எது சரி அல்லது தவறு என்பதை அறிய உதவும் சமூக அறிவியல் படிப்பு

நமது பள்ளிப் படிப்பு முறை ஒரு சரியான விடை, ஒரு சரியான வழி, உலகத்தைப் பார்ப்பதில் ஒரே வழி என்ற விதத்தில் குழந்தைகளை கட்டுப்பாடுத்தும் விதமாக ஏன் இருக்கிறது?” என்ற எண்ணத்தைப் பற்றி நான் சிந்திக்கும் பொழுதும், சமூக அறிவியல் பாடத்தைக் கற்பிப்பதைப் பற்றி என்னை எழுதச் சொல்லும் பொழுதும், எனது கடந்த கால பள்ளி நாட்களைப் பற்றி நான் நினைவு கூற ஆரம்பித்தேன். ஆமாம், கற்பிப்பது என்பது ஒரு நோக்கு என்ற விதத்தில் அமைந்து, குறிப்பிட்ட பாடங்களைப் படித்து, அவைகளை திரும்பவும் ஒப்பிக்கும் விதமாக குழந்தைகள் உருவாக்கப்படுகிறார்கள். பல சிறுவர்கள் குடிமையியல், சரித்திரம் ஆகிய பாடங்கள் மிகவும் வெறுப்படையச் செய்யும் விதமாக இருப்பதைக் காண்கிறார்கள். இதன் காரணமாக, தேர்வு எழுதும் மண்டபத்தை விட்டு வந்த உடனேயே, நாங்கள் படித்த அத்தனையையும் மறந்து விடுகிறோம் என்று அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஏன் இந்த நிலை? இந்த நிலைக்கு விடிவு காலம் ஏற்படாதா?

எப்படி, ஏன்என்ற கேள்விகளை நம்மில் சிலர் எழுப்பியும், பகுத்தறிவுக்கு ஏற்ற விளக்கங்களைக் கேட்டும், மூடப்பழக்க வழக்கங்களையும், அவநம்பிக்கைகளையும் எதிர்த்து வாதாடியும் இருப்பதைப் பார்க்கும் எனக்கு இந்த எண்ணங்கள் ஆச்சரியத்தில் என்னை ஆழ்த்திவிடும். பண்புகள், பழக்க வழக்கங்கள் ஆகியவைகளை நிர்ணயம் செய்வதில் - குடும்பம், குழு நண்பர்கள் ஆகியவர்கள் ஒரு பெரிய பங்கு வகிக்கிறார்கள் என்றாலும், நமது உலகப் பார்வையை உருவாக்குவதில் பள்ளிகள் நிச்சயமாக ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்பது நீண்டகாலமாக ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்தாகும். நமக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பிருந்த கால கட்டத்தில், சமூக சீர்திருத்த வாதிகள் ஏற்படுத்திய பள்ளிகள் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. அதே போல் இந்நாள் வரையிலும், நாம் சென்று படிக்கும் பள்ளியின் தன்மை நம்மை எல்லாம் உருவாக்குவதில் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். எதை, எப்படி நாம் கற்கிறோம், நமக்குக் கிடைத்த ஆசிரியர்களின் தன்மை, பாடப்புத்தகங்கள் எப்படி போதிக்க்படுகின்றன ஆகிய அனைத்தும் - நாம் என்ன படிக்கிறோம், நாம் எவ்வாறு கற்கிறோம், நமது சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி நாம் அவைகளைத் தொடர்பு படுத்திப் பார்க்கிறோம் என்பதை எல்லாம் பாதிக்கும் அளவில் இருப்பது தெரிவருகிறது.  

கேரளாவில் உள்ள திருவனந்த புரத்தில் இருக்கும் கேந்திர வித்யாலயா பள்ளியில் 8 வது வகுப்பில் நான் படித்துக் கொண்டிருந்தேன். அது 1968 –ஆம் ஆண்டாகும். சிம்லாவிலிருந்து அப்போதுதான் நாங்கள் இங்கு வந்திருந்தோம். மத்திய அரசாங்க அதிகாரியாகப் பணி ஆற்றும் பதவியில் உள்ளவரின் குழந்தையாக இருப்பதால், நாங்கள் இரண்டு வருடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் தொடர்ந்து இருக்க முடியாது. ஒரு பள்ளியில் எனது ஆசிரியராக இருந்தவர்அவர் பெயர் எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லையு.எஸ். தேசத்தில் நடைபெற்ற மக்கள் உரிமைப் போராடத்தைப் பற்றி மிகவும் தீவிரமான ஈடுபாடுள்ளவராக இருந்தார். மார்டின் லூதர் கிங்க் என்பவரின் பெரிய ரசிகர் அவர். அப்படிப்பட்ட மிகப் பெரிய தலைவர் மார்ச் மாதம் 1968 ஆம் ஆண்டு படுகொலைச் செய்தி அந்த ஆசிரியரை மிகவும் நிலைகுலைய வைத்தது. அந்த ஆசிரியர்மார்டின் லூதர் கிங்கின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நான் ஒரு கனவு கண்டேன்என்ற புகழ்பெற்ற பேச்சை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவராகும். அந்தப் பேச்சை எங்களில் பலரும் அப்படியே சொல்லக் கற்றுக் கொண்டோம். ஒரு நாள் அந்த ஆசிரியர் ஆன்மீக குருவும், சமூகச் சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயண குரு (1855 – 1928) என்பவரைப் பற்றிச் சொன்னார். சாதிக் கொடுமைகளை எதிர்த்து, சமூக சமத்துவம் மற்றும் சுதந்திர உரிமைகளின் உண்மையான மதிப்பை அடையப் போராடியவர் என்பதை அந்த ஆசிரியர் விளக்கினார். இந்த இரண்டு பெரிய சீர்திருத்தவாதிகளையும் ஒப்பிடும் ஆய்வு ஒன்றினை நாங்கள் செய்ய விரும்புகிறோமா என்று அந்த ஆசிரியர் கேட்டார்.

மக்கள் உரிமைப் போராட்டத்தைப் பற்றியோ அல்லது கேரளாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த சமூக சீர்திருத்தப் போராட்டத்தைப் பற்றியோ அதிகமாக எதுவும் தெரியாத நிலையிலும், எங்களில் சிலர் அந்த ஆய்வை மேற்கொள்ள இசைந்தோம்.

அதன் பிறகு, மக்கள் உரிமைப் போராட்டங்கள், மார்டின் லூதர் கிங்க் படுகொலை, யு.எஸ். நாட்டில் சமத்துவம் மற்றும் நீதி கிடைக்க நடக்கும் போராட்டங்கள்ஆகியவைகளைப் பற்றி எல்லாம் நாங்கள் படிக்க ஆரம்பித்தோம். மலையாளம் தெரிந்தவர்கள் கேரளாவின் சமூக மாற்றங்களைப் பற்றிப் படித்து, அவைகளை மற்ற குழுவினருடன் பகிர்ந்து கொண்டனர். நாங்கள் பத்திரிகைகளில் வந்த செய்திகளின் பகுதிகளைச் சேகரித்தும், பிரிட்டிஷ் கவுன்சில், பொது வாசக சாலைகளுக்கும் சென்றும், மக்களிடம் உரையாடியும் செயல்பட்டோம். பிறகு ஸ்ரீநாராயண குருவின் ஆசிரமத்திற்குச் சென்று, அங்கு நடைபெறும் உபன்யாசங்களக் கேட்டும், அந்த ஆசிரமத்தைச் சுற்றுப் பார்த்தும், அங்குள்ளவர்களிடம் உரையாடவும் செய்தோம். பல் வேறு ஜாதி, மத, பாஷை பேசும் மாணவர்களாகிய நாங்கள் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உணவு அருந்தி அந்தக் காலத்தில் செலவிட்டோம். கேந்திர வித்யாலயா என்ற பள்ளிக் கூடத்தில் வேற்றுமைகள் வெந்து சாம்பலாகிவிடும் ஒரு உன்னதமான இடமாகும். ஏனென்றால், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வரும் மாணவர்கள் சேர்ந்து படிக்கும் பள்ளியாகும் அது. அந்த இரண்டு மகத்தான பெரிய தலைவர்களைப் பற்றி எங்களது சிறு குழுக்கள் ஒன்றாக எழுத முடிவாகியது. எங்களது வகுப்பில், ஒரு கண்காட்சியை நாங்கள் உருவாக்கினோம். எனது பள்ளி வாழ்வில், இந்த இரண்டு வாரங்கள் மிகவும் மறக்கமுடியாத ஒன்றாகி விட்டன.

ஒரு பாரம்பரியமான பிராமணக் குடும்பத்திலிருந்து வந்த காரணத்தால், ஜாதி வித்தியாசங்களைப் பற்றிய கருத்துக்களை போதிய அளவுக்கு நான் தெரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ் நாட்டில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பொழுதுதான், இந்த ஜாதியைப் பற்றி முதல் முதலில் நான் காதால் கேட்டேன். அப்போது கேந்திர வித்யாலயா..டி. சென்னை கிளைப் பள்ளியில் நான் ஐந்தாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பெரியவர்கள் அப்போது உரையாடியதை இப்போது நினைவு கூறுகிறேன்:”பிரமணர்களுக்கு தமிழ் நாட்டில் எந்தவிதமான எதிர்காலமும் இல்லை. ஆகையால், நாம் ஆங்கிலத்துடன் ஹிந்தியையும் சேர்த்துப் படிக்க வேண்டும்.” இருப்பினும், இந்தக் கருத்துக்களுக்கு மற்றவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, மக்களுக்குச் செய்த அநீதிகளைச் சரித்திரச் சான்றுகளுடன் எடுத்துரைத்தனர். இந்த வாக்கு வாதங்கள் மிகவும் அனல் பொறி பறக்கும் அளவில் நடைபெறும். அப்பொழுது குழந்தைகளான எங்களை வெளியில் சென்று விளையாடும் படியும், பெரியவர்களின் உரையாடல்களை ஒளிந்திருந்து கேட்கக் கூடாது என்றும் விரட்டப்படுவோம்

இந்தச் செயல்களில் மூலம் ஒரு பெரிய மாற்றம் என்னிடமும், என் நண்பர்களிடமும் ஏற்பட்டது என்னவென்றால், அன்றாடம் நிகழும் அனுபவங்களைப் பற்றி நினைத்துப் பார்த்து அவைகளைப் பற்றி வினா எழுப்ப ஆரம்பித்தோம். இதன் தாக்கத்தில், 1968-69 ஆண்டுகளில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையினைப் பற்றியும், சமூகத்தில் ஏற்படும் கலவரங்கள் மற்றும் அநியாயமான ஏற்றத்தாழ்வுகள் ஆகிய பிரச்சனைகளைப் பற்றி நாங்கள் விவாதித்தோம்.

 

இந்தச் சிறிய இரண்டு வார திட்டப்பயிற்சி - ஜாதி, இனம், சமூக ஏற்றத்தாழ்வுகள், அநீதிதீண்டாமை ஆகிய பேய்களின் ஆட்டங்கள் ஆகியவைகளைப் பற்றிய உண்மை நிலையை அறியச் செய்து, என் கண்களைத் திறந்தன. இந்தப் பயிற்சி முடிவில், மரபு வழிப் பழக்க வழக்கங்களையும், மறைமுகமான மற்றும் நேரிடையான நிற வேற்றுமைகளையும் பற்றி வினா எழுப்ப ஆரம்பித்ததுடன், வேண்டுமென்றே பலவிதமான இனக்குழந்தைகளுடன் நட்பு கொள்ள ஆரம்பித்தேன். எனது இப்படிப்பட்ட மாணவ நண்பர்களில் வீடுகளில் உணவு உட்கொள்வதை நான் ஒரு பழக்கமாகவே வைத்துக் கொண்டேன். இந்தச் செயல்களில் மூலம் ஒரு பெரிய மாற்றம் என்னிடமும், என் நண்பர்களிடமும் ஏற்பட்டது என்னவென்றால், அன்றாடம் நிகழும் அனுபவங்களைப் பற்றி நினைத்துப் பார்த்து அவைகளைப் பற்றி வினா எழுப்ப ஆரம்பித்தோம். இதன் தாக்கத்தில், 1968-69 ஆண்டுகளில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையினைப் பற்றியும், சமூகத்தில் ஏற்படும் கலவரங்கள் மற்றும் அநியாயமான ஏற்றத்தாழ்வுகள் ஆகிய பிரச்சனைகளைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். எங்கள் உலகமே இந்த சில வாரங்களிலேயே தலைகீழாக மாறிவிட்டது. அந்தச் சமயத்தில் இந்த முக்கியமான அனுபவங்களின் அருமை தெரியாவிட்டாலும், பல வருடங்களுக்குப்  பிறகு என்னுடைய வாலிப வயதில் தான்இந்த மாதிரியாக நான் பெற்ற கல்வி என்னிடம் எப்படிப்பட்ட நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதுஎன்பதை நான் உணர்ந்தேன். எங்களது ஆசிரியர்களும், நாங்கள் எவைகளைப் படிக்கவேண்டும், எவைகளைப் படிக்கக் கூடாது, எவைகளை நம்பவேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை. அதிலும் முக்கியமாக, எங்கள் ஆசிரியர்கள் ஜாதி அல்லது மதம் ஆகியவைகளைப் பற்றியும் எந்தவிதமான பிரசாரமும் செய்யவில்லை. எல்லாவற்றையும் நாங்களே ஆராய்ந்து, சொந்தமாக நாங்களாகவே ஒரு முடிவுக்குவர எங்களை ஆசிரியர்கள் அனுமதித்தார்கள்.  

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, கர்நாடக மாநிலத்தில் குழந்தைத் தொழிலாளர் நலச் சங்கங்கமான பீமா சங்கத்தில் செயல்பாடுகளை ஆவணப்படுத்தும் முன்னுரிமை எனக்குக் கிடைத்தது. அதற்காக தெற்கு கர்நாடகாவில் உள்ள குண்டாபூருக்கு நான் பயணிக்கும் பொழுது, குழந்தைகள் பஞ்சாயத்தைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 18 வயது வரை உள்ள குழந்தைகள் பஞ்சாயத்து அளவில் அவர்களது அங்கத்தினர்களை அவர்களே தேர்வு செய்து, குழந்தைகள் பஞ்சாயத்துச் சபையினை உருவாக்கினார்கள். பெரியவர்களின் பஞ்சாயத்தில், ஒரு சட்டமுறையின் படி, ஒரு தேர்தல் அதிகாரியின் முன்னிலையில் தேர்தல் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு, பிரசாரங்கள் செய்து, பிறகு தேர்தல்கள் நடைபெறும். சிறுவர்களால் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி சுதந்திரப் பண்புகள் மற்றும் நடைமுறைகளை பரிட்சார்த்தமான முறையில் அறிந்து கொள்வதற்கு அமைக்கப் பட்டதாகும். குழந்தைகளின் தேர்தல் முடிந்த பிறகு, செயல்பாட்டுக் குழு (Task Force) ஒன்று அமைக்கப்பட்டது. அது பல உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதித்துவமான குழுவாகும். அந்தக் குழுவில் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள், குழந்தை பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகியவர்கள் இடம் பெற்றவர்களாவர். இந்த அமைப்புதான் அரசாங்கத்துடன் இணைந்தும், தொடர்ந்து பேசியும் காரியங்களைச் சாதிப்பதற்கு முக்கியமாக உதவின. அது ஏற்பட்ட நாளிலிருந்தே, குழந்தைகளின் பலதரப்பட்ட பிரச்சினைகள் எல்லாம் விவாதித்து, தீர்வு காணப்பட்டன: உதாரணமாக, மழைகாலத்தில் வெள்ளம் வந்து பள்ளிக்குச் செல்லும் பாதை தடைபடுவதை தவிற்க  ஒரு நடை பாலத்தைக் கட்டியதுவீட்டு வேலைகளுக்கு குழந்தைகளை வேலைக்கு அமர்த்த வேண்டாம் என்று கிராம மக்களை வேண்டிக்கொண்டது, வெளி இடங்களிலிருந்து குடிபெயர்ந்து வந்த குழந்தைகளை ஹோட்டல்களில் வேலைக்கு அமர்த்துவதை அடியோடு ஒழித்தது, அதிக தொலைதூரத்தில் பள்ளிகள் இருக்கும் இடங்களில்  புதிய பள்ளிகளைத் திறத்தது போன்றவைகளைக் குறிப்பிடலாம். உள்ளூர் அரசாங்கத்துடன் நேருக்கு நேர் தொடர்பு கொண்டு இருப்பதால், ஆரம்ப பள்ளி ஆசிரியருடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு உண்டாகி  கல்வியின் தரம் மேம்படைவதுடன், பள்ளியும் குழந்தைகளுக்கு ஒரு குதூகலமான இடமாகவும் மாறியது.  (ஆசிரியரின்குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு வரவழைத்தல்என்ற சேட்ச் பிரசுரம், புது டெல்லி, 2003)

நம் நாட்டின் இதர பாகங்களிலும் இதைப் போன்ற குழந்தைகளின் பஞ்சாயத்தை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த கர்நாடகாவில் செயல்படும் குழந்தைகளின் பஞ்சாயத்தில் விசேஷமான அம்சம் என்னவென்றால், அது கல்வியின் ஒரு இணைபிரியாத அங்கமாகி, சுதந்திர முறைகளைப் பற்றிய அறிவுடன், உலகலாவிய முறையில் நேர்மையான செய்கைகளையும் - சமத்துவமானதுமான பண்புகளை உணர்வதாகும். தேர்தல்களில் பங்குகொள்ளல், விவாதத்திற்குப் பிறகு முடிவெடுத்தல், ஒருவருக்கொருவர் ஒத்துப் போதல், பலவிதமான மாறுபட்ட கருதுக்கொண்டவர்களுடன் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்குக் கற்றுக்கொள்ளல் ஆகிய அனைத்தும் சுதந்திரப் பண்புகளை வளர்த்து, மற்றவரை மதித்து நடப்பதற்கு வழிவகிக்கும் ஒரு சக்தி வாய்ந்த வழியாகும்.

கடந்த பல வருடங்களாக, சில மஹிலா சிக் ஷான் கேந்திரா என்ற பள்ளியில்மஹிலா சமாக்யா என்ற ஸ்தாபனத்தால் நிர்வகிக்கப்படும் அந்தப் பள்ளியில்இதே போல் நடைமுறைகள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த முறையில், ஆண்-பெண் உறவு முறைகள், சமூக அநீதிகள், ஒருங்கிணைந்த குழுவின் மூலம் காரியங்களைச் சாதித்தல் ஆகியவைகள் பற்றிய பாடங்கள் கல்வித்திட்டத்தில் சேர்க்கப்பட்டு, மிகவும் நுட்பமாக கற்கும் முறையாகி விடுகிறது. நிரந்தர்  (Nirantar)  என்பது புது டெல்லியில் இயங்கும் ஆண்-பெண் கல்வி மையமாகும். அதுஉலகப் பலகனி’ (Window to the World) என்ற ஒரு பிரசுரம் வெளியிட்டுள்ளது. புது டெல்லியில் வாழும் கிராமத்துப் பெண்களுக்குப் பயன்படும் கல்வித்திட்டத்தைக் கொண்டுவருவதில் ஏற்பட்ட அனுபவங்களின் ஆய்வுத் தொகுப்பு அறிக்கைதான் அந்தப் பிரசுரம். அதில், மஹிலா சிக் ஷா கேந்திரா பள்ளியில் பயன்படுத்தும் கல்வித் திட்டம் உத்தரபிரதேசத்தில் உள்ள பாண்டாவில் எப்படி படிப்படியாக கொண்டு வரப்பட்டது என்பது விளக்கப்பட்டுள்ளது

நமது பாடத்திட்டத்தில் உள்ள குறை என்னவென்றால், கருப்பொருட்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து, அவைகளைக் கற்பிக்கும் முறைகளுக்கு குறைந்த அளவே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. கருப்பொருட்கள் எதுவாக இருப்பினும்நாமாகவே பாடங்களை அறிந்து கொள்ளவும், ஒவ்வொருவருடனும், நம்மைச் சுற்றி உள்ள மக்களுடனும் உரையாடி, நமது சொந்த அனுபவத்தின் மூலம் சரித்திரத்தை அறிந்து கொள்ளவும், அதிலும் முக்கியமாக குழுவாக விவாதித்து, எதிர்த்து, கேள்வி எழுப்பி  செயல்பட்டும் ஆகிய இம்முறைகளில் நம்மை ஊக்கிவிப்பதாக கற்பிப்பது அமைய வேண்டும். அப்படி அமைந்தால், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் இந்த அனுபவத்தால் அதிகமான பலன் அடைந்து உயர்வோம்

 

கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்கான மாநிலக் குழு (SCERT – State Council of Educational Research and Training) உருவாக்கிய குடிமையியல் பாட புத்தகங்களைப் பார்வை இடும் வாய்ப்பு எனக்கு தற்செயலாகக் கிட்டியது. பாடபுத்தகத்தை உருவாக்குவதில் பங்கு கொண்ட நிரண்டாரிலிருந்து வந்த நண்பர்களும், ஆசிரியர்களும் அவர்கள் பாடங்களின் பிரதியைக் காண்பித்தார்கள். அவர்களின் பாடப்புத்தகங்கள் பொதுவாக மரபு வழியில் எழுதப்பட்டவைகளாக இல்லாமல், ஆசிரியர்கள் மாணவர்களுடன் சேர்ந்து பயிற்சிகளைச் செய்ய ஊக்கிவித்து, அவர்களைச் சுற்றி உள்ள இடங்கள், நகரங்கள் ஆகியவைகளை அவர்களே சுற்றிப் பார்த்துக் கற்பதை ஊக்கிவிக்கும் படி அமைந்திருந்தது. நானும் எனது அனுபவத்தை அங்குள்ள சிலரிடம் பகிர்து கொண்டதாக ஞாபகம்.

இந்த கால கட்டத்தில், ஆந்திரப்பிரதேசம்மதனபள்ளி ஊரில் உள்ள ரிஷி பள்ளத்தாக்குப் பள்ளியை (Rishi Valley School) பார்வை இடும் வாய்ப்பு ஒரே வருடத்தில் இரண்டு முறை எனக்குக் கிட்டியது. சரித்திரம், குடிமையியல் என்ற பாடங்கள் மட்டுமின்றி, அநேகமாக மற்ற எல்லாப் பாடங்களும் பயிற்சிகளை அடிப்படையாகக் கொண்டு எப்படி மாணவர்களுக்கு படிக்க, உரையாட மற்றும் சிந்திக்க வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன என்பதை அப்பொழுது நான் நேரிலே பார்த்தேன். இந்த முறை, மாணவர்களின் மனங்களை திறக்க வைத்து, அவர்களைக் கேள்விகள் கேட்கவும் தூண்டின. இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால், இந்த கற்பிக்கும்-கற்கும் முறையில் எந்தவிதமான பயமோ, தண்டனையோ கிடையாது. குழந்தைகள் பாடங்களை ஆனந்தமாகவே கற்றார்கள்.

உள்ளூர் சரித்திரம் மற்றும் கலாச்சாரத்திலிருந்து கற்பிப்பதும், கற்பதும் ஒரு சிறந்த முறை என்பதை  தேசிய பாடத்திட்ட விதிகள் வலியுறுத்துகின்றன. இதைப் படித்தவுடனேயே, எனது இரண்டு வாரப் பயிற்சி என் நினைவுக்கு உடனே வந்தது. இரண்டு பெரிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றினையும், அவர்களது கருத்துக்களையும் அறிவதற்கு எந்தவிதமான வழிகளில்  தேடி, படித்து, அறிந்து கொண்டு, அவைகளைப் பற்றி நுணுகி ஆராய ஆரம்பித்தேன். இந்த அத்தனை செயல்களும் என் மாணவியாக இருந்த காலத்திலிருந்து, பிறகு ஆசிரியராக இருந்த போதும், இப்பொழுது ஒரு ஆய்வாளராகவும், எழுத்தாளராகவும் இருக்கும் இத் தருணம் வரை என்னுடனேயே அவைகள் தொடர்ந்து என் நினைவில் குடிகொண்டுள்ளன.

நமது பாடத்திட்டத்தில் உள்ள குறை என்னவென்றால், கருப்பொருட்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து, அவைகளைக் கற்பிக்கும் முறைகளுக்கு குறைந்த அளவே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. கருப்பொருட்கள் எதுவாக இருப்பினும்நாமாகவே பாடங்களை அறிந்து கொள்ளவும், ஒவ்வொருவருடனும், நம்மைச் சுற்றி உள்ள மக்களுடனும் உரையாடி, நமது சொந்த அனுபவத்தின் மூலம் சரித்திரத்தை அறிந்து கொள்ளவும், அதிலும் முக்கியமாக குழுவாக விவாதித்து, எதிர்த்து, கேள்வி எழுப்பி  செயல்பட்டும் ஆகிய இம்முறைகளில் நம்மை ஊக்கிவிப்பதாக கற்பிப்பது அமைய வேண்டும். அப்படி அமைந்தால், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் இந்த அனுபவத்தால் அதிகமான பலன் அடைந்து உயர்வோம்.

பயிற்சிவழி கற்கும் முறையில் மனம் ஒன்றிப்படிக்கும் நிலை உண்டாகும். மனம் ஒன்றை ஏற்றுக்கொண்ட பிறகு, அந்தத் தகவல் உடனேயே உள்ளே தங்கிவிடுகிறது. மனம் ஏற்றுக் கொள்வதற்கு, அந்தத் தகவல்கள் ஆசிரியர்கள் கண்களுக்கு நம்பத்தகுந்ததாக இருக்க வேண்டும், என்றாலும் அவைகள் உண்மைஎன்று மாணவர்கள் நம்பும் அளவில் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி போல் இருக்க வேண்டும். குழந்தைகளை அப்படிப்பட்ட முறையில் நிலை நிறுத்துவதற்கு ஆசிரியர்கள் மிகவும் பாடுபட்டாக வேண்டும். ஆசிரியர்கள் எல்லாம் தெரிந்த அறிவாளிகள் இல்லை என்றாலும், அறியவும்தொகுக்கவும், ஆய்வு செய்யவும் மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக ஆசிரியர்கள் இருக்க முடியும். பொதுவாக நாம் தகவல்களைத் தேடிக் கண்டு பிடித்து விட்டால், அவைகள்ப் பற்றி நாம் சிந்தித்தும், உரையாடியும், பிறகு ஒரு அபிப்பிராயத்தை உருவாக்குவதிற்கு அந்தத் தகவல்களை எந்த சூழ்நிலைக்கும் பயன்படுத்த முடியும்.

இப்படிப்பட்ட கற்கும் வழிமுறைகள் நமது பொது அறிவின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தும் பொழுதே, சரித்திரம் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவைகளில் குடிமக்கள் என்ற நிலையில் அவர்களின் அன்றாட அனுபங்களுடன் அவைகளைத்  தொடர்பு படுத்துவதையும் அவசியமாகிறது. இந்த வழியில் படிக்கும் முறை சமூக உறவுகள், சமூகத்தின் ஆழமாக ஊறிய மூடப்பழக்கங்கள், அநீதிகள், ஏற்றத் தாழ்வுகள், ஆண்-பெண் பாகுபாடுகள் இவைகளுடன் வேறுபல சமூகப் பிரச்சனைகளான ஊழல், கலவரங்கள் ஆகிய அனைத்தையும் தீவிரமாக அறிந்து ஆராய மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். பாடப்புத்தகங்களில் உத்தமமானதாகச் விவரிக்கப்பட்ட  பொது அறிவுக்கும் உலகலாவிய அறிவிற்கும் ஒரு தொடர்ப்பான பாலங்களை உருவாக்குவது கற்பிப்போர்-கற்போர் இருவருக்கும் மதிப்பிட முடியாத உள்ளொளியைப் பெற்றுத்தரும்.

இவைகள் எல்லாம் சொல்வது சுலபம, ஆனால் செய்வது கடினம். கற்பிக்கும்-கற்கும் வழிமுறைகளை ஒரே அடியாக மாற்றி அமைப்பதற்கு நமது ஆசிரிய சமூதாயம் தயாரா? புதிய கருத்துக்களுக்கு உட்படுத்துவதற்கு, கற்பது-கற்பிப்பது ஆகியவைகளில் ஒரு மாற்றுக் குறிக்கோளுடன் முன்பு கற்றவைகளை மறக்கும் ஒரு சீரிய முயற்சியையும் இணைப்பது அவசியமானதாகும். குடிமையியல்சமூக அறிவியல் கல்வி ஒரு பயிற்சி முறைக்கு வழிவகுக்கும். அந்தப் பாடங்களை 1-ம் வகுப்பிலிருந்தே சுற்றுச் சூழல் அறிவியல்களாக இளம்வயதிலேயே படிப்பதற்கு அனுமதித்து, படிப்படியாக அந்தப் பாடங்களை உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரையிலும் கற்பிக்க வேண்டும். பாடங்கள் வெகுவாக பரந்து விரிவடையாவிடினும், இந்தப் பயிற்சி முறையை ஆசிரியர்களும், குழந்தைகளும் நன்கு அறிந்து கொண்டுவிட்டால், பிறகு இந்த வழிமுறைகள் தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் செல்ல வாய்ப்புள்ளது.

இன்று நம்மை எதிர் நோக்கி உள்ள மிகப்பெரிய சவால்கள் அரசியலும்,அரசியல் வாதிகளும் தான். ஏனென்றால்,  ‘எது சரியான சரித்திரம், எது சரியான குடிமையியல்என்பதை  அவர்களே முடிவெடுக்க விழைகிறார்கள். சரித்திரமும், குடிமையியலும் துரதிருஷ்டவசமாக ஒரு அரசியல் சண்டைக்களமாக மாறிவிட்டன. இந்த நிலைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க ஒரே வழி, பயிற்சி முறையில் கற்பதும், கற்பிப்பதையும் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான், உள்ளூர் அனுபவங்கள், உள்ளூர் கலாச்சாரம் - சரித்திரம் மற்றும் மிக முக்கியமானதான ஒன்றான பொருள் அறிந்து படிக்கும் கல்வி ஆகியவைகளுக்கு நாம் இடம் கொடுக்க முடியும். இதன் மூலம், நமது குழந்தைகள் எப்படிப் படிக்க வேண்டும் என்பதுடன், எதைப் படிக்கக் கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்

விமலா ராமச்சந்திரன் என்பவர் கல்வி ஆய்வு மைய டைரக்டராக இருக்கிறார். அந்த மையம், கல்வி மற்றும் சமூக உயர்வு அளிக்கும் முறையில் ஆய்வாளர்களையும், செயலளர்களையும் கொண்ட ஒரு குழுவாக செயல்படுகிறது. மத்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டுத் கல்வித் துறையின் ஆதரவில் மத்திய அரசாங்கத்தின் பெண்கல்வித் திட்டம் என்ற முதன் முதலில் உருவாக்கப்பட்ட தேசிய திட்ட மஹிலா சம்ஹிதாவின் டைரக்டராகவும் (1988-1993) – அதன் மூலகர்தாக்களின் குழு உறுப்பினராகவும் அவர் இருந்தார். ஹெல்த் வாட்ச் (Health Watch) என்ற பெண்களுக்கான சுகாதார மையங்களைக் கொண்ட  நிர்வாகத்தை உருவாக்கியவராகவும், அதன் மேனேஜிங் டைரக்டராகவும் 1994 ஆம் ஆண்டிலிருந்து 2004 ஆம் ஆண்டு வரை பணிசெய்துள்ளார். ஆரம்பக் கல்வி, ஆண்-பெண் பால் பாகுபாடுகள் மற்றும் பெண்கள் முன்னேற்றம் ஆகியவைகளைப் பற்றி விரிவான கட்டுரைகளை அவர் பிரசுரம் செய்துள்ளார்.

அன்னாரைத் தொடர்பு கொள்ள கீழ்க்கண்ட மின் அஞ்சலைப் பயன்படுத்தவும்:

erudelhi@gmail.com

 

 

19196 registered users
7451 resources