இந்தியாவில் சமூக அறிவியலின் குறை நிலை - காரணங்களும், நேர்செய்யும் வழிகளும்

பல இடங்களுக்குச் சுற்றுலாச் செல்லல், ஓய்வாக சாய்வு நாற்காலியில் இருந்து கொண்டு அரசியல் மற்றும் பிரபலமான அல்லது சாதாரண மக்களைப் பற்றிக் கதைகள் பேசுவது – இவைகள் அனைத்தும் இந்தியாவில் வாழும் சாதாரணமக்கள் – ஏன், உலகத்தில் எந்த மூலையில் வாழும் மக்கள் - மேற்கொள்ளும் வேலையில்லாப் பொழுது போக்குபவர்கள் பேசும் முக்கிய தலைப்பாக இருக்கும் என்பதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்துக்கள் இருக்குமா? இருக்காது என்று தான் நான் நினைக்கிறேன். நீங்கள் எந்த சுற்றுலாக்களை ஏற்பாடு செய்பவர்களைக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் என் கருத்தை உறுதி செய்வார்கள். நமது உள்ளூர் சுற்றுலாத் தொழில் வளர்வது இதனால் தான். எந்த ஒரு விவாதத்திலும் – அது தற்செயலான சந்திப்பாக இருந்தாலும் அல்லது ஏற்பாடு செய்த ஒன்றாக இருப்பினும் – அங்கு அரசியல்தான் மிகவும் அதிகமாகப் பேசப்படும் தலைப்பாக இருக்கும். அத்துடன் தினசரிப் பத்திரிகையின் இணைப்பு மற்றும் பொதுவான சஞ்சீகைகள் ஆகியவைகளின் பிரசுரங்களைப் மேலோட்டமாகப் பார்த்தாலே வியாபார நோக்கிலே மக்களுக்குப் பிடித்த கதைகளே அவைகளின் இடம்பெற்றிருப்பதை அறியலாம். 

சமூக அறிவியல் பாடத்தின் குறைந்த பட்ச அளவில் அதன் தன்மையை நாம் தெரிய முனைந்தால், அது மக்கள், வாழும் இடங்கள், நிறுவனங்கள் ஆகியவைகளைப் பற்றிய கதைகளாகவே இருப்பதைப் பார்க்கலாம். நம்மைச் சுற்றி உள்ள மக்களும் கதைகளில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பதை நாம் காண்கிறோம். அவைகள் டி.வி., சினிமாப்படங்கள் அல்லது தினசரிப் பத்திரிகைகள் ஆகியவைகளிலும் பிரதிபலிக்கின்றன. இருப்பினும், மக்களின் பள்ளி நாட்களில் சமூகப் அறிவியல் பாடங்களில் அவர்கள் எந்த அளவு  ஆர்வத்தைக் காட்டினார்கள் என்ற ஒரு மதிப்பீடு சாதாரண மக்களிடம் எடுத்ததில், அந்தப் பாடங்கள் மிகவும் சலிப்பூட்டுவதாக இருந்து, அந்தப் பாடங்களில் அவர்கள் ஆர்வமில்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏனென்றால், வாழ்விற்குப் பயன்படும் எந்தவிதமான மதிப்பும் அந்தப் பாடங்களிலிருந்து பெறமுடியாததை அவர்கள் கண்டார்கள். ஆனால், சமூக அறிவியல் பாடங்களோ, வாழும் இனத்தைப் பற்றியவைகளாக இருப்பதாகச் சொல்லப்படும் தருணமிது! கடந்த கால நிகழ்வுகளை அறிவதற்கும், அவைகளைப் புரிந்துகொள்வதற்கும், தற்போது நாம் எந்த நிலைக்கு வந்து இருக்கிறோம் என்பதைக் கற்றுக் கொள்வதற்கும் பள்ளியில் உள்ள சமூக அறிவியல் பாடங்கள் தொடர்பு கொள்ள வைக்கின்றன. மேலும், நம்மை ஆட்சிசெய்யும் நிறுவனங்களைப்பற்றிப் படிப்பதன் மூலம் அவைகள் தற்போதுள்ள நிலையுடன் நம்மைத் தொடர்புபடுத்துகிறது. நம்மைச் சார்ந்துள்ள பரந்த சமூக வாழ் மக்களின் சூழ்நிலையை அறிந்து கொள்வதற்குத் தேவையான கடந்த கால-நிகழ்கால விவரங்களை அவைகள் தொகுத்தளிக்கின்றன. இன்னும் சிறப்பான ஒரு உலகத்தை உருவாக்க நாம் கற்பனை செய்ய சமூக அறிவியல் நமக்கு உதவி செய்கிறது. ‘நமது நகரத்தினை எவ்வகைகளில் சிறப்பாக வைத்திருக்க முடியும், நமது வாழ்க்கைத் தரத்தை எப்படி உயர்த்துவது, குற்றங்களைக் குறைப்பது எப்படி, வேற்றுமைகளை எப்படிக் களைவது, நேர்மையான ஆட்சியை எப்படி அளிப்பது, உற்பத்தியை எப்படி அதிகரிப்பது’ ஆகிய மனித மேம்பாட்டிற்குச் சம்பந்தமான அவசியமான கேள்விகளின் அடிப்படையில் தான் சமூக அறிவியல் பாடங்கள் அமைகின்றன.

இது இவ்வாறு இருக்கும் பொழுது, இத்தகைய தலைப்புகள் எல்லாம் ஒன்றாக பாடங்களாகத் தொகுத்து அளிக்கும் பொழுது, அவைகள் ஏன் பயனற்றவைகளாகவும், சுவாரஸ்யமற்றவைகளாகவும் போய்விடுகின்றன? இதற்குக் காரணம், இந்தத் தலைப்புகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்தும் விவரங்களின் குறைபாட்டினால் இருக்குமோ? அல்லது ஒரு பள்ளிக்கூடச் சூழலில் சமூக அறிவியலை ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையின் காரணமாக இருக்குமோ? இதற்கு பதில் இந்த இரண்டு கேள்விகளிலுமே உள்ளது. ஆனாலும், இரண்டாவது கேள்வி மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால், ஒரு பாடம் வெறுக்கப்படும் அளவில் இருக்குமானால், அது ஆசிரியர் கற்பிக்கும் முறையில் தான் இருக்கும். மிகவும் தரமாக உருவாக்கப்பட்ட பாடப்புத்தகம் கூட ஒரு ஆசிரியர் பள்ளியில் பயன்படுத்தும் விதத்தில், ஆர்வமுள்ள மாணவர்களையும் தூங்கச் செய்துவிடும். தரமுள்ள பாடப் புத்தகங்களால் ஏற்படும் சிறந்த நன்மை என்னவென்றால் மாணவர்கள் ஆசிரியர்களின் தயவு இன்றியே அத்தகைய பாடப்புத்தகங்களால் பயன் அடையமுடியும். ஆனால், ஆசிரியர் இந்த நன்மை ஏற்படாமல் தடுக்க முடியும். நமது பள்ளிக் கூடங்களில் இந்த நிலையைத் தான் நாம் காண்கிறோம்.

பள்ளிகளில் சமூக அறிவியல் பாடங்களை அறிந்து கொள்வதற்கு உதவும் பலவகையான வழிமுறைகள் இருக்கின்றன. இருப்பினும், தற்போதைய நிலையில், இந்தியாவின் பல பள்ளிகளில், மனப்பாடம் செய்வதுதான் வலுயுறுத்தப்படுகிறது. ஆசிரியர் பேசி/உரையாடும் போது, மாணவர்கள் குறிப்புகளைப் புரிதலின்றி எழுதிக்கொண்டு, பிறகு அவைகளை மனப்பாடம் செய்து, பரிட்சையில் தேறுவதற்காக அப்படியே கக்குவதுபோல் எழுதுவது என்ற முறையில் தான் கற்பித்தல் இருக்கிறது. ஆசிரியர் சொன்னதைப் போல் எழுதும் பதில்கள்தான் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றன. ‘வானவில்லின் வர்ணத்தைப்போல் அதிக மதிப்பெண்கள் பெற்றவன்’ என்ற அடைமொழி, ஆசிரியரின் மொழியை அப்படியே நிறம்மாறாமல் எழுதியதைத் தான் இது குறிக்கும். இதை மாற்றும் நெம்புகோல் ஆசிரியரின் கையில் தான் உள்ளது என்றாலும், சமூகமும் இந்தத் தவறுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். ஏனென்றால், சமூக அறிவியலுக்கு, சமூகத்தில் இரண்டாம் இடத்து மரியாதைதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

பள்ளிகளில் சமூக அறிவியல் பாடங்களை அறிந்து கொள்வதற்கு உதவும் பலவகையான வழிமுறைகள் இருக்கின்றன. இருப்பினும், தற்போதைய நிலையில், இந்தியாவின் பல பள்ளிகளில், மனப்பாடம் செய்வதுதான் வலுயுறுத்தப்படுகிறது.

 

ஒரு மாணவன் சமூக அறிவியல் பாடத்துடன் தொடர்புடைய ஒரு பாடத்தைப் படிப்பதற்குத் தேர்வு செய்தால் – குறிப்பாக மனிதக் கலாசாரம் மற்றும் கருத்துக்கள் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்ட மனித இயல் பாடங்களான சரித்திரம், இலக்கியம், தத்துவம் ஆகியவைகளைப் படிப்பதற்குத் தேர்வு செய்தால் – இயற்கை அறிவியல் பாடங்களைத் தேர்வு செய்த மாணவர்களைப் போல் சிறந்த விழிப்புள்ளவராக இல்லை என்ற பட்டம் இந்த மாணவருக்குக் கட்டப்படும். இந்த மாதிரியான பட்டம் கொடுப்பது, அந்த மாணவரின் குடும்பத்தில் முதலில் ஆரம்பித்து விடுகிறது. இதற்கு மூல காரணம், நவீன இந்திய சமூகத்தில் என்ஜினியர்கள், டாக்டர்கள் ஆகியவர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பே ஆகும். இங்கு மேலும் ஒன்றைச் சேர்க்க வேண்டும். அதாவது, இயற்கை அறிவியல் பாடத்தைத் தேர்வு செய்தும் அதில் படிக்க விருப்பமில்லாதவராக இருந்து, பொறியியல் அல்லது மருத்துவத்தில் சேருவதற்கு விருப்பமுள்ளவராக இருக்கும் இவரையும் சமூக அறிவியல் பாடங்களைப் படிப்பவர்களைப் பார்க்க உபயோகிக்கும் அதே கோணத்தில் நிறுத்திப் பார்க்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இது இரண்டு பாடங்களைப் பற்றி சமூகம் எந்த அளவு தவறாக மதிப்பீடு செய்கிறது என்ற கருத்தையே எடுத்துக் காட்டுகிறது. ஆகையால், சமூகம் கொண்டுள்ள கருத்து, இயற்கை இயல்கள் பாடங்களைத் தேர்வு செய்ய முடியாதவர்களே சமூக அறிவியல்களைத் தேர்வு செய்யும் மாணவர்கள் என்பதாகும். NCF 2005 - (National Curriculum Framework) – என்பதில் இந்தக் கருத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் பள்ளியின் ஆரம்ப நிலைகளிலிருந்தே, மாணவர்களுக்கு ‘இயற்கை அறிவியல் பாடங்கள் சமூக அறிவியல் பாடங்களை விட மேலானது; அத்துடன், அவைகள் மிகவும் நன்கு படிக்கும் மாணவர்கள் விரும்பிச் சேரும் பாடப்பகுதியாகும்’ என்று இப்படியாகச் சொல்வதின் மூலம், ஆசிரியர்களும் மாணவர்களும் சமூகப்பாடத்தினைப் படிப்பதிலும், கற்பிப்பதிலும் ஆர்வம் குன்றி சமூக அறிவியல் வகுப்பின் பெருமை அதலபாதாலத்தில் செல்லும் அளவிற்குப் போய்விடுகிறது.

இந்தியாவில், சமூக அறிவியல் பாடம் படிப்பது, ஆண்களைக் காட்டிலும் பெண்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது. சமூகப் பாடம் என்பது அவசியமற்ற ஒன்று என்று கருதுவதும், சமூகத்தின் நிர்பந்தத்தால் பெற்றோர்களிடம் காணப்படும் ஆண்-பெண் பாகுபாடுகளாலும் இந்த நிலை இருக்கிறது. சமூக அறிவியல் பாடத்தை எந்த அளவிற்கு சமூகம் குறைத்து மதிப்பிடுகிறது என்பதை நிரூபிப்பதுடன், பெண் இனங்களை சமூக அறிவியல் எந்த அளவு தாழ்வாகப் பார்க்கும் அளவில் சமூகம் எப்படிச் செயல்படுகிறது என்பதும் தெரியவருகிறது. சமூக அறிவியல் பாடங்களைப் படிப்பது முக்கியமில்லா, விலைபோகாத உபயோகம் இல்லாத துறை என்பதால் அதற்குக் கட்டும் பணமும் கணிக்கப்பட்டு, ஆணாதிக்கச் சமூகமாக இருக்கும் நமது சமூகம் பெண்கள் பலன்தரும் பாடங்களைப் படிக்க வேண்டிய அவசியமில்லை என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறது. இந்தத் தவறான நம்பிக்கையினால், ‘ஒடுக்கப்பட்ட’ நிலையுடன் ‘உதவாக்கரை’ என்ற பட்டத்தையும் தாங்கிப் பெண்கள் ஒரு சமூகத்தில் வலம்வர வேண்டியதாகிறது. 

இந்தியாவில், சமூக அறிவியல் பாடம் படிப்பது, ஆண்களைக் காட்டிலும் பெண்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது. சமூக அறிவியல் பாடம் என்பது அவசியமற்ற ஒன்று என்று கருதுவதும், சமூகத்தின் நிர்பந்தத்தால் பெற்றோர்களிடம் காணப்படும் ஆண்-பெண் பாகுபாடுகளாலும் இந்த நிலை இருக்கிறது.

 

சமூக அறிவியல் பாடத்திற்குத் தகுந்த தரத்தை அளிப்பதற்கு, எங்கிருந்து நேர்செய்யும் செயலைத் தொடங்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இந்தத் தவறைத் திருத்திச் சரிசெய்தல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனென்றால், மேலும் மனித வளர்ச்சி நடைபெறுவதற்கு, நாம் நமது சமூகத்தை நன்கு தெரிந்திருக்க வேண்டும். சமூகத்தின் அனைத்து நிலைகளைப் பற்றியும் அறிந்து கொள்ளும் பாடம் தான் சமூக அறிவியலாகும். சமூக அறிவியல் பாடம் மற்ற எல்லா பாடங்களிலிருந்தும் கருத்துக்களைப் பெற்று, மனித இன அனுபவங்களிலிருந்து முக்கிய நோக்கம் தொடர்ந்து வளர்ந்து, அதன் மூலம் மனித இனத்தின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும் விதமாக உருவாகிறது. சமூக அறிவியல் பாடத்தை நேர்செய்யும் வழிகளுக்கு, பள்ளிக் கூடங்களில் சமூக அறிவியல் பாடங்கள் கற்பிக்கப்படும் முறையில் – அதுவும் வாழ்க்கைக்கு அந்தப் பாடத்தின் பயனை மாணவர்கள் புரிந்து கொண்ட நிலையில் – மாற்றங்கள் நிகழ்ந்தால் ஒழிய, சமூகம் கொண்டுள்ள கருத்தினை ஒருவராலும் சமாளிக்க முடியாது என்பது திண்ணம். ஆகையால், சமூகக் கண்ணோட்டத்தை மாற்றும் செயல் சமூக அறிவியல் பாடத்தில் தான் இருக்கிறது. அது சாத்தியமாகுமா? என்ற கேள்விக்குப் பதில், கடந்த கால வரலாற்றுச் சுவடுகள் நமக்கு நன்கு விளக்கம் அளிக்கும்.

19-ம் நூற்றாண்டில் தான், சமூக அறிவியல் பாடம் ஒரு சரியான உருவத்தைப் பெற ஆரம்பித்தது. 20-ம் நூற்றாண்டில், பலவிதமான பாடங்களான பொருளாதாரம், சமூகவியல், அரசியல் அறிவியல், சரித்திரம், புவியியல், உளவியல், மனித இன இயல் ஆகியவைகள் இடம் பெற்றன. சமூகப் பாடம் – அதாவது சமூக அறிவியல் பாடம் என்பது காந்திஜியின் அடிப்படைக் கல்வித் திட்டத்தின் மூலமாகத் தான் கடந்த ஒரு நூற்றாண்டிற்கும் குறைவான காலத்தில் அரசாங்கத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட பாடத்திட்டமாக உருவாகியது. ஆகையால், மற்ற பாடங்களைக் காட்டிலும் இந்த சமூக அறிவியல் வளர்ச்சி அடையாத மிகவும் இளமைப் பருவ நிலையில் உள்ளதால், சமூகத்தின் தன்மையும் முதிர்ச்சி அடையாத நிலை உருவாக வழி வகுத்தது. நவீன இந்தியாவின் பள்ளிகளில் சமூக அறிவியல் பாடங்கள் பொதுவான கல்வித் திட்டத்தின் கீழ் காந்திஜியின் அடிப்படை கல்வித் திட்டம் அமுலாக்கப்பட்ட பிறகு, அகில இந்தியா முழுவதும் இந்த சமூக அறிவியல் பாடத்திற்கு மேல் நிலைக் கல்விக் கழகத்தால் அரசாங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டது.  1953 ஆம் ஆண்டு முதலியார் குழு அறிக்கையில், உலக குடியுரிமையைப் பற்றிய தற்போதைய கருத்தை ஒட்டி தகுந்த நடவடிக்கை எடுக்கச் சொல்லப்பட்டது. ஆனால், 50 வருடங்கள் கழிந்த இன்றைய நிலையிலும், சமூக அறிவியல் பாடங்கள் வெறும் தேதிகள், சில நிகழ்வுகள் மற்றும் பிரபலமான நபர்கள், இடங்கள், நிறுவனங்கள் ஆகியவைகளை ஞாபகம் வைத்துக் கொள்வதோடு நின்று விடுகின்றன. NCERT - (National Council of Educational Research and Training) - உருவாக்கப்பட்ட உடனேயே, சமூக அறிவியல் பாடம் கற்பிப்பதன் குறிக்கோள்களை அது அறிவித்தது. பொதுவான, எழுச்சியற்ற வாசகங்களான ‘ஒரு சிறந்த குடிமகனை உருவாக்குதல்’, என்பதையும் தாண்டி, ‘மனத்தைத் தூண்டிச் சிந்திக்க வைத்தல்’, ‘கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் திறமைகளை வளர்த்தல்’ – ஆகிய மிக முக்கியமான ஆதாரக் கொள்கைகளும் அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தன. இருப்பினும், இந்தக் குறிக்கோளை அடைவதில் மிகவும் பின் தங்கி இருப்பதற்கான பல ஆதாரங்கள் நம்மைச் சுற்றிக் காணப்படுகின்றன. நமது பெரிய சமூகத்தை மட்டுமல்லாது, நமது பள்ளிகளைப் பார்த்தாலும் இது விளங்கும். 1964- ஆம் ஆண்டு, கோத்தாரி குழுவின் அறிக்கையில், சமூக அறிவியல் பாடத்தைக் கற்பிப்பதின் குறிக்கோள்களில் ஒன்றாக குறிப்பிட்டது இது தான்: “மாணவர்கள் சில பண்புகளையும், நல்ல மனப்பான்மைகளையும் பெற்று, சுற்றுச் சூழல் மற்றும் மனித உறவுகளை அறிந்து கொள்ளும் திறனைப் பெறுவது மட்டுமில்லாது உலக விவகாரங்களில் தீவிரமாகப் பங்குகொண்டு திகழவேண்டும்.”

மீண்டும், 2005- ஆம் ஆண்டில் சமூக அறிவியலின் உண்மை நிலை அறிக்கையில், NCF அறிவித்தது இது தான்: ‘சமூக அறிவியல் பாடங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் நிலைநாட்டுவது அவசியமாகிறது. அதற்கு, சேவை மையங்களின் அதீத வளர்ச்சியில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் நிலையை மிக முக்கியமான ஒன்றாகச் சுட்டிக் காட்டுவதுடன், ஒரு ஆராயும் மற்றும் உருவாக்கும் மனநிலைக்கு அவசியமான அடித்தளத்தை அமைப்பதன் தவிர்க்க முடியாத செய்கைகளையும் வலியுறுத்த வேண்டும்.’

நவீன இந்தியாவில் கல்வியைப் பொருத்த அளவில் சமூக அறிவியல் முக்கிய இடத்தைப் பெற்ற காலத்திலிருந்து, எல்லாக் குழுக்களும் ஒரே குரலில் சரியான கருத்துக்களையே சொல்லி வந்திருக்கின்றனர். அதாவது, சமூக அறிவியல் இன்னும் அதற்குத் தகுந்த அந்தஸ்தைப் பெற வில்லை என்பது தான் பரந்த சமூதாய மக்களின் அபிப்பிராயமாக இருக்கிறது. சமூக அறிவியல் வாழ்வின் உபயோகத்திற்கு உதாவாத பாடம் என்பது தான் சமூகத்தின் பெரும்பாலாரின் கருத்தாகும். ஆகையால், உலக மயமாக்கலின் தன்மைக்குத் தகுந்த அளவில், அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளை உணர்ந்து செயல்படும்  பலவிதமான பயன்படுக்கக் கூடிய அவசியமான திறமைகளை அளிப்பதற்கு சமூக அறிவியல் அவசியம் என்பதை அனைவரும் புரியும்படி எடுத்துச் சொல்லும் அவசியம் வந்துவிட்டது.

நேர்செய்யும் வழி சமூக அறிவியல் பாடத்தின் பொருளடக்கத்தில் இருக்கிறது. அதன் முக்கிய சுமையும் சமூக அறிவியலின் மொத்த பாடத்திட்டத்தை நேர்செய்வதில் உள்ளது. ஆரம்பப் பள்ளி நிலையிலிருந்தே, நேர்செய்தல் ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. சமூக அறிவியல் என்பது தகவல்களை மட்டும் தெரிவிக்கும் பாடம் என்றும், வாழ்வின் உண்மை நிலையோடு எந்த சம்பந்தமும் இல்லாமல் இருக்கும் அவைகளைப் பள்ளிகளில் பாடங்களாகப் பயன்படுத்தப்பட்டு, மாணவர்கள் தேர்வுக்காக மனப்பாடம் செய்வதற்குத் தான் அவைகள் பயன்படுகின்றன என்பது பரவலான கருத்தாக இருக்கிறது. இந்த நிலையை நேர்செய்வதற்கு, சமூக அறிவியல் பாடத்திட்டங்கள், அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள்,  சமூக அறிவியல் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆகிய மூன்று நெம்புகோல்கள் தான் முக்கிய மாற்றங்கள் நிகழ வேண்டிய காரணிகளகாகக் காணப்படுகிறன. இந்த மூன்றில் இரண்டு காரணிகளில், National Curriculum Framework - 2005 என்பது ஒரு பெரிய காரியத்தில் – அதாவது சரியானதும் பொருத்தமானதுமான கல்வித் திட்டத்தையும், புதிய CBSE - (Central Board of Secondary Education) -  பாடத்திட்டத்தையும் (பாடப்புத்தகங்கள் உட்பட) – ஆகியவைகளை தேர்வு செய்யும் பணியில் இறங்கியது. இதனால் ஒரு பெரிய மாற்றம் உண்மையிலேயே நிகழ்ந்ததுடன், இவைகளைத் திறம்படப் பயன்படுத்துவதன் மூலம், மூன்றாவது முக்கிய நெம்புகோலாக உள்ள ஆசிரியரும் தகுந்தபடி செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகியது..

மூன்றாவது நிலையில் உள்ள நெம்புகோலான ஆசிரியரைத் தகுந்த அளவில் செயல்படுத்துவதற்கு - அதாவது ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு - சமூக அறிவியலின் தரத்தை உயர்த்துவதுவது  அவசியமானதாகிறது. மாணவர்களே சமூக அறிவியலை அறிந்து கொள்வதற்கு ஆசிரியர்கள் உதவி செய்யும்படிச் செய்து, வெறும் மேலெழுந்த வாரியான ‘உண்மைகளை’ விடுத்து, கருத்துக்களை அறிந்து கொள்வதை ஊக்கிவித்து, அவைகளை தற்போதைய தேர்வுகளுடன் இணைத்துக் கொள்ளச் செய்வது ஒரு முக்கிய சவாலாகும். இருப்பினும், தற்போதைய தேர்வு முறை இந்த மாதிரியான மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக இருப்பதாக ஆசிரியர்கள் கருத வேண்டியதில்லை. இந்த மாற்றத்தில், ஆசிரியர்களும் மாணவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு, அறிவை மேம்படுத்த முயலவேண்டும். ஏனென்றால், கருத்துத் தெளிவு பெற்றவுடன், தேர்வின் அமைப்பைப் பற்றிக் கவலைப் படவேண்டாம் என்ற புரிதல் வந்தவுடன், கற்பிப்பதில் பலவந்தப்படுதாத வழியைக் கடைப்பிடிக்க ஆரம்பிப்பார்கள்.

மாணவர்களையும் ஆர்வமாகப் பங்கு கொள்ளும் ஒரு சுமூகமான சூழ்நிலையில் அவர்களின் திறமைகள் மற்றும் அறிவினைப் பெற மாணவர்களுக்கு உதவும் வகையில் சமூக அறிவியல் பாடங்கள் தரம்பட மாற்றி அமைக்கப்படுவது மிகவும் முக்கியமான பணி என்பதைப் புரிந்து செயல்படுவது அவசியமாகிறது. கணிதம், பெளதிகம் ஆகிய பாடங்கள் கற்பிக்கும் முறையில் வலுவான சில அடிப்படையான குணங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவைகளைப் பற்றி இங்கே இடம் இல்லாத காரணங்களினால் விவாதிக்க முடியாது என்றாலும், மாணவர்களின் சமூக அறிவியல் பாடங்களைப் படிப்பதில் உள்ள ஆர்வத்தைச் சிதைப்பதான ஒரு வழியையே ஆசியர் கள் கற்பிப்பதில் பயன்படுத்துகிறார்கள். அதில் மாணவ-ஆசிரியரின் பங்கேற்கும் முறையில் கற்பித்தல் என்ற மிக முக்கியமான தெளிவான பார்வையினைச் செயல்படுத்தாத நிலைதான் காணப்படுகிறது. சமூக அறிவியலில் உள்ள ஒரு முக்கியமான அம்சம், பலவகையான பதில்களை  – சில சமயங்களில் எதிரும் புதுருமான மாறுபட்ட பதில்களை - எதிர்கொள்ளும் நிலை உண்டாகிறது. ஆகையால், இயற்கை அறிவியல் ஆசிரியரைவிட, ஒரு சமூக அறிவியலைக் கற்பிக்கும் ஆசிரியர் தான் பழைய மேடையில் வழிவழியாகச் சொல்லப்பட்ட மரபான கருத்துக்களிலிருந்து வேறுபட வேண்டிய நிலை காணப்படுகிறது. தகவல்களை அளித்து கற்பிக்கும் முறையை  மாற்றி, விவாதம் மற்றும் உரையாடல் மூலம் ஆசிரியர் மற்றும் மாணாக்கர்கள் இருவரும் ஒரு உயிரோட்டமுள்ள சூழ்நிலைகளை பள்ளியில் உருவாக்க முனைகிறார்கள். ‘ஆசிரியர்களிடமும், குழந்தைகளிடமும் படைப்பு மற்றும் சோதிக்கும் திறன்களை உயர்த்தும் அளவில் கற்கும் வழிகள் அமைவது மிகவும் அவசியமானது ஒன்றாகும்’ என்று NCF 2005 அறிக்கையில் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ‘ஆராயும் மனப்பக்குவம்’ சமூக அறிவியல் பாடத்தில் உயிரோட்டத்தை உண்டாக்குவதற்கு அடிப்படையான ஒன்றாகும். மாணவர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உண்டாவதற்கு, ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும். அப்பொழுதுதான், பல வேறுபட்ட கோணங்களில் பார்ப்பதால் உண்டாகும் பலவிதமான மாறுபட்ட கருத்துக்களை அறிந்து கொள்வதற்கு அந்த மாறுபட்ட அபிப்பிராயங்களை காது கொடுத்துக் கேட்பார்கள். இந்த அபிப்பிராய மாறுபாடுகள் மாணவர்களிடம் உண்டாவதற்கு, மாணவர்கள் வாழும் அவர்களின் உள்ளூர் மக்களின் மாற்றுக் கருத்துக்கள் தான் காரணம். 

ஆகையால், இயற்கை அறிவியல் ஆசிரியரைவிட, ஒரு சமூக அறிவியலைக் கற்பிக்கும் ஆசிரியர் தான் பழைய மேடையில் வழிவழியாகச் சொல்லப்பட்ட மரபான கருத்துக்களிலிருந்து வேறுபட வேண்டிய நிலை காணப்படுகிறது. தகவல்களை அளித்து கற்பிக்கும் முறையிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்தி, விவாதம் மற்றும் உரையாடல் மூலம் ஆசிரியர் மற்றும் மாணாக்கர்கள் இருவரும் ஒரு உயிரோட்டமுள்ள சூழ்நிலைகளை உருவாக்க முனைகிறார்கள்.

 

மாணவர்கள் அறிவு ஜீவிகளாக உருவாகும் அவர்களின் வளரச்சிப் பயணத்தில் பங்குகொள்ளும் வகையில் சமூக அறிவியல் பாடத்தின் மட்டத்தை உயர்த்தும் சக்தி சமூக அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களின் கைகளில்தான் இருக்கிறது. இந்தக் குறிக்கோளை அடைவதற்கு, சமூக அறிவியல் ஆசிரியர், பலவிதமான மாறுபட்ட கட்டளைகளின் உட்பொருட்களைப் படித்து, ஆராய்ந்து, ஒரு அவசியமான ஒருங்கிணைப்பான கருத்தினை முடிவாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு ஆசிரியரிடம் பலவற்றை எதிர்ப்பார்ப்பது போல், சமூக அறிவியல் ஆசிரியரும், பலவிதமான கொள்கைத் தத்துவங்களை அறிந்து கொண்டிருக்கும் ஒரு தத்துவ மேதையைப் போன்ற பாகத்தைத் திறம்பட நிர்வகித்துச் செயல்படவேண்டும். இது நிகழ வேண்டு மென்றால், ஆசிரியர் பயிற்சிகளின் மூலமாக ஆசிரியர்களுக்கு அவசியமான தகுந்த பயிற்சிகளில் அடிப்படையான பல மாற்றங்களை உண்டாக்குவது அவசியமாகிறது. உதாரணமாக கல்வி கற்பிக்கும் தத்துவம் என்பது வாழ்க்கையில் பயன்படும் அளவில் இருக்க வேண்டும். ஆகையால், அந்தத் தத்துவத்தைச் செயல படுத்துவதை முக்கிய இலக்காக்குவது அவசியமாகிறது. 

பலவிதமான வழி முறைகளை ஒன்றிணைத்துக் கொண்டு, அவைகளை சமூக அறிவியல் ஆசிரியர் பயன்படுத்துவது அவசியமாகிறது. அதாவது, கற்பிப்பதற்கு வழிவகிக்கும் செயல் பயிற்சி முறையை முன்னிறுத்தித் செய்யப்படும் ஒரு திட்டப்பயிற்சி, பலவிதமான கல்விப் பாடங்களைக் கொண்ட பிரச்சனைகளுக்கு பதில்காணும் ஒரு திட்டப் பயிற்சி ஆகியவைகளின் மூலம் விடைகாணப் பயன்படுத்துவது போல் பல இதில் அடங்கும். அன்றாட நிஜ வாழ்க்கையில் நிகழ்பவைகளுக்கு ஏதுவானவைகளை ஒட்டி மாணவர்களின் திறமைகளை வளம்பட அவைகள் வழிகாட்டும் படி இருக்க வேண்டும். ‘மனித இனங்களின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை ஆலன் ஜானிக் (Allan Janik) என்பவர் வெளியிட்டுள்ளார். அவர் அதில், 40 வயது நிரம்பிய ஒரு கட்டிடக் கலைஞர் அல்லது என்ஜினியர் திடீரென்று ஒரு நிர்வாகியாக பதவி உயர்வு பெற்றால், அவர் அந்த மேனேஜர் பதவிக்கு தன்னைத் தயார் செய்யாமல் இருப்பின், அந்த உயர்வே அவருக்கு ஒரு ஆழமான மன உலைச்சல் கொடுக்கும் பிரச்சனைகளின் ஊற்றாக உருவாகிவிடும் என்று கூறுகிறார். அந்தப் பதவியினால் உண்டாகும் பலவித சச்சரவுகளைச் சந்தித்து, அந்தப் பிரச்சினைகளுக்கு விடைகாணும் திறனை சமூக அறிவியல் பாடத்தைக் கற்றறிந்ததின் மூலம் பெறுகிறார் என்று மேலும் அதில் சொல்கிறார். மேலே குறிப்பிட்டுள்ள சம்பவத்தில், அதிகமான பொறியியல் திறமை அவசியமற்றது என்று அந்த அறிக்கையில் ஆசிரியர் மேலும் விவாதத்தைத் தொடர்ந்து சொல்கிறார். ஏனென்றால், உண்மையிலே கட்டிட வல்லுனர்/ என்ஜினியர் – இவர்களின் திறமைகளால் தான் அவர்களுக்கு ‘அபாயகரமான’ பதவி உயர்வு கிடைத்தது என்பதும், ஆனால் சமூக அறிவியல் பாடத்தால் கிடைக்கும் திறமை மட்டுமே முழுமையாக அவர்களுக்கு நேரிடையாக உதவக்கூடும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்த ஆசிரியர் சமூக அறிவியல் பாடங்கள் படிப்பதின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இப்படிச் சொல்கிறார்: ‘ கலைப்பாடங்கள் என்பது சமூக அறிவியலின் ஒரு அங்கமாகும். கலைப்பாடங்களைப் பற்றி அறிவதற்கு, சமூகத்தைப் பற்றி அறிவது அவசியமாவதுடன், அது வாழ்நாள் பூராவும் தொடர்ந்து செய்ய வேண்டிய முக்கிய அறிவியல் தேடலாகும்.’

‘இந்த வாழ் நாள் பூராவும் கற்கும் அறிவுத் தேடலில் நாம் நமக்குள்ளேயே மாற்றங்களை மும்முரமாகச் செய்து கொள்ள வெறும் பொறியியல் அறிவு எந்தவிதத்திலும் பயன் தராது’ என்று அவர் மேலும் விவரிக்கிறார். அந்த அவரது அறிக்கையில் மேலும் விளக்கமாகச் சொல்லப்பட்டிருப்பது இதுதான்: ‘2008 ஆண்டு நிகழ்ந்த நிதி நிலை நெருக்கடியினால், நம்மைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும் முன்பு கொண்டிருந்த ஊகங்களை எல்லாம் ஒரே அடியாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகியது. நமது மனங்கள், நமது வாழ்வு முறைகள், நமது நிறுவனங்கள் ஆகியவைகளும் நாம் எதிர்பார்க்காத அளவில் தாக்குதலுக்கு உள்ளாகின. இருப்பினும், துயரமான நிலைக்குத் தள்ளிவிட்ட நிலையை நன்கு புரிந்து கொண்டதால் இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, இந்த எதிர்பார்க்காத கஷ்டமான நேரத்தில் வெற்றிகரமாக மாற்றமடைவதற்கு முக்கிய காரணமாக அவைகள் இருந்தன.’

அந்தக் காரணத்தால், அந்த ஆசிரியர் மீண்டும் விவாதிக்கிறார்: ‘மனித வாழ்வு, செயல்கள் ஆகியவைகளைப் பற்றிய தெளிவான பார்வைகளைப் பெறுவதற்குக் கலைப் பாடங்கள் மிகவும் அவசியமாகின்றன. இக்கட்டான காலகட்டத்திலும், சமூகம் – அதாவது முக்கியமாக அரசியல் வாதிகள், கொள்கைகளை உருவாக்குபவர்கள் – இந்தக் கலைப்பாடங்களின் அவசியத்தை முக்கியமாக இந்தியாவின் இப்போதைய நிலையை நாம் பார்க்கும் போது அலட்சியம் செய்ய முடியாது.’ 

மேலும், சமூக அறிவியல் பாடமும் வெற்றிகரமான வேலை வாய்ப்பைத் தேடித்தரும் என்ற நிலைக்கான ஒரு உரிய இடத்தை அந்தப் பாடம் பெறுவதும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நமது தேசத்தில் உள்ள சில நகரத்தில் சமூக அறிவியலைப் பற்றிய கருத்து மாற்றமடைந்திருந்தாலும், சமூக அறிவியல் பாடங்களுக்கு வேலை வாய்ப்புகள் தகுந்த அளவில் அதிகமாக இல்லை என்பதுதான் பலர் கொண்டுள்ள கருத்தாகும். ஆகையால், தற்போது சமூக அறிவியலின் அவசியம் பற்றி இந்த பரந்த சமூகத்தில் உறுதிசெய்ய வேண்டியது முக்கியமாக இருக்கிறது. 

முடிவாக ஒன்றை சர்வ நிச்சயமாகச் சொல்லுவதென்றால், சமூக அறிவியலின் அவசியம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது என்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது. அறிவியல் பொருளாதாரம் மற்றும் சமூகத்துடனும், தற்போது எழுந்த புதிய விழிப்பான – அறிவியல் அடிப்படையில் ஆய்வுத் தகவல் மூலம் அரசியல் கொள்கை – Evidence-based-politics - என்றதுடனும் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டு சமூக அறிவியல் இருக்கிறது. சமூக அறிவியல் பாடங்கள் எவ்வாறு சமூகத்தை நிர்வகிக்க உதவ முடியும் என்பதை அரசாங்கள் உணர ஆரம்பித்து விட்டன. அத்துடன், தற்போது எதிர்கொண்டுள்ள குறிப்பிட்ட பிரச்சினைகளை எதிர்க்கொண்டு தீர்வுகாண, சமூக அறிவியல்களைச் சார்ந்திருக்கும் நிலை அதிகரித்துள்ளது. உதாரணமாக, வேலையில்லாத் திண்டாட்டம், நகரக் கலவரங்கள் ஆகிய போன்ற பல பிரச்சினைகளைத் தீர்க்கும் விதமான அரசாங்கத் திட்டங்களை உருவாக்குவதில் நவீன அரசாங்கங்கள் செயல் படுத்தும் ஆய்வுக் கூடங்களும், அந்த ஆய்வு அறிக்கைகளின் முடிவுகளும் முக்கிய அங்கம் வகிக்கின்றன.

‘சமூக அறிவியல்களின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் 10 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜீன்-எரிக் ஆபெர்ட் (Jean-Eric Aubert) என்ற அறிவியல், தொழில் நுட்பம், தொழில்துறை என்பதற்கான பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சி நிர்வாகக் கழகம் (Directorate for Science, Technology and Industry of the Organization for Economic Cooperation  and Development)  தலைவர் கணித்துச் சொன்னது வருமாறு: ‘தகவல் பரிமாற்றம் பரவலாக இருக்கும் இந்த யுகத்திலும், பகிர்ந்து கொள்ளும் பொருளாதாரத் தத்துவ உலகத்திலும் (dematerialized economy of the knowledge world), தன்னைக் காத்துக்கொள்ளுவதற்கு மட்டும், ஒரு தவிர்க்க முடியாத அவசியத்தை சமூகம் அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறது. இதனால், சமூக அறிவியல் பாடங்களின் தேவைகள் மிகவும் அதிக அளவில் தேவைப்படும் நிலை உருவாகும்.’

இன்று, இந்தியாவைப் பொருத்த அளவில், இதுவரைக்கும் சமூக அறிவியல் எந்த நிலையில் வைக்கப்பட்டிருந்ததோ அதைவிட மிகவும் அதிகமான உயரத்தில் சமூக அறிவியல் உயர்ந்து நிமிர்ந்து நிற்பதைத் தெளிவாக நாம் காண முடிகிறது. இந்த மாற்றங்கள் நகரங்களில் முன்பிருந்தே நன்கு கண்களுக்குத் தெரிகிறது. அத்துடன், சமூக அறிவியலின் அவசியம் பற்றிய பொதுவான தவறான அபிப்பிராயங்களும் மாற்றமடைந்துள்ளன. இதன் காரணமாக, சமூக அறிவியல் பாடங்களுக்கான தேவையும் விரும்பும் மாணவர்களிடம் அதிகரித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், தற்போதைய நிலையில், ஒருவர் விரும்பும் முறையில் இந்தியாவில் ஒரு சில இடங்களில் தான் சமூக அறிவியல் பாடங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஆனால், இதிலும் கூடிய சீக்கிரத்தில், மாற்றங்கள் வரலாம் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.  முன் எச்சரிக்கை என்னவென்றால், இங்கு குறிப்பிட்டுள்ள அவசியாமான மாற்றங்களைக் கொண்டுவருவதில் நம் கவனத்தை இழக்கக் கூடாது.

பார்வை நூல்:

1. Philosophy Perspectives in Teaching social studies. Dr. Marlow Ediger, Professor of Education, Truman State University Campus. Journal of Instructional Psychology

2. Ediger, M. & Rao, D.B. (2000) Teaching social studies successfully. New Delhi, India: Discovery Publishing House

3. Teaching of social studies in India By P. K. Khasnavis

4. Position paper, National Focus Group on Teaching of Social sciences, National Curriculum Framework 2005

5. Into the future with social sciences - Increasing violence, ageing, ethnic strife and global warming – these problems present the often misunderstood social sciences with a chance to prove their worth. But should they change fi rst? By Jean-Eric Aubert Directorate for Science, Technology and Industry OECD

6. Papers from ‘The Future of the Social Sciences and Humanities’

a) A Future for the Humanities? By Allan Janik, The Brenner Archives

b) The political role of the Humanities by Martin Peterson, University of Gothenburg

ரிஷிகேஷ் என்பவர் அஸிம் பிரேம்ஜி பவுண்டேஷனில் இப்பொழுது ஆய்வு மற்றும் ஆவணம் பணிகளின் குழுவில் இருக்கிறார். சமூக அறிவியலில் ஜவஹர்லால் நேரு சர்வகலாசாலையில் முதுகலைப் பட்டம் பெறுவதில் தீராத ஆர்வம் அவரை உந்தி வெற்றிபெறச் செய்தது. கல்வியில் ஆய்வாளராகச் சேருவதற்கு முன்பு, அவர் வரலாற்று ஆய்வுப் பட்டறைகளை நடத்தி உள்ளார். பவுண்டேஷன் தொடர்புடைய பல கல்வி மற்றும் கற்பிக்கு முறைகளுக்கான பாடங்களில் தன் திறமையைக் காட்டி உள்ளார்.

அவரைத் தொடர்பு கொள்ள உதவும் மின் அஞ்சல்:

rishikesh@azimpremjifoundation.org

 

19196 registered users
7451 resources