காவிரி நதி
முன்னுரை
இந்தியாவின் நதிகளில் காவிரியும் ஒரு புனித நதியாகும். நீர்ப்பாசனம் மற்றும் நீர் மின் சக்தி ஆகியவைகளுக்கு காவிரி ஒரு முக்கிய மூலமாக இருப்பதினால், காவிரி நதி தென் இந்தியாவின் புராதன ராஜ்யங்களுக்கும், தற்போதைய நவீன நகரங்களுக்கும் வாழ்வாதாரமாக இருக்கிறது. இங்கு சொல்லப்படும் கதையில், காவிரியின் உற்பத்தி மற்றும் அதைச் சூழ்ந்துள்ள பலவிதமான நம்பிக்கைகள் ஆகியவைகளைப் பற்றிய விவரங்கள் இருப்பதை நீங்கள் காணலாம்.
காவிரி நதி
கதையும், அதன் சுருக்கமும்
இந்திய புண்ணிய நதிகள் ஐந்தில் காவிரி நதியும் ஒன்று. அது குறிப்பாகத் தென் இந்தியர்களால் மிகவும் போற்றப்படும் நதியாகும்.
அகத்திய முனிவர் எவ்வாறு தென் திசை நோக்கி வந்தார் ?வித்தியமலை உயர்ந்து அழகாகத் தோற்றமளிக்கும் மலையாக இருந்தது. வீண்குழப்பவாதி ஒருவன் விந்தியமலையின் முன்னிலையிலேயே மேரு என்ற வேறு ஒரு மலையைப் புகழ்ந்து முன்பொரு நாள் பேசினான். அதைச் செவுயுற்ற விந்தியமலை பொறாமையினால் விண்ணை நேக்கி மேருவைவிட
உயரமாக வளர ஆரம்பித்தது.
வெகு விரைவில், வளர்ந்த விந்தியமலை சூரியனை மறைத்து விட்டது. மக்கள், மிருகங்கள், காடுகள் அனைத்தும் விந்தியமலையின் நிழல்களால் சூழப்பட்டு, சூரிய ஒளி இல்லாமல் போய்விட்டது. சூரியன் செய்வதறியாது திகைத்தது. சூரியன் எவ்வளவு உயரமாகச் சென்றாலும், விந்தியமலை அதைவிட உயர்ந்து, சூரிய ஒளியை மறைத்தது. மக்கள், மிருகங்கள் மற்றும் காடுகள் அனைத்தும் வித்தியமலையை உயரமாக வளர்வதை நிறுத்தும் படி வேண்டியும், வித்திய மலை காது கொடுத்துக் கேட்க வில்லை.
கடவுளர்களுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. செய்வதறியாது, மிகவும் சக்தி வாய்ந்த அகத்திய முனிவரிடம் சென்று, உதவ வேண்டினர்.
அகத்திய முனி வித்தியமலைக்குச் சென்று, தான் தெற்கு நோக்கிச் செல்ல இருப்பதால், விந்திய மலையைக் குனியும் படிக் கேட்டார். அகத்தியர் கடந்து சென்ற பிறகு, தான் மீண்டும் திரும்பி வரும் வரை இப்படியே குனிந்த நிலையில் விந்தியமலையை இருக்கும் படிக் கேட்டுக் கொண்டார். வித்திய மலையும் அந்த உயரத்திலேயே அகத்திய முனி திரும்பி வரும் வரை இருப்பதாக உறுதிமொழி அளித்தது. தெற்கே வந்த அகத்திய முனி, தெற்கிலேயே தங்கி விட்டார். இதனால், வித்திய மலையைச் சுற்றி உள்ள மக்கள் அனைவரும் ஆனந்தமடைந்தார்கள்.
ஒரு குழந்தை வேண்டும் என்று அகத்தியர் விரும்பியதால், அவர் கல்யாணம் செய்து கொள்ள விரும்பினார். தன்னுடைய தவ வலுமையினால், காட்டிலுள்ள அழகான அனைத்து ஜீவராசிகளின் பாகங்களையும் சேகரித்து, அவைகளை ஒன்றாக இணைத்து ஒர் அழகான குழந்தையை உருவாக்கினார்.
கதைகளின் பல விளங்காத பாகங்களை ஒருங்கிணைத்தல்
விந்திய மலைப் பகுதிகளில் வாழ்ந்த காவேரா என்ற அரசன் ஒரு குழந்தை வரம் வேண்டும் என்பதால் பிரம்மாவை பிரார்த்தித்தான். அதற்கு தகுந்தாற்போல், அகத்திய முனிவருக்குத் தான் உருவாக்கிய குழந்தையைப் பேணிக் காக்க ஒருத்தி தேவைப்பட்டது. இந்த சிக்கலைத் தீர்க்கவே, விஷ்ணுமாயா என்ற பெயருள்ள பிரம்ம தேவனின் மகள் பூமியில் பிறந்து மனித இனத்திற்குச் சேவை செய்ய விரும்பியதாக கருதப்பட்டது.
பிரம்மாவின் அருளால், விஷ்ணுமாயா என்ற அவரது மகளே காவேரா அரசருக்கு லோப முத்திரா என்ற மகளாகப் பிறந்தாள். அகஸ்திய முனிவர் உருவாக்கிய குழந்தையின் அம்சமாக அவள் பிறந்தாள். மனித குலத்திற்குச் சேவை செய்யும் துடிப்பான விஷ்ணுமாயாவின் எண்ணம் அப்படியே மாறாமல் உள்ளத்திலே கொண்டுள்ள ஒரு அழகான பெண்ணாக லோப முத்திரா வளர்ந்து வந்தாள்.
தேச சஞ்சாரம் செய்து கொண்டிருந்த அகத்திய முனிவர் தமது பல பயணத்தின் ஒன்றில் லோப முத்திராவைச் சந்தித்தார். அகத்திய முனிவர் காவேரா அரசரிடம் அவரது மகளைத் தமக்கு மணம் முடிக்கும் படி கேட்டார். அகத்தியர் வயதானவரும், சடாமுடி, காவி உடையுடன் பார்ப்பதற்கு உண்மையிலேயே அழகற்றவராகக் காட்சி அளித்தார். இருப்பினும், லோப முத்திரா அகத்திய முனிவரை – நீண்ட காலம் தன்னைத் தனியாக விட்டு விட்டுச் செல்லக் கூடாது என்ற ஒரு நிபந்தனையுடன் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தாள். அந்த நிபந்தனையை அவர் மீறினால், தான் அவரை விட்டு விலகி விடுவதாகத் தெரிவித்தாள். அதற்கு அகத்திய முனிவரும் சம்மதித்தார்.
அநியாத்தை எதிர்த்துப் போராடுதல்
லோபமுத்ரா அகத்திய முனிவரைக் கல்யாணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் ஒர் ஆசிரமத்தில் தங்கினார்கள். ஒரு சமயம், அவர்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, அகத்திய முனிவர் நோய்வாய்ப்பட்டு, மயக்கமாகி விட்டார். உதவிக்கு ஒருவரும் இல்லாததால், ஆசிரமத்திற்கு அவரைத் தனியாகவே தூக்கிச் செல்ல வேண்டியதாகி விட்டது. அகத்திய முனிவரின் தேகம் பெரியதாகையால், அவரைத் துக்கிச் செல்வது கடினமாக இருப்பினும், லோபமுத்திராவின் வலிமையான மனபலத்தால் இது நிறைவேறியது. ஆசிரமத்திற்குப் போகும் இருட்டு வழியில், அகத்தியரின் கீழே தொங்கியபடி ஆடிக்கொண்டிருந்த கால் தூங்கிக் கொண்டிருந்த ஒரு ஞானியின் மேல் பட்டு விட்டது. கடும் கோபத்தில், அந்த ஞானி சாபம் இட்டார் – “இன்றைய சூரிய உதயத்தின் போது, என் மேல் மோதிய காலின் சொந்தக்காரர் இறந்து போக்க்கடவது.”
லோபமுத்திராவிற்கு இது முற்றிலும் அநியாயமான சாபம் என்று தோன்றியது. உண்மையில் முனிவரைத் தூக்கிக் கொண்டு சென்றது லோபமுத்திரா. அத்துடன் ஞானியை வேண்டுமென்றே இழிவு படுத்தும் எண்ணத்துடன் இதை லோபமுத்திரா செய்ய வில்லை. ஆகையால், லோபமுத்திரா உரக்க சபதமாக முறையிட்டாள் – “கணவருக்குப் பணிவிடை செய்யும் உத்தம மனைவியாக நான் இருந்தால், சூரியன் உதயமாகக் கூடாது.”
சூரியனும் உதயமாக வில்லை.
பூமியில் இருள் சூழ்ந்தது. கடவுளர்கள் எல்லாம் பயத்தால் நடுங்கினரார்கள். அவர்கள் அனைவரும் லோபமுத்ராவைப் பார்க்க ஓடோடி வந்தனர்.
“சூரியனுக்கு இட்ட சபத்த்தை நீக்கி விடு“ என்று கடவுளர்கள் அவளை வேண்டினர்.
அவள் தன் பக்கத்து நியாயத்தை விளக்கிச் சொன்னாள். நியாயமற்ற ஞானியின் சாபத்தை அவர்கள் நீக்கினால் தான், அவள் தனது சாபத்தையும் திரும்ப்ப் பெறவதற்குச் சம்மதம் தெரிவித்தாள். கடவுளர்களும் அவளது நியாயமான கோரிக்கையை ஏற்றனர். அவளது கணவரான அகத்திய முனிவரும் உயிர் பிழைத்தார். லோபமுத்திராவும் தனது சாபத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டாள். சூரியனும் உதயமாகி, பூமியில் உள்ள அனைவரும் சுகமாக வாழ்ந்தனர்.
அநியமான சாபத்தை ஏற்காமல் போராடி வெல்லும் சக்தியை அவள் படைத்திருந்தாள்.
லோபமுத்திரா காவிரி நதியான கதை
அகத்திய முனிவர் ஒரு சமயம் லோபமுத்திராவை நீராக மாற்றி தமது கமண்டலத்துள் அடக்கி வைத்திருந்ததாக ஒரு புராணக் கதை சொல்கிறது. தன்னை நீண்ட காலம் தனியாக வைத்திருந்ததை லோபமுத்திரா உணர்ந்தவுடன், கமண்டலத்திலிருந்து அவள் ஒரு நதியாக பெருக்கெடுத்து
ஓடலானாள். முனிவர்களின் சீடர்கள் அவளைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர். ஆனால், அவளோ பூமியில் பாய்ந்து ஓடியதால், அவளது பிரவாகத்தை அவர்களால் நிறுத்த முடியவில்லை. பிறகு, அவள் பகமண்டலா என்ற இடத்தில் மீண்டும் உதயமானாள். பல காலத்திற்குப் பிறகு, அகத்திய முனிவர் அவளைத் தேடிய போது, காவிரி நதியின் ரூபத்தில் அவளை அவர் அடையாளம் கண்டார். அவள் அகஸ்திய முனிவருடன் அவரது பத்தினியாக வாழ்ந்து, நதியாக மக்களுக்கு உதவியாக இருந்தாள் என்று சிலர் நம்புகிறார்கள். இன்னொரு புராணக்கதையும் உண்டு. அகத்தியர் தனது பத்தினியைத் தம் கமண்டலத்துள் நீராக வைத்திருந்ததாகவும், கணேச பகவான் காக வடிவில் வந்து அவரது கமண்டலத்தைக் கவிழ்த்து, அதிலுள்ள நீரை ஓட விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
காவிரி நதி எதனால் தென் கங்கை என்று போற்றப்படுகிறது
நதியாக ஓட ஆரம்பித்ததும், அவள் காவிரி என்ற பெயரால் அழைக்கப்பட்டாள் – காவேராவின் மகளானதால் அப்பெயர் வந்தது. புண்ணிய நதியாக வேண்டும் என்ற விருப்பத்தால், காவிரி நதி பகவான் விஷ்ணுவிடம் கங்கை நதியை விட தான் புண்ணிய நதியாக வேண்டும் என்று பிரார்த்தித்தாள். காவிரியின் கோரிக்கையைச் செவிமடுத்த விஷ்ணு, “கங்கை எனது திருவடிகளிலிருந்து பிறந்ததால், கங்கை புனிதமானது. காவிரியோ எனது மாலையாகி, எனது ஹிருதயத்திற்கு அருகில் இருப்பதால், காவிரி கங்கையைவிட புனிதமானதாகும் “ – என்று விளக்கமளித்தார். இதன் காரணமாகவே விஷ்ணுவின் மூன்று புனிதத் ஸ்தலங்கள் காவிரிக் கரையில் இருக்கின்றன. ஸ்ரீரங்கப்பட்டிணம், சிவனசமுத்திரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் முறையே ஆதி ரங்கா, மத்திய ரங்கா, அந்திய ரங்கா என்ற பெயர்களில் அந்த ஸ்தலங்கள் அமைந்துள்ளன. இந்த ஒவ்வொரு இடங்களிலும் அமைந்துள்ள கோயில் காவிரி நதி சூழ்ந்து, ஒரு தீவாக அமைந்து, அதுவே புராண நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒரு மாலைபோல் காட்சி அளிக்கிறது.
இதிலிருந்து இன்னொரு புராண வரலாறும் உண்டு. கங்கை தன் பாவத்தைப் போக்கிக் கொள்ள ஒவ்வொரு வருடமும், பூமியின் பாதாளம் வழியாக காவிரி நதிக்கு வந்து, குளித்து விட்டுப் போவதாக அந்த வரலாறு சொல்கிறது. இது விஷ்ணுமாயா விரும்பி வேண்டியபடி, அவள் பூமியில் மனித குலத்திற்கு உதவக் காவிரி நதியாக ஓடுவதாகச் சொல்வதற்குப் பொருத்தமானதாக இருக்கிறது.
ஸ்ரீரங்கம் சம்பந்தமான ஒரு புராண வரலாறு
ஸ்ரீரங்கத்தில் உள்ள கோயில் தென் இந்தியாவின் கோயில் கட்டிடக் கலைக்கே ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். ஸ்ரீரங்கத்தின் கோயில் கோபுரம் மிகவும் உயரமானதாகச் சொல்லப்படுகிறது. மேலும், உலகத்திலேயே பரப்பளவில் பெரியதான ஹிந்து கோயிலாகக் கருதப்படுகிறது. பெரிய பாம்பான ஆதிசேஷன் மேல் சயனம் செய்திருக்கும் கோலத்தில் உள்ள பகவான் விஷ்ணுவின் சிலை பிரார்த்தனை செய்வதற்கு வேண்டும் என்று பிரம்மா ஒரு காலத்தில் வேண்டினார் என்று ஸ்ரீரங்கப் புராண வரலாறு தெரிவிக்கிறது. பிரம்மாவின் வேண்டுதல் நிறைவேறியதால், ஆதி சேஷனில் சயனம் செய்யும் கோலத்தில் இருக்கும் விஷ்ணுவின் அழகான சிலை –ரங்கநாதன் என்று அழைக்கபடும் சிலை - பிரம்மாவிற்குக் கிடைத்தது. பல ஆயிரம் வருடங்களுக்கு மேல் சென்ற பிறகு, அந்தச் சிலையை அடைய ஒரு பெரிய யாகம் செய்த பிறகு, அந்தச் சிலை இஷ்வாகுவிடம் வந்தடைந்தது. ராமாயணக் காவியப் புகழ் ராமர் இஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்தவராவார். அந்தச் சிலை அவரிடம் வந்ததிலிருந்து, அதை மிகுந்த பக்தியுடன் பூஜை செய்து வந்தார்.
ராம – ராவண யுத்தத்திற்குப் பிறகு ராவணனின் தம்பி விபீஷணன் ராமர் பட்டாபிஷேகத்திற்காக இந்தியாவிற்கு ராமனுடன் வந்தார். விபீஷணன் திரும்பிப் போகும் போது, விபீஷணரிடம் அவர் விரும்பும் பொருள் ஒன்றைக் கூறும்படிக் கேட்டார். விபீஷணர் பகவான் ரங்கநாதரின் சிலையைக் கேட்டார். ராமர் தாம் வாக்களித்த படி, ரங்கநாதரின் சிலையை விபீஷணரிடம் ஒப்படைத்தார். விபீஷணனும் தான் பெற்ற சிலையுடன் திரும்பி இலங்கை நோக்கிப் பயணமானார்.
சிலையைக் குறித்து ஒரு நிபந்தனை இருந்தது. சிலையை பூமியில் வைத்துவிட்டால், அந்தச் சிலை அந்த இடத்திலேயே பூமியில் வேரூண்டிவிடும். புஷ்பக விமானத்தில் பறந்து பயணம் செய்த விபீஷணன் சில சடங்குகளைச் செய்வதற்காக ஸ்ரீரங்கம் பக்கத்தில் இறங்க வேண்டியதாகி விட்டது. அதற்கு கைகளை விடுவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகியது. இறங்கிய இட்த்தில் ஒரு மாடுமேய்ப்பவனைப் பார்த்த உடன், விபீஷணன் தான் சடங்குகளை முடித்து வரும் வரை, இந்தச் சிலையை வைத்திருக்கும் படி அவனிடம் கேட்டுக் கொண்டான்.
மாடு மேய்ப்பவனும் அதற்கு ஒப்புக்கொண்டான். ஆனால், தன் கைகள் வலி எடுத்தால், அவன் “விபீஷணா “ என்று மூன்று முறை கூப்பிட்டும், வரவில்லை என்றால் தான் சிலையைக் கீழே வைத்து விடுவேன் என்று சொன்னான். இதற்கு ஒப்புக் கொண்ட விபீஷணன், நதியில் நீராடச் சென்றார். சிறிது நேரம் மாடு மேய்ப்பவன் சிலையைக் கைகளில் வைத்திருந்தான். அவனது கைகள் வலி எடுத்தவுடன், அவன் மூன்று முறை “விபீஷணா” என்று கூறியும், விபீஷணன் வராததினால், சிலையை கீழே வைத்து விட்டான்.
திரும்பி வந்த விபீஷணன் சிலை பூமியில் வேரூண்டியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சிலையை அவரால் அசைக்க முடியவில்லை. பெரும் கோபங்கொண்ட விபீஷணன் வெகு தூரம் சென்றிருக்க முடியாத அந்த மாடுமேய்ப்பவனை கண்டுபிடிக்க ஓடிப்போய்த் தேடினார். அவனைக் கண்டுபிடித்தவுடன், நினத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கோபத்தில் இருந்த விபீஷணன் அவன் தலையில் ஓங்கிக் குட்டினார். மாடுமேய்ப்பவனாக இருந்தவன் தம் சுயரூபமான கணபதி கடவுள் வடிவத்திற்கு மாறினார்.
இதனால் மிகவும் வெட்கப்பட்ட விபீஷணன் மனதார மன்னிக்கும்படி கணேசக் கடவுளை வேண்டினார். பிறகு, தமது சிலை இருக்கும் இட்த்திற்கு திரும்பிச் சென்றார். மனம் முழுதும் குழம்பிய விபீஷணன், செய்வது அறியாது திகைத்தார். பகவான் ரங்கநாதரே நேரில் தோன்றி, விபீஷணரைக் கவலைப் பட வேண்டாம் என்று சொன்னார். தாம் விரும்பிய படி அந்தச் சிலையை இலங்கைக்குக் கொண்டு செல்ல முடியாவிடினும், அந்த சிலை இலங்கையை நோக்கியே எப்பொழுதும் இருக்கும் படி அமைந்துள்ளது.
இன்று நாம் காணும் அந்தப் பெரிய கோயில், ஒரு சோழ மன்னரால் வெகு காலத்திற்குப் பிறகு கட்டப்பட்டதாகும். இதில் ஆச்சரியப்படத் தக்க செய்தி என்னவென்றால், சிலை இலங்கையை நோக்கி இருப்பதுடன், கணேசர் கோயிலில் உள்ள சிலையில் தலையில் குட்டுப் பட்ட அடையாளத்தையும் காணலாம்.
குறுஞ்செய்திகள் -
- காவிரி நதி மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.
- இந்த நதிக்கு ஆங்கிலத்தில் Kaveri என்ற உச்சரிப்புச் சொல் முதலில் இருந்து, அது Cauvery என்று உருமாறியது.
- ஆசியாவின் முதல் நீர் மின் சக்தி நிலையம் இந்த காவிரியின் தண்ணீரைப் பயன்படுத்துகிறது. அதிலிருந்து உற்பத்தியாகும் மின் சக்தி பங்களூரு நகரத்திற்குப் பயன்படுகிறது.
- இரண்டு மாநிலமான கர்நாடகாவும், தமிழ்நாடும் இந்த நதி நீரைப் பங்கீடு செய்து கொண்டிருப்பினும், தமிழ் நாடுதான் காவிரி நீரை அதிகம் பயன்படுத்துகிறது.
- கர்நாடக மாநிலம் நீர்ப்பங்கீடு நேர்மையற்ற முறையில் இருப்பதாகக் குறைகூறி, அந்த பங்கீட்டு முறையை மாற்றக் கோருகிறது.
- தலைக் காவிரியில் ஒரு புண்ணிய கோயில் நகரம் இருக்கிறது. அங்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை பஞ்சலிங்க தரிசனம் என்ற விழா காவிரி நதிக்கரையில் கொண்டாடப் படுகிறது. அந்த விழாக்காலங்களில் நதி நீரில் பக்தர்கள் நீராடுவார்கள்.
- காவிரி நதியை மிகவும் நம்பி உள்ள தமிழக மக்களும் காவிரிப் பெருக்கு என்ற விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
- தென் இந்தியாவின் ஒரு மிக முக்கியமான நீர் வளம் கொடுக்கும் நதி காவிரியாகும்.