பெயரடை, வினையடைச்சொற்களை கற்பிப்பதற்கான ஒரு விளையாட்டு

Resource Info

Basic Information

பெயரடைச் சொற்களையும்(பெயர உரிச்சொற்கள்), வினையடைச்சொற்களையும்(வினை உரிச்சொற்கள்) கற்பிக்கவும், கற்பவர்களின் கவன அளவை அதிகரிக்கவும், இச்செயல்பாட்டை பரிந்துரைக்கிறேன்.

Duration: 
00 hours 30 mins
Activity Steps: 

–   கரும்பலகையில் ஒரு வார்த்தையை/சொல்லை எழுதுங்கள்

–   முறைமையற்ற முறையில், ஏதேனும் ஒரு மாணவரை அழைத்து, அவ்வார்த்தைக்கு முன்னோ அல்லது பின்னரோ பொருள் அமையும் படி ஒரு வார்த்தையை சேர்க்க சொல்லவும். ஒரு மாணவரின் உதவியுடன் வார்த்தைகளை கரும்பலகையில் எழுதலாம். (முறைமையற்ற முறையில், மாணவர்களை தேர்ந்தெடுப்பதால், பல நன்மைகள் உண்டு. யாரை அடுத்தது கூப்பிடப்போகிறார்கள் என்று தெரியாமல் இருப்பதால், அனைத்து மாணவர்களும் சட்டென வருவதற்கு தயாராக இருப்பார்கள். வித விதமான வார்த்தைகள் உருவாகலாம். மற்ற குழந்தைகளும் திருத்தங்கள் செய்ய முற்படுவதை காணலாம்)

–   ஏதேனும் ஒரு மாணவரை அழைத்து, அவ்வார்த்தைகளுக்கு முன்னோ அல்லது பின்னரோ பொருத்தமான சொற்றொடர் அமையும்படி ஒரு வார்த்தையை சேர்க்க சொல்லவும்.

–   அதை தொடர்ந்து, வேறொரு மாணவரை அழைத்து, அவ்வார்த்தைகளுக்கு முன்னோ அல்லது பின்னரோ ஒரு வார்த்தையை சேர்த்து ஒரு முழுமையான வாக்கியத்தை உருவாக்க சொல்லவும்.

–   எப்பொழுது பொருள் மிகுந்த ஒரு நீண்ட வாக்கியம் உருவாக வாய்ப்பில்லையோ அப்பொழுது, இவ்விளையாட்டு முடிந்து விடும்.

–   கொடுக்கப்பட்ட வார்த்தைக்கும் முன்னோ அல்லது பின்னரோ தான் புதிய வார்த்தைகளை சேர்க்க வேண்டுமே தவிர இடையில் சேர்க்க கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு எடுத்துக்காட்டு:

நாய்

பட்டம்

செல்ல நாய்

வண்ணப்பட்டம்

செல்ல நாய் குறைக்கும்

வண்ணப்பட்டம் தயாரித்தேன்

எனது செல்ல நாய் குறைக்கும்

நான் வண்ணப்பட்டம் தயாரித்தேன்

 

நான் வீட்டில் வண்ணப்பட்டம் தயாரித்தேன்

 

நான் வீட்டில், எனது நன்பர்களுடன், வண்ணப்பட்டம் தயாரித்தேன்.

 

18472 registered users
7227 resources