயல் பாடத்திட்டங்களுக்கும், வகுப்பறைப் பாடங்களுக்கும் எவைகளைத் தெரிவிக்கின்றன?

பாடத் திட்டங்களிலும், வகுப்பறைக் கற்பித்தலிலும் இவைகள் தாக்கங்களை உண்டாக்கும். சமூக அறிவியல் கல்வி மூலம் மேலே சொன்ன குணங்களை வளர்ப்பதற்காக, கல்லூரி நாட்களில் நுணுக்கமாக பல சர்சைகளை மாணவர்கள் ஆராயும் அனுபவம் பெற வேண்டும். அதன் மூலம் மற்றவர்களின் மாறுபட்ட கருத்துக்கள் - அவர்களின் சுதந்திரம் ஆகியவைகளையும் மதிக்கக் கற்றுக் கொள்வதுடன், ஒருங்கிணைந்து செயலாற்றும் வாய்ப்புகளையும்  கற்றுக் கொள்கிறார்கள். சமுத்துவத்துவத்தின் மதிப்பு, எல்லோரையும் மதித்தல், குடியரசு நீதி, ஜனநாயக முறையில் பல காரியங்களை நல்ல முறையில் மாற்ற முடியும் என்ற உறுதிப்பாடு ஆகியவைகளை இந்த மாதிரியான அனுபவங்களால் வளர்க்க முடியும்.

இந்தியாவில் பழைய மரபுப்படி பள்ளிகளில் சமூக அறிவியல் கல்வி பல தகவல்களை கொடுப்பதின் அடிப்படையிலே அமைந்துள்ளது. மதிப்பிடும் போதும் அந்தத் தகவல்களே காண்பிக்கபடுவதாகத் தெரிகிறது. சர்சைக்குறிய விஷயங்களில் தலையிடுவதை, இந்தியாவின் கல்வி முறைகள் அனுமதிப்பதில் தயக்கம் காட்டுகின்றன. இங்கு ஒரு விஷயம் தெளிவுபடுத்த வேண்டும். சமூல அறிவியல் ஒரு குடியரசின் கொள்கைகளைப் பூர்த்தி செய்யும்படிச் செய்வதற்கு, சர்ச்சைகள் வகுப்பறைக்குள் கொண்டுவரப்பட்டு, அவைகள் பல கோணங்களில் தீர்க்கமாக அலசி ஆராயப்பட்டு, அதன் மூலம் அவைகளை நன்கு அறிந்து, நல்ல முடிவுகள் எடுக்கப் பட வேண்டும். இந்தக் கருத்துக்கள் – “மோதல்களிலிருந்து கற்றல்” – என்ற தலைப்புப் புத்தகத்தில்  பேராசிரியர் கிருஷ்ண குமார் விரிவாக விளக்கி எழுதியுள்ளார். “எப்படித் தேர்தல்கள் உண்மையிலேயே நடக்கின்றன? எப்படி குடிமக்கள் பல பிரச்சனைகளை கையில் எடுத்து பலவழிகளில் செயல்படுகிறார்கள்?” என்பன விளக்கப்பட்டுள்ளன. பெரிய அணைகள் கட்டுவதால் விளையும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் மற்றும் சமூக விளைவுகள், போக்குவரத்து ஊர்த்திகளின் அதிகரிப்பு, ஏன், காமல்வெல்த் விளையாட்டை நடத்த ஒப்புக் கொண்டது ஆகியவைகளை விவாதிக்கும் பொழுது மாணவர்கள் பலவிதமான விஷயங்களை – பல மாறுபட்ட கருத்துகளையும் எதிர்க்கொள்ள வேண்டிவரும். இவைகள், மாணவர்களை ஆழமாகவும், குழுவாகவும் ஆராய ஊக்கிவிக்கின்றன.      

குடியரசுக் கல்வியில் தீர்மானங்ககளும், முடிவுகளும் எடுப்பதில் பங்காற்றுவது அவசியமாகிறது. இந்தப் பங்காற்றலினால், பங்கு கொள்ளும் மாணவர்களின் மனத்தில் வெற்றி அடைந்த எண்ணங்களை விதைத்து விடுகின்றன. இந்த மாதிரி எண்ணம் மாணவர்கள் மனத்தில் வராவிடில்,  வருங்கால குடிமகன்களான அவர்கள் குடியரசைப் பற்றி நம்பிக்கை இழந்து, அவநம்பிக்கை கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இந்த நிலையினால், குடியரசுக்கான சமூக அறிவியலின் முக்கிய நோக்கமே தவிடுபொடு ஆகி விடுகிறது.

வளரும் குடியரசுக்கு அவசியமான சிறந்த சமூக அறிவியல் கல்விக்கு ஒரு ஆழமான மன உறுதி அவசியமாகும். அந்த மன உறுதி, குடியரசு செயல்பாடுகளிலும், அந்த அமைப்பின் அங்கங்களான முக்கிய கொள்கைகள், ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் ஆகியவர்களிடம் ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும். ஒரு ஜனநாயகம் வெற்றி அடைய வேண்டு மென்றால் மிகவும் முக்கியமாக ஜனநாயக வழிகள் மட்டும் தான் எந்தவிதமான பிரச்சனைகளுக்கும், கஷ்டமான சம்பவங்களுக்கும் ஒரு மனிதாபமானத்தோடும், அஹிம்சை வழியிலும் தீர்க்கும் வழிகள் என்பதை உணரவேண்டும்.  இவைகள் தவிர, ஒரு உண்மையான ஜனநாயக அமைப்பிற்கு, காலம் செல்லச் செல்ல உயர்ந்து வளரும் தன்மை இயற்கையாகவே உண்டு. ஆகையால், ஒரு சுதந்திரமான வழியில் ஈடுபடும் மனப்போக்குகள் மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகள் ஆகியவைகளை வெற்றிகரமாக உருவாக்கிவதற்கு வேண்டிய பொருள்கள் மற்றும் வழிகள் ஆகியவைகளைச் சமூக அறிவியல் பாடதிட்டங்களில் உருவாக்க வேண்டியது அவசியம். அவைகள் மாணவர்களிடம் பொதுவான கோட்பாடுகளில் ஒற்றுமையாக, ஒருங்கிணைந்து, கல்லூரி அளவிலும் ஒன்றாகச் செயல்பட்டு இயங்குவதற்கான திறமைகளை உருவாக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். 

வளரும் குடியரசுக்கு அவசியமான சிறந்த சமூக அறிவியல் கல்விக்கு ஒரு ஆழமான மன உறுதி அவசியமாகும். அந்த மன உறுதி, குடியரசு செயல்பாடுகளிலும், அந்த அமைப்பின் அங்கங்களான முக்கிய கொள்கைகள், ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் ஆகியவர்களிடம் ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.

 

ஒரு குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமின்றி அப்படிக் கற்பிக்க வைக்கும் பெரிய பாடத் திட்டங்களிலும் இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்கான தேசியக் கழகம் நடுத்தர மற்றும் உயர் பள்ளிகளுக்கான சமீபத்திய சமூக அறிவியல் பாடத் திட்டங்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் அதற்கு ஒரு எடுத்துக் காட்டாகும். நடுத்தரப் பள்ளிக்கான வரலாறு, சமூக, அரசியல் பாடப்புத்தகங்கள் ஒரு புறம், உயர் பள்ளிக்கான வரலாறு, அறிவியல், சமூகம் பாடபுத்தகங்கள் மறுபுறம் ஆகியவைகளில் நிகழ்வுகளைப் பற்றிய ஆய்வுகளைப் பயன்படுத்தும் முயற்சி காணபடுகின்றது. இந்த நிகழ்வு ஆய்வுகளில் எழுப்பப்படும் சர்ச்சைகளில் பலவிதமான அபிப்பிராயங்கள் எழுப்பப்பட்டு, ஒரு பொதுவான நடைமுறைச் செயலுக்கு வழிவகுக்கும் பொழுது, அது ஒருவகையில் வெற்றி என்றே கொள்ள வேண்டும். நாடு முழுதும் இயங்கும் பல பள்ளிகளில் நடக்கும் செயல்களின் சிலவற்றை இந்தக் கட்டுரையில் பகிர்ந்து கொண்டிருக்கிறேம். அந்தப் பள்ளிகளின் பட்டியல் இதோ – பம்பாய் சிஷு வான், பங்களூரு நம்ம ஷாலே, பங்களூரு பூர்னோதயா, கோல்கத்தா விக்ரமஷீலா, கோல்கத்தா ஷிஷா மித்ரா, ஐதராபாத் மற்றும் பங்களூரு கல்வி மையங்கள், ஷெண்ட்வா ஆதர்ஷீலா இன்னும் பல. இந்தப் பள்ளிகள் அனைத்தும் அவர்களாகவே அவர்களுக்கான பாட்த்திட்டங்களையும், அதற்கான உபகரணங்களையும் உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளையும் வகுப்புகளில் விவாதிப்பதை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே கொண்டுள்ளார்கள். மேலும், மரபணு பி.டி. கத்தரிக்காய், பருவகால மாற்றம், காமன்வெல்த் விளையாட்டினால் பொதுமனிதனின் பாதிப்பு ஆகிய பிரச்சனைகளை எழுப்பும் அமைப்புகளில் பங்குகொள்ள பள்ளிப் பிள்ளைகளை அழைத்துச் செல்வார்கள். குடியரசுக்கு அவசியமான மறுபரிசீலனை மற்றும் தீவிர ஆய்வு ஆகியவைகளை உள்ளடிக்கிய ஒரு சமூக அறிவியல் பாடத்திட்டதை உருவாக்குவதற்கு ஏற்ற கருவூலமாகப் பார்க்கும் வண்ணம் ஏகலைவா என்ற நிறுவனத்தின் சமூக அறிவியல் பாடப்புத்தகங்கள் அமைந்துள்ளன.  

ஆசிரியர், பெற்றோர், சமூகத் தலைவர் ஆகிய அனைவரும் சமூக அறிவியல் அதிகர மையங்களுக்கு அடிபணிந்து செயல்பட விழைகிறார்களே அன்றி மிகவும் பலம் பொருந்திய பாடமாக இருப்பதை விரும்புவதில்லை. இதன் மூலம், குழந்தைகளின் மனங்களில் சமூகச் சச்சரவுகள் புகாமல் அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.

கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி தேசிய மையத்தின் புத்தகங்களில் கடைப்பிடிக்கப்படும் புதிய பாணியோ அல்லது பள்ளிகள் அல்லது கல்வி கற்பிக்கும் மேலே குறிப்பிட்டுள்ள குழுக்களின் பாணிகளோ ஒரு விதத்தில் ஒரு தலைப் பட்சமாக தோன்றும். அவைகள் அரசியல் சம்பந்தப் பட்டவைகளாக இருக்கின்றன. ஏனென்றால், ஜனநாயகமே ஒரு அரசியல் தத்துவமாக அமைந்து, நமது நாட்டின் அரசியல் சட்டம் அதற்கு அடித்தளமாக இருக்கிறது. நாட்டின் குடிமக்களாக இருக்கும் நிலையில், அரசியல் சட்டத்தைச் செயல்படுத்தும் கடமையும், அதே சமயம் ஜனநாயகத்தைக் காக்கும் கடமையும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதல்லவா?

 

தீவிரமான குடியுரிமைக்கு சமூக அறிவியல் கல்வி எதிர்கொள்ளும் சவால்கள்

அரசியல் அமைப்புகளில் எழுதப்பட்ட மரபுப்படி அப்படியே நேரான பாதையில் செல்வது போல் சமூகங்கள் மாற்றமடைவதில்லை என்ற உண்மை தான் கருத்துக்களில் காணப்படும் மாறுபாடுகளுக்குக் காரணம். உண்மை நிலை என்னவென்றால், சமூகம் மற்றும் கலாச்சாரங்களில் இந்தியாவின் பெரும் பகுதிகள், பரம்பரை அதிகாரம், பொருளாதார அடிப்படையில் இல்லாமல் பழைமையில் ஊறிய பழக்கங்களைக் கொண்ட ஏதேச்சதிகாரக் கும்பலின் அதிகாரம மற்றும் ஜாதியின் அடிப்படையில் அமைந்த அதிகார மையங்கள் ஆகியவைகளால் ஆழமாக அழுந்தி உள்ளன. ஒவ்வொரு மனிதனுக்கும் பல தொடர்பான அறிமுகங்கள் உண்டு – குடும்பம், மதம், சமூகக் குழு, நாடு, வேலை. அகையால், சென்ற 60 வருடங்களுக்கு முன்பேயே இந்தியா சுதந்திர நாடாக முறைப்படி அறிவிக்கப்பட்டாலும், நடைமுறையிலும், கலாசார முறையிலும் இந்தியா இன்னமும் ஜாதி அடிப்படையிலும், ஏதாச்சதிகாரமான  ஒரு குறிப்பிட்ட சமூகக் கும்பலின் ஆளுகைக்குள்ளும் அடங்கி இருக்கிறது. ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டிய நிர்வாக முறைகள் குறிப்பாக கல்வித் துறைகள் – இந்த கலாசார ஆதிக்கப்பளுவில் உண்மையிலேயே அடிபட்டு வீழ்ந்து விட்டன. ஆசிரியர், பெற்றோர், சமூகத் தலைவர் ஆகிய அனைவரும் சமூக அறிவியல் அதிகர மையங்களுக்கு அடிபணிந்து செயல்பட விழைகிறார்களே அன்றி மிகவும் பலம் பொருந்திய பாடமாக இருப்பதை விரும்புவதில்லை. இதன் மூலம், குழந்தைகளின் மனங்களில் சமூகச் சசரவுகள் புகாமல் அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். ஆகையால், குழந்தைகளிடம் சுதந்திரமான மதிப்புகளையும், கருத்துக்களையும் உண்டாக்கி, வளர்த்து சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய நபர்களே சுதந்திரமான செயல்களை ஊக்கப்படுத்தி, உரமூட்டாமல் புதைத்து மூட உண்மையிலேயே முயலுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், ஒரு சமூக அறிவியல் ஆசிரியர் பள்ளிகளில் எடுக்கப்படும் முடிவுகளில் ஜாதியின் பிடியில் இருக்கும் கிராமப் பள்ளிக் குழந்தைகளையும் அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளும் முறையைச் செயல்படுத்துவதில் மிகவும் பயப்படுகிறார்கள். அப்படிச் செயல்படும் பொழுது, தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒரு சிறுமியோ அல்லது சிறுவனோ– அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதனால் எல்லாக் காரியங்களும் சர்ச்சைக்குள்ளாகிவிடும்.  

முன்னேற்றமான வழிகளைக் கடைப்பிடிக்கும் உயரிய நிலையில் உள்ள பணக்காரப் பள்ளிகளின் வகுப்பறைகளில் எல்லோரும் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் கொண்ட வகுப்பறைகளாக இருக்குமே அல்லாது சமூக ஏற்றத் தாழ்வுகளைப் பிரதிபலிக்கும் முறையில் பலமட்டக் குழந்தைளையும் உள்ளடக்கியதாக இருக்காது. ஆகையினால், இந்த மாதிரியான ஒரே இன வகுப்பு-ஜாதிகளைக் கொண்ட வகுப்பறைகளில், இந்த வகையான பயிற்சிகள் பிரச்சனைகளை உண்டாக்குவதில்லை. ஏனென்றால், நடைமுறை வழக்கங்களே தொடரவேண்டுமென்ற கருத்தை எதிர்ப்பதில் எந்தவிதமான தீவிரமும் காட்டப்படுவதில்லை.

இது பல பள்ளிகளில் பல மாறுபட்ட சமூக அறிவியல் கல்வியினை கற்பிக்கும் நிலைக்குக் கொண்டுசெல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. இந்த வேறுபடுத்தும் முறையே சமத்துவக் கொள்கையான ஜனநாயக மரபுகளுக்குப் புறம்பானது.

முடிவுரை

பெரிய அளவில் பள்ளிகளில் ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தும் சமூக அறிவியல் பாடத்திட்டத்தையும், அதைக் கற்பிப்பதையும் பெரும் அளவில் விரிவாக செயல்படுத்துவதின் மூலமே ஒரு ஜனநாயக சமூகம் உருவாகிச் சிறப்பாகச் செயல்பட வைக்க முடியும் என்ற கருத்தினைத் தான் நான் வலுயுறுத்த முயலுகிறேன். வேறு எந்த பாடமும் இந்த இடத்தைப் பூர்த்தி செய்ய முடியாது. சமூக அறிவியல் பாடத்தை நுணுக்கமாக மீண்டும் சிந்திக்கச் செய்து கற்பது – கற்பிப்பது ஆகியவைகள் தான் முக்கிய பொருத்தமான ஒன்றாகும். நான் இந்த மேலே உள்ள கட்டுரையில் விளக்க முயன்ற சமூக அறிவியல் பாடத்தின் தன்மையில் அதைச் செயல்படுத்துவதற்குத் தேவையான உறுதுணை அம்சங்களான - புத்தகங்கள், சக ஆசிரியர்களின் குழுக்கள், அத்துடன் கல்வித்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அவசியமான கல்வி, அறிவு மற்றும் சமூக உதவிகளை ஏற்படுத்துவது ஆகியவைகள் அவசியமாகிறது. இந்தக் கட்டுரையினைப் படிக்கும் வாசகர்கள் இந்த வழியில் நடக்க  ஒரு காலடியாவது எடுத்து வைப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

இந்த வகையான சமூக அறிவியல் கல்வி - விழிப்பான, சிந்திக்கும் ஜனநாயகக் குடிமகன்களை உருவாக்குவது மட்டுமின்றி, எந்தத் துறையிலும் ஒரு குழுவாகச் செயலாற்றும் திறமைகளை வளர்த்துக் கொண்டு, தொடர்ந்து மாறுபாடல்களைக் கொண்ட இந்த உலகத்தில் தீர்க்கமாக தகவல்களை ஆராய்ந்து அதன் மூலம் சரியான முடிவெடுக்கும் திறனையும் பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் என் எண்ணம். 

மற்றவகைகளான சமூக அறிவியல் கற்பித்தலில் அடங்கியுள்ள – தகவல் அளித்தல், பல பாடங்களைப் பற்றி அறிவித்தல் ஆகியவைகள் – என் மனதிற்குப் பட்ட வரையில், பள்ளிக் கல்விக்கு அவ்வளவாக சம்பந்தம் இல்லாதவைகளாகவே படுகிறது. ஆகையால், அந்தப் பாடங்களின் சுமைகளிலிருந்து குழந்தைகளை நாம் காப்பாற்ற முடியும். 

அஞ்சலி நோரோஹா பொருளாதார டெல்லிப் பள்ளியில் பொருளாதாரப் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று, 1982-ம் வருடத்திலிருந்து, ஏகலைவா என்ற நிறுவனத்தில் பணியாற்றுகிறார். சமூக அறிவியல் மேம்பாட்டுக் கல்வித் திட்டம், மொழி மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் ஆரம்பப் பள்ளிக்  கல்வித் திட்டம் ஆகியவைகளில் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.  6 மற்றும் 7 வகுப்புகளுக்கான என்.சி.இ.ஆர்.டி.யின் சமூக – அரசியல் வாழ்வு பாடங்களை மேம்பாடுத்தும் குழுவில் அவர் இடம் பெற்றுள்ளார். பள்ளிக் கல்வித் திட்டங்களில் புதுமைகள், சமூக அறிவியல் கல்வி ஆகியவைகளைப் பற்றி பல கட்டுரைகள் எழுது உள்ளார். அவர் தற்சமயம் ஈடுபட்டுள்ள வேலைகளின் விவரங்கள் வருமாறு: இரு மொழி வளர்ப்பு மற்றும் படித்தல், டி.ஐ.எஸ்.எஸ். நிறுவனத்தின் எம்.ஏ. கல்வி பாடங்களை கற்பிப்பதை மேம்படுத்தல், என்.சி.டி.இ. என்ற நிறுவனத்துடன் பள்ளி மேம்பாடு- பொதுக் கல்வித் திட்ட வேலை-  ஆசிரியர் கல்விக் கொள்கை மற்றும் மேம்பாடுத்தல்.

அவரைத் தொடர்பு கொள்ள உதவும் மின் அஞ்சல்:

  anjali_noronha99@yahoo.com.

 

                                                      

                      

18490 registered users
7234 resources