சிறிய நீர் சுழற்சி
Resource Info
Basic Information
நீர் உருமாற்றச் சுழற்சி அல்லது நீர் சுழற்சி என்றால் பூமியில் உள்ள நீர் இடைவிடாத சுழற்சியினால் மீண்டும் நீராக மாறுவதைக் குறிப்பதாகும். பூமியில் இருக்கும் நீரானது மூன்று நிலைகளில் இருக்கிறது. சுழற்சி வழி மூலமாக நீரானது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உருமாறுகிறது. இந்த மாற்றத்தை நிகழச் செய்வதற்கு வேண்டிய முழுச் சக்தியும் சூரியனிடமிருந்து வருகிறது. நீர் உருமாற்ற சுழற்சியின் முக்கிய அம்சம் - ஆவியாதல், குளிர்தல், கசிதல், உறைதல் ஆகும். கீழ்க்கண்ட செய்முறைப் பயிற்சியின் மூலம் நீர் சுழற்சியின் சில அம்சங்களை நேரடியாக மாணவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும்.
நீர் உருமாற்றச் சுழற்சி அல்லது நீர் சுழற்சி என்றால் பூமியில் உள்ள நீர் இடைவிடாத சுழற்சியினால் மீண்டும் நீராக மாறுவதைக் குறிப்பதாகும். பூமியில் இருக்கும் நீரானது மூன்று நிலைகளில் இருக்கிறது. சுழற்சி வழி மூலமாக நீரானது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உருமாறுகிறது. இந்த மாற்றத்தை நிகழச் செய்வதற்கு வேண்டிய முழுச் சக்தியும் சூரியனிடமிருந்து வருகிறது. நீர் உருமாற்ற சுழற்சியின் முக்கிய அம்சம் - ஆவியாதல், குளிர்தல், கசிதல், உறைதல் ஆகும். கீழ்க்கண்ட செய்முறைப் பயிற்சியின் மூலம் நீர் சுழற்சியின் சில அம்சங்களை நேரடியாக மாணவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும்.
குறிக்கோள்
நீர் சுழற்சியின் செயல்பாட்டினைப் பற்றி ஒருவர் அறிந்து, விளக்கப் பயிற்சி செய்தல்.
வழி முறைகள்
- ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி ஜாடி அல்லது பெட்டி
- 3-4 செ.மீட்டர் அளவு மண்ணை ஜாடியில் நிரப்பவும். ஜாடியின் பாதி அளவு மண்ணால் நிரப்பிய பிறகு, அதி வி
இடம்
வெளியே
குழுவின் அளவு
தனி நபர்-குழு
கால நேரம்
8-10 நாட்கள் பயிர் வளர்வதற்கும், 2 மணி நேரம் பயிற்சி செய்வதற்கும்.
சரியான நேரம்
போதுமான சூரிய ஒளி இருக்கும் பகல் வேளை.
தேவைப்படும் பொருட்கள்
ஒளிபுகும் பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி ஜாடி, வெகு வேகமாக வளரும் விதைகள், மண், குவளை-நீர் தெளிப்பான், வாளி, 2 சிறிய பிளாஸ்டிக் கிண்ணங்கள், நோட்டுப் புத்தகம.
ரைவில் முளைவிடும் விதைகளான வெந்தயம், கேழ்வரகு போன்றவைகளை அதில் விதைக்க வேண்டும். அந்த விதைகள் செடியாக வளர ஒரு வார காலம் வரை அனுமதிக்கும் போது, அந்தச் செடிகள் சுமார் 6-லிருந்து 8 செ.மீட்டர் உயரம் வளர்ந்து விட்டிருக்கும்.
- விதைகள் செடிகளாக வளர்ந்த பிறகு, நீர் சுழற்சிப் பயிற்சியை நீஙகள் தொடங்கலாம். கீழே விவரிக்கப்பட்டுள்ள பயிற்சியைச் செய்ய போதிய இடம் இல்லாவிடில், சில செடிகளை நீஙகள் அகற்றி விடலாம்.
- பயிற்சியைத் தொடங்குவதற்கு முன், கீழ்க்கண்ட வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- சில செடிகளைப் பிடுங்கி இட வசதி செய்த ஜாடியினுள் உள்ள இடத்தில் நீர் நிரப்பிய ஒரு சிறிய பிளாஸ்டிக் கிண்ணத்தை வைக்கவும். இந்தக் கிண்ணத்தில் உள்ள நீர், ஒரு நீர் நிலையாகக் கருதப்படும்.
- ஜாடியின் மையப்பகுதியில் ஒரு காலி கிண்ணத்தையும் வைக்கவும்.
- ஒரு செடியின் இலைகளை ஒரு பிளாஸ்டிக் தாளால் மூடவும்.
- ஒரு ரப்பர் வளையம் அல்லது நூலால் இலைகளை மூடிய பிளாஸ்டிக் தாளை நன்கு கட்டவும்.
- பெரிய ஜாடியை ஒரு பிளாஸ்டிக் தாளால் நன்கு மூடவும். ஒரு சிறிய கல்லை பிளாஸ்டிக் தாளின் மையத்தில் வைக்கவும்.
- ஜாடியை சூரிய ஒளியில் சில மணி நேரங்கள் அசைக்காமல் வைத்திருக்கவும்.
- நீங்கள் கவனித்த்தைக் குறிப்பெடுக்கவும்.
- நீங்கள் என்ன பார்த்தீர்கள் ? பெரிய ஜாடியின் வாயை மூடிய பிளாஸ்டிக் தாளில் நீர்த் துளிகள் படிந்திருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
- அங்கு படிந்த நீர்த் துளிகள்எங்கிருந்து வந்தன ? நீரானது ஜாடியின் மண், செடிகள் மற்றும் நீர் நிரம்பிய கிண்ணம் ஆகியவைகளிலிருந்து நீர் ஆவியாகி, ஜாடியின் மூடியின் பிளாஸ்டிக் தாளில் உறைந்ததினால் உண்டானது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
- உங்கள் கவனிப்பை நீங்கள் குறித்துக் கொண்டதற்குப் பிறகு, ஜாடியின் மூடியில் உள்ள பிளாஸ்டிக் தாளை எடுத்து விடவும்.
- காலியாக ஜாடியின் மையத்தில் வைத்த பிளாஸ்டிக் கிண்ணத்தை நீங்கள் சோதித்துப் பார்க்கவும். முன்பு காலியாக இருந்த கிண்ணத்தில் சிறிது நீர் நிரம்பி இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். எப்படி நீர் அந்தக் காலியான கிண்ணத்தில் வந்தது ? ஜாடியின் மூடியில் படிந்த நீரின் ஒரு பகுதி, கசிந்து கீழே உள்ள கிண்ணத்தில் விழிந்திருக்கும்.
- இப்பொழுது, செடியின் இலைகளை மூடிய பிளாஸ்டிக் தாளை கூர்ந்து நோக்கவும்.
- நீர்த்திவலைகள் அந்த பிளாஸ்டிக் தாளிலிலும் திரண்டு இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
- செடிகளிலிருந்து நீர் ஆவியாவதும், வியர்ப்பதும் தான் அந்தப் பிளாஸ்டிக் தாளில் நீர்த்திவலைகள் இருப்பதற்குக் காரணமாகும்,
பெஙகளூரு சுற்றுச் சூழல் கல்வி மையத்தில் பணி புரியும் சுக்ப்ரிட் கவுர் என்பவரால் உருவாக்கப்பட்டது.