கரை சேர்க்குமா கட்டாய படிப்பு.....

பள்ளிக்கல்வி முடித்து மேற்படிப்பில் தேர்ந்தெடுக்கும் துறை, சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது? மேற்படிப்பு என்பதே அடுத்து தொழில், வேலை செய்யும் துறையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், பயிற்சி பெறுவதற்கும் தான். அதாவது, குறிப்பிட்ட துறையில், வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளுக்கான பணத்தை சம்பாதிப்பதற்காகத் தான்.மாணவர்கள், தன் சுயவிருப்பத்துடன், ஒரு துறையை படிக்கத் தேர்ந்தெடுத்து, அப்படிப்பின் தொடர்புடைய துறையில் பணியாற்றும் போது, முழு ஈடுபாடு இருக்கும்; பணம் சம்பாதிப்பதும், அதனுடன் சேர்ந்து நடக்கும்.பிடிக்காத துறையில் படித்து பணியாற்றுபவருக்கு, பணம் சம்பாதிப்பது ஒன்றே முக்கிய நோக்கம். பணி, இரண்டாம் பட்சம் தான். கட்டாயத்தின் அடிப்படையில் படித்த மாணவர், படிப்பிலும் நாட்டமின்றி, தெளிவான புரிதலுமின்றி படித்து முடித்து, வேலை கிடைப்பதும் கடினம்.

18487 registered users
7228 resources