II வகுப்பு தேர்தலுக்குச் செல்கிறது!

Resource Info

Basic Information

மாணவர்களால் ”மந்தமானது” அல்லது “அலுப்பூட்டக்கூடியது” என்று முத்திரை குத்தப்பட்ட பாடம் அரசியல் விஞ்ஞானம். இவர்கள் தங்களுடைய வாழ்க்கைக்கு இந்தப் பாடம் முக்கியம் மற்றும் பொருத்தமானது என்பதை உணராமல் இயந்திரத்தனமாகவும், குருட்டுத்தனமாகவும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களைச் சுற்றி உள்ள `அரசியல்’ மற்றும் `அரசாங்கம்’ பற்றிய அறிவிப்புகளை இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கண்டாலும் அவற்றை பாடப்புத்தகங்களில் உள்ள விஷயங்களுடன் தொடர்பு படுத்திப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள். அவர்களுக்கு இந்தப் பாடத்தின்  கோட்பாட்டைச் சிறப்பாக அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக செய்முறைப் பயிற்சி மூலம் அரசியல் விஞ்ஞானத்திற்கும் அவர்களுடைய வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பை முன்னதாகவே சொல்லித்தருவது உதவியாக இருக்கும்.  பிரச்சாரம், ரகசிய வாக்கு, செல்லாத ஓட்டு, ஓட்டு எண்ணிக்கை போன்றவைகள் இந்தப் பகுதியில் மாதிரித் தேர்தல் முறை மூலம் கலந்துரையாடப்படுகிறது.

Duration: 
01 hours 20 mins
முன்னுரை: 

மாணவர்களால் ”மந்தமானது” அல்லது “அலுப்பூட்டக்கூடியது” என்று முத்திரை குத்தப்பட்ட பாடம் அரசியல் விஞ்ஞானம். இவர்கள் தங்களுடைய வாழ்க்கைக்கு இந்தப் பாடம் முக்கியம் மற்றும் பொருத்தமானது என்பதை உணராமல் இயந்திரத்தனமாகவும், குருட்டுத்தனமாகவும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களைச் சுற்றியும் உள்ள `அரசியல்’ மற்றும் `அரசாங்கம்’ பற்றிய அறிவிப்புகளை இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கண்டாலும் அவற்றை பாடப்புத்தகங்களில் உள்ள விஷயங்களுடன் தொடர்பு படுத்திப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள். அவர்களுக்கு இந்தப் பாடத்தின்  கோட்பாட்டைச் சிறப்பாக அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக செய்முறைப் பயிற்சி மூலம் அரசியல் விஞ்ஞானத்திற்கும் அவர்களுடைய வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பை முன்னதாகவே சொல்லித்தருவது உதவியாக இருக்கும்.  பிரச்சாரம், ரகசிய வாக்கு, செல்லாத ஓட்டு, ஓட்டு எண்ணிக்கை போன்றவைகள் இந்தப் பகுதியில் மாதிரித் தேர்தல் முறை மூலம் கலந்துரையாடப்படுகிறது.

Objective: 

குறிக்கோள்:

  1. தேர்தல் செயல்பாடு பற்றி மாணவர்கள் நேரடி அனுபவத்தைப் பெற உதவுவது
  2. தேர்தல் கலைச் சொற்களான பிரச்சாரம், வாக்கு, வாக்களித்தல் போன்றவைகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளுமாறு செய்வது
  3. தேர்தல் செயல்பாட்டினுடைய  வகை மற்றும் விதிகள் பற்றி மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது
Activity Steps: 

செயல் நடவடிக்கைகள்

அமர்வு 1

ஆதாரப் பொருள்

வெவ்வேறு கட்சிகளுக்கான சின்னங்கள், வாக்குப் பெட்டியாக செயல்பட ஒரு காலி பெட்டி, வாக்குச்சீட்டு செய்வதற்கான காகித சீட்டுகள்.

நடவடிக்கைகள்

நடவடிக்கை 1: பயிற்சி செய்ய ஆர்வத்தை உண்டாக்குதல்

  1. வெவ்வேறு கட்சிச் சின்னங்களை மாணவர்கள் கொண்டுவருதல்
  2. மாணவர்கள் அந்த சின்னங்கள் கொண்ட படங்களை தங்களின் நோட்டு புத்தகத்தில் ஒட்டி அந்தக் கட்சிகளின் பெயர்களை அதில் எழுதட்டும். எந்த கட்சிக்கு எந்த சின்னம் என்பதை தெரிந்து கொள்ள அவர்களுக்கு உதவுங்கள்.

நடவடிக்கை 2: குழு கலந்துரையாடல்

1. வாக்கு அளிப்பதற்கான செயல்பாடு, வாக்கு அளிப்பதற்கான குறைந்த பட்ச வயது, வாக்குச்சீட்டு பற்றிய கோட்பாடு போன்றவை பற்றி கலந்துரையாடலை ஆரம்பியுங்கள்

  • எந்த வயதில் உங்களை ஓட்டுப் போட அனுமதிப்பார்கள்?
  • தனிநபர் ஒருவருக்கு எத்தனை வாக்குகள்?
  • விரலில் ஏன் குறி வைக்கிறார்கள்?
  • ஏன் அழிந்து போகாத மையை உபயோகப்படுத்துகிறார்கள்?

நடவடிக்கை 3: தேர்தல் செயல்பாட்டை ஆரம்பித்தல்

  1. வகுப்பை மூன்று குழுக்களாகப் பிரிக்கவும். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்ளவும்
  2. இப்பொழுது ஒவ்வொரு குழுவிடமும் கட்சிக்கான பெயர், கட்சி சின்னத்திற்கான வடிவமைப்பு, தேர்தல் அறிக்கை ஆகியவற்றை தயாரிக்கும்படி சொல்லவும்
  3. தேர்தல் செயல்பாட்டில், பிரச்சாரம் என்கிற கோட்பாட்டை அறிமுகப்படுத்துவதற்கு, கட்சித் தலைவர்கள் வகுப்பில் மாணவர்களிடம் அவர்கள் தன்னை வகுப்புத்தலைவராகத் தேர்ந்தெடுத்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதைப் பற்றியும், ஏன் அவர்கள் தன்னைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது பற்றியும் பேசுமாறு கேட்டுக் கொள்ளுங்கள்.

செயல்திட்ட விபரங்கள்

அமர்வு 2

நடவடிக்கைகள்

நடவடிக்கை 1: வாக்கு அளித்தல்

  1. காகிதத்தை ஒரே அளவில் சிறு துண்டுகளாக கிழித்துக் கொள்ளவும். வாக்குச்சீட்டு தயாரிக்குமாறு அதை ஒவ்வொரு மாணவனிடமும் கொடுத்து மூன்று கட்சி சின்னங்களை ஒன்றின் கீழ் ஒன்றாக வரையும்படி கூறவும்
  2. இப்பொழுது அந்த வாக்குச் சீட்டுகளைச் சேகரித்து அதை நன்கு குலுக்கவும்
  3. ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியாக வாக்குப் பெட்டிக்கு அருகில் வரும்படி சொல்லவும். வாக்குச்சீட்டை அவர்களிடம் கொடுத்து எந்த கட்சிக்கு வாக்களிக்க அவர்கள் விரும்புகிறார்களோ அந்த கட்சியின் சின்னத்தில் குறியிட்டு, சீட்டை மடித்து அந்தப் பெட்டியில் போடும்படி சொல்லுங்கள். அதில் எழுதினலோ அல்லது வேறு இடத்தில் க்ராஸ் பண்ணிணாலோ அந்த வாக்கு செல்லாததாகக் கருதப்பட்டு ஓட்டு எண்ணிக்கையில் சேர்க்கப்பட மாட்டாது என்பதையும் விளக்குங்கள்.
  4. ஒவ்வொரு குழந்தையும் ஓட்டளிக்கும் போது அந்தக் குழந்தையின் பெயரை அடித்து விடுங்கள்.

நடவடிக்கை 2: ஓட்டு எண்ணுதல்

  1. மூன்று மாணவர்களை ஒவ்வொரு குழுவில் இருந்தும் ஒருவரை அழையுங்கள்
  2. ஒரு மாணவனிடம் வாக்குப் பெட்டியை திறந்து அதிலுள்ள வாக்குச்சீட்டுகளை எடுக்கச் சொல்லுங்கள், இரண்டாவது மாணவனிடம் எந்த கட்சிக்கு ஓட்டளிக்கப்பட்டதோ அந்தக் கட்சியின் பெயரை சொல்லச் சொல்லுங்கள், மூன்றாவது மாணவனை கரும்பலகையில் ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு வாக்குகள் கிடைத்தது என்பதை எழுதிச் சொல்லுங்கள்.
  3. இப்பொழுது மாணவர்கள் வாக்கு எண்ணிக்கையை சரிபார்த்து யார் அவர்களுடைய காப்டன், உதவிக் கேப்டன் என முடிவு செய்து கொள்ளட்டும். அவர்கள் இப்பொழுது ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களாவார்கள்.
19196 registered users
7451 resources