மாறும் எனது நகரம்

Resource Info

Basic Information

புவியியல் என்பது பூமியின் இயல்பான அம்சங்களை அல்லது உலகில் உள்ள நாடுகளைக் குறித்து படிப்பதாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை.  ஆகையால் நம் அருகில் உள்ள சுற்றுப்புறங்கள் கூட  எவ்வாறு சமுதாய புவியியல் பாடங்களைப் போதிப்பதில் பெரிதும் சக்திவாய்ந்ததாக அமைகிறது என்பதை இந்தப் பயிற்சியில் காணலாம். 

Duration: 
(All day)
முன்னுரை: 

 திடுக்கிட வைக்கும் விகிதத்தில் நகரங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றன என்பது நம் அனைவருக்கும் தெரியும். கிராமப்புறங்களை விட்டு குடி பெயர்ந்து செல்வதும், மக்கள் தொகை பெருக்கமும் இதற்கு முக்கியமான காரணங்கள் ஆகும். நகரத்தின் சில பரிமாணங்கள் எவ்வாறு மாற்றம் அடைந்து இருக்கின்றன என்பதை ஆராய்வது மாணவர்களுக்கு நல்ல பயிற்சியாக அமையும். மேலும் அந்த ஆய்வின் மூலமாக மாற்றத்தை எவ்வாறு திட்டமிடலாம் என்பதையும் கருத்தில் கொள்ள முடியும். 

Objective: 
 1. புவியியலை குறித்த பாடங்களை உள்ளூர் அளவிலும் செயல்படுத்த முடியும் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ளும்படி செய்தல்.
 2. பட்டணம்/நகர திட்டத்தின் முக்கியத்துவத்தை நன்கு அறியச் செய்ய நில வரைபடங்கள், இலக்கியம், புள்ளிவிவர தகவல் உள்ளிட்டவற்றை படிக்க ஊக்கப்படுத்துதல்,
 3. விவாதங்கள் மூலமாக தகவல்தொடர்பு திறனை வளர்த்தல்
 4. குழு செயல்பாடுகள் மற்றும் அறிக்கை எழுதுதல் ஆகியவற்றை ஊக்கப்படுத்துதல்.
Activity Steps: 

மூன்று முக்கியமான கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும்:

1. முதலில் அந்த நகரம்/பட்டணம் எவ்வாறு இருந்தது?

இதற்கு பதிலளிக்க, மாணவர்கள்: பழைய குடிமக்களிடம் நேர்காணல் செய்யலாம்.

2. இப்போது எவ்வாறு மாறியிருக்கிறது?

ஒரு முக்கிய இடத்தைப் பற்றி (ஒரு முக்கிய வர்த்தக மாநகரம் அல்லது ஒரு பழைய குடியிருப்பு பகுதி போன்றவை) மாணவர்கள் படித்து, பத்து ஆண்டுகளில் அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களை வரையறுக்கலாம்.

பள்ளிகளின் எண்ணிக்கை, மருத்துவமனைகளின் எண்ணிக்கை, மக்கள் தொகை, வர்த்தக வளர்ச்சி உள்ளிட்ட புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு அட்டவணை உருவாக்கலாம்.

3. இன்னும் 10 ஆண்டுகளில் இந்த நகரம் எவ்வாறு தோற்றம் அளிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றது? அது எவ்வாறு தோற்றம் அளிக்க வேண்டும்?

செயல்பாட்டின் மிகவும் சவால்நிறைந்த பகுதி இது தான். இந்த இரண்டு கேள்விகளும் முற்றிலும் வேறுபட்டவை. வளர்ச்சியின் வேகம்/தரம் ஆகியவற்றில் முயற்சி எடுக்கப்படாமல் தற்போதைய விகிதத்திலேயே மாற்றம் தொடரும் என்பதை யூகித்து முதல் கேள்வி கேட்கப்படுகின்றது. இரண்டாம் கேள்விக்கு பதில் அளிப்பது குழந்தைகளின் கையில் இருக்கிறது. தற்போதையை சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, சந்தை நிலவரங்கள், சமூக மாற்றங்கள், அரசியல் உண்மைகள் போன்றவற்றை கருத்தில்கொண்டு அவர்கள் முடிவுசெய்ய வேண்டும்.

 

Picture from archinect.com.

படிகள்:

 • ·வகுப்பை குழுக்களாக பிரிக்கவும், ஒவ்வொரு குழுவிலும் நான்கு முதல் ஐந்து மாணவர்கள் இருக்கலாம்.
 • ·ஒரே இடத்தில் அல்லது அருகாமையில் இருக்கும் மாணவர்களை ஒரு குழுவில் சேர்க்க முயற்சிக்கவும்.
 • ·முதல் இரண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஒவ்வொரு குழுவும் நகரம்/பட்டணத்தின் ஒரு பகுதியை எல்லையாக வரையறுக்க வேண்டும்.
 • ·இந்த இரண்டு கேள்விகள் குறித்து வேலை விவரங்கள் சேகரித்த பிறகு, வகுப்பு முழுவதும் இணைந்து தங்கள் நகரத்தை குறித்து அது முன்பு எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கின்றது என்பதில் ஒரு முழுமையான காட்சியைப் பற்றிய ஒரு முடிவுக்கு அவர்கள் வருவார்கள். 
 • ·இதன் பிறகு அவர்கள் எதிர்காலத்தை குறித்து திட்டமிடலாம்
 • ·ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு பகுதியை நகர திட்டமிடுதலுக்கு தேர்வு செய்து செயல்படலாம். எ.கா. சாலைகள், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், தகவல்தொடர்பு, போன்றவை.
 • ·இந்த பயிற்சிக்குப் தங்கள் அறிக்கைகளை அவர்கள் வகுப்பிலே சமர்பித்து , அவற்றை குறித்து விவாதிக்கலாம்
 • ·நேரம் கிடைத்தால் மாணவர்களே தங்கள் முழு அறிக்கையையும் எழுதலாம். இல்லையேல், வகுப்பு அறை விவாதத்தோடு நீங்கள் இதை முடித்துக்கொள்ளலாம்.

இந்த செயல்பாட்டுக் கட்டுரை டீச்சர் ப்ளஸ், வெளியீடு எண்.31, ஜூலை-ஆகஸ்ட் 1994ல் முதல் முறையாக வெளியிடப்பட்டது.  அந்தக் கட்டுரை இங்கு சில மாற்றங்களுடன்  பிரசுரிக்கப்படுகிறது.

 

 

18487 registered users
7228 resources