மழைமானிக் கருவி

Resource Info

Basic Information

மழைமானி என்பது வானியல் மற்றும் நீரியல்  ஆய்வாளர்கள் பயன்படுத்தும் ஒரு வகைக் கருவி. அந்தக் கருவி மூலம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்  சேகரிக்கப்பட்ட நீரை அளந்து, பெய்த மழையை அவர்கள் கணிப்பார்கள். இது பனிப் பொழிவை அளந்து  கணிப்பதிலிருந்து மாறுபட்டது. பனிப் பொழிவின் அளவைக் கணிக்க பனிமானியைப் பயன்படுத்துவார்கள். மழை அல்லது பனி நீரை வைத்து பருவ நிலையை அளக்க முடியும் என்பதை மாணவர்களுக்குக் கற்பிப்பது இந்தப் பயிற்சியின் நோக்கம்.

Duration: 
(All day)
முன்னுரை: 

மழைமானி என்பது வானியல் மற்றும் நீரியல்  ஆய்வாளர்கள் பயன்படுத்தும் ஒரு வகைக் கருவி. அந்தக் கருவி மூலம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்  சேகரிக்கப்பட்ட நீரை அளந்து, பெய்த மழையை அவர்கள் கணிப்பார்கள். இது பனிப் பொழிவை அளந்து  கணிப்பதிலிருந்து மாறுபட்டது. பனிப் பொழிவின் அளவைக் கணிக்க பனிமானியைப் பயன்படுத்துவார்கள். மழை அல்லது பனி நீரை வைத்து பருவ நிலையை அளக்க முடியும் என்பதை மாணவர்களுக்குக் கற்பிப்பது இந்தப் பயிற்சியின் நோக்கம்

Objective: 

 

குறிக்கோள்:

 • ஒரு மழைமானியை உருவாக்க மாணவர்களுக்கு உதவுதல்.
 • மழைமானியினால் மழையை அளக்க மாணவர்களுக்கு உதவுதல்.
Activity Steps: 

 

இடம்

வீடு-பள்ளி

குழுவின் அளவு

தனி நபர் - குழு

கால அளவு

பருவ மழைக் காலத்தில் 24 மணி நேரத்திற்கு ஒரு தரம் அளவு எடுத்தல்

தகுந்த நேரம்

மழை காலம்.

 

தேவைப்படும் பொருட்கள்

பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டில், புனல் - புனலின் விட்டம் பாட்டிலின் அடிப்பாக விட்ட அளவுக்குச் சம்மாக இருக்க வேண்டும்- உருளை வடிவத்தில் உள்ள ஜாடி, அளவு உருளை, நோட்டுப் புத்தகம், பென்சில் 

 

வழிமுறைகள்

 

 • மழைமானியை உருவாக்குவதற்கு மாணவர்களுக்கு ஒரு புனலும், ஒரு கண்ணாடி பாட்டிலும் தேவைப்படும்.
 • பாட்டிலின் அடிப்பாக விட்டமும், புனலின் வாய் அகலமும் ஒரே அளவானதாக இருக்க வேண்டும்.
 • ஒரு சிறிய மழைமானியை உருவாக்க, புனலை படத்தில் காட்டியபடி பாட்டிலின் மேலே பொருத்தி வைக்க வேண்டும்.
 • ரசாயன சோதனை கூடத்தில் இருக்கும் உருளை வடிவமான ஜாடியையும் மாணவர்கள் பயன்படுத்தலாம்.
 • 24 மணி நேரத்தில் ஒரு இடத்தில் பெய்த மழையை மாணவர்கள் மழைமானியின் மூலமாக அளந்து அறியலாம்.
 • மழைமானி நிறுவப்பட்ட இடம் மரங்கள் மற்றும் கட்டிடங்கள் சூழ்ந்து இல்லாமல் வெட்ட வெளியானதாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டுவது மிக அவசியமாகும்.
 • மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்த இடத்தில் அவர்களின் மழைமானியை வைக்கலாம்.
 • மழை பொழியும் போது மழைமானி அசையாமலும், காற்றினால் அசைந்து கீழே விழாமலும் இருக்கும் படிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • ஒரு சில செ.மீட்டர் அளவு சிறிய பள்ளம் தோண்டி அதில் மழைமானிப் பாட்டிலை அழுந்தி வைப்பது ஒரு நல்ல யோசனையாகும்.
 • 24 மணி நேர கால அளவு வரை மழை நீர் மழைமானியில் விழும்படி அனுமதிக்கவும்.
 • பாட்டிலில் நிரம்பிய மழை நீரைச் சிந்தாமல் கவனமாக ஒவ்வொரு நாளும் மாணவர்கள் சேர்க்க வேண்டும்.
 • ஒரு அளவு உருளையினால் மழைமானியில் விழுந்த நீரின் அளவை அளக்க வேண்டும்.
 • இந்த முறையைக் கடைப்பிடித்து, ஒரு மாத காலம் பெய்த மழை நீரை குறித்துக் கொள்ள வேண்டும். இந்த அளவுகளை ஒரு வரை படமாகக் காட்டவும்.
 • பட்டியலிடப்பட்ட அளவுகளிலிருந்து சராசரி மாத மழை நீரைக் கணக்கிடலாம்.

ஆதாரம் - என்னுடை ஊரின் ஆற்றைப் பற்றிய விவரங்கள் என்ற ஃபீசல் ஆல்காஸி (Feisal Alkazi) - பிரீதி ஜெயின் (Preeti Jain) ஆகியவர்கள் எழுதிய கட்டுரை இளம் குழந்தைகளுகான தகவல் மற்றும் பயிற்சி என்ற புத்தகத்திலிருந்து வெளியிடப்பட்டது. அந்த புத்தகம் சுற்றுச் சூழல் கல்வி மையம், ஆமதாபாத் பிரசுரம். 

18473 registered users
7227 resources