வீட்டுப் புழக்கடையில் தாவரயியல்

செடிகளும் மரங்களும்

Resource Info

Basic Information

பலவகையான மரங்கள் - அவைகள் நகரங்களில் இருப்பினும் - அவைகளைக் காண்பித்து இயற்கையைப் பற்றிய அறிவை மாணவர்கள் பெற ஆசிரியர் உதவி புரியலாம். மரங்கள் மற்றும் செடிகளைப் பற்றி அறிதலிருந்து, பறவைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வது அதன் முயற்சியாக அதை நோக்கி ஒரு படி எடுத்து வைப்பதற்குச் சமமாகும். குழந்தைகள் வகுப்பறையை விட்டு வெளியே செல்வதை மிகவும் விரும்புவார்கள். இந்தச் செயல் தினசரி நடவடிக்கையிலிருந்து மாறுபட்டு இருப்பதால், அது அவர்களை உற்சாகமடையச் செய்யும்.  

 

Duration: 
02 hours 00 mins
முன்னுரை: 

பொதுப் பூங்காக்கள், பள்ளித் தோட்டங்கள் ஆகியவைகளை இயற்கையைப் பற்றிய பாடங்களைச் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் நல்ல முறையில் பயன்படுத்தலாம். இயற்கையின் இனிமையான சப்தங்கள் மற்றும் காட்சிகளின் சூழலிலிருந்து வெகு தூரம் விலகி வாழும் பல இளம் குழந்தைகளுக்கு, மரங்கள் மற்றும் செடிகளைப் பற்றி அறிய அவர்களுக்குக் கிடைத்த நல்ல மகிழ்சிகரமான பயிற்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நம்மைச் சுற்றி உள்ள பசுமையான இயற்கைச் சூழலை எப்படி நன்றாகப் பயன்படுத்த முடியும் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், இந்தக் கட்டுரையை மாணவர்களுக்கு ஒரு பயிற்சியாக அவர்கள் எந்த வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாலும் - சில விளக்கங்களும், அறிந்து கொள்வதின் ஆழம் ஆகியவைகள் மட்டும் மாறுபட்டாலும் - கொடுக்கலாம். 

Objective: 

இலக்குகளும், நோக்கங்களும்

  • இயற்கையப் பற்றி அறியும் ஆர்வத்தைக் குழந்தைகளிடம் அதிகரித்தல்
  • வகுப்பில் விவாதம் செய்வதன் மூலம் பேச்சுத் திறமைகளை மேம்படுத்தல்
  • கருத்துக்களை நன்கு மனத்தில் பதியும்படிச் செய்ய களப்பயிற்சிகள் அவசியம்.

 

Activity Steps: 

நகரத்தில் வசிக்கும் ஒரு குழந்தையிடம் அது பார்த்த 10 மரங்களின் பெயர்களைக் சொல்லும்படிச் சொன்னால், அந்தக் குழந்தை பதில் சொல்வதற்குத் திண்டாடுவதை நீங்கள் காணலாம். இன்றைய காலகட்ட்த்தில், சிறுவர்கள் இயற்கைச் சூழலின் அரவணைப்பின்றி அதன் பரிசத்தை வெகுவிரைவில் இழந்து விட்டிருக்கிறார்கள். இயற்கை உலகத்தின் உன்னதமான சப்தங்கள், காட்சிகள் ஆகியவைகளிலிருந்து வெகு தூரம் விளகி இருப்பதை, நகரத்தில் வாழும் அவர்கள் உணருகிறார்கள். இருப்பினும், ஒரு தோட்டத்திற்குள் நுழைந்து நடக்கும் தருணங்களில் இயற்கை உலகின் அற்புதங்கள் அவர்கள் முன் விரியும். இந்த பச்சைப் பசேலாக உள்ள திட்டுகள், காங்கிரீட் மற்றும் இரும்பு கட்டிடங்களுக்கு இடையில் ஆங்காங்கே இருப்பது, இயற்கைச் சூழலை அவைகள் நினைவு படுத்துபவைகளாக உள்ளன.  பள்ளி வளாகத்தில் தோட்டம் இருக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு, இயற்கையைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு அது ஒரு சிறந்த இடமாகும். பள்ளியில் தோட்டம் இல்லாவிடில், ஏதாவது ஒரு பொதுப் பூங்காவைப் பயன்படுத்தலாம். 

தோட்டத்தில் உள்ள 10 மரங்களை அடையாளம் காணும் படிச் சொல்லிப் பயிற்சியை ஆரம்பிக்கவும். இதை உங்களால் தனியாகச் செய்யமுடியாவிடின், ஒரு தோட்டக் கலை நிபுணரையோ அல்ல்து மரங்களைப் பற்றி நன்கு தெரிந்த ஒரு நண்பரையோ உதவிக்கு அழைக்கவும். மரங்களின் பெயர்களை அறிந்து கொண்டவுடன், அந்த மரங்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள புத்தகங்களைப் பார்க்கவும். அந்த மரங்களின் இலைகளின் வடிவங்கள், பூக்களின் தன்மைகள், மற்றும் வேறுபல முக்கிய அம்சங்கள் ஆகியவைகளைக் குறித்துக் கொள்ளவும். மேலும், அந்த மரங்கள் முதன் முதலில் எங்கு உண்டானது, அவைகளில் மகரந்தச் சேர்க்கை எவ்வாறு ஏற்பட்டது, அந்த மரங்களின் முக்கிய உபயோகங்கள் என்ன ஆகிய அனைத்து சிறப்பு விவரங்களையும் சேகரிக்கவும். இந்த அனைத்து விவரங்களையும் உங்களால் ஞாபகம் வைத்துக் கொள்வது கஷ்டமாக இருந்தால், கீழ்க்கண்ட வழியை நீங்கள் கடைப்பிடிக்கலாம். 

1.         சரக்கொன்றை  மரம்

2.          குல்மோஹ ர்    என்ற மயில்கொன்றை  மரம்

3.         ஆல மரம்

4.         மீன் வால் போன்ற  பனை மரம்

5.          சிவப்பு  இலவம்  பஞ்சு  மரம்

6.          அடர்ந்த நிழல்  தரும்  இயவாகி  மரம்

7.          மா மரம்

8.          வேப்ப மரம்

9.          முள்ளு  முருக்கன் - பவளச் சிவப்பு நிறம் கொண்ட  பூக்களை ,உடைய  

              மரம்.

10.      அரச மரம்

 

முதலில் பள்ளியின் தோட்ட வரைபடத்தை அல்லது பூங்காவை அவைகளில் இருக்கும் 10 மரங்களின் இடங்களை படத்தில் உள்ளபடி குறிப்பிட்டுக் காட்டவும். இந்த வரைபடத்துடன், மரங்களைப் பற்றி நீங்கள் சேகரித்த தகவல்களின் விவரங்கள் கொண்ட தாள்களை இணைக்கவும். இப்பொழுது, சில மரங்களைப் பற்றி நீங்கள் தெரிந்திருப்பீர்கள். சில நாட்கள் தோட்டத்திற்கு வரும் பறவைகளை கவனமாகப் பார்க்கவும். அதைப் பற்றிய குறிப்பை எழுதுவதற்கு ஒரு குறிப்பேட்டையும்,  முடிந்தால், இரண்டு இருவிழி தொலை நோக்கிகளை (Binoculars) வைத்திருக்கவும். எப்போதும் பொதுவாகப் பார்க்கக் கூடிய மைனா, காகம், குருவி, சின்னான் என்ற செந்நிற கொண்டைக் குருவி, தையல்காரக் குருவி ஆகியவைகளை நீங்கள் நிச்சயம் காணக்கூடும். அந்தப் பறவைகளைப் பற்றிப் படித்து, அவைகளைப் பற்றிய உண்மை விவரப் குறிப்பை உருவாக்கவும்.

இந்த வகையான மரங்கள் மற்றும் பறவைகளைப் பற்றிய வழிகாட்டுக் குறிப்புகளை வைத்துக் கொண்டு, தோட்டத்தை நீங்கள் சுற்றி வரவும். இந்த உங்கள் சுற்று பல நாட்கள் வரை நீடிக்க வேண்டும். நீங்கள் கற்றதை முழுதும் அறிந்து கொண்ட உணர்வு உங்களுக்கு வரும் வரை இந்த சுற்று உங்களுக்கு அவசியமாகும்.

இப்பொழுது, இயற்கையைப் பற்றி அறிவதற்காக உங்கள் மாணவர்களை தோட்டத்தைச் சுற்றிக் காண்பிக்கவும். மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு நோட்டுப் புத்தகமும், ஒரு பென்சிலும் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு மரத்தைப் பற்றியும் அவர்கள் விளக்கிச் சொல்ல வேண்டும். ஒரு பறவையைப் பார்க்கும் போது, அதனுடைய பெயர், அது எதைச் சாப்பிடும், அது கத்தும் சப்தம் இப்படியாக பலவகையானவைகளைச் விளக்கிச் சொல்ல வேண்டும். மாணவர்கள் சுட்டிக் காட்டும் ஒரு செடி அல்லது ஒரு பறவையைப் பற்றி உங்களுக்குத் தெரிய வில்லை என்றால், அவர்கள் பார்த்ததை விளக்கமாக எழுதும் படிச் சொல்லி, பிறகு, அவர்களையே அதைக் கண்டுபிடிக்கச் சொல்லவும். தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் மிருகங்கள் பயன்படுத்தும் உணவு வலையைப் பற்றி நீங்கள் விளக்கவும். 

வகுப்பிற்குத் திரும்பியதும், மாணவர்கள் கண்டதைப் பற்றி நீங்க்ள் அவர்களுடன் ஒரு உரையாடல் நிகழ்த்தவும். அவர்களாகவே கீழ்க்கண்டவைகள் போன்ற பலவகையானவைகளைப் பற்றி யோசிக்கச் செய்யவும் - “பறவைகள் நமது தோட்டத்திற்கு வரக் காரணம் என்ன? மரங்கள் அவைகளின் விதைகளை எப்படிப் பரவச் செய்கிறது?” அதற்கான பதில்களுக்கு புத்தகங்களைப் பார்த்து அறிந்து கொள்வதற்கு மாணவர்களை ஊக்கப்படுத்தவும்.

தோட்டத்தைப் பற்றி முழுதும் நீங்கள் கற்பித்த பிறகு, பூச்சிகள் மற்றும் பிறவகையான செடிகள், பறவைகள் ஆகியவகைகளைப் பற்றிக் கற்பிக்கவும். இந்த வகையில், ஒரு நகரம் அல்லது மாநகரம் ஆகிய இடங்களில் வசிக்கும் ஒரு குழந்தை இயற்கையைப் பற்றி நன்கு தெரிவதற்கு நீங்கள் உதவி செய்தவர்களாவீர்கள்.

மேற்கோள் நூல்கள் -

1. Our Tree Neighbours, by Chakravani S Venkatesh (NCERT)

2. Flowering Trees, by M S Radhawa (NBT)

3. Some Beautiful Indian Trees, by Blatter and Millard (Bombay Natural History Society)

4. The Book of Indian Birds, by Salim Ali (Bombay Natural History Society)

5. Common Birds, by Salim Ali and Laceq Futchally (NBT)

6. Collin’s Handguide to the Birds of the Indian Subcontinent by Martin Woodcock Ali, S & Ripley, S D (1982)

முதலில் டீச்சர் பிளஸ் - செப்டம்பர் - அக்டோபர் 1990, இதழ் 8 -ல் வெளியிடப்பட்ட இந்தக் கட்டுரை, சில மாறுதல்களுடன் இங்கு தழுவி வெளியிடப்படுகிறது. 

18473 registered users
7227 resources