இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பார்வையில் வரலாற்று கல்வியில் உள்ள பிரச்சினைகள் - லிஸ் டாவேஸ் துரைசிங் - (Liz Dawes Duraisingh)

இந்தக் கட்டுரையில் இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் (யு.எஸ்.ஏ) வரலாற்று கல்வியில்  தொடர்கிற, வளர்ந்து வருகிற குறிப்பிட்ட சில பிரச்னைகள் பற்றி மேலோட்டமாகக் கூறியிருக்கிறேன்.

“இந்த இரண்டு நாடுகளிலும் வரலாறு கற்பிக்கும் முறை ஏன் மிகவும் வித்தியாசமாக உள்ளது?” என்பது குறித்தும் விளக்கிச் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.

பின்னணி

பரவலாக்கப்பட்ட அமெரிக்காவின் கல்வி முறையில் வரலாறு கற்பிப்பதற்கு ஒவ்வொரு மாநிலமும் அவர்களுக்கென்று தரநிலைகளையும், வழிமுறைகளையும் வரையறுத்திருக்கின்றன. எனினும், நாடு முழுவதுமுள்ள ஆசிரியர்கள் பெரிய பதிப்பக நிறுவனங்கள் தயாரித்த அதே பாடப்புத்தகங்களைப் பயன்படுத்தவே விரும்புகின்றனர்.

இறுதி ஆண்டில் வரலாறு விருப்பப் பாடமாக இருந்தாலும் வழக்கமாக உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் (14 - 18 வயதிலானவர்கள்) அமெரிக்க வரலாறு, உலக வரலாறு என இரண்டையும் படிக்க வேண்டும். ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் சமூகக் கல்வியியல் என்கிற பரந்துபட்ட பாடத்திற்குள் சரித்திரமும் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

இங்கிலாந்தில் தேசியப் பாடப்பிரிவு 1988 முதல் இருந்து வருகிறது. நான் இங்கு இங்கிலாந்தை மட்டும் தான் குறிப்பிடுகிறேன். ஏனென்றால் இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் வரலாற்றுக்கான பாடப்பிரிவுகள் வெவ்வேறானவை. இதற்கிடையில் ஸ்காட்லாந்து பாடத்திட்டம் முற்றிலும் வேறானது. ஆங்கிலேய மாணவர்கள் 14 வயது வரையிலும் படிப்பதெற்கென்று குறிப்பிடப்பட்ட வரலாற்று உள்ளடக்கம், கோட்பாடுகள் மற்றும் திறன் ஆகியவற்றைப் பின்பற்றுவதுடன் குறிப்பிட்ட தரநிலையையும் அடைய வேண்டும். 14 வயதிற்குப் பிறகு வரலாறு கட்டாயமில்லை. அதற்கு மேலும் தங்களுடைய படிப்பைத் தொடர விரும்பிகிறவர்கள் அரசாங்க வழிகாட்டுதலின் படி பலவிதமான தேர்வாணைகள் நிர்வகித்து வரும் ஜி.சி.எஸ்.இ., சிறப்பு வரலாறு பாடத்தொகுதிகளை  தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

யாருடைய வரலாறு? உள்ளடக்கம் மீதான சர்ச்சை

 

இத்தகைய அரசியல் சச்சரவுகளுக்கு இடையில், அமெரிக்க வரலாற்றுக் கல்வி எந்தவிதக் கலக்கமும் இன்றி தேசத்தின் பெருமையையும், உடமையையும் மாணவர்களிடையே ஊக்குவித்தது. உதாரணமாக, தனிப்பட்ட முறையில் அவர்களுடைய குடும்ப வரலாறு எப்படியிருப்பினும்,  அமெரிக்க மாணவர்கள் அமெரிக்க விடுதலைப் போர் பற்றி பேசும் போது “ நாங்கள் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெறத்தான் விரும்பினோம்” என்றுதான் கூறுவார்கள்.

 

உலகம் முழுவதும் பள்ளி பாடத்திட்டத்தில் வரலாறு மிகவும் வாதத்திற்குரிய பாடங்களில் ஒன்றாகும். ஏனென்றால் நாடு, இனம், மதம், அரசியல் அடையாளம் மற்றும் அதிகார பலம் ஆகியவைகள் சம்பந்தப்பட்ட கேள்விகளுடன் வரலாறு மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டிருப்பதால்,  பல மாறுபட்ட குழுக்கள் சரித்திர பாடத்திட்டத்திலும், புத்தகங்களிலும் அவரவர்களின் `விளக்கம்/கருத்து’ தான் வரலாற்றில் இடம் பெற வேண்டும் என அடிக்கடி போட்டி போட்டுக் கொள்வார்கள். இந்தியாவும் சமீப ஆண்டுகளில் இந்த மாதிரியான போராட்டங்களிலிருந்து தப்ப முடியவில்லை.     

அமெரிக்காவின் டெக்ஸாஸில், சமூகவியல் பாடத்திட்டம் குறித்த மறுபரிசீலனையில் சமீபத்தில் நடந்த சர்ச்சை “வரலாற்று கல்வி எப்படி பலவிதமான அரசியல் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஒரு யுத்தகளமாக இருக்கும்?” என்பதை நினைவூட்டுவதாக இருந்தது. அமெரிக்காவில் டெக்ஸாஸின் கல்வி பட்ஜெட் மிகவும் அதிகமானதால், இந்த சர்ச்சையில் அந்த மாநகரத்தின் பங்கு அதிகம்.

ஏனென்றால்.  டெக்ஸாஸ் பதிப்பாளர்கள், டெக்ஸாஸின் பாடத்திட்டத்தின் விதிகளை அனுசரித்து பாடப் புத்தகத்தை வெளியிடுகிறார்கள். அந்த பாடப் புத்தகங்கள் பத்து வருடத்திற்கு ஒரு முறை மறுபரிசீலனை செய்யப்படுகிறது. இந்த முறை, அமெரிக்காவில் ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்கிற எண்ணத்தை விதைத்த தேசத் தந்தைகளின் விருப்பத்தை உதாசீனம் செய்துவிட்டு மாறுதல்களுக்கு எதிரிகளான பழமைவாதிகள்   தங்களது கொள்கைகளைப் புகுத்தும் வழியாக மறுபரிசீலனையை வெற்றிகரமாக நுழைத்துவிட்டனர். அவர்களுடைய `ஹீரோ’ வான ரொனால்ட் ரீகனுக்கும் அவர்கள் முக்கியமான இடம் கொடுத்துவிட்டனர். இதற்கு மாறாக,  உதாரண புருஷர்களாக (ரோல் மாடல்கள்) விளங்கிய சில ஸ்பெயின் தேசத்து வரலாறு படைத்த இஸ்பானியர்களை - Hispanic - சேர்க்க முயன்ற மற்ற சில குழுக்களின் முயற்சி புறக்கணிக்கப்பட்டது. 

இத்தகைய அரசியல் சச்சரவுகளுக்கு இடையில், அமெரிக்க வரலாற்றுக் கல்வி எந்தவிதக் கலக்கமும் இன்றி தேசத்தின் பெருமையையும், உடமையையும் மாணவர்களிடையே ஊக்குவித்தது. உதாரணமாக, தனிப்பட்ட முறையில் அவர்களுடைய குடும்ப வரலாறு எப்படியிருப்பினும்,  அமெரிக்க மாணவர்கள் அமெரிக்க விடுதலைப் போர் பற்றி பேசும் போது “நாங்கள் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெறத்தான் விரும்பினோம்” என்றுதான் கூறுவார்கள்.

அமெரிக்க வரலாற்றுப் பாடப்புத்தகத்தில்  அமெரிக்காவின் தனித் தன்மை, அமெரிக்கப் பிரஜைகளின் என்றும் வளர்ந்து வரும் உரிமைகள், அனைவருக்கும் சுதந்திரம் ஆகியவைகள் முக்கியமாக சொல்லப்பட்டுள்ளன.  . இந்த சரித்திர உண்மைகளுக்கு உதாரணங்களாக அடிமைத்தனம் ஒழிப்பு மற்றும் குடி உரிமைப் போராட்டம் ஆகியவைகள் இருக்கின்றன. இன்றைய வரலாற்று பாடப்புத்தகங்களில் முன்பு அமெரிக்காவின் கடந்த கால அதிகார பூர்வமான சரித்திரச் சான்றுகள் ஒதுக்கப்பட்ட சில குழுக்களின் கருத்துக்கள் இடம் பெற்றிருக்கின்றன. இருந்தபோதிலும் நாட்டைப் பற்றிய பாரம்பரியமான குறிப்புகள் பாதுகாப்பாகவே இருக்கின்றன.  

இங்கிலாந்தில் வரலாற்றுப் பாடப் பகுதிகளின் தன்மை முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். 1980களில் குறிப்பாக வலதுசாரியினரில் பெரும்பாலானோர் – மார்க்கரெட் தாட்சர் உட்பட்டவர்கள்- பிரிட்டிஷ் வரலாற்றில் அடைந்த  சாதனைகள், வரலாற்றுச் சம்பவங்கள் ஆகியவைகளின் நேரடியான வர்ணனைகளை மாணவர்களுக்குப் பள்ளிகளில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அழுத்தமாக வாதாடினார்கள். முக்கியமான வரலாற்றாய்வாளர்களில் பலர் வரலாற்றுப் பாடங்களில் நாஜி ஜெர்மனி, அமெரிக்காவின் மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றிற்குக் கொடுக்கப்படுகிற முக்கியத்துவத்தை,  தேசத்துடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட செய்திகளுக்கு கொடுப்பதில்லை என விமர்சத்தார்கள். தவிர  அரைகுறையான பாடத்திட்டம் முன்னால் நடந்த நிகழ்வுகளின் முழுமையான சரித்திரக் கதையினைத் தெரிய மாணவர்களை அனுமதிப்பதில்லை என்றும் அவர்கள் விமர்சித்தார்கள்.

வரலாறு ஒரு பாடத் துறை - வரலாறு ஒரு உரை நூல் என்பதில் இரண்டுக்கும் உள்ள தர்க்கம் : வரலாற்றை எப்படி கற்பிக்க வேண்டும்?” என்பது பற்றிய விவாதம்.

“இங்கிலாந்தில் மாணவர்கள் பிரிட்டிஷ் வரலாற்றை ஏன் சிறிதளவே கற்றுக் கொண்டார்கள்?” என்பதற்கு ஒரு காரணம் இது தான் - கடந்த காலங்களில் நடந்தவைகளைப் பற்றி படிப்பதன் முக்கியக் குறிக்கோள் தேசாபிமானத்தை மேம்படுத்தத்தான் என்கிற கண்ணோட்டத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

1960களிலிருந்து `புதிய’ வரலாறு, ஆங்கில கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஈடுபாட்டை ஏற்படுத்தியது. சுருக்கமாக, `பழைய’ வரலாறு மாணவர்களுக்குச் சிந்தனையைத் தூண்டாமல் மனப்பாடம் செய்து கொள்ளத்தான் உதவும் என நினைத்த விமர்சகர்கள் `புதிய’ வரலாற்றை அறிமுகம் செய்தார்கள். இந்த புதிய வரலாற்றின் ஆதரவாளர்கள் தேசிய அரசியலையும், போர் பற்றிய விவரங்களையும் குறைத்து `அடித்தட்டு வரலாற்றிற்கு’ முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

அவர்கள் அதிகமாக `பிரிட்டிஷ் அல்லாத வரலாறு’  பாடத்திட்டததில் இருக்க வேண்டும் எனவும் விரும்பிய காரணத்தால், வரலாற்று நிகழ்வுகளில் பங்குகொண்ட பலதரப்பட்ட பங்குதாரர்களின் கருத்துக்களில் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். கடந்த காலங்களில் வரிசைக் கிரமமாக நடந்த நிகழ்வுகளை விட குறிப்பிட்ட கருத்துக்கள் அல்லது நிகழ்வுகள் பற்றி ஆழ்ந்த ஆய்வு மேற்கொள்வதையே அவர்கள் ஆதரித்தார்கள். 1972ல் நிறுவப்பட்ட `தி ஸ்கூல் ஹிஸ்டரி ப்ராஜெக்ட்’ - Schools history Project (SHP) -  ( பள்ளிக்கூட வரலாறு திட்டம், எஸ்.ஹெச்.பி)  புதிய வரலாறு அணுகுமுறைக்கு முன்னோடியாக இருந்தது. இதனுடைய பாடமுறைகள் ஆசிரியர்களிடம் மிகவும் பிரபலமாயின (இவர்கள் தேசியப்பாடத்திட்டத்திற்கு முன்பான பாடத்திட்டங்களை அவர்களின் விருப்பம் போல் தேர்ந்தெடுத்துக் கொள்ள சுதந்திரம் அளித்தது). இன்றைக்கும் எஸ்.ஹெச்.பி. மிகவும் வலுவாக உள்ளது. வலதுசாரிகளின் ஆக்ரோஷமான எதிர்ப்பு இருந்தாலும் தேசியப்பாடத்தில் `புதிய’ வரலாற்றின் பல பகுதிகள் சேர்க்கப்பட்டுவிட்டன.    

வரலாறு கற்பிப்பதில் `புதிய’ மற்றும் `பழைய’ அணுகுமுறைகள் பற்றிய விவாதங்களின் தாக்கத்தினால், பொதுவாக இங்கிலாந்தின் அரசியல் கொள்கைகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. `புதிய’ வரலாறு என்பது இடதுசாரிகளையோ அல்லது பிரபலமான நிகழ்ச்சி நிரலையோ ஊக்குவிக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

பதிலாக, உலக வரலாற்றை ஒரு வறண்ட, பழமையான நிகழ்வுகளின் தொகுப்பாக இல்லாமல் ஒரு ஆக்கமும் ஊக்கமும் நிறைந்த ஒரு பாடமாக உருவாக்குவதில் தான் கவனம் செலுத்தவேண்டும் என்பதைத் தான் இது வலியுறுத்துகிறது.

கடந்த காலத்தை அறிந்து கொள்ள மாணவர்கள் வரலாற்றாய்வாளர்கள் போல சிந்திக்க வேண்டும் என ஊக்குவிக்கப்படுகிறார்கள் - அதாவது, சரித்திரப்பூர்வமான ஆதாரங்களை ஆய்வு செய்வது, வெவ்வேறு விதமான சரித்திர விளக்கங்களை விமரிசைப்பது, ஏன் இது நடந்தது அல்லது அப்படியே இருக்கிறது என விவாதங்களை முன் வைப்பது, குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது முன்னேற்றங்கள் குறித்த முக்கியத்துவம் பற்றி கருத்தில் கொள்வது ஆகியவைகளாகும். கடந்த காலம் – அல்லது உள்ளடக்கம் – பற்றி தேவையான அறிவு இருப்பது, வரலாற்றை ஒரு பாடமாகப் புரிந்து கொள்ள மிகவும் அவசியமானதாகும். இது வெறும் நடந்து முடிந்த கதையாகக் கருதக் கூடிய விஷயம் அல்ல.

பெரும்பாலான மாணவர்கள் தொழில்ரீதியான வரலாற்று ஆய்வாளர்களாக மாறாத போது சிறிய-வரலாற்று ஆய்வாளர்களை உருவாக்கக்கூடிய யோசனையை பல விமர்சகர்கள் கடுமையாகச் சாடும் அதே நேரத்தில், கடந்த காலத்தைப் பற்றி மாணவர்கள்  ஆய்வுப்பூர்வமாக சிந்திப்பதிலும், அதைப்பற்றி நாம் எப்படி அறிந்து கொண்டோம் என்பதை அறிவதிலும் பல நன்மைகள்  உண்டாகி மாணவர்கள் பலன் அடைய வாய்ப்புண்டு என்று மற்றவர்கள் வாதாடுவார்கள். உண்மையில், வரலாற்றை ஒரு பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்ற ஆர்வாலர்களின் கருத்து மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த பல பிரபலமான கல்வியாளர்களின் வேண்டுகோளான ”பள்ளிக்கூட பாடத்திட்டம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் ஆழ்ந்து புரிந்து கொள்ளுமாறு கற்பிக்க வேண்டும்” என்பதை ஒத்தே உள்ளது.

வரலாறு கற்பிப்பதில் `புதிய’ மற்றும் `பழைய’ அணுகுமுறைகள் பற்றிய விவாதங்களின் தாக்கத்தினால், பொதுவாக இங்கிலாந்தின் அரசியல் கொள்கைகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. `புதிய’ வரலாறு என்பது இடதுசாரிகளையோ அல்லது பிரபலமான நிகழ்ச்சி நிரலையோ ஊக்குவிக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

பதிலாக, உலக வரலாற்றை ஒரு வறண்ட, பழமையான நிகழ்வுகளின் தொகுப்பாக இல்லாமல் ஒரு ஆக்கமும் ஊக்கமும் நிறைந்த ஒரு பாடமாக உருவாக்குவதில் தான் கவனம் செலுத்தவேண்டும் என்பதைத் தான் இது வலியுறுத்துகிறது.

 

அமெரிக்காவில் வரலாற்றை ஒரு பாடமாக நடத்தும் யோசனை சிறிய அளவில் முன்னேற்றப் பாதையில் செல்ல ஆரம்பித்துவிட்டாலும் (சில வகுப்பறைகளில் ஏற்கனவே இது உள்ளது), பெரும்பாலான ஆசிரியர்களும், நிர்வாகவியலாளர்களும் வரலாறு கற்றுக் கொடுப்பதற்கு `பழைய’ அணுகுமுறையான, பழைய பாடப்புத்தகத்தில் உள்ளதை மட்டும் சொல்லிக் கொடுப்பதயே பின்பற்றி வருகிறார்கள். வட அமெரிக்காவில் உள்ள பிரபலமான வரலாற்று கல்வி நிபுணர்களான சாம் ஒயின்பர்க் - Sam Wineburg-  (யு.எஸ்.ஏ), பீட்டர் சீகாஸ் - Peter Seixas - (கனடா) போன்றவர்கள் வரலாற்று கல்விக்கு `விசாரணை அடிப்படை’ அல்லது பாடத்திட்ட அணுமுறை வேண்டுமென்கிறார்கள். இந்த அணுகுமுறை மாணவர்களிடையே சரித்திரம் பற்றிய நவீன புரிந்து கொள்ளலையும், சரித்திரத்தின் மீது ஒரு தீவிரமான விருப்பத்தையும் ஏற்படுத்தும் என்கிறார்கள்.

இவர்களுடைய ஆராய்ச்சியும், ஆங்கிலேய ஆராய்ச்சியாளர்களான பீட்டர் லீ, டெனிஸ் சிமில்ட், ராஷ் ஆஷ்பி - Peter Lee, Denis Shemilt and Ros Ashby - அவர்களின் ஆய்வுகளும் சரித்திரம் பற்றிய மாணவர்கள் கொண்டுள்ள எண்ணத்திற்கு எதிர்மறைச் சிந்தனை உள்ளுணர்வுக்கு மாறாக இருக்கும் என்பதைச் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். இதன் காரணமாக, மாணவர்கள் சரித்திரம் பற்றிய திடமான, பயன்படக்கூடிய யோசனைகளை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது அவசியம் என்பதையும் அந்த ஆய்வாளர்கள் அனைவரும் வலியுறுத்தி உள்ளார்கள். உதாரணமாக, ஆரம்பத்தில் பெரும்பாலான மாணவர்கள் சரித்திரம் ஏதோ `அங்கே’ இருக்கிறது, வரலாற்று மூலத்திலிருந்து எதையும் கட்டமைக்கத் தேவையில்லை அல்லது சரித்திர நாயகர்கள் நிகழ்வுகளை நடக்க வைத்தார்கள் என நம்புவதால், வரலாற்றை ஒரு பாடமாகச் சொல்லிக் கொடுப்பது எளிதானது அல்ல. 

முன்னோக்கல்: வரலாற்று கல்விக்கான வளர்ந்து வரும் யோசனைகள்

அமெரிக்க, இங்கிலாந்து மாணவர்கள் வரலாற்று கல்வியை அதிக ஆண்டுகள் படித்திருந்தாலும் கடந்த காலம் பற்றி குறைவாகவே அறிந்திருக்கிறார்கள் என ஊடகத்தில் தொடர்ந்து அறிக்கைகள் வருகின்றன். இது ஆண்டாண்டு காலமாக இருந்து வந்தாலும் ஏதோ ஒரு குறை இருக்கிறது. இங்கிலாந்து மாணவர்கள் கடந்த காலம் பற்றி தெளிவான ஒன்றையும் உருவாக்கவில்லை என்கிற கவலையிருக்கிறது. ஏனென்றால் அவர்கள் அங்கொன்றும், இங்கொன்றுமான தலைப்புகளில் பயிற்சிசெய்வதிலேயே தங்களின் சரித்திரம் பற்றி நினைக்கும் திறமையைச் செலவிடுகிறார்கள்.  அமெரிக்காவில் நிகழ்வுகளை ஆண்டுவாரியாக படிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மாணவர்களால் அவர்கள் படித்ததை நினைவு வைத்துக் கொள்ள முடிவதில்லை அல்லது அவர்களை அதற்காக ஊக்குவிப்பதும் இல்லை.

சமீபகாலமாக வரலாற்றை ஒரு பாடமாக கற்பிப்பதை ஊக்கப்படுத்துவதுவதற்கு ஒரு சாதனமாக  ” வரலாற்றை அறிவதில் ஆர்வ நிலை” என்கிற கோட்பாட்டின் மேல் விருப்பம் அதிகரித்து வருகிறது. வரலாற்றை அறிவதில் ஆர்வம் என்பது மனிதர்களாகிய நாம் காலத்திற்கேற்றபடி நமது வாழ்க்கையை எப்படி கடந்த காலம் மற்றும் எதிர் காலத்துடன் இணைத்துப் பார்த்துக் கொள்கிறோம் என்பதுதான். கடந்த காலத்தைப் பயன்படுத்தி நாம் யார்?, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை, மற்றும் எப்படி வாழ்வோம்? என்பது பற்றிய புரிந்து கொள்ளல் தான். உதாரணமாக பீட்டர் லீ போன்ற நிபுணர்கள் கடந்த காலத்தை மாணவர்கள் எப்படி புரிந்து கொண்டார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக `பயன்படக்கூடிய வரலாற்று செயல்முறை அடிப்படைகள்’ என்பதை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த செயல்முறை அடிப்படைகள் கற்றதை உள்வாங்கிக் கொள்ள அல்லது புதிய விஷயத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ள மாணவர்களுக்கு உதவும். ஆனால், இது பழைய கற்பித்தல் முறையில் உள்ளது போல இறுக்கமாகவோ அல்லது கோட்பாட்டு உறுதியுடனோ இருக்காது. இந்த செயல்முறை மனித இன அடிப்படைகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். ஆரம்பத்தில் மிக வேகமாகக் கற்பிக்கப்பட்டாலும், தொடர்ந்து பரிசோதிக்கவும், பின்பற்றவும், விமர்சிக்கவும் முடியும். அதன் காரணமாக, பாடம் பற்றிய மாணவர்களின் அறிவு மிகவும் நவீனத்துவம் வாய்ந்ததாக மாறும். மாணவர்கள் கடந்த காலம் மற்றும் நிகழ் காலத்திற்கான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள ஊக்குவிக்கப் படுவார்கள். 

வரலாற்று கல்வி அநேக முன்னேற்றங்கள் ஆராய்ச்சி ஆகியவைகளைக் கொண்டுதான் நடந்திருக்கிறது. இருப்பினும், என்ன கற்பிப்பது, எப்படி கற்பிப்பது போன்ற கேள்விகளுக்கான முடிவுகள், ஏன் வரலாறு பாடத்தை நடத்தவேண்டும்? என்கிற பெரிய கேள்விகளில் தான் முடிந்திருக்கிறது.

வரலாற்றை கற்பிப்பதற்கான மிகவும் முக்கியமான காரணம் “இளைஞர்கள் அவர்களது தேசத்தின் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிப் பெருமையாக நினவுகூற வைப்பதுதான்” என்பதை நம்புபவர்கள் - வரலாற்றில் என்ன கற்பிக்க வேண்டும் எப்படிக் கற்பிக்க வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பது சகஜமே. அப்படிப்பட்டவர்கள், வரலாற்றுப் பாடத்தை அறிவதில் மாணவர்களின் முன்னேற்றைத்தை மேம்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்துபவர்களை விட - அதிலும், நாம் ஏன்  கடந்த காலத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும், ஏன் ஒரே நிகழ்வுக்கு வெவ்வெறு விதமான விளக்கங்கள் இருக்க வேண்டும் - என்பவைகளில் முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பார்கள்.

மனித இன வரலாற்றின் பெரிய பரிணாமத்தை மாணவர்களை எப்படி அறிய வைப்பது பற்றியும், மாணவர்கள் எப்படி கடந்த காலத்தில் நடந்தவைகளை  தங்களது வாழ்க்கைமுறைக்கு ஏற்றவாறு எப்படிப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது பற்றியும் மாணவர்கள் புரிந்து கொள்ளுவதற்கு உதவுவதுதான் முக்கிய குறிக்கோள் என்பது சில கல்வியாளர்களின் சில மாறுபட்ட கருத்துக்களாகும்.   வரலாற்றுக் கல்வியில் மற்ற குறிக்கோள்களும் இருக்கின்றன. ஆனால் நான் அவைகளைப் பற்றி இங்கு பேசவில்லை. அதாவது, மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிப்பது அல்லது அவர்களை ஊக்குவிக்கக்கூடிய மதம் சம்பந்தப்பட்ட கதைகள் சொல்லி அதன் மூலம் அவர்களை அரசியல் மற்றும் சமூகத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ளச் செய்வது ஆகிய இவையெல்லாவற்றையும் முக்கியமானதாக முன்நிறுத்தினால் செயல்முறைகள் பாதிக்கப்படும். கொடுக்கப்பட்ட இந்த குறிக்கோளின்படி, வரலாற்று கல்வி என்பது கருத்து பற்றிய ஒரு விஷயம்.

வரலாற்றுக் கல்வி பற்றிய விவாதம் அமெரிக்கா, இங்கிலாந்து மட்டுமல்லாமல் எங்கும் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். 

தகவல்களுக்கான சில மூலங்கள்:

1. Benchmarks of historical thinking website, Center for the Study of Historical Consciousness, Canada: http://www.histori.ca/benchmarks/

2. English National Curriculum: http://curriculum.qcda.gov.uk/key-stages-3-and-4/subjects/key-   stage-3/history/index.aspx

3. History Thinking Matters, resources for history teachers: http://historicalthinkingmatters.org/

 

லிஸ் டாவேஸ் துரைசிங் - Liz Dawes Duraisingh - ஹார்வர்ட் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் எஜுகேஷனில் - Harvard Graduate School of Education - முனைவர் பட்டதிற்கான மாணவர். இளவயதினர் எப்படி தங்களைப்பற்றி நினைப்பதற்கு வரலாற்றை உபயோகிக்கிறார்கள் என்பது பற்றி ஆய்வேடு எழுதிவருகிறார். இதற்கு முன்பு இவர் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் வரலாறு கற்பித்து வந்தார்.  

 

 

 

19292 registered users
7708 resources